Nizhal Tharum Vasantham - 10 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 10

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 10

குமரகுருவிடம் ஏன் பேசவில்லை என தீபாவிடம் கேட்க முடியாது. அவள் பிடிவாதக்காரி. ரஞ்சனி சொன்னால் அவள் கேட்பாள் ஆனால் இப்போது வேண்டாம் அவள் நல்ல மூடில் இருக்கிறாள் அதை கெடுக்க வேண்டாம் என எண்ணினான். அவளை எங்காவது தூரத்து குளிர் நாட்டுக்கு அழைத்து போக வேண்டும். அவள் சந்தோஷப்படுவதை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த சின்ன வயதில் அவளுக்கு காதல் வந்தது அவ்வளவு பெரிய குற்றமல்ல. தீபா ஃபோன் செய்திருந்தாள். எங்கே போயிருந்தாய் பிரேம்.மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன் . ம் போகட்டும் எனக்கு பிடித்த டெசர்ட்களை செய்திருக்கிறார்கள் வா போகலாம் சாப்பிட என்றாள். இரவு உணவு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்தது.நீ இன்றைக்கும் கார் ஓட்ட வேண்டாம். ரஞ்சனி டிரைவர் ஓட்டுவார் என்றாள்.தீபா இப்போது சாதாரண உடையில் மேக்கப் எல்லாம் கலைத்தவளாக இருந்தாள். இவனுக்கு நெருங்கிய சொந்தமானவளாக மாறிவிட்டாள். அவளுடைய கையிலும் இவனுடைய கையிலும் ஹார்ட்டின் போட்ட மோதிரம் மின்னியது. தீபா உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா என்றாள். நான் வேண்டுமென்றே செய்யவில்லை சாரி.இட்ஸ் ஓகே .

அவள் இவனுக்கு பிடித்ததை பரிமாறினாள்.வேணுங்கிறதை கேள் பிரேம் என்றாள். அது ஒரு ரம்மியமான அனுபவமாக இருந்தது. ரஞ்சனியும் நல்ல ரசனைக்காரி தான். உயர் ரக மியூசிக் என்றால் அவளுக்கு ரொம்ப இஷ்டம். ரஞ்சனி ஸ்கூல் படிப்பு முடிந்ததும் காலேஜ் போக வேண்டும் . இப்போதே அவளுடைய நடவடிக்கைகள் பெரிய பெண்மணி போல தோன்றியது. வயதுக்கு மீறிய மெச்சூரிட்டி . நான் என் அப்பா, அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றான். கவலைப்படாதே நிச்சயம் வருவார்கள் நாமெல்லாம் சேர்ந்து ஒரே குடும்பமாக இருக்க போகிறோம் என்றாள் தீபா.சாப்பிட்டு முடித்ததும் வீட்டுக்கு கிளம்பினார்கள். ரஞ்சனி ஏதோ கிண்டல் செய்தாள் தீபா முகம் வெட்கத்தில் சிவப்பாயிற்று. இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் உண்டான்னு அக்கா கேக்குறா .. அதெல்லாம் அப்புறம் என்றான் சிரித்தவாறே .

பிரேமும், ரஞ்சனியும் நிச்சயதார்த்த போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தனர். நல்லா வந்திருக்கு என்றாள். தீபா தூங்கிவிட்டாள். ரஞ்சனி உன் அக்காவிடம் நீதான் சொல்ல வேண்டும் மாமா ரொம்ப வருத்தப்பட்டார். எனக்கு புரிகிறது நான் கொஞ்சம் டைம் பார்த்து பேசுகிறேன் என்றாள். சரி ரஞ்சனி எனக்கு தூக்கம் வருகிறது நான் என் அறைக்கு போகிறேன் என்றான். எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். இவன் திரும்ப கால் பண்ணவில்லை.தீபாவுக்கு அது பிடிக்காது. இப்போது அவளுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் சௌமியா வாய்ஸ் மெசேஜ் ஒன்றை தொடர்ந்து அனுப்பியிருந்தாள். பரவாயில்லை பிரேம் நீ நன்றாக இருந்தாலே போதும் .. வாழ்த்து சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றாள். அவள் குரல் அவளுடையதாகவே இல்லை. மதன், நவீன் போன்றவர்கள் பெண்களை விரட்டி கொண்டே இருக்கும் வரை தன் போன்றவர்கள் நிலை திண்டாட்டம்தான் என நினைத்தான்.

மணி 11 30 இருக்கும் தீபா எழுந்து வந்து விட்டாள். எனக்கு தூக்கம் போய்விட்டாது ஏதாவது மூவி பார்ப்போம் வா என்றாள். அவர்கள் வீட்டில் அதற்கென ஒரு பிரத்யேக அறை இருந்தது. இவன் முகம் கழுவி வந்தான் . அவள் ஸ்நாக்ஸ் டப்பா ஒன்றை கையோடு கொண்டு வந்தாள். நாம் ஹாரர் மூவி பார்ப்போமா ? இல்லை ரொமான்ஸ் மூவி பார்ப்போமா என்றாள். ஹாரர் மூவி போடு என்றான். சே எப்ப பார்த்தாலும் ? சரி உன் விருப்பம் என்றான். அவள் ஏதோ ஒரு மிருகம் அட்டாக் செய்வது போன்ற படம் போட்டாள். இவன் ஆர்வமாக பார்த்துகொண்டிருந்தாள். அவள் இவன் மடியில் தலை வைத்து படுத்தாள். ஒரு கிஸ் குடுத்தா குறைந்தா போய்விடும் என்றாள். ம் பேய் படத்துக்கு நடுவே ஒரு ரொமான்ஸ் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் சற்று நேரத்தில் உறங்கியும் போய்விட்டாள். அவளை தூக்கி கொண்டு போய் அவளுடைய படுக்கை அறையில் விட்டான். இவன் அங்கிருந்த சோபாவில் படுத்துக்கொண்டான்.


தீபா காலேஜ் அட்மிஷனுக்காக போயிருந்தார்கள். அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. பிறகு சில சிபாரிசு கடிதங்கள் துணையுடன் ஒத்துக்கொண்டார்கள். எல்லா காலேஜ் போலவும் டிசிப்ளின் தான் முக்கியம் என்று சொன்னார்கள்.தீபா உன் விருப்பபடி காலேஜ் சேர்த்தாச்சு. உன் லைப் எப்பவுமே பிரைட் ஆக இருக்க வேண்டும் என்றான். நான் கொஞ்சம் கேம்பஸ் சுற்றி பார்த்து விட்டு வருகிறேன் என்றாள். நிச்சயம் போய் வா. ஒரு அரைமணி நேரத்தில் வந்து விட்டாள்.ரஞ்சனிக்கு எக்ஸாம் இருந்தது. குமரகுருவுக்கு தகவல் சொன்னான். ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை என்றார்.உன்னால நிறைய நல்ல விஷயம் நடக்குது என்றார். அங்கிருந்த கேண்டீன் ஒன்றில் லஞ்ச் சாப்பிட்டார்கள் . உன் காலேஜ் எல்லாம் எப்படி என்றாள் . அதெல்லாம் ஒரு ஜாலி ..வகுப்புகள் எல்லாம் ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்றான். நீ எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. மூன்றே வருடம் எல்லாம் மாறிவிடும். ம் பார்ப்போம் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது .

இவள் கல்யாணமாக போகிறவள் என்பதில் சில சங்கடங்கள் இருந்தன. சில மாணவ மாணவிகள் கிண்டல் செய்ய கூடும். அந்த அச்சம் தீபாவிடத்தில் இருக்கத்தான் செய்தது.அவளை டாக்ஸி ஒன்றில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் விரைந்தான் பிரேம். நிறைய வேலைகள் பாக்கி இருந்தன. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டி இருந்தது.இவனுடைய சின்ன உலகத்தில் எல்லாமே தீபாவாக மாறி இருந்தது. அவள் ஆபீஸ், அவள் துணை அவள் அப்பா பிசினஸ் . தனக்கென ஒரு அடையாளம் இல்லாததை சில சமயம் வருத்தத்துடன் யோசிப்பான். இப்போதைக்கு இது போதும் என்று நினைத்து நினைத்து நிறைய வாய்ப்புகளை தவற விட்டதன் விளைவுதான் அது.இது குறித்து குமரகுருவிடம் பேச வேண்டும் என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான்.

பிரேம் எப்படியோ செட்டில் ஆகிவிட்டதாக அவனுடைய தம்பி சொன்னான். அப்படி சொல்ல முடியாது அவனுடைய கஷ்டம் அவனுக்கு என்று அவனுடைய அம்மா சொன்னாள். நாம பிரேம் கல்யாணத்துக்கு போறோமா இல்லையா என்றான் . நிச்சயம் போகணும் என்றாள் பிரேம் அம்மா. நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க நான் வரலை என்றார் பிரேம் அப்பா. அது நல்லா இருக்காது நான் யோசிச்சு பார்த்து ஒரு முடிவு சொல்லுறேன் என்றார். நீ உடனே அவனுக்கு ஃபோன் பண்ணி சொல்ல வேண்டாம் . அவன் வந்து கூப்பிடட்டும் பிறகு பார்க்கலாம். ம் ஆனாலும் உங்களுக்கு வறட்டு பிடிவாதம்தான். கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. சௌமியா இந்தியா வர தன்னுடைய கணவனுக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்து விட்டாள்.

குமரகுரு அவ்வப்போது ரஞ்சனியுடன் வீடியோ காலில் பேசி வந்தார். என்னம்மா மாமா வந்தவுடன் இந்த அப்பாவை மறந்து விட்டாயா என்றார். அதெல்லாம் இல்லை அப்பா அவர் எங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்கிறார். உனக்கு எக்ஸாம் எப்போது முடிகிறது. அடுத்த மாதம் . நீ அவர்கள் கல்யாணத்துக்கு பிறகு என்னோடு வந்து இரண்டு மாதங்கள் இரு. அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் என்றார். சரிப்பா. நான் சொன்னதாக தீபாவிடம் சொல்ல வேண்டாம் அவள் கோபப்படுவாள் . நான் நிச்சயமாக சொல்லவில்லை. ரஞ்சனியும், தீபாவும் கல்யாணத்துக்கு பிறகு தீபாவும்,பிரேமும் ஹனிமூன் எங்கு செல்லவேண்டும் என திட்டம் போட்டார்கள். ஸ்விட்சர்லாந்து போகலாம் என்றாள் ரஞ்சனி. பிரேமிடம் ஒரு வார்த்தை கேட்கலாம். வேண்டாம் ரஞ்சனி பிரேம் ஏதாவது ஒரு தத்துவத்தை சொல்லுவார். நாமே முடிவு செய்வோம் என்றாள்.

காலேஜ் ஜாயின் செய்து விட்டாள் தீபா முதல் நாள் என்பதால் பதட்டமாய் இருந்தது. தான் இன்னொருவருக்கு சொந்தமானவள் என்ற உணர்வு அவளுக்கு எச்சரிக்கை உணர்வை தந்தது. அதே சமயம் தான் சுதந்திரமானவள் என்ற எண்ணமும் மேலோங்கியது. மதியம் போல பிரேம் ஃபோன் பண்ணியிருந்தான். என்ன தீபா எப்படி இருக்கிறது காலேஜ்? நீ என்னை தவிக்க விட்டுவிட்டு ஜாலியாக இருக்கிறாயா என்றாள். ம் நீ குழந்தை இல்லை எல்லாம் தெரிந்த பெண் அதனால் நான் எதுவும் சொல்லவில்லை. நான் ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிக்கொள்கிறேன். சரி என்றாள். பாவம் அவளுக்கு அவளுடைய அப்பா கூட இருந்திருக்க வேண்டும். ஈவினிங் தீபாவை பிக்அப் செய்து கொண்டான். எனக்கு பசிக்கிறது என்றாள். ரெஸ்டாரண்ட் போலாமா இல்லை ஐஸ்கிரீம் பார்லர் போலாமா என்றான்.ஐஸ்கிரீம் பார்லர் போகலாம். நீ இவ்வளவு டென்ஷன் ஆவாய் என்று நான் நினைக்கவில்லை . அப்படியில்லை எல்லோரும் என்னுடைய ரிங் பார்த்து கேள்விகள் கேட்டார்கள் என்றாள். ம் இதெல்லாம் சகஜம் என்றான்.

வீட்டுக்கு வந்தவுடன் ரஞ்சனி அவளை அழைத்து போய்விட்டாள். அவள்தான் அவளுடைய முதல் பெஸ்ட் ஃப்ரெண்ட் . இவன் தன்னுடைய அறைக்கு சென்றான். கொஞ்ச நேரம் கழித்து தீபா வந்தாள் சாரி என்றாள். எதுக்கு உன்கிட்ட போய் நான் அப்படி நடந்து கொண்டதற்கு. அதெல்லாம் நான் எப்பவோ மறந்துவிட்டேன். நான் ரொம்ப லக்கி என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்றாள். அது உண்மைதான் என உன்னை பார்க்கும்போது தான் தெரிகிறது. சரி எனக்கு சிஸ்டெமில் கொஞ்சம் ஆபீஸ் வேலை பாக்கி இருக்கிறது .நீ ஓய்வெடுத்து கொள் என்றான். சரி . இவன் கன்னத்தில் முத்தமிட்டு போனாள். அவன் மனதில் ஆசைகள் எழாமல் இல்லை.அவள் பக்குவப்படும் வரை எல்லாவற்றையும் சற்று தள்ளி வைக்க முடிவு செய்திருந்தான். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். என்ன பிரேம் பிஸியா ?அதெல்லாம் ஒண்ணுமில்லை.. தீபா எப்படி இருக்கிறாள். அவள் இன்று முதல் காலேஜ் போகிறாள். நல்ல விஷயம் தான் நடந்திருக்கிறது.நாளை லலிதா மேடம் பர்த்டே பார்ட்டி வைத்திருக்கிறார்கள்.உன்னையும் தீபாவையும் கூப்பிட சொன்னார்கள். மேடமுக்கு பெரிதாக சொந்தக்காரர்கள் இல்லை . நான்தான் எல்லா ஏற்பாட்டையும் செய்கிறேன். நீ வருகிறாயா நிச்சயம் வருகிறேன் என்றான். தீபா வருவது சந்தேகம்தான் என்றான்.

தீபாவை தொந்தரவு செய்யவேண்டாம் என நினைத்தான். அவளோ உனக்கு முக்கியமானவர்கள் எனக்கும் முக்கியம் என்றாள். சரி வா நான் ஒன்றும் சொல்லவில்லை என்றான். இருவரும் ஒரு கிப்ட் பேக் உடன் பர்த்டே பார்ட்டி சென்றிருந்தனர். லலிதா ரொம்பவும் சந்தோஷப்பட்டாள். என்னால் உங்கள் நிச்சயத்துக்கு வர முடியாமல் போயிற்று சாரி ,மை பெஸ்ட் விஷஸ் என்றாள். இருவரும் அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.லலிதா கேக் கட் பண்ணி எல்லோருக்கும் கொடுத்தாள். சுபா எல்லோருக்கும் திருஷ்டி சுத்தி போட்டாள். தீபாவின் வருகை சுபா மனதில் ஒரு நல்ல நிகழ்வாக பட்டது. இருவரும் விடைபெற்றுகொண்டார்கள்.