என்னவனுக்காக...
என் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும்
சில கிருக்கல்கள்...
உன் புன்னகை ஒன்று போதும்,
நான் என்னையே மறந்து போக...
நீ என்ன செய்தாலும்
அதை மறந்து விடுகிறேன்.
அப்படி என்ன மாயம் செய்தாயோ என்னுள்?
உன் முகம் காணாமல்
சில நேரம் தவிக்கிறேன்...
அதன் வெளிப்பாடே
இந்தக் கோப முகமூடி... 😡
ஆனால்,
உன் சிறிய கண் அசைவிலும்... 😍
ஒரு மென்மையான புன்னகையிலும்...
என் கோபம் காணாமல் போகும்
அந்த மாயம் என்னவோ!
உன்னுடைய ஒரு அணைப்பு,
நான் இழந்த என் தாயின் அரவணைப்பைக் கூட
மிஞ்சிப் போகிறது.
உன் விலகல் மட்டும்
உலகமே இருண்டு போனதுபோல்
ஒரு வெறுமையை உண்டாக்குகிறது.
உன் கோபத்தைக் கூட
சீண்டி விளையாடவே
ஆசைப்படுகிறது என் மனம்.
ஏனெனில்,
அந்தக் கோபத்திலும் கூட
என்மீது நீ வைத்திருக்கும்
அன்பின் தடம் தெரிகிறது.
ஆனால்,
கோபத்தில் நீ உதிர்க்கும்
சுடுசொற்கள் மட்டும்...
தீயினால் சுட்ட புண்போல்
என் ஆழ்மனதை ரணமாக்குகின்றன.
அந்தக் காயத்திற்கும்
மருந்தாய் நீயே மாறி,
மீண்டும் என்னைச் சிரிக்க வைக்கும்
உன் அன்பின் விந்தை மட்டும்
இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
இப்படியெல்லாம் கவிதை எழுத ஆசைதான்...
ஆனால்,
இதைக் கவிதையென்று
யார் ஏற்றுக்கொள்வார்கள்?
பரவாயில்லை...
கவிதை எழுதினால்தான் கவிஞன் அல்ல,
கட்டுரை எழுதியால்தான் பேச்சாளரும் அல்ல.
உன்னை உயிராய் காதலிக்கும்
என் இதயம் எழுதிய
சிறு உணர்வுகள் இவை...
என்மீது நீ வைத்த காதலால் உருவான
உன் காதல் மனைவி... ❤️
இப்படிக்கு,
Puppyma ♥️