நீ இல்லாத இந்த காலைப்பொழுதை
எப்படி அணுகுவதென்று தெரியவில்லை 
காப்பி போடும் போது சுட்டுக்கொண்டேன் 
தோசை ஒன்றை கறுக்கி விட்டேன் 
நீயில்லாமல் வாழ பழகவில்லை 
நீயில்லாமல் எதையம் செய்ய தெரியவில்லை 
திரும்ப வா நானே உனக்கும் சேர்த்து சமைக்கிறேன் 
துணிகளை துவைக்கிறேன் 
அலமாரியை சரி செய்கிறேன் 
எப்படியாவது திரும்ப வந்துவிடு...