Nizhal Tharum Vasantham - 2 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 2

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 2

விதி - விதியின் போக்கிலே தான் நாம் அனைவரும் போய்க்கொண்டு இருக்கிறோம். தெரிந்தும் தெரியாமலும் நாம் அதன் கைப்பாவைகள் ஆகிறோம் என்று சொல்லி முடித்தார் ஸ்வாமிகள். விதியின் திட்டமிடலில் இருந்து தப்ப முடியாதா ஸ்வாமி என்று சுபா கேட்டாள் . வழி இருக்கிறது. நம்முடைய சரீரத்தை கட்டுப்படுத்துவதான் மூலம் நம்முடைய ஆசைகள் பேராசைகளாய் மாறுவதை தடுப்பதான் மூலம் ஓரளவுக்கு விதியின் போக்கை தடுக்கலாம் என முடித்தார். ரொம்ப நன்றி ஸ்வாமி என்றாள் சுபா. ஸ்வாமிகள் நல்ல விஷயமா பேசுறார் பிரேம் .. ஆமா அது ஒரு வகையில் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியது தான். நாளைக்கு வீடு பாக்க போகணும் மார்னிங் 10 மணிக்கெல்லாம் வந்துடு என்றாள். நல்லா யோசிச்சுக்க நாளைக்கு நம்ம ரெண்டு பேரையும் யாராவது தப்பா பேச வாய்ப்பிருக்கு என்றான் பிரேம். அதை பத்தி எனக்கு கவலை இல்லை. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. சரி வரேன் என்றான்.

அவளிடம் வீடு அட்வான்ஸ் குடுக்க கதிரேசனிடம் வாங்கிய 10000 மட்டுமே கொடுத்திருந்தான். அவள் அதையும் வேண்டாமென்று சொன்னாள். இவன்தான் பிடிவாதமாக கொடுத்தான். ஃப்ரெண்ட் ரூமில் தற்காலிகமாக தங்கியிருந்தான். ஒன்றிரண்டு இன்டர்வியூ போய் வந்திருந்தான். என்ன சுபா போலாமா என ஃபோன் செய்தான். நீ பஸ் ஸ்டாப் வந்துவிடு அங்கிருந்து டாக்ஸி பிடித்து போய் விடலாம் என்றாள். வீடு ஓனர் பெண்மணி ஆக இருந்தாள். அவர் பெயர் லலிதா. பார்க்க சிறுவயது பெண்மணி போல இருந்தாள். ஒரு கிச்சன், ஹால் , இரண்டு தனி பெட்ரூம். போதுமான தண்ணீர் வசதி இருந்தது. சுபாவுக்கு பிடித்திருந்தது. இவன் கொஞ்சம் வாடகை அதிகமோ என எண்ணினான். இப்போதைக்கு பரவாயில்லை என்றாள் சுபா. மேற்கொண்டு பேசி அட்வான்ஸ் ட்ரான்ஸ்பர் செய்தாள். எனக்கு உங்க ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு அதான் அதிகம் கண்டிஷன் போடாம வீடு குடுக்கறேன் என்றாள் லலிதா. ரொம்ப தாங்க்ஸ் மேடம் என்றான் பிரேம்.

மறுநாள் சுபாவுடைய பொருட்கள் எல்லாம் அவளுடைய பழைய வீட்டிலிருந்து ஒரு சிறிய ரக டெம்போவில் ஏற்றி கொண்டு வந்தான் பிரேம். எல்லவற்றையும் ஒழுங்குபடுத்த தொடங்கி இருந்தனர் பிரேமும் சுபாவும். மதியம் வெளியில் ஆர்டர் பண்ணி சாப்பிட்டனர். சௌமியாவுக்கு இந்த லொகேஷன் அனுப்பினான். இரவு அவளிடம் பேசினான். எப்படியும் வேலை கிடைத்து விடும் என்றான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். மனது சௌமியாவை நினைத்து கவலை கொண்டது. மதன் மறுபடி ஃபோன் பண்ணாதது சற்றே ஆறுதலாய் இருந்தது. நாளைக்கு சுபா கோர்ட்டுக்கு போக வேண்டும். அவள் மட்டும் போவதாய் சொல்லி இருந்தாள். ம்யூச்சுவல் விவாகரத்து என்பதால் அதிகம் கேள்விகள் கேட்கமாட்டார்கள் என்றே எண்ணி இருந்தாள். ஆனால் வக்கீல் பீஸ் ரொம்ப அதிகம். பிரேம் அவள் காலையில் சமைத்து வைத்து போனதை சாப்பிட்டான். அன்றைய தினசரியை ஆராய்ந்த போது அந்த வேலை அவனுக்கு சூட் ஆகும் போல தெரிந்தது. ஃபோன் பண்ணி பேசினான். மதியம் 2 மணி போல வர சொன்னார்கள். சுபாவுக்கு ஃபோன் செய்தான் எடுக்கவில்லை . வீட்டை பூட்டி சாவியை எடுத்து கொண்டான். ஒரு சாவி அவளிடத்திலும் இருந்தது.

சைட் இன் சார்ஜ் வேலை தான் அது. அவன் படிப்புக்கு சம்பந்தம் இல்லை ஆனால் பகுதி நேர டிரைவர் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்பதால் நிறைய பேர் அப்ளை செய்யவில்லை போல. மூன்று பேர் வந்திருந்தார்கள் . அவர்கள் இவனை விட திடமாய் இருந்தார்கள். புதியதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பொறுப்பு தரப்படும். அதன் படி அவர்கள் வீட்டு நிர்வாகத்தை பார்த்து கொள்ள வேண்டும். மாலையில் ப்ராஜக்ட் ஓனர் வீட்டு குழந்தைகளை ஸ்கூலில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட வேண்டும். இது சற்று சிக்கலான வேலை. குழந்தைகள் எப்படி இருப்பார்களோ என யோசனை பண்ணினான். அதெல்லாம் பயப்பட வேண்டாம் அவர்கள் அடுத்த வருடம் காலேஜ் போக போகிறவர்கள் அதனால் கவலைப்படவேண்டாம் என்றார்கள். இரண்டு நாட்களில் முடிவு சொல்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

சாரி பிரேம் கொஞ்சம் கோர்ட் ல இக்கட்டான சூழ்நிலை அதான் ஃபோன் எடுக்க முடியல என்றாள். பரவாயில்லை எனக்கு வேலை கிடைக்க மாதிரிதான். எதுக்கு இந்த வேலை வேற பெட்டர் வேலை பார்க்கலாம்தானே என்றாள். அதெல்லாம் கிடைக்கும்போது பார்க்கலாம் என்றான். கோர்ட்ல என்ன சொன்னாங்க ? நெக்ஸ்ட் ஹியரிங் அடுத்த மாசம் 10 தேதி வர சொல்லி இருக்காங்க. அடுத்த முறை நீயும் வாயேன் எனக்கு என்னவோ போல இருக்கு தனியா போக. நிச்சயமா வரேன். நீ போய் ஃபிரெஷ் ஆகிட்டு வா. கடையில் மாவு வாங்கி வைத்து இருக்கிறேன் தோசை ஊத்தி தரேன் என்றான் பிரேம். தாங்க்ஸ் பிரேம் என்றாள். தாங்க்ஸ் எல்லாம் வேண்டாம் எனக்கு கன்னடம் கத்துக்கொடு என்று சொல்லிவிட்டு கிச்சன் உள்ளே போனான்.

பிரேமை அழைத்து பேசினார்கள் எங்களுக்கு எங்கள் குழந்தைகளின் சேஃப்டி தான் முக்கியம் . அதனால்தான் உன்னை செலக்ட் செய்திருக்கிறோம். உன்னை எங்களுக்கு பிடித்திருக்கிறது . உன்னுடைய பேக்ரவுண்ட் செக் செய்துவிட்டே இந்த வேலையில் சேர்க்கிறோம். நீ எது தவறு செய்தாலும் உன்னை சேர்ந்தவர்களையும் பாதிக்கும் என்றார்கள். மாலை 7 மணி போல அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் டைப் பண்ணி கொடுத்தார்கள். 30000 ரூபாய் சம்பளம் . ரொம்ப நன்றி சார் என்று சொன்னான். சௌமியாவிடம் சொன்னதற்கு பரவாயில்லை இப்போதாவது உன் தன்னம்பிக்கை ஜெயித்ததே அதுவே போதும் என்றாள். சுபாவும் இவனும் நல்ல ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டார்கள். டியூட்டி டிரஸ் எடுத்து கொடுத்திருந்தார்கள் . எதை செய்யலாம் எதை செய்ய கூடாது என்பதை எல்லாம் தெளிவாக சொல்லி இருந்தார்கள். சுருக்கமாக ஒரு பாடிகார்டு வேலையை கொடுத்து இருந்தார்கள்.

மறுநாள் டியூட்டி ஜாயின் பண்ணும் முன் ஃபோன் பண்ணி வீட்டில் பேசினான். அவர்களுக்கும் சந்தோஷம் தான். சம்பளம் வாங்கியதும் உடனே அனுப்புகிறேன் என்றும் சொன்னான். அடுக்கு மாடி குடியிருப்பை சுற்றி காட்டினார்கள். காலை உணவு ஓனர் வீட்டில் அரேஞ்ச் செய்திருந்தார்கள். இவன் 8 மணிக்கு போய் சேர்ந்தான். அவர்கள் பெயர் தீபா, ரஞ்சனி . இரண்டு பேரும் ஸ்கூல் இறுதி ஆண்டில் இருந்தார்கள். அவர்களாகவே தங்களை அறிமுகபடுத்தி கொண்டனர். அவர்களுக்கு தமிழ் தெரியும் என்பது இவனுக்கு நிம்மதியாய் இருந்தது. இரவு 7 மணிக்கு ஸ்கூலில் இருந்து பிக்அப் செய்து கொள்ள வேண்டும் .ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் முடிந்து 7 மணிக்கு தான் வருவார்கள். வீடு என்னவோ அங்கிருந்து 5 கிலோமீட்டர் தான் . தீபா பெரியவள் , ரஞ்சனி சின்னவள். அவர்களுடைய மொபைல் எண்களை கொடுத்தார்கள். இது அவர்கள் சேஃப்டி சம்பந்தபட்ட விஷயம் அவர்களுடைய அப்பா வெளிநாட்டில் இருக்கிறார். 3 மாதத்துக்கு ஒரு முறை வருவார் என்றும் சொன்னார்கள்.

காலை அவர்களை பள்ளி வேன் வந்து அழைத்து செல்லும். லீவு வேண்டுமென்றால் முதல் நாளே சொல்ல வேண்டும். போன்ற கண்டிஷன் உண்டு. வெளியில் வீட்டில் சொல்லாமல் எங்கும் அழைத்து போக கூடாது . இவனுக்கு இது கத்தி மேல் நடக்கிற வேலை என்று தெரிந்து போயிற்று அதனால் தான் 30000 சம்பளம். அன்று முதல் நாள் டியூட்டி என்பதால் நேரத்தோடு போய்விட்டான். தீபாதான் பேசினாள்..பயப்படாதீங்க நாங்க எங்க வேலைய பார்ப்போம் நீங்க உங்க வேலைய பாருங்க என்றாள். சண்டே ஸ்கூல் லீவு. இவனுக்கும் லீவு. ரஞ்சனி அதிகம் பேசமாட்டாள். என்ன சுபா ஏதும் அப்டேட் இருக்கா சில திங்க்ஸ் வீட்டுக்கு வாங்கணும் நாளைக்கு சண்டே தானே நீயும் வரியா?வரேன் .. சௌமியா அடுத்த வாரம் வருவதாய் சொல்லி இருந்தாள். சுபாவுக்கு வேலை கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன. அவளுடைய கோர்ட் கேஸ் அவளுக்கு வேலை கிடைப்பதில் சிரமத்தை உண்டு பண்ணியது.

ஷாப்பிங் போயிருந்தார்கள். கிச்சன் கிளீன் செய்யும் சில பொருட்கள். சமைப்பதற்கு தேவையான சாமான்கள் போன்றவற்றை வாங்கினார்கள். வரும் போது ஏன் சுபா மதன் ஃபோன் பண்ணினாரா என்றான். டெய்லி ஃபோன் பண்ணுகிறான். ஆனா எனக்கில்லை வக்கீலுக்கு , இருவரும் சிரித்தார்கள்.சுபாவும் , மதனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.சௌமியாவை ரயில்வே ஸ்டேஷன் போய் பிக்அப் செய்து கொண்டு வந்தான். வா சௌமியா நான் இருப்பது ஒன்றும் இடைஞ்சல் இல்லையே என்றாள் சுபா. அதெல்லாம் ஒன்றுமில்லை என்னால் இவனை பார்க்காமல் இருக்க முடியாது நான் நாளைக்கே கிளம்பிவிடுவேன் என்றாள். அதெல்லாம் முடியாது ரெண்டு நாட்கள் தங்கி இருந்துவிட்டு தான் போக வேண்டும் என்றாள். சரி உன் விருப்பம் சுபா .

ரொம்ப நாள் கழித்து பார்த்து கொண்டதால் சுபாவிடம் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தாள் சௌமியா. நீ ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் நல்ல படியாய் நடக்கும் என்றாள் சௌமியா. நாளைக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலையும் இருக்கிறது அதனால் நான் சாயங்கலம்தான் வருவேன் என்றாள் . சரி சௌமியா நேரமாச்சு நீ தூங்கு நான் கொஞ்சம் ரெஸ்யூம் ப்ரிப்பேர் பண்ணுறேன் என்றாள் . சௌமியா பிரேமுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு சுபா அறைக்கு போனாள் .
மறுநாள் டியூட்டிக்கு போகும் முன் சௌமியாவை அவளுடைய தலைமை அலுவலகத்தில் டிராப் செய்தான். சுபா ஏதோ இன்டர்வியூ இருக்கிறதென்று காலையிலேயே போய் விட்டாள். பிரேமுடன் தீபாவும், ரஞ்சனியும் அளவாக பழகினார்கள். அதுவரை எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. அன்று மாலை ஏதோ ஒரு unknown நம்பரில் இருந்து கால் வந்தது. நான் சௌமியா அப்பா பேசுகிறேன். நேற்றுதான் உன் விஷயம் தெரிந்தது. எனக்கு உன்னை பிடிக்கவில்லை என் மகளுக்கு உன்னை பிடித்திருக்கிறது. நீயாக விலகி கொள் என்றார். இதை பற்றி சௌமியாவிடம் சொல்ல வேண்டாம் என்றார்.

என்ன அங்கிள் ஒரு மாதிரி இருக்கீங்க என்றாள் தீபா உடம்பு சரியில்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதாவது லவ் மேட்டர் ஆ சொல்லுங்கள் என்றாள் ரஞ்சனி. நீங்கள் குழந்தைகள் .. ஓ என்றனர் இருவரும்.அவர்களை வீட்டில் டிராப் செய்துவிட்டு வந்தான். சௌமியா சுபா இருவருடன் வெளியில் சாப்பிட்டான். என்னாச்சு இன்டர்வியூ சுபா அவன் என்னை கூப்பிடுகிறான். சாரி சுபா அங்கேயே அவனை நாலு அறை விட வேண்டியதுதானே .. அதெல்லாம் நேரடியாக கேட்கவில்லை மறைமுகமாக பேசுகிறார்கள். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. நீ கவலைப்படாதே சுபா நல்லதே நடக்கும் என்றான். நான் விரும்பியவனே என்னை கை விட்டு விட்ட போது நான் என்ன செய்ய முடியும். சௌமியாவிற்கும் பிரேமுக்கும் சுபாவை நினைத்து வருத்தம் ஏற்பட்டது. சௌமியாவிடம் அவள் அப்பா சொன்னதை சொல்லவில்லை. மதன் வேண்டுமென்றே விவாகரத்தை இழுத்தடிப்பதாக சுபா சொன்னாள் . இவன் பொறுமையாக இரு என்று மட்டும் சொன்னான்.