Nizhal Tharum Vasantham - 6 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 6

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 6

தீபாவுடன் நடக்க இருக்கும் திருமணம் எளிமையாக இருந்தால் போதுமானது என எண்ணினான் பிரேம். குமரகுரு மறுப்பேதும் சொல்லவில்லை. கல்யாணம் கோவிலில் நடைபெற இருந்தது. தீபா எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தாள். அவளுடைய எக்ஸாமுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. பிரேம் அவளை படிப்பில் கவனம் செலுத்தும்படி சொன்னான்.நாட்கள் ஓடின. சௌமியா மறுபடி ஃபோன் செய்து தன்னுடைய கல்யாணத்துக்கு தீபாவையும் அழைத்துக்கொண்டு பிரேம் வர வேண்டும் என்றாள். சுபாதான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாயும் சொன்னாள். ரிசப்ஷன் அருகே சுபா நின்றிருந்தாள். சௌமியா அப்பா நீ உண்மையிலேயே பெரிய மனுஷன் தான் என்றார். தீபாவையும், பிரேமையும் வரவேற்றார். முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சி மறுநாள் கல்யாணம்.ஏற்காட்டில் வைத்திருந்தார்கள். இவன் தீபாவுடன் சில இடங்களை சுற்றி பார்த்தான். சௌமியா அன்று மாலை வந்து தீபாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

பிரேம் மறுநாள் விடிகாலை கல்யாணத்துக்கு ரெடி ஆகி விட்டான். தீபா தூங்கிக்கொண்டிருந்தாள் . சிறு பெண் தானே என்ற எண்ணம் ஏற்பட்டது. காப்பி ஆர்டர் செய்தான். எழுந்தவள் சாரி பிரேம் என்னால் லேட் ஆகி விட்டதா என்றாள். அதெல்லாம் ஒன்றுமில்லை என்றான். அவள் குளித்து உடை மாற்றட்டும் என்று வெளியில் இருந்தான். பிரேம் போகலாமா என்றாள் . மண்டபம் களை கட்டியிருந்தது. மாப்பிள்ளை அமெரிக்காவில் பிஸினஸ் செய்கிறார் என்றார்கள். தீபா மண மேடையில் ஏறி சௌமியா பக்கத்தில் நின்று கொண்டாள். இவன் இரண்டாவது ரோவில் உட்கார்ந்து கொண்டான். யாருக்கும் இந்த நிலமை வரக்கூடாது என்றெண்ணி கொண்டான். இவனுடைய அப்பா அம்மா வந்திருந்தார்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லாமல் போனது. தீபா போய் அவர்களிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாள். அவர்கள் சற்றே ஆச்சார்யப்பட்டார்கள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டாள்.

பிறகு மேடையில் இருந்து ஃபோன் செய்து பிரேமை மேடைக்கு கூப்பிட்டாள் . என்னை கஷ்டபடுத்தாதே தீபா என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை சும்மா வா பிரேம் . உன் அப்பா அம்மா சந்தோஷப்படுவார்கள் என்றாள். இவன் போய் மணமேடையில் நின்றான். தீபா அவன் சட்டையை பிடித்து இழுத்து அருகில் நிறுத்திக்கொண்டாள். தீபா பிரேம் நீ நல்லவன் என்றாள். சௌமியா கழுத்தில் மாப்பிள்ளை தாலி காட்டினான். சௌமியா பிரேமின் அப்பா அம்மா காலில் விழுந்தாள் . நல்லா இரும்மா என்றார்கள்.பிரேம் நீ சந்தோஷமாய் இருந்தால்தான் நானும் சந்தோஷமாய் இருக்க முடியும் என்றாள் தீபா. ம் நான் முயற்சி செய்கிறேன் என்றான். தீபாவை அழைத்து மறுபடி பேசினாள் சௌமியா. என்ன சொல்கிறாள் சௌமியா என்றான் பிரேம் . அவளுக்கு நம்முடைய ஜோடி பொருத்தம் பிடித்திருக்கிறதாம் என்றாள் . தீபா விருந்து சாப்பிட்டாள் . இவன் பெயருக்கு கொஞ்சமாய் சாப்பிட்டான். நாம் இரண்டு நாட்கள் இங்கே தங்கிவிட்டு போனால் என்ன என்றாள் தீபா. உனக்குத்தான் சங்கடமாக இருக்கும் என்றான். அதெல்லாம் நான் தாண்டிவிட்டேன் இப்போது என் மனதில் எந்த உறுத்தலும் இல்லை என்றாள். சரி என்று ஹோட்டல் ஃபோன் செய்தான் இரண்டு நாட்கள் தங்க ஏற்பாடு செய்தான். ஆபீஸ் ஃபோன் செய்து விஷயத்தை சொன்னான். ரஞ்சனி வந்தால் சந்தோஷம் அடைந்திருப்பாள் என்றும் சொன்னாள் . சௌமியாவிடம் விடை பெற்று கொண்டார்கள். சௌமியா இவனை பார்க்காமல் கண்களை தாழ்த்திக்கொண்டாள் .


ஏற்காட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து முன்பே திட்டமித்திருந்தாள் தீபா. இவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள் . ஏற்காடு எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் இந்த சூழ்நிலை மறக்கடித்து விடும் என்று நம்புகிறேன் என்றாள். சுபா ஹோட்டல் ரூமுக்கு வந்திருந்தாள் . அவளும் தன்னுடைய வாழ்வை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று தீபா சொன்னாள் . நிச்சயம் முயற்சிக்கிறேன் என்று சுபா சொன்னாள். பிரேமும் தீபாவும் ஏற்காட்டை சுற்றி பார்க்க கிளம்பினார்கள் . பூங்காக்கள் போன்றவற்றை தீபா மிகவும் ரசித்தாள். இவனுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு ரஞ்சனிக்கு அனுப்பி வைத்தாள்.இவன் தயங்கியபோது அவள் இவனை சேர்த்துப்பிடித்து கொண்டாள். ஏரியில் படகு சவாரி செய்தார்கள். காலம் ஒரு நதி போன்று அமைதியாக ஓடிகொண்டிருப்பதாக நினைத்தான். இரவு டின்னர் முடித்து ரூமுக்கு வந்த போது மணி 11 ஆகி விட்டிருந்தது. அவன் அவளை ரூமில் விட்டு விட்டு அருகில் இருந்த பார் ஒன்றிற்கு வந்தான். அவன் மனம் சௌமியாவை விட்டு விலகாமல் இருந்தது. வேணாம் தீபா தனியாக இருப்பாள் என்று தோன்றியதால் ஆர்டர் கேன்ஸல் பண்ணிவிட்டு ரூமுக்கு வந்தாள். எங்கே போனாய் பிரேம் குடிக்கவா என்றாள். இல்லை எனக்கு அது பழக்கமில்லை என்றான்.

பிரேம் நீ நீயாகவே இரு என்றாள் தீபா எனக்காக உன்னை மாற்றிக்கொள்ள வேண்டாம் .சரி தீபா . மறுநாள் நல்ல மழை இவர்கள் ரூமுக்குள்ளே இருக்கும்படி ஆகிவிட்டது. நவீனிடம் இருந்து ஃபோன் வந்தது இவன் தயங்கி தயங்கி எடுத்தான். என்ன சார் என் காதலியுடன் உல்லாசமா என்றான். அவள் போனை எடுக்க மாட்டேன் என்கிறாள் அது என்ன மாயம் செய்தீர்கள் என்றான். நவீன் நீ எங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றான். தீபா யார் போனில் நவீனா ?இங்கே கொடு என்றாள் வேண்டாம் அவன் குடித்திருப்பான் போல இஷ்டத்துக்கு பேசுகிறான் என்றான் பிரேம். நவீன் ஆமாம் நாங்கள் சேர்ந்துதான் இருக்கிறோம் . நீ நினைப்பது சரிதான் என்றாள். ரொம்ப நல்லது உன்னுடைய திட்டம் முன்பிருந்தே இதுவாகத்தான் இருந்திருக்கிறது என்றான். எதுவும் பேசவேண்டாம் . இனி உன்னுடைய கால் இங்கே வர வேண்டாம் என்றாள். பிரேம் நீங்கள் எதற்கு அவனிடத்தில் பணிந்து போக வேண்டும் அவன் முடிந்து போன கதை என்றாள்.

தீபாவின் இந்த மனமாற்றம் பிரேமை குழப்பத்தில் ஆழ்த்தியது. எதுவானாலும் அவள் மகிழ்ச்சிதான் முக்கியம் என்று நினைத்தான். ரெஸ்டாரண்ட் போய் டீ குடிக்கலாமா பிரேம் என்றாள் . போகலாம் என்றாள். குமரகுரு ஃபோன் செய்திருந்தார். தீபா என்னிடம் பேசுவதே இல்லை என்றார். எல்லாம் சரியாகிவிடும் என்றான். நீங்கள் இருவரும் சேர்ந்து இருப்பது எனக்கு நிம்மதியாக இருக்கிறது. கவனம் தேவை பிரேம் அவள் சின்ன பெண் என்றார். எனக்கு புரிகிறது சார் என்றான். இருவரும் ரெஸ்டாரண்ட் சென்று டீ குடித்தார்கள். அவள் இந்த சூழ்நிலையில் நான் நவீனிடம் அப்படி பேசியிருக்க கூடாதோ என்றாள். நீ என்ன செய்கிறாயோ அதுவே சரி என்று ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். என்னையும் அந்த ஸ்வாமிகளிடம் கூட்டி போகிறீர்களா அவரை எனக்கும் பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்றாள். நிச்சயமாக.என்னை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறதா பிரேம் . அப்படியில்லை நீ ஒரு தேவதை நான் மனுஷன் என்றான். அவள் அவனை ஆழமாக பார்த்தாள் . உனக்கு உண்மையில் என்னை பிடித்திருக்கிறதா பிரேம் ?யாருக்கு உன்னை பிடிக்காது .. நீ பொய் சொல்கிறாய் அப்படியில்லை நீ இன்னும் சிறு பிள்ளை.

அவர்கள் ரூமுக்கு திரும்பினார்கள் . நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்றான். அவன் சோபாவில் படுத்து கொண்டான். சரி பிரேம் நான் என்னுடைய ஃபிரண்ட்ஸ் கூட பேசி நாட்களாகிறது பேசுகிறேன் என்றாள். மாலை ஊருக்கு கிளம்ப தயாரானார்கள். மழை விட்டிருந்தது. பிரேம் நார்மல் ஸ்பீட் போதும் மெதுவாகவே காரை ஓட்டு என்றாள் இல்லை நான் ஓட்டவா ? அதெல்லாம் வேண்டாம் நானே ஜாக்கிரதையாக ஓட்டுவேன் என்றான். நான் என் ஃபோன் நம்பர் மாற்ற போகிறேன் பிரேம் .. ஏன் என்ன ஆச்சு என்னவோ என்னால் பழையபடி நவீனுடன் பேச முடியவில்லை . நீ மாற வேண்டாம் . நான் அவனிடத்தில் சொல்லுகிறேன் உன்னை தொந்தரவு செய்ய வேண்டாமென. சரி பிரேம். ரஞ்சனி ஃபோன் செய்திருந்தாள் என்ன அக்கா என்னை மறந்து விட்டாயா என்றாள். கொஞ்சம் பிஸி .. ம் நடக்கட்டும் நடக்கட்டும் . பிரேம் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார். எனக்கு ஏதாவது வாங்கினீர்களா என்றாள் . நிச்சயம் வாங்கி வருகிறோம் என்றாள். என்ன வாங்கலாம் பிரேம் என்றாள். டிரஸ் அவளுக்கு நிறைய இருக்கிறது. கரடி பொம்மை . ரொம்பவும் பழைய மாடல் . நாம் பிறகு என்ன செய்வது. சாக்லேட் பாக்ஸ் வாங்கி கொண்டு போகலாம் என்றாள்.

இடையில் ஒரு ஷாப்பிங் மால் ஒன்றில் காரை நிறுத்தி சாக்லேட் பாக்ஸ் வாங்கி கொண்டார்கள். உனக்கு ஒன்றும் வேண்டாமா பிரேம் ? வேண்டாம் நீ சென்ட்டிமென்ட் ஆக பேசுவாய். நானே உனக்கொரு ஷர்ட் எடுத்து தருகிறேன் என்றாள். அதன்படியே ஒரு பச்சை கலர் டீ ஷர்ட் எடுத்தாள் . இதென்ன கலர்? ஏன் பிரேம் பிடிக்கவில்லையா.. சே சே நான் சும்மா சொன்னேன் எனக்கு பிடித்திருக்கிறது என்றான். என்னிடம் உண்மையே பேசு பிரேம் . சௌமியாவிடம் இருந்து கால் வந்தது. நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் பிரேம் என சொன்னாள். இவன் ஒன்றும் சொல்லாமல் ஃபோன் வைத்து விட்டான் . காதல் ரொம்ப ஆழமானது பிரேம் என்றாள் தீபா.. இருவரும் சிரித்தார்கள்.வீட்டுக்கு வந்தவுடன் ரஞ்சனி இவனை கட்டிக்கொண்டாள் அக்காவிடம் நிறைய மாற்றம் தெரிகிறது தாங்க்ஸ் மாமா என்றாள். அவளை கவனமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.


கதிரேசன் ஃபோன் பண்ணியிருந்தான் . என்னப்பா என்னவெல்லாம் நடந்து விட்டது. எங்களையெல்லாம் மறந்து விடாதே என்றான். நிச்சயமாக இல்லை .. சௌமியா மனம் உடைந்து போய்விட்டாள் என்றான் கதிரேசன். நீ அதை பெரிது படுத்த வேண்டாம் அவளும் மாறிவிடுவாள் கூடிய சீக்கிரம் . ஃபோன் வைத்து விட்டான்.
டின்னர் என்ன செய்ய ? நானே சமைக்கிறேன் என்றாள் தீபா. நீ இரண்டு நாட்களாக சரியாகவே சாப்பிடவில்லை . உன் விருப்பம் ஏதாவது செய் . நீ எனக்கு உதவி செய்வாயா.. இந்த பொருட்களை வாங்கி வருகிறாயா .ரஞ்சனி நானும் வருவேன் என்றாள். சரி போகலாம் . இருவரும் ஷாப்பிங் போனார்கள். காய்கறி மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். ரஞ்சனி அக்காவுக்கு பிடித்ததை வாங்கு என்றான். தீபாவிடமும் கேட்டுக்கொண்டார்கள் . ரஞ்சனி நான் எதிர்பார்க்கவில்லை இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று சொன்னான். நான் மட்டும் என்ன கனவா கண்டேன் உங்களை மாமா என்று கூப்பிடுவேன் என்று . நீ என்னை பிரேம் என்றே கூப்பிடு.. அதெல்லாம் முடியாது . மூவரும் சேர்ந்துதான் இரவு உணவு தயாரித்தார்கள் . லேட் ஆகி விட்டிருந்தது.எப்படி இருக்கிறது என் சமையல் என்றாள் தீபா. சூப்பர் என்றான். மாமா ரொம்ப புகழாதீர்கள் அப்பறம் அவள் தினமும் சமைக்க ஆரம்பித்து விடுவாள்.நிஜமாகவே நன்றாக இருக்கிறது தீபா . தாங்க்ஸ் பிரேம் .