❤️இருளை துரத்தும்
மென் ஒளி❤️
அனிச்சையாய் காயம்பட்ட மிருகத்தின
சுவாசத்தில் வெளிப்படும் காட்டின் வாசத்தில்
மலர்ந்த பூச்செடி
இறைவனுக்கு உகந்த மாலையின் நார்களில் தவறிய ஓர் பூவின் வாசனை
தவறிழைத்த மறுகணம் ஒருங்கி கிடக்கும் ஓர் வளர்ப்பு நாயின் மன்னிப்பு
ஒட்டாத வாழ்வில்
ஓடும் மனிதனின் ஓர் நாள்
அங்கனம் தான் இருக்கும்
இழப்பதற்கு ஒன்றுமில்லாத போதுதான்
அவன் பிச்சை பாத்திரம் கடன் கேட்கப்படும்
ஆடைகள் துறந்திருக்கும் ஒருவனிடம்
நூல்களில் அளவு கேட்கப்படும்
உணவற்று உறங்கும் ஒருவனுக்கு
தூரத்தில் எறியப்படும் உணவின் சுவை உணர்த்தும்
ஈந்ததைத்தான் இயற்கை பெறுகிறது
கேட்கப்படுவதாய் அங்கனம் நினைத்துக் கொண்டு பெறுகிறோம்
அவ்வளவுதான் கடவுள் காருண்யம்
கேட்கப்படாமலும் பெற முடியும்
குடுக்காமலும் இங்கே பெறமுடியும்
அந்த இருளை மட்டும் தேடுவதே இந்த
மென் ஒளியின் வாழ்வு
இருள் மட்டுமே இதன் இறுதி ஒப்பனைப் பொருள்.