Nizhal Tharum Vasantham - 14 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 14

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 14

சௌமியா இதை சொல்லத்தான் ஃபோன் செய்தாயா ? ஆமாம் பிரேம் நீ என்னை மறக்க வேண்டும் என்றாள். இவன் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான். சில நேரங்களில் சௌமியா என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை.இவன் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தினான். தீபா மதியம் ஃபோன் செய்திருந்தாள் . என்ன பிரேம் சாப்பிட்டாயா? ம் ஆச்சு நீ சாப்பிட்டாயா என்றான். சாப்பிட்டேன் என்றாள். கிளாஸ் ஒரே போர் அதுதான் வீட்டுக்கு வந்துவிடலாம் என்று பார்க்கிறேன். நீ கொஞ்சம் சீக்கிரம் வருகிறாயா? ம் வருகிறேன் . ஒரு 6 மணிக்காவது வர பார். நாம் டின்னர் வெளியே போகலாம் என்றாள். எப்படியோ மணி ஆகிவிடுகிறது 7 மணி ஆகிவிட்டது வீட்டை அடைய. தீபா சாரி நான் வேணும்னு பண்ணலை என்றான். இட்ஸ் ஓகே . ரஞ்சனி நாம எங்கே போகிறோம் என்றான். அக்காவே செலக்ட் பண்ணட்டும் என்றான். அவள் ஒரு நல்ல ரெஸ்டாரண்ட் தேர்ந்தெடுத்திருந்தாள்.

என்ன இன்னும் கோவமா என்றான். பின்னே கல்யாணத்துக்கு முனனேதான் நாம சேர்ந்து இருக்க முடியலை . கல்யாணத்துக்கு பிறகு நீ இன்னும் ஒரு மாசத்திலே டூர் போகணும். உண்மைய சொல்லு பிரேம் நீ இன்னும் சௌமியாவை நினைச்சுக்கிட்டு இருக்கியா ? அதென்ன தீபா அப்படி கேக்குற ? எப்போ உன் கழுத்துல தாலி கட்டி என்னை உன் மனைவியா ஏத்துகிட்டேனோ அப்பவே சௌமியாவை மறந்துட்டேன். நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க. நான் ஆர்டர் பண்ணுறேன் என்றாள் ரஞ்சனி.நான் உன்னை வருத்தப்பட செய்ய லேட்டா வரலை. இனி இப்படி நடக்காது என்றான்.சரி சரி பேசாம சாப்பிடு பிரேம் .பிரேம் இவளுக்கும், சௌமியாவுக்கும் இடையில் ஏதாவது பேச்சுவார்த்தை இருக்குமோ என யோசித்தான்.நீங்கள் இருவரும் வீட்டுக்கு போங்கள் . நான் என் ஃப்ரெண்ட் ஒருத்தியை பார்த்துவிட்டு வருகிறேன் என்றாள் தீபா. இப்போதே லேட் ஆகிவிட்டது. நாளைக்கு போய் பார்க்கலாம் என்றான்.
அவள் யோசித்தாள். சரி நாளைக்கே பார்க்கிறேன் .

அவன் குமரகுரு சொன்னபடி எல்லா வேலைகளையும் ஆட்கள் பார்த்து பிரித்து கொடுத்தான்.இரண்டு மாதங்கள் தீபாவை பிரிந்து இருக்க வேண்டும் என்பதே அவனுக்கு கஷ்டமாய் இருந்தது. நாளைக்கு வெள்ளிக்கிழமை நாம் காலையில் கோவிலுக்கு போக வேண்டும் என்றாள் தீபா. எத்தனை மணிக்கு என்றான் . 6 மணிக்கு. ரஞ்சனியும் வருகிறாள். இவர்கள் கோவிலுக்கு போயிருந்த சமயம் அங்கே கிருஷ்ணாவை பார்த்தார்கள். என்ன சார் என்ன விசேஷம் என்றான் பிரேம். கொஞ்ச நாட்களாகவே இங்கு வர வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன் வேறொன்றும் விசேஷமில்லை என்றான்.இவர்கள் பூஜை செய்ய காத்திருந்த போது கிருஷ்ணா விடை பெற்றுக்கொண்டான்.தீபா கண்கள் மூடி பிரார்த்தனை செய்தாள். கல்யாணத்துக்கு பிறகு இப்போதுதான் கோவிலுக்கு வருகிறார்கள் இருவரும். அப்போது பிரேம் அம்மா ஃபோன் செய்தாள். பிரேம் வெளியே வந்து ஃபோன் எடுத்தான். நாங்கள் கோவிலில் இருக்கிறோம் பிறகு கூப்பிடுகிறேன் என்றான். சரிப்பா என்று ஃபோன் வைத்து விட்டாள்.

காரில் ஏறும்பொது தீபா யாரு ஃபோன் பண்ணினா என விசாரித்தாள். அம்மா தான் . என்ன விஷயம். இரு ஃபோன் பண்ணுறேன் என்றான். பிரேம் அம்மா ஃபோன் தீபாகிட்ட குடு என்றாள். சொல்லுங்க அத்தை எப்படி இருக்கீங்க . நான் நல்லா இருக்கேன்மா . நீ இன்னைக்கு கோவில் போனது ரொம்ப சந்தோஷம். நான் அதுக்குத்தான் ஃபோன் பண்னினேன்.சரிம்மா நீ அப்புறமா பேசு என்றாள். சரிங்க அத்தை . ரஞ்சனி கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருந்தாள்.மாதம் ஒருமுறையாவது நாம இந்த கோவிலுக்கு வரணும் என்றாள். பிரேம் காரை கிளப்பினான். ரஞ்சனி வரும் வழியில் காலேஜில் இறங்கி கொண்டாள் . நானும் என்னுடைய காலேஜ் அருகே இறங்கி கொள்கிறேன் என்றாள். அவன் அவள் முகத்தையே பார்த்தான். என்ன பார்க்கிறாய் பிரேம். ஒன்றுமில்லை என்னவோ பேச வேண்டும் போல இருக்கிறது. சாயங்காலம் பேசிக்கொள்ளலாம் என்றாள்.

சொல்லு பிரேம் நீ என்ன சொல்ல வந்தாய் காலையில் ஏதோ காலேஜ் போகிற மூடில் இருந்தேன். அது ஒன்றுமில்லை சௌமியா பற்றி இன்னும் நான் நினைத்துக்கொண்டிருப்பேன் என நீ நம்புவதை பற்றித்தான். நான்தான் உன் கால் ஹிஸ்டரி பார்க்கிறேனே அவள் இன்னமும் ஃபோன் பண்ணத்தான் செய்கிறாள் அதோடு நீயும் அவள் பேச்சை கேட்கிறாய் என்றாள். சரி இத்தோடு நான் அவள் கூட பேசவில்லை.நீ என்னை நம்பலாம் என்றான். நமக்கு இருப்பதே கொஞ்ச நேரம் அதிலும் அந்த சௌமியா பேச்சுத்தானா ?இனிமேல் ஏதாவது நம்மை பற்றி பேசு என்றாள்.ரஞ்சனி ஏதோ சொல்ல வந்தாள் . அப்புறம் அவளும் அவள் அறைக்கு போய்விட்டாள். எனக்கு நீ மட்டும்தான் பிரேம் இருக்கிறாய். அதோடு நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இவன் அமைதியாக இருந்தான்.

தீபா கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டும் .ட்ரிப் போவதற்காக கொஞ்சம் பேக் முதலான பொருட்கள் வாங்க வேண்டும் கூட வருகிறாயா என்றான்.சரி போகலாம் எப்போது ? நாளைக்கு சண்டே நாளை ஈவினிங் போகலாம். திங்க்ஸ் எடுக்க வேண்டியது பற்றிய லிஸ்ட் ஒன்றையும் தயார் பண்ணியிருந்தான். ரஞ்சனி அவற்றை சரி பார்த்தாள் . இரண்டு மாதத்துக்கு இவ்வளவு பொருட்கள் தேவையில்லை என அவற்றை ஒழுங்கு படுத்தி எழுதி கொடுத்தாள்.தாங்க்ஸ் ரஞ்சனி . சில சமயம் தான் தன்னை கவனித்து கொள்ளவே தடுமாறுகிறோம் என்பதை உணர்ந்திருந்தான். தீபா எனக்கு ஊரில் இருந்து வரும் போது இதெல்லாம் வாங்கி வா பிரேம் என ஒரு லிஸ்ட் கொடுத்தாள் . அதை வாங்கி பத்திரப்படுத்தி கொண்டான். இன்னும் 15 நாட்கள் இருந்தன பிரேம் ஊருக்கு போக.

குமரகுரு ஃபோன் பண்ணியிருந்தார். எப்படி பிரேம் இருக்கிறாய் ?தீபா சந்தோஷமாய் இருக்கிறாளா என்றார். அதெல்லாம் ஒரு குறையுமில்லை என்றான். நீ கிளம்ப தயாராகி விட்டாயா ? அந்த வேலை நடந்து கொண்டே இருக்கிறது. நீ கவலைப்படவேண்டாம், நான் உன் கூட இருக்கிறேன்.இவர்கள் ஷாப்பிங் போய் தேவையான சாமான்கள் எல்லாவற்றையும் வாங்கினார்கள்.தீபா ஒரு மாதிரி சிடுசிடுப்பான மனநிலையிலேயே இருப்பதாக பட்டது அவளுக்கு தான் ஊருக்கு போவதில் விருப்பமில்லை என பட்டது. அதை புரிய வைக்க முயன்றும் அவள் கேட்கவில்லை.இரவு அவள் சோர்வாக தூங்கி கொண்டிருந்தாள். இவன் அலுவலக வேலை கொஞ்சம் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் பிரேம் என்னை விட்டு போகாதே என தூக்கதில் புலம்பினாள். திடுக்கிட்டு எழுந்தாள். கண்களை கசக்கிக்கொண்டு நீ இன்னும் தூங்க வில்லையா ? வேலை கொஞ்சம் இருந்தது. இரு டீ போட்டு எடுத்து வருகிறேன் என கிச்சன் உள்ளே போனாள் . அவனும் போனான். அவளை மென்மையாக அணைத்தான். உதட்டில் முத்தமிட்டான். தாங்க்ஸ் என்றான். நீ இப்படியே என்னை ஏமாற்று என்றாள்.

இருவரும் டீ குடித்தனர். அவள் என்ன கனவு கண்டாள் என கேட்டான். அது ஒரு மாய லோக கனவு . நீ என்னை விட்டு விலகிப் போய் கொண்டே இருக்கிற மாதிரி கனவு. மணி என்ன ஆச்சு என்றாள் 3 மணி. இனி தூங்குவது கஷ்டம் என்றாள். நாம் வாக்கிங் போவோம் என்றான். சரி. பீச் பக்கத்தில் வாக்கிங் போவோம் என்றாள். சரி நான் கார் எடுக்கிறேன்.இருவரும் அதுவரை இல்லாத நெருக்கத்தை உணர்ந்தனர். கொஞ்ச தூரம் ஓடிய போது மூச்சு வாங்கியது பிரேமுக்கு. தீபா சற்று தள்ளி ஓடிக்கொண்டிருந்தாள். விடிகாலை என்பதால் அதிக கூட்டமில்லை. இருவரும் சற்றே ஆசுவாசபடுத்திக்கொண்டனர். பிரேம் உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கடற்கரைக்கு அழைத்து வருகிறாயா என்றாள். நிச்சயமாக. ரஞ்சனி ஃபோன் பண்ணியிருந்தாள் எங்கே போனீர்கள் என்னிடம் சொல்லாமல் . நீ தூங்கி கொண்டிருந்தாய் உன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று பார்த்தோம். அடுத்த முறை நானும் வருவேன் என்றாள். சரி

காலை 7 மணி போல வீட்டுக்கு வந்தார்கள்.சரி நான் ஒரு அரை மணி நேரம் தூங்குகிறேன் என்னை அப்புறம் எழுப்பிவிடு என்றான். ஆபீஸ் வேலை நிறைய இருக்கிறது . ரஞ்சனியும், தீபாவும் காலேஜ் கிளம்பி தயாரான போது அவன் எழுந்தான். நாங்கள் போய் வருகிறோம் . டிபன் ஹாட் பாக்ஸில் இருக்கிறது என்றாள் தீபா. தாங்க்ஸ் தீபா . இவன் குளித்து உடை மாற்றிக்கொண்டான். இன்றைய பொழுது நல்லவிதமாக ஆரம்பித்ததற்காக இறைவனுக்கு நன்றி சொன்னான். வீட்டை பூட்டி விட்டு ஆபீஸ் கிளம்பினான். சாயங்காலம் திரும்ப வரும் போது பூ வாங்கி வந்தான்.தீபாவுக்கு வைத்தும் விட்டான். நிம்மதி பெருமூச்சு விட்டான்.சௌமியாவிடம் இருந்து மெசேஜ் ,கால் எதுவும் வரவில்லை. சுபாவுக்கு ஃபோன் பண்ணி பார்ப்போமா என நினைத்தான் அப்புறம் எதுக்கு வம்பு என்று அந்த எண்ணத்தை கை விட்டான்.

குமரகுரு வந்திருந்தார். 10 நாட்கள் இங்கே தான் இருப்பார். அவர் போகும்போது இவனை அழைத்து போக ஏற்பாடு . இவன் பம்பரமாக சுழல வேண்டும். அவர் சில முக்கியமான பொறுப்புகளை கொடுத்திருந்தார். தீபா இம்முறை குமரகுருவை நன்கு கவனித்து கொண்டாள். அப்பாவுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதெல்லாம் அவளுக்கு நன்றாய் தெரியும். ஆபீஸ் முடிந்து குமரகுரு கூடவே வருவான் பிரேம். அது சில சமயம் 9 மணியை தாண்டிவிடும். இவன் வந்தவுடன் தீபாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்பான். என்னம்மா நான் பிரேமை அழைத்து கொண்டு போவதில் உனக்கு வருத்தம் போல தெரிகிறது .. அதெல்லாம் இல்லை. ரெண்டு மாதம் தானே பரவாயில்லை. இது மிகவும் அவசியமான ட்ரிப் என்றார்.

கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பு பிரேம் தன் அப்பாவிடம் பேசினான். நீ ஒண்ணும் கவலைப்படாதே என்றார்.இங்கே நாங்க ஒரு குறையும் இல்லாம இருக்கோம் தீபா அப்பப்போ பணம் போடுகிறாள் என்றார். சரிப்பா ஏதாவது வேணும்னா தீபா கிட்ட சொல்லுங்க. நான் அவ கிட்ட சொல்லி இருக்கேன் என்றான். நல்லபடியா போய்ட்டு வாப்பா என்றார். தீபாவிடம் அவர்களை கவனித்து கொள்ள சொல்லிவைத்திருந்தான். சுபாவுக்கு ஃபோன் பண்ணி தான் பயணம் போவதாய் சொன்னான். ஆல் தி பெஸ்ட் என்றாள். உனக்கு என்ன வேண்டும் ? மெசேஜ் பண்ணுகிறேன் என்றாள். ரஞ்சனி அக்காவை நினைத்து கவலை அடைந்தாள். ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை. பிரேம் வெளிநாடு கிளம்பும் நாள் வந்தது. இவள் கோவிலுக்கு போய்விட்டு வரலாம் என்று நினைத்தாள். பிரேமையும் ரஞ்சனியையும் கூட்டிபோனாள் . பிரேம் எல்லாம் நல்லபடியாய் நடக்கவேண்டும் என வேண்டிக்கொண்டான்.

இரவு 11 மணிக்கு பிளைட் . பிரேம் மதியமே எல்லாவற்றையும் பேக் செய்து வைத்துவிட்டான். தீபாவிடம் குமரகுரு பேசிக்கொண்டிருந்தார். ரஞ்சனி அமைதியாய் அதை கேட்டுக்கொண்டிருந்தாள் . நானும் வரவா ஏர்போர்ட் என்று கேட்டாள் . வேண்டாம்மா பிரேம் சங்கடப்படுவான். நான்தான் இருக்கேனே என்றார். பிரேமை உள்ளே கூப்பிட்டாள். நினைவிருக்கட்டும் அடிக்கடி ஃபோன் பண்ணு . நான் உனக்காக காத்திருப்பேன் என்றாள். பிரேம் விடைபெற்றுக்கொண்டான்.