Nizhal Tharum Vasantham - 8 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 8

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 8

பிரேம் உடனடியாக எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்த வில்லை. அவனுக்கு தீபா உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்ததாக தோன்றியது. தான் எதையும் திட்டமிடவில்லை எனவும் சொல்ல செய்தான். தீபா தன் துணையை இறுகப்பற்றும் முனைப்பில் இருந்தாள். அவளுக்கு இந்த வயதில் துணை அவசியம் . ஏற்கனவே இருந்த துணையை இழந்த ஏமாற்றத்தில் இருந்தாள். இம்முறையும் ஏமாற அவள் தயாரில்லை. அவள் அழகுக்கும், அவளுடைய வாழ்க்கைக்கும் சரியான வழிகாட்டுதல் தேவை என்கிற நிலையை அவள் அடைந்திருந்தாள். நவீனை அவள் ஒதுக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவளிடத்தில் இல்லை. ஆனால் அவன் அவ்வாறு பேசுகிற போது தன்னைத்தானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ரஞ்சனி பதட்டத்துடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள். என்னாச்சு மாமா நவீன் மறுபடி பிரச்சனை பண்ணுகிறானா? நான் அப்பாவிடம் பேசவா என்றாள். அதெல்லாம் வேண்டாம் . அவன் அவனுடைய வேதனையை பதிவு செய்கிறான்.அதை பெரிதுபடுத்த வேண்டாம் . நாம் நம்முடைய வேலையில் பிஸி ஆக இருப்போம் என்றான். தீபா ஏதும் சொல்லாமல் உள்ளே போய் கதவை சாத்திக்கொண்டாள். பிரேம் தன்னுடைய வழியை காதல் அதன் வேகத்தில் அடைந்தே தீரும் எண்ணிக்கொண்டான்.

திருமண நிச்சய நிகழ்விற்கு உடைகள் எடுக்க தீபா, ரஞ்சனி இருவரும் கிளம்பி இருந்தார்கள். சுபாவையும் கூப்பிடலாம் என்று தீபா சொன்னாள். அவளும் வருவதாக சொன்னாள். காலை 10 மணிக்கு தானே அவளை பிக்அப் செய்து கொள்வதாக சொன்னான். அவளை பார்த்து ரொம்ப நாளாகிறது. இவன் அவள் வீட்டுக்கு போயிருந்த போது லலிதா மேடம் நின்றிருந்தாள். வாப்பா என்னை மறந்து விட்டாயா அதெல்லாம் இல்லை மேடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நான் இப்போது மேல் மாடிக்கே வந்து விட்டேன். சுபா தான் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றாள். சுபாவை பார்த்து விட்டு வருகிறேன் என்றான். தீபாவையும், ரஞ்சனியையும் அறிமுகம் செய்து வைத்தான். இவங்களைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றான்.சுபா எல்லாம் சொல்லியிருக்கிறாள். ஆல் தி பெஸ்ட் என்றாள். திருமணத்துக்கு அழைப்பு அனுப்புகிறேன் அவசியம் வாருங்கள் என்றான். சுபா சாரி சாரி என்னால் லேட் ஆகி விட்டது என்றபடி ஓடி வந்தாள். அதெல்லாம் பரவாயில்லை என்றாள் தீபா.


ஷாப்பிங் செய்ய தீபா, ரஞ்சனி, சுபா மூவரும் ஆயத்தமானர்கள். என்ன சுபா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாயா இல்லை ஏதாவது ஹோட்டலில் நிறுத்தட்டுமா அதெல்லாம் வேண்டாம் நான் சாப்பிட்டேன் என்றாள். பிரேம் நீ இளைத்து விட்டாய். நேரத்துக்கு சாப்பிடு என்றாள். சரி சுபா. வீட்டில் ஒன்றும் பிரச்சனை இல்லையே என்றான். அதெல்லாம் லலிதா மேடம் நல்ல விதமாக நடந்து கொள்கிறார்கள். முதலில் சாரீ செக்ஷன் போகலாம் என்றாள் ரஞ்சனி. சரி அப்படியே செய்யலாம் என்றான் பிரேம். இரண்டு மூன்று நான்கு கடைகள் சுற்றி வந்தாயிற்று தீபாவுக்கு எதுவும் பிடிக்கவில்லை. என்னாச்சு தீபா என்னவோ அத்தனை விசேஷமாக இல்லை என்றாள். நாம் காஞ்சிபுரம் போவோமா என்றான். மூவரும் உற்சாகமாக தலையசைத்தார்கள். இப்போதே மதியம் ஆகிவிட்டது மாமாவுக்கு மட்டும் சூட் எடுத்து விட்டு நாளைக்கு காஞ்சிபுரம் போகலாம் என்றாள் ரஞ்சனி . மதியம் மூன்று மணி அளவில் தான் பிரேமுக்கு பொருத்தமானதை எடுக்க முடிந்தது. சரி வாருங்கள் போகலாம் எனக்கு பசிக்கிறது என்றாள் தீபா. ஆமாம் ரொம்ப லேட் ஆகிவிட்டது. லஞ்ச் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள் மணி மாலை 5 தான் ஆகிறது. பீச் போகலாம் என்றார்கள்.

அவர்கள் மூவரும் உற்சாகமாக பேசிக்கொண்டு மணல் வெளியில் நடந்தார்கள். என்ன ஸ்பெஷல் ஆக உன்னை பிரேம் கவனிக்கிறானா என்றாள் சுபா. பிரேம் ஒரு சாமியார் நான்தான் சுற்றி வருகிறேன் என்றாள். அதெல்லாம் சும்மா என்றான். சௌமியா எப்படி இருக்கிறார்கள் ஃபோன் பண்ணினார்களா என்றாள் ரஞ்சனி. அவள் அமெரிக்கா போய்விட்டாள். அவள் ஃபோன் பண்ணி என்னை ஒரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி கொண்டிருக்கிறாள். நான் மறுத்து விட்டேன். ஏற்கனவே நான் பட்ட பாடு போதுமென்றாள் . மழை லேசாக தூறல் போட்டது அப்போது வானவில் தோன்றியது சில நொடிகளுக்கு தோன்றினாலும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. கடல் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாண்டார்கள்.இவன் வேடிக்கை பார்ப்பதிலேயே டைம் போக்கினான். பிறகு எழுந்து போய் தீபாவின் கையை பிடித்துக்கொண்டான். அவளை அணைத்து கொண்டான். ஓ என்று சுபாவும். ரஞ்சனியும் குரல் கொடுத்தார்கள். இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடிக்க வேண்டும் என சுபா மனதார வேண்டிக்கொண்டாள்.


மாலை 8 மணிக்கு டின்னர் சாப்பிட்டார்கள்.மறுநாள் காலை 5 மணிக்கே கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று பிரேம் சொன்னான். சரி நான் வந்து விடுகிறேன் . நீ ஒன்று செய் சுபா இன்று இரவு எங்களுடன் எங்கள் வீட்டிலேயே தங்கிவிடு என்றான்.சுபா யோசித்தாள். ரஞ்சனியும், தீபாவும் பிளீஸ் பிளீஸ் என்றார்கள். அவள் சம்மதித்தாள் ஐ ஜாலி என்றாள் ரஞ்சனி.மணி 10 அளவில் வீட்டுக்கு வந்தார்கள். ரஞ்சனி சுபா அக்கா என் அறையிலேயே தங்கிக்கொள்ளட்டும் நாங்கள் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம் உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆக இருக்காது என்றாள். தீபா வெட்க புன்னகை பூத்தாள். பிரேம் அதை ரசித்தான். சௌமியா நினைவு வந்து போனது. அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று யோசித்தான். சுபா குட் நைட் சொல்லிவிட்டு அவள் அறைக்குள் போய்விட்டாள். தீபா அவனையே பார்த்தபடி நின்றாள் . அவன் ஏதாவது சொல்லுவான் என எதிர்பார்த்தாள் . நான் கொஞ்சம் ஓவர் ஆ போயிட்டேனோ கடற்கரையில என்றான். சே சே என்ன பேச்சு இது என்றாள்.

இரவு தூக்கமே பிடிக்கவில்லை. தீபாவின் சிரிப்புதான் அவன் மனதுக்குள் ஓடியது. சௌமியாவை தான் மறக்க தொடங்கிவிட்டோமோ எனவும் யோசித்தான். ஸ்வாமிகளை பார்த்து இதற்கான விளக்கத்தை கேட்க வேண்டும் என எண்ணிக்கொண்டான். ஃபோன் அடித்தது சௌமியாதான். என்ன கடற்கரையில் உற்சாகமா என்றாள் ? நான் போட்டோஸ் instagram இல் பார்த்தேன் . நீ மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தேன் என்றாள். எனக்கு மன நிறைவு ஏற்பட்டது என்றாள். சுபா பேசினாள். நீயும் தீபாவும் நிஜமாகவே மேட் போர் ஈச் அதர் என்றாள். எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை . இவன் பதில் பேசும் முன் ஃபோன் வைத்து விட்டாள். தீபா கதவை தட்டும் சத்தும் கேட்டது . வெளியே போய் கார்டன் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குளிர் ரொம்ப இருக்கிறது என்றாள். அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டான். அவளது உள்ளங்கைகளை தன் கைகளை கொண்டு தேய்த் தான்.அவள் பிரேம் எனக்கு நீ எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும் என்றாள்.

ஆபீஸ் பிரச்சனைகள் சால்வ் ஆகி கொண்டிருந்தன. அது நிம்மதியை தந்தது. காலை 5 மணிக்கே எல்லோரும் தயாராகி கொண்டிருந்தார்கள். என்ன ரஞ்சனி நீயுமா அதிகாலையில் எழுந்து விட்டாய் என்றான். அக்கா கல்யாணம் என்றால் சும்மாவா என்றாள். சுபாவுக்கு புதிய உற்சாகத்துடன் இருந்தாள். இவனுக்கு அவளை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.வரும்போது ஸ்வாமிகளை பார்த்து வருவோம் என்றான் பிரேம். சரி கிளம்புவோம். சுபாவும், ரஞ்சனியும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். தீபா முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இந்த பயணம் நல்ல படியாக அமைய வேண்டும் என பிரேம் பிரார்த்தித்து கொண்டான். அவன் அம்மாவுக்கு ஃபோன் செய்திருந்தான். உனக்குத்தான் அப்பா பிடிவாதம் தெரியுமே என்றாள். நீயாவது என கூட பேசுகிறாயே என்றான். பிரேம் நீ நன்றாக வண்டி ஓட்டுகிறாய் என்றாள் தீபா. அதை இப்போதுதான் கண்டுபிடித்தாயா என்றாள் ரஞ்சனி.

காலை 11 மணி அளவில் காஞ்சிபுரம் வந்தடைந்தார்கள். இடையில் வண்டியை நிறுத்தி ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு இருந்தார்கள். சிவப்பு சேலை , மஞ்சள் சேலை என ஒவ்வொன்றாய் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் தீபா. ரஞ்சனி இது வேணுமா அக்கா இதை பாருங்கள் என்று கடை பெண்ணை போல சத்தமிட்டு கொண்டிருந்தாள். சுபாவும் சும்மா இல்லை. குமரகுரு ஃபோன் பண்ணியிருந்தார். உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாய் இருக்கிறது. என் தேர்வு வீண் போகவில்லை என்னுடைய பெண்கள் சந்தோஷமாய் இருக்கின்றனர் என்றார். சரி நான் கல்யாண நிச்சயத்துக்கு இரண்டு நாள் முன்பே வந்து விடுகிறேன் என்றார். வயலெட் நிற புடவை எடுத்திருந்தாள் தீபா. அவள் உன்னத மகிழ்ச்சியில் இருந்தாள். சுபாவுக்கும் சாரிகள் எடுத்தார்கள். கல்யாணத்தன்று அதைதான் கட்டி வர வேண்டுமென்று சொன்னார்கள் சகோதரிகள் இருவரும்.
கொஞ்சம் விலை கூடுதலாய் இருந்தாலும் எல்லோருக்கும் திருப்தி.

என்ன கிளம்பலாமா எனக்கு பசிக்கிறது மணி ஆகிறது என்றான். சரி போகலாம் என்றார்கள் மனசே இல்லாமல் . அந்த வானவில் சாரி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்றாள் ரஞ்சனி. உன் கல்யாணத்துக்கு மூன்று நாட்கள் இங்கேயே தங்கிவிடுவோம் ஜவுளி எடுக்க என்றான். அவள் போதும் மாமா என்றாள். மதிய சாப்பாட்டுக்கு பிறகு காஞ்சிபுரம் கோவில்களுக்கு போய் வரலாம் என முடிவெடுத்தார்கள். விசாரித்து கொண்டு எல்லா கோவில்களுக்கும் போய் வந்தார்கள். மாலை 7 மணி அளவில் காஞ்சிபுரம் விட்டு கிளம்பினார்கள்.நான் வண்டி ஒட்டுகிறேன் என்றாள் தீபா. இந்த முறையும் ஸ்வாமிகளை பார்க்க முடியாது லேட் ஆகி விட்டது என்றான். பரவாயில்லை அடுத்த முறை பார்க்கலாம் என்றாள். விடிகாலை மணி 3 போல பெங்களூர் வந்து சேர்ந்தார்கள். சுபாவை அவள் வீட்டில் டிராப் செய்தார்கள். அவள் விடை பெற்றுக்கொண்டாள் . ஃபோன் பண்ணுகிறேன் என்றாள்.


நீ தூங்காமல் வண்டி இவ்வளவு கவனத்துடன் ஓட்டுவாய் என எதிர்பார்க்கவில்லை என்றான் பிரேம். அதெல்லாம் உனக்காகத்தான். 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தார்கள் . பிரேம் நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள் தீபா என்றான். ரஞ்சனி தூக்க கலக்கத்துடனே இருந்தாள். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து வாங்கிய உடைகளை சரி பார்த்து கொண்டிருந்தாள் ரஞ்சனி. காலை உணவை இவனே தயாரித்தான். ஆபீஸ் கிளம்பினான். பிரேம் என கூப்பிட்டாள். நம்முடைய கல்யாண நிச்சய அழைப்பு உனக்கு whatsapp செய்துள்ளேன். செக் செய்து கொள் என்றாள். நீ பார்த்து விட்டால் போதும் என்றான். அதெல்லாம் முடியாது என்று சிணுங்கினாள். சரி சரி மதியம் பேசுகிறேன் என்றான்.ரஞ்சனி வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தாள். இவன் ஆபீஸ் வேலைகளை நினைத்து பார்த்தான். சுபா ஃபோன் செய்திருந்தாள் . ரொம்ப சந்தோஷம் பிரேம் நீ அவளை நன்றாக பார்த்துக் கொள்கிறாய் என்றாள். தாங்க்ஸ் சுபா.