தீபாவும்,ரஞ்சனியும் எப்பவும் போல காலேஜ் போய் வந்தாலும் பிரேமை நினைக்காமல் இல்லை. அப்போதுதான் கிருஷ்ணாவின் நட்பு அவர்களுக்கு ஆறுதல் ஆக இருந்தது. கிருஷ்ணா நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களுடன் பேசிக்கொண்டிருப்பான். இவர்கள் அதற்காக அவனுக்கு நன்றி சொன்னார்கள்.பிரேம் போய் சேர்ந்த உடன் ஃபோன் பண்ணினான். தீபா எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாருங்கள் என்றாள். அம்மாவை வேண்டுமானால் வர சொல்லட்டுமா என்றான். அதெல்லாம் வேண்டாம் அவர்கள் இங்கே நாங்கள் காலேஜ் போன பின் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்றாள். அதுவும் சரிதான் என்றான். கிருஷ்ணாதான் அவ்வப்போது வந்து பேசிவிட்டு போவதாக சொன்னாள்.சரி கவனமாக இருந்து கொள் லவ் யு தீபா என்றான். லவ் யு பிரேம் பை என்று ஃபோன் வைத்தாள் .
அன்று சுபா வந்திருந்தாள். என்ன சுபா எங்க கல்யாணத்தப்ப பார்த்தது அப்புறம் பார்க்கவே முடியவில்லை என்றாள் தீபா. அப்படியில்லை நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் ஏன் தொந்தரவு என்று வரவில்லை. அப்படி ஒன்றும் இங்கே மகிழ்ச்சி பொங்கவில்லை என்னை விட்டு விட்டு தனியாக ஊருக்கு சென்று விட்டான் பார்த்தீர்களா என்றாள். அதெல்லாம் சரியாகிவிடும் . இன்னைக்கு சண்டே ஏதாவது மூவி போலாமா என்றாள் ரஞ்சனி. எனக்கு ஓகே என்றாள் சுபா. கிருஷ்ணாவை கூப்பிடலாமா என கேட்டாள் தீபா. யார் அந்த புரொஃபசர் கிருஷ்ணாவா என்றாள் சுபா. ஆமாம். அவனுக்கு ஃபோன் செய்த போது நானும் வருகிறேன் என்றான். சுபா தயங்குவது போல தெரிந்தது. சரி போவோம் என்றாள். அது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். ரஞ்சனி படத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள். இவர்கள் வேறு இடத்திலும் அவன் வேறு இடத்திலும் அமர்ந்திருந்தார்கள்.படம் கிருஷ்ணாவுக்கு அவ்வளவு இண்டரெஸ்ட் ஆக இல்லை நான் கிளம்புகிறேன் என்றான் இடைவேளையின் போது . தீபாதான் அவனை இருந்து படம் பார்க்கும்படி சொன்னாள்.
படம் முடிந்ததும் கிருஷ்ணா கிளம்பினான். சுபா , ரஞ்சனி, தீபா மூவரும் லஞ்ச் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றனர். சுபா ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ரஞ்சனி சிந்தனையில் இருந்தாள். என்ன ரஞ்சனி இன்னும் படம் பற்றிய யோசனையா என்றாள் சுபா. ஆமாம் அந்த ஹீரோ எவ்வளவு அடி வாங்குகிறான் . ஆமாம் ரொம்ப முக்கியம் என்றாள் தீபா . மூவரும் சிரித்தார்கள். சுபாவை வீட்டில் விட்டார்கள். லலிதா மேடம் பார்த்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சுபா உங்களுக்கு எப்படித்தான் பொழுது போகிறது ? அதெல்லாம் பரவாயில்லை முன்னாடி மதன் இருக்கும் போது எங்களுக்குள் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கவில்லை.நான் ஓர் இடம் அவன் ஓர் இடம் என்று இருப்போம் என்றாள். பிரேம் வந்ததும் அவனை உன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள் என்றாள் சுபா.தீபா மையமாக தலையாட்டினாள். ரஞ்சனியும், தீபாவும் விடைபெற்று கொண்டார்கள்.
தீபா சுபா தனியாக இருப்பது அவ்வளவு நல்லாயில்லை என்றாள். அது மிகவும் சிரமம் என்றாள் ரஞ்சனி. நாம் சொல்லி சுபா எங்கே கேட்க போகிறார்கள். மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தார்கள். ரஞ்சனி எனக்கு கொஞ்சம் ஃபிரண்ட்ஸ் பார்த்து நோட்ஸ் வாங்க வேண்டி இருக்கு நான் போயிட்டு வரேன் என்றாள். என்னை தனியா விட்டு போகாதே இப்போது 1 மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு போனாள். கிருஷ்ணா ஃபோன் பண்ணியிருந்தான். சாரி உங்களுக்கு படம் பிடிக்கவில்லை போல என்றாள். அப்படி இல்லை லேசாக தலைவலி என்றான். ரஞ்சனி எங்கே என்றான். அவள் ஃப்ரெண்ட் பார்க்க போயிருக்கிறாள். சரி நான் அப்புறம் பேசுகிறேன் என்று வைத்து விட்டான். இவள் கிச்சன் உள்ளே போனாள் . பாத்திரங்களை கழுவினாள் .இரவு ஏதாவது சிம்பிள் ஆக சமைத்து கொள்ளலாம் என நினைத்தாள் .
ரஞ்சனி வந்த போது தீபா தூங்கி விட்டிருந்தாள் . ரஞ்சனி வெளியில் இருந்து உணவு வாங்கி வந்திருந்தாள். அக்கா சாப்பிடாமலே தூங்குகிறாயே என்று அவளை எழுப்பினாள் . ஏன் இவ்வளவு லேட் ?அவள் வீட்டில் ஏதோ ஃபங்சன் அதனால் லேட் ஆகி விட்டது. இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். ரஞ்சனி நீ இங்கேயே படுத்துக்கொள் . சரி அக்கா . பிரேம் ஃபோன் பண்ணியிருந்தான். இங்கே ஒரே குளிராக இருக்கிறது என்றான். இவள் நீயில்லாமல் ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது என்று சொன்னாள் . அவன் ரஞ்சனியை விசாரித்தான். அவளும் பேசினாள். ஒரு மணிநேரம் போல பேசி இருப்பார்கள். மாமாவுக்கு உன்னை பற்றி ஒரே கவலை என்றாள் ரஞ்சனி. எல்லாம் சும்மா.. பேருக்கு கூட என்னை வா என்று கூப்பிடவில்லை.
சகோதரிகள் இருவரும் மறுநாள் காலேஜ் எப்போதும் போல சென்றார்கள்.காலேஜ் போனதும் தீபாவிடத்தில் உற்சாகம் வந்தது.அவளுடைய தோழிகள் கூட அரட்டை, கிசுகிசு என்று நேரம் போவதே தெரியவில்லை.எல்லோரும் பிரேம் எப்போது வருகிறார் என்றே கேட்டார்கள்.நாட்கள் ஓடின . கிருஷ்ணா இரண்டு நாட்களாக காலேஜ் வரவில்லை. ஃபோன் எடுக்கவில்லை. என்ன ஆச்சு என விசாரித்த பொது அவனுக்கு டைபாய்டு ஜுரம் என கேள்விப்பட்டாள். தீபாவும் , ரஞ்சனியும் அவன் வீட்டுக்கு பழங்கள் வாங்கிக்கொண்டு சென்றனர். அவனுக்கு அப்பா மட்டும் தான். அம்மா இல்லை. இவன் சென்ற போது வாசலில் அமர்ந்திருந்த அவன் அப்பா தயக்கமாக பார்த்தார். தீபா தன்னை அறிமுகபடுத்திக்கொண்டாள் .நீங்களா வாருங்கள், உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறான் என்றார்.
இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப்பாக்கணும் எனக்கு அப்போதான் நிம்மதி என்றார் கிருஷ்ணா அப்பா. நீங்க ரெஸ்ட் எடுங்க. டாக்டர் என்ன சொன்னார் என்றாள் ரஞ்சனி. ஒரு 10 நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கார். நாங்க வருகிறோம் என்றாள் தீபா.வந்து பார்த்தகதற்கு நன்றி என்றார். அதெல்லாம் பெரிய வார்த்தை என்று ரஞ்சனி சொன்னாள்.ஏண்டா இந்த ரஞ்சனிதானா நீ விரும்புறேன்னு சொன்னது? ஆமாம்பா.. ரொம்ப தன்மையா பேசுறாங்க என்றார் . நான் வேணா அவங்க அப்பா கிட்ட பேசி பார்க்கவா ? அதெல்லாம் வேண்டாம் ரஞ்சனி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம பேச வேண்டாம் என்றான். தீபா என்ன ரஞ்சனி உனக்கு அவரை பிடிச்சிருக்கா என்றாள். என்னக்கா சொல்லுற ?கிருஷ்ணாவைத்தான் சொல்லுறேன். நான் இன்னும் படிப்பையே முடிக்கலை . அவர் மேல மரியாதை இருக்கு ஆனா அது காதல் இல்லை . உனக்கு எப்படிக்கா இப்படியெல்லாம் தோணுது என்றாள். என்னவோ என் மனசுல பட்டது . உனக்கு பிடிக்கலைனா வேணாம்.
கிருஷ்ணா 10 நாட்கள் கழித்து காலேஜ் வந்தவன் .. தீபாவை தேடி வந்தான் . இப்போ எப்படி இருக்கீங்க என்றாள். நான் ஓகே . உங்ககிட்ட பேசணும் . என்கிட்டயா கேண்டீன் போய் பேசுவோமா என்றான். சரி ஏதாவது அவசரமா ? அப்படியில்லை சொல்லாமல் இருப்பது நன்றாக இல்லை. நீ என்னை தப்பா எடுத்துக்க கூடாது . சொல்லுங்கள் எதுவா இருந்தாலும் சொல்லுங்கள் .. நான் உன் தங்கை ரஞ்சனியை விரும்புகிறேன் என்றான். ரஞ்சனியிடம் பேசிவிட்டு சொல்கிறேன் .எனக்கு உங்களை புரிகிறது கிருஷ்ணா நான் பிரேமிடமும் ஒரு வார்த்தை கேட்டு விட்டு நாளைக்கு சொல்கிறேன்.மாலை உற்சாகத்துடன் ரஞ்சனியிடம் இந்த விஷயத்தை சொன்னாள் . நான்தான் சொன்னேனே அவர் உன்னை விரும்புகிறாராம் . அதெல்லாம் வேண்டாம் அக்கா . நன்றாக யோசித்துதான் சொல்கிறாயா . எனக்கு என்று சில கனவுகள் இருக்கிறது. அதெல்லாம் முடிந்த பிறகுதான் கல்யாணம், காதல் எல்லாம். தீபா அப்போ நான் என்ன சொல்ல கிருஷ்ணாவிடம். நீயே எப்படியாவது சமாளி என்றாள்.
பிரேமுக்கு ஃபோன் செய்தாள் . விஷயத்தை கேள்விப்பட்டதும் தீபா அதெல்லாம் சரியா வராது அவ இப்போதான் காலேஜ் சேர்ந்திருக்கா .. அவளை எப்படியாவது நம்ம பிஸினஸ் உள்ளே கொண்டு வரணும்னு நெனைச்சேன். நீ அவர்கிட்ட தெளிவா சொல்லிடு.சரி பிரேம் இன்னும் ஒரு மாசம்தான். வந்துடுவேன் இங்கே எல்லாமே எனக்கு புதுசா இருக்கு. மாமாதான் எனக்கு சப்போர்ட்டா இருக்கிறார். சரி தீபா நான் வைக்கிறேன் என்றான். அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று சொன்னாள். சரி நான் சொல்லவில்லை.தீபா கிருஷ்ணாவிடம் சொல்லிவிட்டாள். பரவாயில்லை நான் ரொம்ப பேராசைபட்டுவிட்டேன் என்றான். அதெல்லாம் இல்லை நாம் எப்போதும் போல ஃபிரண்ட்ஸ் ஆக இருப்போம் . நீங்கள் சொல்வது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. நான் அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன். அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தார்.
அடுத்த ஒரு வாரத்தில் வேறு காலேஜ் மாற்றல் வாங்கி கொண்டு போய்விட்டான் கிருஷ்ணா. இவளுக்கு வருத்தமாய் இருந்தது. அவனும் ஃபோன் செய்யவில்லை. இவளும் ஃபோன் செய்யவில்லை. வெறுமை சூழ்ந்தது. சீக்கிரம் வந்து தொலை பிரேம் என்று சொல்லிக்கொண்டாள் . எக்ஸாம்ஸ் வேறு நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் 3 வாரத்தில் வந்து விடுவதாக பிரேம் சொல்லியிருந்தான்.நீ சொன்னதை விட அதிக நாள் அங்கு தங்கிவிட்டாய் என்றாள். அதெல்லாம் நம்முடைய கையில் இல்லை என்றான்.உன்னை அனுப்பி இருக்கவே கூடாது நான் தவறு செய்துவிட்டேன் .அவன் சிரித்தான். மிஸ் யு சோ மச் என்று சொல்லிவிட்டு ஃபோன் வைத்தாள்.
தீபாவுக்கு படிப்பில் ஆர்வம் குறைவதாக பட்டது. அக்கா நீ எப்போதும் மாமாவை நினைத்து கவலை அடைகிறாய் அவர் அவருடைய வேலையை முடித்துவிட்டுத்தான் வர முடியும் என்றாள் ரஞ்சனி.நான் பிரஷர் போடவில்லை. என் நிலமையைத்தான் சொன்னேன் . புரிகிறது . கோவிலுக்கு போய் சுவாமிகளை பார்த்து வரலாமா என்றாள் தீபா சரி போவோம் ஆனால் நீ உணர்ச்சிவசபடக்கூடாது . சரி. அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்தார்கள் மாலை 5 மணிக்கு. அவர் வாம்மா தீபா , பிரேம் எப்படி இருக்கிறான் என்றார். அவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த பிரிவெல்லாம் உன் அன்பை ஆழப்படுத்ததான். நீ கவலையில்லாமல் படி . முன்னேறு என்றார். உன் தங்கை ரஞ்சனி தன்னை எப்படி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள். நீயும் அவளை பின்பற்று என்றார். சரி சுவாமி. விடை பெற்றுகொண்டார்கள். அவர் உன்னை பின்பற்ற சொல்கிறார். இருவரும் சிரித்தார்கள்.
கிருஷ்ணா கல்யாண பத்திரிக்கை whatsapp பில் வந்திருந்தது தீபாவுக்கு. நாம் போக வேண்டாம் என்றாள் ரஞ்சனி. சுபா ஃபோன் பண்ணி எனக்கும் பத்திரிக்கை வந்திருக்கிறது என்றாள். நாங்கள் போகவில்லை என்றார்கள். என்ன ஆச்சு. நடந்ததை சொன்னாள் . அப்படியா நானும் போகவில்லை என்றாள் சுபா. நீங்கள் ஃப்ரீ ஆக இருந்தால் வீட்டுக்கு வாருங்கள் என்றாள் ரஞ்சனி. கொஞ்சம் வேலை இருக்கிறது அடுத்த வாரம் வருகிறேன் என்றாள்.பிரேம் தீபாவுக்கு அப்புறம் மற்ற எல்லோருக்குமான வேண்டிய பொருட்களை வாங்கி கொண்டான். அவனுக்கு இந்த ட்ரிப் மன நிறைவை தந்திருந்தது.