திட்டமிட்டபடி ரமேஷ் கல்யாணம் நடந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.அவர்களோடு சொந்த ஊருக்கு போய் வந்தான். தீபா போகவில்லை. எல்லா சடங்குகளும் முறையாக நடைபெற்றன. ரஞ்சனி டிகிரி வாங்கும் விழா அந்த மாத கடைசியில் இருந்தது. ரஞ்சனியை விட பிரேம் பரபரப்பாய் இருந்தான். ஆளுநர் கையால் பட்டம் என்றாள் சும்மாவா? போட்டோகிராபர்களிடம் சொல்லி வைத்திருந்தான்.தீபா நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க என்றாள். இது என்னவோ என் பெண்ணே சாதிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்க் என்றான். பிரேம் அம்மா , அப்பா ஒரு வாரமாகியும் திரும்ப வரவில்லை. இவள் தனி ஆளாய் சிரமப்படுவாள் என நினைக்கவும் இல்லை. புது மருமகள் வந்ததும் எல்லாம் மாறி விட்டது போல என நினைத்தான். தீபா ஃபோன் பண்ண போனாள் பிரேம் அம்மாவுக்கு , இவன் தடுத்துவிட்டான். அவர்கள் இஷ்டப்படி இருக்கட்டும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்றான். பிரேம் அவசரப்படாதே வார்த்தைகளை அள்ளி வீசாதே. பிறகென்ன உனக்கு டெலிவரி டேட் நெருங்கி கொண்டிருக்கிறது. என்ன ஒரு சுயநலம் என்றான்.
நாமே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம் என்றாள் தீபா. இடையில் அவன் அப்பா ஃபோன் செய்த போதும் இவன் ஃபோன் எடுக்கவில்லை. பூஜாவும்,ரமேஷும் தனிக்குடித்தனம் போனதாக கேள்விப்பட்டான். கதிரேசன்தான் சொன்னான்.நீங்க போய் ஒரு தடவை பார்த்துட்டு வாங்க என்றாள். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் எனக்கு மட்டும் மானம் ரோஷம் இருக்காதா என்றான். அவள் அமைதியாய் போய்விட்டாள். இது நடந்து 10 வது நாளில் தீபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் சுக பிரசவம். பிரேம் ஆனந்த கண்ணீரில் அவளை கட்டிக்கொண்டான். நான் அப்பா ஆயிட்டேன் என்றான். விஷயம் கேள்விபட்டு பிரேம் அம்மா அப்பா வந்தார்கள். எங்கே வந்தீர்கள் இருக்கோமா , செத்து விட்டோமா என்று பார்க்க வந்தீர்களா ? எல்லாம் முடிந்து விட்டது.. என் மகனை எப்படி வளர்ப்பதென்று எனக்கு தெரியும் . இனிமேலும் வராதீர்கள் என்றான். அவர்கள் சோகத்துடன் திரும்பி போனார்கள். ரமேஷ், பூஜா கூட வரவேயில்லை. தீபாவுக்கு அது ஒரு ஏமாற்றம் தான்.
ரஞ்சனி தன்னுடைய கம்பெனியில் ஜூனியர் மேனேஜர் ஆக ஜாயின் செய்து விட்டாள்.அவளுக்கென பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. இலக்குகள் கூட கடினமானதாக செட் செய்ய பட்டிருந்தது. வீட்டுக்கு வந்தால் பிள்ளையை கொஞ்சுவதிலேயே அவளுக்கு நேரம் போனது. பெயர் சூட்டும் விழா வைத்திருந்தார்கள்.குமரன் என தாத்தா பெயரையே சூட்டி மகிழ்ந்தார்கள். குமரன் என மூன்று முறை அவன் காதுகளில் சொன்னர்கள். பிரேம் எதற்கு இவ்வளவு பிடிவாதம் என்றாள் தீபா. உனக்கொன்றும் தெரியாது. ஆமாம் நான் ஒரு குழந்தை . ஆமாம் நீ நிச்சயம் எனக்கொரு குழந்தைதான் என்றான். குமரன் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தான். ரஞ்சனி வேக வேகமாக வளர்ந்து வந்தாள். கற்றுக்கொள்வதில் நல்ல ஆர்வம் காட்டினாள்.
சுபாவிடம் இருந்து வாழ்த்து மெசேஜ் வந்தது. இவன் ரிப்ளை எதுவும் செய்யவில்லை. தீபாவிடம் விஷயத்தை சொன்னான். என்னவோ பண்ணுங்கள் என்றாள் . பிள்ளைக்கு உடைகள் எடுத்தான். ரமேஷ் வந்து நகைகளை மீட்டு கொடுத்து போனான். வீட்டுக்கு வரவில்லை. இவனும் கூப்பிடவில்லை. எல்லாம் முடிந்து விட்டது . நகைகளை பார்த்த போது தீபா பூஜாவுக்கு போட்ட நகையும் இருந்தது. மகன் வந்த ராசி உன் நகை திரும்ப வந்து விட்டது என்றான். நாம் ஸ்வாமிகளை பார்த்து வருவோமா என்றாள். ஸ்வாமிகள் சற்றே உடல் நலம் குன்றி இருந்தார். வா பிரேம் ரொம்ப தாமதமாய் வந்திருக்கிறாய் என்றார். மன்னிக்க வேண்டும் என்றான்.
தீபா உன் மகன், உன்னுடைய பெரிய சொத்து கவனமாக இருக்க வேண்டும். ரஞ்சனி அவள் இலக்கை அடைந்த பிறகே திருமணம். கட்டாயப்படுத்தாதீர்கள்.
ரஞ்சனி முதல் மாதம் சம்பளம் வாங்கி எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தாள் . வெறும் ஸ்வீட்தானா என்றான் பிரேம்.என்னவோ எனக்கு கொண்டாட தோன்றவில்லை, நம்முடைய கம்பெனி இதில் என்ன பெருமை என்றாள். அப்பாவிடம் இருந்து 5 மிஸ்டு கால் வந்திருந்தது. இவன் அவசரமாக ஃபோன் செய்தான். அம்மா நம்மைஎல்லாம் விட்டு விட்டு போய் விட்டதா கதறி அழுதபடி சொன்னார். நான் வரேன் என்று சொல்லி ஃபோன் வைத்தான். அவனும் அழுதான். தீபாவை வர வேண்டாம் என சொல்லிவிட்டான். அவன் மட்டும் போய் இறுதி சடங்குகளை செய்தான். அவளுக்கு வயதாகி விட்டது.. உன்னை பார்க்க வேண்டுமென்று துடித்தாள் . காலம் அவளை கொண்டு போய்விட்டது என்றார். போட்டோவில் பேர பிள்ளையை பார்த்தார். ரமேஷும் ,பூஜாவும் இவனை பார்த்தும் பார்க்காதது போல போனார்கள். புது பணக்காரன் அப்படித்தான் இருப்பான் என்றார். அவர் பழைய படி பெட்டிக்கடை நடத்தி வருவதாக சொன்னான் கதிரேசன்.
பிரேம் ஊர் திரும்பினான். ஏன் பிரேம் மாமாவை கூப்பிட்டு வரலை அவரெல்லாம் ரொம்ப கவுரவம் பார்ப்பவர். அவரை அவர் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். சரி வா பிரேம் சாப்பிடலாம் என்றாள். பையன் என்ன பண்ணுகிறான்? இப்போது தான் பால் குடித்து விட்டு தூங்குகிறான் என்றாள்.நீயும் சாப்பிடு வா என்று அவள் கையை பிடித்து இழுத்தான். பூஜாவும்,ரமேஷும் எப்படி இருக்கிறார்கள் . பூஜா வேலைக்கு போகிறாள் போல. நான் எதுவும் பேசவில்லை . தீபா அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்கவில்லை. அப்பா இறந்து ஒரு வருடம் ஆக போகிறது சடங்குகள் செய்ய வேண்டும் என்றாள். நிச்சயமாக செய்கிறேன் .ராமேஸ்வரம் போய் வருவோமா என்றாள். சரி அதுவும் நல்லது தான். நாம் காரிலேயே போவோம் என்றான். தேவையானவற்றை பேக் செய்து கொள் .
ரஞ்சனி, தீபா, பிரேம் , குமரன் நால்வரும் ராமேஸ்வரம் நோக்கி காரில் புறப்பட்டார்கள்.பூஜைகள், யாகங்கள் போன்றவற்றில் ஒரு குறையும் வைக்கவில்லை. தீபா உனக்கு ஏதாவது வேண்டுதல் இருந்தால் நிறைவேற்று என்றான். அப்படி எதுவும் இல்லை.அதை சுற்றியுள்ள இடங்களுக்கு போனார்கள். குமரன் கடலலை கண்டு மகிழ்ந்து போனான்.இந்த வாழ்க்கை முழுக்க உன்னோடு பயணம் தான் என்றான் பிரேம். ரஞ்சனி குடும்ப போட்டோ எடுத்து போட்டிருந்தாள். குமரகுரு ஆன்மா வாழ்த்தட்டும் என்று சொல்லிக்கொண்டான்.கோவில்கள் பலவற்றை சுற்றி பார்த்தார்கள். பிரேம் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வெளியே வருவதால் பார்ப்பவை எல்லாமே மகிழ்ச்சி தருகிறது என்றாள் தீபா.
வீட்டில் அவனுடைய தாயாரின் படத்தை பெரிதாக மாட்டி இருந்தான். பாட்டி சொல்லு பாட்டி சொல்லு என ரஞ்சனி குமரனிடம் கொஞ்சி கொண்டிருந்தாள். சௌமியா,சுபா பிரேம் தாயார் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தார்கள். இவன் விரக்தியுடன் சிரித்தான்.எல்லோருமே பயன்படுததிகொள்கிறார்கள் அவ்வளவுதான் என நினைத்தான்.ஒரு வாரம் கழித்து சுபாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும்,கூடிய சீக்கிரம் இந்தியா வர இருப்பதாக கதிரேசன் சொன்னான். இவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. தான் வேலை தேடி அலைந்த போது தனக்கு துணையாய் இருந்தவள் என நினைத்து பார்த்தான். ஆபீஸ் வேலைகளின் சுமை குறைந்தாலும்,இவனுடைய தேவை இருக்கத்தான் செய்கிறது. முடிவுகள் எடுக்க அதிகாரம் தேவை.
தீபா ,சுபா வந்தால் இங்கேயே தங்கட்டும் என்று சொன்னாள். அது அவள் விருப்பமாகவே இருக்கட்டும். நாம் கட்டாயபடுத்த வேண்டாம். பிரேமிடம் சுபாவே பேசினாள் நான் மட்டும்தான் வருகிறேன் குழந்தை கூட. யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் என்றான். ஏதோ ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது அன்பின் வழி. சுபாவை அழைத்து வர ஏர்போர்ட் போயிருந்தார்கள் ரஞ்சனியும்,பிரேமும். சுபா இவனை பார்த்ததும் அழுதாள். இவன் என்ன சின்ன பிள்ளை மாதிரி என்றான். குழந்தை அப்படியே சுபா மாதிரி இருந்தது. என்ன பேர் வைத்திருக்கிறாய்.லலிதா . இவன் ஆச்சர்யபட்டான். லலிதா போன மாதம் காலமாகி விட்டார்கள் என்று சுபா சொன்னாள்.
இருள் நீங்கி ஒளி வந்ததை போல இருந்தது சுபாவின் வருகை. என்ன ரஞ்சனி ஆபீஸ் எப்படி போகிறது என்றாள். ம் எனக்கு பிடித்திருக்கிறது. குமரகுரு, பிரேமின் தாயார் இருவர் படத்தையும் கண்கள் மூடி வணங்கினாள். அவளுக்கென இருந்த அறைக்கு சென்றாள். வாசன் எப்படி இருக்கிறார் என கேட்டான். அவர் பிஸி ஆனால் மதன் போல இல்லாமல் இருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. சரி ஓய்வெடுத்துக்கொள். பிறகு பேசலாம் என்றான். எங்கே உன் மகன்.குமரன் தவழ்ந்து வந்தான்.எப்படியோ நான் திரும்ப உன்னை பார்ப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. சரி சரி ரெஸ்ட் எடு என்றான்
கிச்சன் உள்ளே வந்தாள் சுபா. தீபா என்ன நீயே எல்லாவற்றையும் செய்கிறாய் .. அதெல்லாம் அப்படித்தான். உனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறேன். சுபா அவளை கட்டிக்கொண்டாள். எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டார்கள். சுபா வாங்கி வந்த விளையாட்டு பொம்மைகளை குமரனிடம் கொடுத்தாள் . லலிதா தூங்கி கொண்டிருந்தாள். நாங்கள் ஆபீஸ் போய் வருகிறோம் என ரஞ்சனியும், பிரேமும் கிளம்பினர்.குமரன் நன்கு விளையாட துவங்கியிருந்தான்.இந்த வாழ்க்கையே பொம்மை விளையாட்டை ஒத்தது. ரஞ்சனி நாளை ஒரு முக்கியமான டெண்டர் இருக்கிறது நீயே அதனை தயார் செய்.இது உனக்கொரு நல்ல வாய்ப்பாக இருக்கும். சரி மாமா.
ஆபீஸ் வேலைகள் முடிய லேட் ஆகிவிட்டது. லலிதாவை தீபாவிடம் விட்டுவிட்டு சுபா எங்கோ ஃபிரண்ட்ஸ் பார்க்க போயிருந்தாள். லலிதா சிணுங்க தொடங்கினாள். அழாதே பாப்பா அம்மா இப்போது வந்து விடுவார்கள் என்றாள்.சுபாவும், ரஞ்சனி, பிரேமும் நுழைய சரியாய் இருந்தது. சுபா குழந்தையை தூக்கிகொண்டு உள்ளே போனாள். நான் நாளை ஊருக்கு போய் அப்பா அம்மாவை பார்த்து வருகிறேன் என்றாள் சுபா. இன்னும் இரண்டு நாள் கழித்து போகலாமே .. இல்லை அவர்கள் லலிதாவை பார்க்க தவித்து கொண்டிருக்கிறார்கள். சரி உன் விருப்பம். சுபா டிரைன் மூலம் செல்ல இருந்தாள். லலிதா அந்த ஆண்ட்டி பெயரையே வைத்தவிட்டாள் சுபா.டெண்டர் சக்ஸஸ் ஆகவில்லை. ரஞ்சனி வாடி போய்விட்டாள் . இதில் நிறைய விஷயம் இருக்கிறது என்று ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுத்தான்.
குமரன் அப்பா,அம்மா,சித்தி,பாட்டி என சொற்களை சொல்ல பழகி கொண்டிருந்தான். ரமேஷ் மனைவி பூஜா மாதமாக இருப்பதாக பிரேம் அப்பா சொன்னார். நல்ல விஷயம்தானே என்றாள் தீபா. ஆனால் ரமேஷ் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் இப்போது குழந்தை வேண்டாம்என சொல்லுகிறான் என்றார். நீ ரமேஷ் கிட்ட ஒரு வார்த்தை சொல்லு .நான் போய் சொன்னால் கேட்பானா ?தீபாவை விட்டு பேச சொல்லுகிறேன் என்றான் பிரேம்.