கொதித்திருக்கும் இந்த கோடையில்
உல்லாச பயணம் போவோரை நினைத்தால்
பொறாமையாக இருக்கிறது.
நானும் நீயும் மட்டும் போவோம்
யாரும் காணாத இடத்துக்கு
அது ஒரு காடாக இருக்கலாம்
இல்லை நீர்வீழ்ச்சியாக இருக்கலாம்
ஒன்றுமே இல்லாத புல்வெளியாக இருக்கலாம்.
உன் வருகைக்கு பிறகு எப்படியும்
அது வசந்தம் வீசும் இடமாக
மாறிவிடும் ..