Nizhal Tharum Vasantham - 9 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 9

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 9

பிரேமுக்கு நிச்சயதார்த்த விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டி இருந்தது .அவள் அனுப்பி இருந்த பத்திரிகை ஆழ்ந்து படித்தான். கதிரேசனையும் சௌமியாவையும் வர சொல்ல வேண்டியதுதான் என நினைத்தான் மற்றபடி அவனுக்கு முக்கியமானவர்கள் அவனுடைய அப்பா அம்மா அவர்கள் நிச்சயம் வரமாட்டார்கள் அம்மா வந்தால் தீபா சந்தோஷப்படுவாள்.அலங்காரம் வீட்டுக்கு செய்ய வேண்டும் நிச்சயதார்த்தம் எளிமையாக வீட்டிலேயே நடைபெறுகிறது .இது அவனுக்கு சந்தோஷத்தை தந்தது. மேலும் தீபா தன்னுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழை அனுப்பி இருந்தாள் . ஒரு 200 பேர் வருவார்கள் என எதிர்பார்த்தான் ஆனால் ரஞ்சனியோ 150 பேர் வருவார்கள் என்று சொன்னாள். ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள் கலந்து கொள்வார்கள் மற்றபடி சுபாவை நேரில் போய் அழைக்க வேண்டும். சௌமியா என்ன நினைப்பாளோ தெரியாது அவள் எப்படியாவது வந்து விட்டால் இவனுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.
சௌமியாவுக்கு தீபாவை விட்டு பத்திரிகையை அனுப்ப சொன்னான் . அவள் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை .இவன் போன் செய்தான். நான் கல்யாணத்துக்கு வருகிறேன் நிச்சயமாக வருகிறேன் என்றாள். ரஞ்சனி ஏமாற்றம் அடைந்தாள். நாளை சுபாவை பார்த்து பத்திரிக்கை வைக்க போய்விட்டு வருகிறேன் என்றான் பிரேம் நானும் வருகிறேன் என்றாள் தீபா. நீ வீணாக அலையாதே நிறைய வேலை இருக்கும் என்றான்.. இதைவிட முக்கியமான வேலை என்ன இருக்கிறது நாம் போவோம் என்றாள்.
சுபாவுக்கு போன் செய்தான் நாங்கள் உன் வீட்டுக்கு வருகிறோம் அழைப்பிதழ் கொடுக்க என்றான் . சாயங்காலம் ஏழு மணி போல வாருங்கள் நான் ஆபீசிலிருந்து வந்து விடுவேன் என்றாள் சரி சுபா இவர்கள் தயாராகி ஆறு மணிக்கு அங்க போனார்கள் லலிதா மேடத்திற்கு வைத்தார்கள் அழைப்பிதழை. சுபா 6:30க்கு வந்து விட்டாள் இவர்களை பார்த்ததும் ரொம்ப வேகமாக இருக்கிறீர்கள் போலவே என்றாள் அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ முன் கூட்டியே வந்து விடு என்றான். சௌமியா வருகிறாளா ? இல்லை அவள் கல்யாணத்துக்கு வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறாள் . சரி நான் இரண்டு நாட்கள் முன்பாக வந்து விடுகிறேன் என்றாள் சுபா .
நிச்சயத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. அவளுக்கான மோதிரம் எடுக்க கடைக்கு போயிருந்தார்கள் தீபா நல்ல மோதிரமாக எடுக்க வேண்டும் எப்படி எப்படியோ இருக்க வேண்டும் என்று கனவு கண்டேன் ஆனால் ஆண்டவனாக உன்னை அனுப்பி இருக்கிறார் என்றாள். தீபாவும் பிரேமும் சேர்ந்து மோதிரத்தை செலக்ட் செய்தார்கள். ரஞ்சனிக்கு அது பிடித்திருந்தது. இவனுக்கு தீபாவுடைய மனசலனம் புரிந்தது ஆனால் காலம் கடந்து விட்டது அவர்கள் தங்களின் எதிர்காலத்தை முடிவு செய்து கொண்டார்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடிவு செய்தார்கள். அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.
எக்ஸாம் முடிவுகள் வந்து விட்டன. தீபா நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி இருந்தாள் மேற்கொண்டு படிக்கலாமென்று இருக்கிறேன் என பிரேமிடம் சொன்னாள். இதுக்கு தயக்கம் என்ன வேண்டியிருக்கிறது. நீ நீ என்ன படிக்க விரும்புகிறாய் என்றான். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளையே படிக்க விரும்புகிறேன் என்றாள். நிச்சயமாக நான் எல்லா ஏற்பாட்டையும் செய்கிறேன் நீ மனதளவில் தைரியமாக இரு என்றான் குமரகுரு மூன்று நாட்கள் முன்பாகவே ஊருக்கு வந்து விட்டார் எல்லா ஏற்பாடுகளையும் முன் நின்று செய்தார். சுபாவும் வந்துவிட்டாள் அலங்காரம் எல்லாவற்றையும் தீபாவும், சுபாவும் பார்வையிட்டனர் சில குறிப்புகளை அலங்காரம் செய்பவர்களிடம் கொடுத்தனர்.

பிரேம் நாதஸ்வரகாரர்களுக்கும் ,சமையல் செய்பவர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்தான். இடையில் போன் பண்ணி அவன் அம்மாவை கூப்பிட்டு நிச்சயத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை கல்யாணத்துக்கு கட்டாயம் வர வேண்டும் என்றான். அவன் தம்பியிடமும் பேசினான் அவன் அதிகம் பேசவில்லை.. எல்லாருடைய எதிர்காலத்தையும் இவன் ஒருவனே சுமப்பதாகப்பட்டது ஆனால் அது நிரந்தரம் இல்லை கால மாற்றத்துக்கு ஏற்ப எல்லாமும் மாறிவிடும் என நினைத்தான். எல்லா வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்த மாதிரி தான் தீபா நீ வேலையா இருக்கிறாயா என்றான் இது என்ன கேள்வி உனக்கு நான் எப்பவுமே ஃப்ரீ தான் என்றாள். சுவாமிகளை பார்க்க போவோமா என்றான். நான் உடனே ரெடி ஆகிறேன் என்றாள். இவன் போன் செய்து அப்பாயின்மென்ட் உறுதி செய்து கொண்டான். ஸ்வாமிகள் வர சொல்லி இருந்தார் இவன் அழைப்பிதழையும் எடுத்துக் கொண்டான். ஸ்வாமிகள் இவனை பார்த்ததும் நீ பட்ட கஷ்டம் எல்லாம் மாறப்போகிறது இவள் மனைவியாய் வருவது உன் எதிர்காலத்துக்கு நல்லது. தீபா நீ இனிமேல் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் உன்னுடைய மன குழப்பத்துக்கு முடிவு வர போகிறது ஆனால் புதிய ஆட்களை சந்திக்கும் போது நாம் சரியாக பேசுகிறோமா அல்லது சொல்ல வந்த விஷயத்தை சொல்லுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தீபாவும் பிரேமும் ஸ்வாமிகளிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். நிச்சயதார்த்த அழைப்பிதழை கடவுள் சன்னிதானத்தில் வைத்து வழிபட்டார்கள். பிரேம் நாம் உன் சொந்த ஊருக்கு போய் வர வேண்டும். நிச்சயமாக போகலாம் அதற்கான காலம் வரும் போது போகலாம் என்றான்.
குமரகுரு தன் அலுவலக நண்பர்களை விழாவுக்கு அழைத்திருந்தார் . பிசினஸ் பார்ட்னர்களையும் அழைத்து இருந்தார். பிரேம் சுபாவை பார்த்து நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றான். இது என் நண்பனின் கல்யாணம் நான் எல்லா வேலையும் பார்க்க வேண்டும் என்றாள். கதிரேசன் நிச்சயதார்த்தம் அன்று வருவதாக சொல்லி இருந்தான் அவனால் முதல் நாள் வர முடியாமல் போய்விட்டது. குமரகுரு ரஞ்சனியிடம் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டார் அவருக்கு இது முக்கியமான விழா ஆகையால் சின்ன விவரங்கள் கூட அவரிடம் இருந்து விடுபட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் ஆனால் தீபா அவரிடம் பேச மறுத்து விட்டாள்.குமரகுரு பிரேமிடம் மனம் விட்டு பேச விரும்பினார் அதற்கான சூழ்நிலை தற்போது தான் வந்திருந்தது என்னை மன்னித்து விடு பிரேம் நான் உன்னை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட்டேன் ஆனால் நீ பெருந்தன்மையாக என் மகளை ஏற்றுக் கொண்டு விட்டாய் உனக்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது என்றார். நான் அதை எல்லாம் மறந்து விட்டேன் இப்போது தீபாவின் எதிர்காலமே எனக்கு முக்கியம். ரொம்ப நன்றி பிரேம் .நீங்கள் கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் அப்பா அம்மா எப்படி இருக்கிறார்கள் என்றார். என்னால் நீ அவர்களை பிரியும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அவர்கள் கல்யாணத்துக்கு வருவார்கள் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

தீபாவின் மேற்படிப்பு சம்பந்தமாக சிலரினை கலந்து ஆலோசித்தான் எல்லாருமே அவள் கம்ப்யூட்டர் படிப்பு படிக்கட்டும் என்றார்கள். காலேஜ் செலக்சன் பொறுப்பை தீபாவிடமும்,ரஞ்சனியிடமும் விட்டுவிட்டான். அவள் வெளியூர் சென்று படிக்க விரும்பவில்லை ஆகையால் உள்ளூரிலேயே சிறந்த காலேஜ் தேர்ந்தெடுத்து அதில் அட்மிஷன் போட முடிவு செய்தான்.நிச்சயதார்த்த நாளும் வந்தது. தீபா அலங்காரம் செய்து கொள்ள பியூட்டி பார்லர் போய் வந்தாள். அவள் இன்னும் அழகாகி விட்டாள் . கூட ரஞ்சனியும் போயிருந்தாள். கதிரேசன் சுபாவிடம் பேசிக் கொண்டிருந்தான். பிரேமுக்கு எல்லாமே லேட்டா அமைந்தாலும் நல்லதாக நடக்கிறது என்றான்.உன் மனைவி பிள்ளைகள் எங்கே என்றாள். அவர்களை கல்யாணத்துக்கு அழைத்து வருகிறேன். அப்பா நீ தனியாகவே வாழ முடிவு எடுத்து விட்டாயா? அதெல்லாம் ஒன்றுமில்லை இதில் ஒரு சுமையும் இல்லை. என்னவோ நீ படித்தால் பிடிவாதம் தான் என்றான் அவள் ஒரு சிரிப்பு சிரித்தாள்.

தீபா பிரேமிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்றாள். எங்கு இருக்கிறாய் என்றான். இங்கே என் ரூமுக்கு வா என்றாள். உனக்கு இதில் முழு சம்மதம் தானே என்றாள். என்ன செய்து உனக்கு நான் என் நன்றி கடனை தீர்ப்பேன்னு தெரியாது ஆனால் நீ என்னை முழுமையாக நம்பலாம் எதுக்கு இப்போ இப்படி பேசுற? நாம ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகருகிறோம் அதனால மனசுல இருக்கிறத சொல்லிடறது நல்லது.விட்டா நாள் பூரா பேசிட்டு இருப்பீங்க ..வாங்க போகலாம் ஐயர் வந்துட்டாரு என்றாள் ரஞ்சனி. கீழே எல்லோரும் காத்திருந்தார்கள். வணக்கம் சொல்லி எல்லாரையும் வரவேற்று பேசினார் குமரகுரு. தீபா சற்று பதட்டமாக இருந்தாள். ஏசி குளிரையும் மீறி அவளுக்கு லேசாக வியர்த்தது. ஐயர் நிச்சயதார்த்த பத்திரிக்கையை வாசித்தார். இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். எல்லோரும் உணவருந்த சென்றனர். இருவரும் ஒரு சோபாவில் அமர்ந்து இருந்தனர் இன்னும் தள்ளி க்ளோசா உட்காருங்க என்று ரஞ்சனி கிண்டல் செய்தாள். கதிரேசனை ஒரு நாள் தங்க சொன்னான் ஆனால் அவன் மறுத்து விட்டான் நிறைய வேலை இருக்கு மச்சான் அடுத்த முறை கல்யாணத்துக்கு வரும் போது குழந்தைகளை அழைச்சிட்டு வரேன் அப்போது தங்குகிறேன் என்றான்.
தீபா இந்த டிரஸ்ல நீ அழகா இருக்குற.. இப்போதான் கண்ணுக்கு தெரிஞ்சுதா? சும்மா சொல்றியா என்றாள். உனக்கு என் மேல நம்பிக்கை வர மாட்டேங்குது என்றான் பிரேம். அது அப்படி இல்லை பிரேம் எப்போதுமே நான் உன்னை க்ளோசா வாட்ச் பண்ணிட்டு இருக்கேன் என்னை விட நீ தான் புத்திசாலி என்றாள். வாங்க சாப்பிடலாம் என்று சுபா இருவரையும் அழைத்து போனாள். ரஞ்சனி சுபாவையும் அமர சொல்லி சாப்பாடு வைத்து சாப்பிட வைத்தாள். சுபா என் கல்யாணத்துல கூட இந்த மாதிரி வேலை செஞ்சது இல்லை என்றாள். நீ நாளைக்கு போகலாம் சுபா என்றான் பிரேம். எனக்கு நிறைய வேலை இருக்கிறது உனக்காகவும் தீபாவுக்காகவும், ரஞ்சனி சுட்டிக்காகவும்தான் வந்தேன். நான் உன்னை வீட்டில் டிராப் செய்கிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம் என்றாள்.குமரகுரு எல்லோருக்கும் நன்றி சொல்லி தாம்பூல பைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மனம் நிறைந்தது.. நாம் ஒரு அவசர முடிவு எடுத்தாலும் அதை தன் பெண் வாழ்க்கையை நல்லவிதமாகவே கொண்டு போகிறது என மகிழ்ச்சி அடைந்தார். அன்று இரவே ஊருக்கு புறப்பட்டு விட்டார். என்ன மாமா அதற்குள்ளாக கிளம்பி விட்டீர்கள் என்றான் நான் இங்கு இருந்தால் தீபா இயல்பாக இருக்க மாட்டாள். அடுத்த முறை நீங்க கல்யாணத்துக்கு வரும்போது எல்லாம் மாறி இருக்கும் என்றான்.. உன் மேல தான் எனக்கு நம்பிக்கை இருக்கு. அதை நிச்சயம் காப்பாற்றுவேன் மாமா என்றான்.