Nizhal Tharum Vasantham - 4 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 4

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 4

பிரேம் சுபாவை சமாதானபடுத்தினான்.அவன் அவளை தவறாக நினைக்கவில்லை என்றும் கூறினான். அவளுடைய சூழ்நிலை காரணமாகவே அவ்வாறு கோர்ட்டில் கூறினாள் என்பதை உணர்ந்திருந்தான். மதன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான் சுபாவை அவமானபடுத்த நினைத்தவன் கடைசியில் தானே பிரேமையும் சுபாவையும் சேர்க்க காரணமாகிவிடுவோமோ என யோசித்தான. சுபா இப்படி செய்வாள் என பிரேம் எதிர் பார்த்திருக்கவில்லை. ஆனால் சுபாவை அப்படியே விட்டுவிட மனமுமில்லை .சுபா தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் .அத்தோடு அந்த பிரச்சனை முடிந்ததாக பிரேம் நினைத்தான். ஆனால் மதன் அதை பெரிது படுத்தி பார்க்க நினைத்தான்.
தீபாவின் காதலன் யார் என்று தெரியாத சூழலில் அவளிடம் அது பற்றி பேச வேண்டாம் என நினைத்தான். தீபாவை விட்டு பிடிப்போம் என நினைத்தான். அதன்படியே லீவு போட்டுவிட்டு அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினான். இதெல்லாம் நமக்கு தேவையா என அவன் மனம் கேட்ட போதும் தீபாவின் எதிர்காலம் கருதி இதை செய்வதில் தப்பில்லை என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். தீபா தினமும் ஸ்பெஷல் கிளாஸ் போகவில்லை. அருகில் இருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு போவதை கவனித்தான் பிரேம். அங்கு போய் விசாரித்த போது நவீன் என்பவன் மெடிக்கல் காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் உடன் தான் தீபா பழகி வருவது தெரிந்தது.அவனும் நல்ல ஸ்மார்ட் ஆக இருந்தான். இந்த விஷயத்தை தீபா அப்பாவிடம் சொல்ல நினைத்தான்.பிறகு தானே சால்வ் செய்யலாம் எனவும் தோன்றியது. அதற்குள் தீபா அப்பாவே ஃபோன் செய்தார்.

பிரேம் எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். இனி நான் பார்த்துக்கொள்கிறேன். நீ இதுல இனிமே இன்வால்வ் ஆகிய வேண்டாம் என்றார். சரி சார் என்று சொன்னான். இதற்கிடையில் அபிஷேக் கல்யாணம் கோவிலில் நடை பெற இருந்தது. அங்கே தீபாவும். ரஞ்சனியும் வந்திருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது நவீன் அபிஷேக்கின் தம்பி என்று.தீபா சொல்லித்தான் அந்த வீட்டை அவர்கள் புக் செய்தார்கள் என்று. என்ன அங்கிள் அப்படி பாக்குறீங்க எனக்கு உங்களை நல்லா தெரியும் தீபா சொல்லி இருக்கா என்றான். தீபா எதுவும் பேசவில்லை. அபிஷேக்குக்கும் இவர்களுடைய காதல் விவகாரம் தெரியும் என்று தெரிய வந்தது. அவர் நவீனை ஏதாவது செய்து விடுவாரோ என பயந்தான் . அதன் படியே நவீன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டான். தீபா கலங்கி போனாள் . அவள் இனிமேல் ஸ்கூல் வரமாட்டாள் என்றும் இவனை போய் டிசி வாங்கி வர சொல்லிவிட்டார். ஸ்கூல் நிர்வாகத்திடம் அவர் பேசியும் விட்டார். இவன் சிக்கலில் மாட்டிக்கொண்டான். தீபா என்னை ஒரு முறை நவீனை பார்க்க அழைத்து போகும்படி பிரேமிடம் வேண்டுகோள் விடுத்தாள். பிரேம் மறுத்து விட்டான். அவள் எப்பவும் போல இருந்தாள். அபிஷேக் பிரேமிடம் பேசினான். இவன் என்னால் தீபா அப்பாவை மீறி எதுவும் செய்ய முடியாதென்றான். ரஞ்சனியை மட்டும் ஸ்கூல் போய் அழைத்து கொண்டு வந்தான்.

திடீரென தீபா அப்பா வந்து சேர்ந்தார். நிலமை மோசமாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தான்.பிரேம் நவீனுக்கு ஃபோன் செய்து எங்காவது போய்விடும்படி எச்சரித்தான். நவீன் பிடிவாதமாய் இருந்தான். நவீனை போதை பொருள் கேஸ் ஒன்றில் போலீஸ் அரெஸ்ட் செய்தது.அபிஷேக் அவனை ஜாமீனில் எடுக்க முயன்றும் முடியவில்லை. தீபா அமைதியாய் இருப்பது பிரேமுக்கு ஆச்சரியமாய் இருந்தது.தீபா அப்பா வெளிநாடு போய்விட்டார். தீபா பிரேமுடன் பேசினாள். நவீன் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியாதென்றாள். இதற்கிடையில் சுபாவுக்கு விவாகரத்து கிடைத்தது. மதன் ஏமாற்றமடைந்தான் அதோடு பிரேம் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் நினைத்தான் . பிரேமை பழிவாங்க நேரம் பார்த்திருந்தான். சுபா சொந்த ஊருக்கு போயிருந்தாள். பிரேம் தீபாவின் நிலை குறித்து ரொம்பவே வருத்தப்பட்டான். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என நினைத்தான்.போலீஸ் நவீனை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் அடைத்தது.தீபா இதற்கு மேல் தன்னால் பொறுக்க முடியாதென்றாள் பிரேமிடம். நானும் உங்களுடன் வெளிநாடு வந்துவிடுகிறேன் நவீனை வெளியே விட சொல்லுங்கள் என்றாள் தீபா.நீ இதில் உறுதியாய் இருக்கிறாய் என்று எப்படி நம்புவது? என்றார் தீபா அப்பா. நீங்கள் சொன்னபடியே கேட்கிறேன் என்றாள். ஒரு வாரம் உனக்கு டைம் அடுத்த வாரம் என்னுடன் வர தயாராய் இரு என்று சொல்லிவிட்டார். நவீனை ஜாமீனில் விட்டார்கள்.பிரேம் இந்த தகவலை தீபாவுக்கு சொன்னான். நான் எப்படியாவது வெளிநாடு போவதற்குள் நவீனை பார்க்க வேண்டும் என்றாள்
பிரேமிடம். பிரேம் அது ரொம்ப கஷ்டம் என்றான். நான் உயிரை விட்டுவிடுவேன் என்றாள். அவசரப்படாதே தீபா நான் நவீனிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றான்.

நவீன் பிரேம் கூட பேசுவதை அபிஷேக் விரும்பவில்லை.இந்த விஷயம் தீபா அப்பாவுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என பயந்தான். இருப்பினும் பிரேம் பிடிவாதமாய் இருந்ததால் நவீன் தீபாவை ஸ்கூலில் வைத்து சந்திக்க ஒத்துக்கொண்டான்.இதை அறிந்த தீபா நிம்மதி அடைந்தாள் . பிரேம் இந்த ரிஸ்க்கை இருவருடைய எதிர்காலம் கருதி எடுத்தான். ஸ்கூல் ஃபார்மாலிட்டீஸ் முடிக்க போகும் நாளில் காலை 11 மணிக்கு நவீனை சந்திப்பதாய் ஏற்பாடு. எப்படியோ இந்த பிரச்சனை இத்துடன் முடியும் என்று எதிர் பார்த்திருந்தான். சுபா ஊரில் இருந்து வந்து விட்டாள். நடந்ததை சொன்னான். நீ இந்த வேலையை விட்டு விடு என்று சொன்னாள். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றான் பிரேம்.


தீபா அப்பா குமரகுரு இவனை கடுமையாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்லி அனுப்பினார். இம்முறை தவறு நடந்தால் தீபா, நவீன் இருவர் உயிரையும் சேர்த்து எடுக்க கூட தயங்க மாட்டேன் என்றார். எனக்கு என் ஸ்டேட்டஸ் தான் முக்கியம் என்றார்.பிரேம் அவருக்கு தெரியாமல் செய்ய போகும் காரியத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி சிந்திக்கவில்லை. பிரேம் குறிப்பிட்ட நாளுக்காக தீபாவுடன் நவீனை சந்திப்பதற்காக காத்திருந்தான். குமரகுரு பிரேமை நம்பி இல்லை. அபிஷேக் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தான். இப்போது எல்லாமே தீபா கையில் இருந்தது. சௌமியாவிடமும் நடந்ததை சொன்னான்.நம்முடைய கதையே இங்கு ஊசலாடுகிறது இதில் இன்னொரு ஜோடிக்கு உதவி செய்ய போகிறாயா என்றாள். அவர்கள் சிறு பிள்ளைகள் எப்படியாவது இதில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்றான் பிரேம்.

சௌமியா அப்பா எதாவது சொன்னாரா என்று கேட்டான். இல்லை அவர் பிசினஸ் விஷயமாக வெளிநாடு போயிருக்கிறார் என்றாள். உன்னை பார்க்க வேண்டும் போலிருக்கிறது ஆனால் நீயோ தேவையில்லாத வேலையில் உன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறாய் என்றாள். சுபாவும் அதேதான் சொல்கிறாள் என்றான். ரஞ்சனி பிரேமிடம் வந்து தீபா அக்கா வேறு ஏதோ திட்டம் போடுவதாக தெரிகிறது நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்றாள்.நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.ரஞ்சனி படிப்பையும் குமரகுரு நிறுத்த கூடும் என்றும் பிரேம் யோசித்தான்.பிரேம் தீபாவை முழுமையாக நம்பினான். தீபாவை ஸ்கூல் வாசலில் டிராப் பண்ணினான். இரு தீபா நானும் வருகிறேன் என்றான். இன்று ஒரு நாள் தானே நான் சுதந்திரமாக இருக்க கூடாதா என்றாள்.அது உனக்கே ஆபத்தாக முடியும் என்றான். இவனும் அவள் கூட போனான்.


தீபா டீச்சர்கள் அவளை புகழ்ந்தனர். நவீன் பின்புற வாசல் மைதானம் அருகே காத்திருந்தான். அவர்கள் ஓடிப்போனால் தன்னால் அவர்களை காப்பாற்ற முடியாது என பிரேம் யோசித்தான். தீபா போய் நவீனுடன் பேசினாள். ஒரு 10 நிமிடம் தான் இருக்கும். வந்து விட்டாள். அவளுடைய நண்பர்கள், தோழிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டாள். பிரேம் பத்திரமாக அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டான். சிக்கல் ஏதும் இருக்காது என நினைத்தான்.வீட்டுக்கு வந்து பார்த்த போது எல்லாம் தாறுமாறாக கிடந்தது. சுபாவுக்கு ஃபோன் செய்தான் அவள் எடுக்கவில்லை. இவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சுபா கடத்தப்பட்டு இருக்க கூடுமென நினைத்தான். அபிஷேக்கிடம் இருந்து ஃபோன் வந்தது ,, தீபாவை ஏர்போர்ட் டிராப் செய்துவிட்டு சுபாவை கூப்பிட்டு செல் என்றான்.
இதை பிரேம் எதிர்பார்க்கவில்லை.சுபாவை எதற்காக இந்த பிரச்சனையில் இழுத்தாய் என்றான். அதெல்லாம் எனக்கு தெரியாது பிரேம் என் தம்பிக்காக எதையும் செய்வேன் என்றான்.

தீபாவிடம் இருந்து ஃபோன் வந்தது. அபிஷேக் சொல்லி இருப்பார் நீங்கள் எப்போது வருகிறீர்கள் என்றாள். இதை கேட்ட பிரேம் நீ தவறு மேல் தவறு செய்கிறாய் தீபா என்றான். எனக்கு நவீன் முக்கியம்.அவன் மட்டுமே முக்கியம் என்றாள். இங்கிருந்தால் அவனை கொன்று விடுவார்கள் . அதனால்தான் நாங்கள் வெளிநாடு போகிறோம் என்றாள்.சரி சுபாவை விட சொல். என்னை ஏகப்பட்ட பேர் கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூட வந்தால் நான் சேஃப் அதுதான் சுபா ஆண்ட்டியை கடத்த சொன்னேன். இதையும் நீதான் செய்தாயா? எனக்கு வேறு வழியில்லை. சீக்கிரம் வாருங்கள் ஃப்ளைட் 12 மணிக்கு என்றாள். இவன் வேகமாக வீட்டுக்கு சென்றான் அங்கு தீபா தயாராய் இருந்தாள். சுபாவை விட சொல் முதலில் என்றான். அதெல்லாம் அப்புறம் நான் போனதுக்கப்புறம் என்றாள்.

ஏர்போர்ட் வாசலில் தீபாவை இறக்கி விட்டான். அவன் ஏமாந்து விட்டான் ஒரு சின்ன பெண்ணை நம்பி . சுபா அரை மணி நேரம் கழித்து வந்தாள். சுபா உனக்கொன்றுமில்லையே என்றான். ஒன்றுமில்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றாள். அவளை கஷ்டபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்டான். இப்போது நவீன் எங்கே இருக்கிறான் என பார்க்க வேண்டும் நீ டாக்ஸி பிடித்து வீட்டுக்கு போ சுபா. நான் இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்து விட்டு வருகிறேன். அவர்கள் தாய்லாந்து செல்வதாக பேசிக்கொண்டார்கள் பிரேம் என்றாள். சரி நான் பார்த்துககொள்கிறேன்.நீ முதலில் வீட்டுக்கு போ என்றான். அங்கிருந்த கவுண்டர் ஒன்றில் விசாரித்தான் இன்னும் 20 நிமிடங்கள் இருந்தது. இவன் அவசரமாக குமரகுருவிற்கு ஃபோன் செய்தான். முட்டாள் என்று திட்டினார். அவர்களை பார்த்து கொள்வதாக சொன்னார்.

ஒரு மணி நேரம் கழித்து தீபாவையும், நவீனையும் குமரகுரு ஆட்கள் வந்து கூட்டி போயினர்.பிரேம் ஏதும் செய்ய முடியாதவனாய் இருந்தான்.எப்படியோ குமரகுரு ஆட்கள் தீபாவையும், நவீனையும் வெளிநாடு செல்வதில் இருந்து தடுத்து நிறுத்தினர் .காலை 3 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான். ரஞ்சனி ஃபோன் செய்தாள். அக்கா வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால் நவீன் கதி என்ன ஆகுமென்று தெரியவில்லை என்றாள்.நீ கவலைப்படாதே எல்லாம் உன் அப்பா பார்த்துக்கொள்வார். நான் காலையில் வருகிறேன் என்றான். எங்களால் உங்களுக்கு எவ்வளவு தொந்தரவு என்றாள் ரஞ்சனி.
இவனுக்கு தூக்கம் வரவில்லை. சுபா எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியிருந்தாள் . பாவம் அவளையும் இந்த பிரச்சனையில் இழுத்திருக்க வேண்டாம் என நினைத்தான்.மணி 5 இருக்கும் . தீபா ஃபோன் பண்ணியிருந்தாள். என்னை மன்னித்து விடுங்கள் என்றாள். எல்லாம் சரி ஆகி விடும் என்றான். எப்படியாவது நவீனை காப்பாற்றுங்கள் அவனை அப்பா ஆட்கள் கொன்று விட கூடும் என்றாள். அதெல்லாம் நிச்சயம் நடக்காது என்றான்.