இருள் கவிய துடங்குகிறது
நீ அவசரமாக வீடு திரும்ப நினைக்கிறாய்
ஆட்டோ கிடைக்கவில்லை
பேருந்தில் கசங்குகிறாய்
மறக்காமல் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்குகிறாய்
மளிகை சாமான் வாங்குகிறாய்
உனக்காக நீ ஏதும் வாங்கிக்கொள்வதில்லை
காத்திருக்கிறேன் நீ வந்ததும் உன் கைகளுக்கும் கால்களுக்கும் முத்தம் தர