பாடகர்கள் : பிரதீப் குமார், அனந்து
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை
சுழல் தேவதை நிழல்
ஆண் : அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம் எதையோ
உலரும்
ஆண் : இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாத
சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும்
ஆண் : மேகமோ அவள்
மாய பூ திரள்
ஆண் : ………………………….
ஆண் : வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என்
கண்களை இழந்தேன்
ஆண் : என் நிழலும்
என்னையே உதறும் நீ
நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா
கவிதை உடையும்