Nizhal Tharum Vasantham - 3 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 3

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 3

வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகி விட்டிருந்தது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை.. சுபா கொஞ்சம் பொறுமை இழந்தவளாக காணப்பட்டாள் . ஏன் பிரேம் எனக்கு மட்டும் இப்படி நடக்குது என்றாள். இன்று வக்கீலை பார்த்து பேசிவிட்டு வருவோம் என்றான். காலை 11 மணிக்கு வர சொல்லியிருந்தார். இவனும் பர்மிஷன் போட்டு விட்டு சுபா கூட போனான். இவர்களை வரவேற்ற வக்கீல் பிரேம் குறித்து விசாரித்தார். இது ஒரு சாதாரண கேஸ் உனக்கு ஜீவனாம்சம் கூட வேணாம்னு சொல்லிட்ட அப்புறமும் மதன் ஏன் இப்படி பண்ணுகிறார் என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் பேசி பாருங்களேன் சார் என்று பிரேம் சொன்னான். நிச்சயம் பேசுகிறேன் எனக்கு சுபாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது. நீங்கள் மனம் தளர வேண்டாம் எப்படியும் 3 மாதத்துக்குள் விவாகரத்து வாங்கி விடலாம் என்றார். இவர்கள் விடை பெற்றுக்கொண்டார்கள். சௌமியாவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவளுக்கு ஃபோன் போட்டான். அப்பா ஏதாவது உன்னிடம் பேசினாரா என்றாள் எடுத்தவுடன். ஆமாம் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்றாள். ஏதோ கோவத்துல பேசி இருப்பார் அப்படின்னு நெனைச்சேன். அவர் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார். நீ அவசரப்படாதே நானே வந்து உன் அப்பாவிடம் பேசகிறேன் என்றான்.

சுபாவும், பிரேமும் கோவிலுக்கு போயிருந்தனர். பிரேம் சீக்கிரமே எல்லா பிரச்சனையும் தீரணும் என வேண்டிக்கொண்டான். அப்போது தீபா , ரஞ்சனி இருவரும் கோவில் பிரகாரத்தை சுற்றிவருவதை கண்டான். நீங்கள் எங்கே இங்கே இத்தனை காலையில் என்றான். அப்பா ஊர்லேயிருந்து அடுத்த வாரம் வருகிறார். அவருடைய பிறந்த நாள் வருகிறது. அதுதான் அர்ச்சனைக்கு சொல்லி வைத்து போக வந்தோம் என்றார்கள். இவங்க யாரு என்றாள் ரஞ்சனி சுபாவை பார்த்து. இவங்க :பேர் சுபா என் roommate என்றான். சரி அடுத்த வாரம் பர்த்டே பார்ட்டிக்கு இவங்களையும் அழைத்து வரவேண்டும் என்றார்கள்.சரி என்றான். விடை பெற்றுக்கொண்டார்கள்.
ரெண்டு பெரும் நல்ல அழகா இருக்காங்க என்றாள் சுபா. கோவில் பிரசாதம் வாங்கிக்கொண்டார்கள். அன்று ஏதோ கிளையண்ட் வந்து குடியிருப்பை பார்க்க போவதாக சொல்லியிருந்தார்கள். இவன் நேரத்துக்கு போய்விட்டான். அவர்கள் புதுமண தம்பதிகளாய் இருந்தனர். அடுத்த வாரம் கல்யாணம் . ஹாய் என் பெயர் அபிஷேக் என்றான். இது சாய்னா . அவர்களுடைய விருப்பம் 3 வது மாடியில் இருந்த வீடு. இவன் எல்லா வசதிகளையும் சொன்னான். அவர்களுக்கு பிடித்து விட்டது. நாங்கள் இரண்டு நாளில் கால் பண்ணுகிறோம் என்றார்கள்.

மாலை தீபா , ரஞ்சனி இருவரும் கடைக்கு போய் கேக் ஆர்டர் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். போலாமே என்றான். எத்தனை விதமான கேக்குகள் . நாம் ஏதாவது சாப்பிடலாம் என்றாள் ரஞ்சனி. நீங்க சாப்பிட்டுவிட்டு வாங்க நான் வெளியில் வெயிட் பண்ணுகிறேன் என்றான். அதெல்லாம் கூடாது நீங்களும் எங்களுடன் இன்று சாப்பிட வேண்டும் என்றார்கள். அது சரி எங்களுக்கு ட்ரீட் எப்போ என்றும் கேட்டாள் தீபா, சீக்கிரமே என்றான். அவர்கள் கொஞ்சமாக ஐஸ் கிரீம் சாப்பிட்டார்கள் . இவனுக்கும் சுபாவுக்கும் பார்சல் வேறு வாங்கி கொடுத்தார்கள். அந்த ஆண்ட்டி யாரு என விசாரித்தார்கள். இவன் சொன்னான்.ரொம்ப சாரி என்றாள் தீபா. உங்களோட ஆளை பத்தி சொல்லலியே நிச்சயம் சொல்லுறேன் இன்னொரு நாள் இப்போ நேரம் ஆச்சு என்றான். போட்டோவாவது காட்டலாமே என்றாள் ரஞ்சனி. பார்த்தவுடன் வாவ் என்றாள். இருவரையும் வீட்டில் டிராப் செய்தான்.

முதல் மாசம் சம்பளம் வாங்கியதும் அப்பாவுக்கு உடனே அனுப்பினான். அம்மாவிடம் பேசினான். சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோடா என்றாள். சுபாவை நினைத்து கவலையாய் இருந்தது. இரண்டு நாட்களில் அந்த சந்தோஷ செய்தியை சொன்னாள் . சுபாவுக்கு வேலை கிடைத்து விட்டது. இனி கவலையில்லை அவள் சொந்த காலில் நிற்கலாம் என்கிற நிலைமை வந்து விட்டது. சுபாவும் இவனும் அதை கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஊரிலிருந்து தீபா அப்பா வந்து விட்டார்.இவனே ஏர்போர்ட் பிக்அப் போயிருந்தான். என்னப்பா என் பெண்கள் உன்னை ரொம்பவும் புகழ்கிறார்களே என்றார். அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை என்றான். உன்னை எனக்கும் பிடித்திருக்கிறது என்றார். ஈவினிங் 7 மணிக்கு தவறாமல் பர்த்டே பார்ட்டிக்கு வந்து விடு என்றார் வரும்போது சுபா அவங்களையும் அழைத்து வா என்றார். சரி சார் என்றான்.

அபிஷேக் ஃபோன் பண்ணியிருந்தான் எங்களுக்கு ஓகே தான் நாங்கள் மத்த ஃபார்மாலிட்டீஸ் முடிக்க உங்கள் கம்பெனி ஆபீஸ் வந்துள்ளோம் என்றான். ரொம்ப சந்தோஷம் சார் என்றான். அடுத்த மாசம் நாங்கள் அங்கே வந்து விடுவோம் என்றான். ரொம்ப தாங்க்ஸ் சார் . சாய்னாவும் பேசினாள். எங்க கல்யாண invitation உங்களுக்கு whatsapp பண்ணியிருக்கேன் நீங்க கட்டாயம் வரணும் என்றாள். இதென்ன அன்பு என்று புரியாமல் மகிழ்ந்தான். சுபா வேலைக்கு போய் வந்தாள். எப்படி இருக்கிறது இந்த வேலை என்றான். எனக்கு பிடித்திருக்கிறது அடுத்து என்ன கல்யாணம் தானே என்றான். இனி என் வாழ்க்கையில் அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்றாள். அவள் ஆபீஸ் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம். நாம் வேண்டுமானால் வீடு இடம் மாற்றிக்கொள்ளலாமா என்றான். இந்த வீடு ராசியான வீடு இதை இப்போதைக்கு மாற்ற வேண்டாம் என்றாள். எனக்கு கொஞ்சம் tired ஆக இருக்கிறது நான் படுக்க போகிறேன் என்றாள். சரி சுபா .

அந்த பர்த்டே பார்ட்டிக்கு பெரிய மனிதர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். இவனும் சுபாவும் நேரத்தே போய்விட்டார்கள். தீபா, ரஞ்சனி நண்பர்கள் வந்திருந்தார்கள். சாய்னா, அபிஷேக் வருவார்கள் என எதிர்பார்த்தான் அவர்கள் வரவில்லை. இவன் ஒரு சிறிய கிப்ட் ஒன்றை வாங்கி வைத்திருந்தான். தீபா அப்பா இவனையும் சுபாவையும் வரவேற்றார், இருவரையும் எல்லோருக்கும் அறிமுகபடுத்தி வைத்தார். கேக் வெட்டி இரண்டு மகள்களுக்கும் ஊட்டினார். இரவு உணவு பரிமாறப்பட்டது. இவர்கள் கிளம்ப தயாரானார்கள். ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுல என்றார். என் பொண்ணுங்கள இவ்வளவு பத்திரமா பாத்துக்கிற உங்களுக்கு என் நன்றி என்றார். நாங்க வருகிறோம் என்றான்.வீடு வந்து சேர்ந்தார்கள் ரொம்ப நல்லா இருந்தது பார்ட்டி என்றாள் சுபா. எனக்கும் அவர்கள் நடந்து கொண்ட விதம் பிடித்திருந்தது என்றான்.

சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். அப்பா உன்னிடம் பேச வேண்டுமாம் . நீ நாளைக்கு ஹோட்டல் ரஞ்சித் இரவு 9 மணிக்கு போய்விடு என்றாள். என்ன திடீர்னு? எனக்கும் தெரியல அவர் ஒரு வாரமா பிசினஸ் விஷயமா பெங்களூர்லதான் இருக்காரு. எப்படியாவது அப்பாவை convince பண்ணு என்றாள். லவ் யு பிரேம் ஃபோன் வைத்து விட்டாள் . இவன் அவரை போட்டோவில்தான் பார்த்திருக்கிறான். ஆல் தி பெஸ்ட் என்று சுபா சொன்னாள். மணி இரவு 8 30 இருக்கும் போதே அந்த பிரம்மாண்ட ஹோட்டல் ரிசப்ஷனில் போய் நின்றான். அவன் பெயர் சொன்னதும் நீங்கள் இங்கே வெயிட் பண்ணுங்கள் நாங்கள் கூப்பிடுகிறோம் என்றார்கள். அவர் உங்களை சூட் நம்பர் 209 க்கு கூப்பிடுகிறார் முதல் தளம் என்றார்கள். வாங்க பிரேம் எப்படி இருக்கீங்க. .. நான் நல்லா இருக்கேன் எப்படி இருக்காங்க சுபா .. அவங்க நல்லா இருக்காங்க அவங்களே உங்களை விட்டு போனாலும் நீங்க போக மாட்டீங்க போல.. தப்பா பேசாதீங்க சார். ம் உங்களுக்கு கோவமெல்லாம் வருதே . இட்ஸ் ஓகே என் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேன் அது விஷயமாத்தான் பெங்களூர் வந்தேன். உங்களையும் பார்க்கலாம்னு நெனைச்சேன் ஆனா டிரைவர் வேலை பார்க்குற உங்களை என் ஸ்டேட்டஸ் ஒத்துக்குமா அப்படின்னு தெரியல. சௌமியா என்னவோ பிடிவாதமா இருக்குறா . நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம் என்னால சௌமியாவை சந்தோஷமா வச்சிக்க முடியும். சரி எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க என்றார். நான் வரேன் என்றான்.

ஹோட்டல் விட்டு வெளியில் வந்தபொது சௌமியாவிடம் இருந்து ஃபோன் வந்தது. என்ன ஆச்சு எல்லாம் ஓகே தானே என்றாள். அவர் பெருசா இம்ப்ரஸ் ஆகலை. ஆனா யோசிச்சு பாக்குறதா சொல்லி இருக்கார். ம் நீ என்னை அம்போன்னு விட்டுட மாட்டியே .. அதெல்லாம் அவர் பர்மிஷனோட நம்ம கல்யாணம் நடக்கும் ஓகே வா என்றான். சுபாவிடம் விஷயத்தை சொன்னான். அவள் நிச்சயம் நல்லதே நடக்கும் என்றாள். அபிஷேக் கல்யாணம் இன்னும் 3 நாட்களில் இருந்தது. இவன் மட்டும் போய் வரலாம் என எண்ணினான். கல்யாணம் கோவிலில் வைத்திருந்தார்கள். அபிஷேக் மாதிரி தானும் செட்டில் ஆக வேண்டும் என நினைத்தான். தீபா அப்பா இன்று ஊருக்கு போகிறார். அவர் மதியம் லஞ்ச்க்கு வர சொல்லியிருந்தார். பிரேம் மதியம் 1 மணிக்கெல்லாம் போய் விட்டான். வா பிரேம் உன்னைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றார்.

சொல்லுங்க சார் .. என் பெரிய பொண்ணு தீபா ஒரு பையனை விரும்புறா அப்படின்னு ஒரு நியூஸ். ஓ அவ ரொம்ப சின்ன பொண்ணாச்சே .. அதுதான் எனக்கும் கவலையா இருக்கு .. நான் அவ கிட்ட இதை பத்தி பேசல . எனக்கு டீடெயில்ஸ் வேணும் யார் அவன் என்ன பண்றான் அப்படின்னு .. நீ எனக்காக இதை செய்வியா பிரேம். நிச்சயமா சார். தீபாவுக்கு இது தெரிய வேண்டாம்.உன் அக்கவுண்ட் ல கொஞ்சம் பணம் போட்டுருக்கேன் . சூழ்நிலை பார்த்து நீயே முடிவெடு என்றார். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. எக்காரணம் கொண்டும் வெளியே இது யாருக்கும் தெரிய கூடாது அது ரஞ்சனி வாழ்க்கையையும் பாதிக்கும் என்றார். வா சாப்பிடலாம் என்றார். அவரை வழி அனுப்ப இவன் மட்டும் ஏர்போர்ட் போயிருந்தான். சொன்னது எல்லாம் முக்கியம் என்றார் தீபா அப்பா. எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. தீபா சிறு பெண்.. காதலிப்பது பற்றி என்ன தெரியும் அவளுக்கு. அவளை எப்படியாவது இந்த விஷயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என நினைத்தான்.

தீபா விஷயத்தை சுபாவிடம் கூட சொல்லவில்லை. கோர்ட்க்கு சுபா கூட போனான். இந்த முறை மதன் வக்கீல் ஒரு புதிய வாதத்தை வைத்தார் . அது சுபாவுக்கு வேறு ஒரு முறை தவறிய உறவு இருக்கிறது என்று கூடறினார். அது வேறு யாருமல்ல பிரேம் தான் என கூறினார். இதை கேட்ட பிரேம் அதிர்ந்து போனான். சுபா பதில் சொல்ல சாட்சி கூண்டில் ஏறினாள் . இவன் மனம் பட படவென அடித்து கொண்டது. ஆமாம் நான் பிரேமைத்தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்றாள். இதை கேட்ட மதன் திடுக்கிட்டான். பிரேமுக்கும் ஒன்றும் புரியவில்லை. தீர்ப்பு அடுத்த வாரம் வரும் என்று ஜட்ஜ் சொல்லிவிட்டார். வெளியே வந்த சுபா அழுதாள் . எனக்கு வேறு வழியில்லை பிரேம் என்று அவனை கட்டிக்கொண்டு அழுதாள் . பிரேம் திகைத்து போனான்.