பிரேம் தான் ஒரு கனவுக்குள் இயங்குவதாக நினைத்தான். எதார்த்தமாக ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை. காலம் தன்னை அதன் போக்கில் இழுத்து செல்வதாக தோன்றிற்று . அவனுக்கென்று இருந்த பிரத்யேக உரிமைகள் கூட இப்போது அவனுக்கு சொந்தமில்லை. சௌமியாவின் இழப்பு ஈடு செய்ய முடியாததாய் தோன்றிற்று. காட்சிகள் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருப்பது எது நிஜம் எது மாயை என்று புரியாவிடாமல் அடித்தது. ஒரு நீண்ட காதலின் முடிவு இப்படித்தானா இருக்க வேண்டும் என யோசித்தான். என்ன யோசனை மாமா என்று ரஞ்சனி கேட்டாள். ஒண்ணுமே புரியலைமா அதெல்லாம் அப்படித்தான் எல்லாம் ஒரு குட்டி பிரேம் வந்தா சரியா போகும் என்றாள். ம் நீ ஒருத்திதான் இந்த பூமியில் கால ஊன்றி நிற்கிறாய். சாப்பிட வாங்க என்றாள்.ப்ரேக்ஃபாஸ்ட் இவர்கள் ஊரின் ஸ்டைல் மாதிரி இருந்தது. எல்லாம் அக்காதான் இது நாங்களும் பழகி கொள்ள என்றாள் ரஞ்சனி. இன்னைக்கு ஸ்கூல் போயிட்டு வரணும் என்றாள் தீபா. சரி போகலாம் . அவள் முகம் சற்று பிரகாசமாக இருந்தது. படிக்க தொடங்க வேண்டும் எக்ஸாம்ஸ் வருகிறது.
சௌமியா தான் ஏமாந்து விட்டதாக நினைக்கவில்லை.அவளால் பிரேமை மறக்க நினைக்க கூட முடியவில்லை. ஓடிக்கொண்டே இருந்தாள் தண்ணை எதிலாவது ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்தாள். அப்போதும் அந்த நினைவுகள் அவளை தழுவிக்கொண்டு நின்றன. அவள் அப்பா எடுத்த முடிவு சரியானதுதான் என்கிற மாதிரி தோன்றியது. சௌமியாவால் பிரேம் நினைவலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் தன்னை உருமாற்றிக்கொண்டால் ஒழிய வேறு மார்க்கம் இல்லை. தீபாவுடன் ஸ்கூல் போயிருந்தான் பிரேம்.அவளுடைய வகுப்பு ஆசிரியர்கள் பிரேமிடம் பேசினார்கள். அவள் மேற்படிப்பு படிக்கட்டும் என்று சொன்னார்கள். இவன் அதற்க்கு நிச்சயம் ஒத்துழைப்பதாக சொன்னான். சரி தீபா நீ ஒரு டாக்ஸி பிடித்து வீட்டுக்கு போய்விடு என்றான். நானும் ஆபீஸ் வருகிறேனே அதெல்லாம் வேண்டாம் நான் ஈவினிங் வந்து பேசுகிறேன் . சரி பிரேம்.
ஆபீஸ் பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தன. அவனால் தனியாக சமாளிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். புது முதலாளியை யார்தான் உடனே ஏற்று கொள்வார்கள். இவன் உத்தரவை மீறியும், செயல்படாமலும் சிலர் இருக்கத்தான் செய்தார்கள். நான் தலையிடவா என்று குமரகுரு கேட்டபோது வேணாம் சார் நானே தீர்த்து கொள்கிறேன் இது கம்பெனி சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல என்னால் கம்பெனியில் உண்டான பிரச்சனை என்றான்.மாலை 3 மணிக்கு ஃபோன் செய்தாள் தீபா . என்ன செய்கிறாய் பிரேம் . எனக்கு எல்லாமே புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது ஆனால் பழகிக்கொள்ள வேண்டும் என்றான். நீ பயப்படாதே பிரேம் நான் உன் கூட இருப்பேன் என்னை நம்பு . ம் உன் பேச்சே மாறிவிட்டது . சாப்பிட்டாயா ? ம் நான் படிக்க துவங்கியிருக்கிறேன் . சரி உனக்கு என்ன வாங்கி வர? நீ நேரத்தோடு வா அது போதும் என்றாள். சரி .
பிரேம் ஆபீஸில் இருந்து கிளம்ப மணி 7 ஆகி விட்டது. எவ்வளவோ முயன்றும் அவனால் நேரத்தோடு கிளம்ப முடியாமல் போய்விட்டது. ரஞ்சனியும் தீபாவும் கார்டன் அருகே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அது ஒருவிதத்தில் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. என்ன மாமா லேட் ஆ வருகிறீர்களே என்றாள் ரஞ்சனி. என்ன வாங்கி வந்தீர்கள். அவளுக்கென சில புத்தகங்கள் வாங்கியிருந்தான். தாங்க்ஸ் மாமா என்றாள். நான் குளித்துவிட்டு வருகிறேன் என்றான். சரி. தீபா டவல் உடன் வெளியில் நின்று கொண்டிருந்தாள். இவன் வெளியே வந்தவுடன் நீட்டினாள். என்ன ஆச்சு நீ எப்பவுமே மறந்து விடுவாய் டவல் எடுக்க அதுதான் .. ம் என்றவாறு அறைக்குள் போனான். மறுபடி இன்று நவீன் ஃபோன் பண்ணினான் என்றாள். நீ என்ன சொன்னாய். என்னால் என் மனதை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது என்று சொன்னேன். இதை சொல்லும்போது நான் பதற்றமாகிவிட்டேன் . அவன் ஃபோன் வைத்துவிட்டான்.
நல்லதே நடக்கும் தீபா நீ கவலைப்படாதே அந்த ஸ்வாமிகளிடம் என்னை எப்போது அழைத்து போவீர்கள் என்றாள். சீக்கிரமே ..முதலில் உனக்கு எக்ஸாம் முடியட்டும். உன்னுடைய கவனமெல்லாம் அதிலே இருக்கட்டும் என்றான். ரஞ்சனி சாப்பாடு பரிமாறினாள். இன்னைக்கு என்னுடைய சமையல் . அதுதான் வித்தியாசமாக இருக்கிறதா ? கிண்டல் பண்ணாதீர்கள் மாமா . கொஞ்ச நேரம் வாக்கிங் போவாமா பீச் ஓரம் என்றார்கள். இவன் தயங்குவதை பார்த்ததும் பிளீஸ் பிளீஸ் என்று சொன்னார்கள். போகலாம் ஆனால் நேரத்தோடு திரும்பிவிட வேண்டுமென்றான். நிச்சயமாக. காரை தீபாதான் ஓட்டினாள் . அவள் லாவகமா ஓட்டுவதை இவன் ரசித்து பார்த்தான். அன்று பௌர்ணமி. இதை அவனால் மறக்க முடியாது. கடலலையில் காலை நனைத்தபடி நடந்தார்கள். சோளம் சாப்பிட்டார்கள். ஒரு மணி நேரம் போயிருக்கும். ரஞ்சனி சற்றே சோர்வடைந்து விட்டாள். திரும்ப வரும்பொது இரு பெண்களுமே தூங்கி விட்டார்கள்.
காலை வணக்கம் மாமா என்றாள் ரஞ்சனி. நான் தூங்கி போய்விட்டேனா என்றாள். இல்லை மயக்கமாகிவிட்டாய். ரஞ்சனி ஸ்கூல் கிளம்பி விட்டாள். தீபா இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். அவளுக்கு காப்பி எடுத்து கொண்டு போனான். அவளுடைய அறை கதவை தட்டினான். அதெல்லாம் வேண்டாம் நீ வா பிரேம் என்றாள். அவள் அந்த இரவு உடையில் அழகாக இருந்தாள். இவன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டான். தாங்க்ஸ் பிரேம் என்றாள். குளித்து விட்டு வா.. டிபன் ரெடி.அவள் தயாராகி வந்தாள். அவளுக்கென ஒரு பிரத்யேக மணம் உண்டு அதை அவள் போட்டிருந்த வாசனை திரவியங்கள் மேலும் அதிகப்படுத்தின. இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். ஏன் பிரேம் என்னிடத்தில் இருந்து விலகியே இருக்கிறாய் என்றாள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சமாளிக்காதே சும்மா.. முகத்தை திருப்பிக்கொண்டாள் . என்னை பற்றி உனக்கு தெரியாதா ? எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்றான். ஓகே ஓகே ரொம்பவும் என்னை கெஞ்ச வைக்காதே ..
அன்று மாலை அவளுக்கு பூ வாங்கி வர வேண்டும் என நினைத்தான்.அந்த வீக்கெண்ட் மூவி போக வேண்டும் என ரஞ்சனி நிச்சயம் சொல்லிவிட்டாள். இவன் மறுப்பேதும் சொல்லவில்லை. தீபா, பிரேம் நிச்சயத்துக்கு நாள் பார்க்க சொல்லி பிரேமிடம் நினைவு படுத்தினார் குமரகுரு. மதியம் போல புரோகிதர் ஒருவரிடம் பேசினான். அவர் ஜாதாகங்கள் குறித்து கேட்டார். பிறகு இவன் விளக்கம் சொன்ன பின் லவ் மேரேஜா இதை முதலிலே சொல்லக்கூடாதா என்றார். நாள் குறிக்க நான் வீட்டுக்கு வருகிறேன் என்றார். குமரகுரு தான் நிச்சய தேதி குறிக்கும் போது வீட்டில் இருப்பேன் என்றார். தீபா எதுக்கு இந்த சடங்கு எல்லாம் என்றாள். எல்லாம் நல்லதுக்குதான் என்றான். நிச்சயம் நடக்கும் நாள் தீபவுடைய எக்ஸாம் முடிந்ததும் இருக்கும் படி அமைக்கப்பட்டது. சண்டே மூவி போக மூவரும் தயார் ஆனார்கள் . ரஞ்சனி மாமா நான் டிக்கெட் புக் செய்து விட்டேன் என்றாள். அது ஒரு சோகமான காதல் படம். இது தேவையா என்றான் . அதெல்லாம் அப்படித்தான். அப்போதுதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முடியும் என்றாள் தீபா.
படம் பார்த்துக்கொண்டிருந்த போதே தீபா இவன் தோளில் சாய்ந்து அழ தொடங்கிவிட்டாள் . இவன் இண்டர்வெல் சமயத்தில் அவளை கிண்டல் செய்தான். இவள் நிஜத்தில் அழுகிறாளா ? இல்லை சும்மாவா என்றான். சும்மா யாராவது அழுவார்களா ? நான் விளையாட்டுக்கு சொன்னேன் என்றான். படம் நிஜமாகவே அவர்கள் மூவரையும் சோகமாக்கிவிட்டது. பிரேம் நீ என ரூமிலே படுத்து கொள்ள கூடாதா? சோபாவில் படுத்து கொள்.எனக்கு என்னவோ போல இருக்கிறது என்றாள் தீபா. ம் எனக்கு புரிகிறது. நான் போய் தலையணையும் , பெட் சீட்டும் எடுத்து வருகிறேன் என்றான். குட் நைட் பிரேம் என்றாள். இவனுக்கு தூக்கம் வரவில்லை. அவள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள். பாவம் எப்படி அழுதாள் ஒரு டாக்டர் மனைவியாக போகிறோம் என்று கனவு கூட இருந்திருக்கலாம் .
காலை நேரத்தோடு எழுந்து பார்த்தபோது அவள் ஜாக்கிங் போக தயாரான உடையில் இருந்தாள். இவனையும் அழைத்து போனாள். அன்றாட வாழ்வில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருந்தன. இவள் இவனை உண்மையிலேயே விரும்புகிறாளா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். பிரேம் என்ன யோசனை.அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ என்னோடு வேகமாக ஓடி வா என்றாள். காலை வேலைக்கு போகும் முன் அவனை கட்டிக்கொண்டாள். என்ன திடீர்னு. அவசியம் இது என் பதட்டத்தை தணிக்கும் என்றாள். சரி. பூ வாங்கி வந்திருந்ததை குளிர்சாதனபெட்டியில் இருந்து எடுத்தான். ரோஸ் பூ . அவளுக்கு வைத்து விட்டான். தான் ஆபீஸ் போய் வருகிறேன் என விடை பெற்று கொண்டான். அவள் கண்ணாடியில் வந்து தன்னை பார்த்துக்கொண்டாள் .நிச்சய தேதி குறிக்க குமரகுரு வந்துவிட்டார். தீபா அவருடன் பேச மறுத்து விட்டாள். ஒரு நாள் தங்கியிருந்தவர் மறுநாளே வெளிநாடு கிளம்பிவிட்டார்.
எல்லாம் நாடகம் என்றாள் தீபா. நீ நம்பிக்கை இழக்க வேண்டாம் ஒரு நாள் அவரை புரிந்து கொள்வாய் என்றான் பிரேம். வேண்டாம் எனக்கு அவரை புரிந்து கொள்ள வேண்டாம். சரி . பிரேம் அவள் எக்ஸாம் போகும் நாளில் சிறப்பு அர்ச்சனை செய்ய கோவிலுக்கு அழைத்து போயிருந்தான். அம்பி யாரு அண்ணனா என்ற புரோகிதர் கேள்விக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க போகிறவர் என்றாள் தீபா. ரஞ்சனி தானும் இந்த சொந்தமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். எக்ஸாம் எழுதி முடிக்கும் வரை வெளியே காத்திருந்தான் . எப்படி பண்ணினாய் எக்ஸாம் என்றான். பரவாயில்லை ஓரளவு நன்றாக பண்னினேன் என்றாள். பிரேம் நான் முன்னாடி உட்கார்ந்து கொள்ளவா ? சரி . எனக்கு உன்னை விட்டு விலகி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை .மனம் மாறிக்கொண்டே இருக்கும் மாய சூழல் போல் .
மதியம் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டார்கள். எனக்கு இந்த ரெஸ்டாரண்ட் ரொம்ப பிடிக்கும் என்றாள். எனக்கும் பிடித்திருக்கிறது என்றான். சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது எதிரே நவீன் வந்தான். ரொம்ப நல்லவன் பா நீ என்றான் பிரேமை பார்த்து. இவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்ப முயற்சித்தான். தீபா நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய் என்றான். நான் நாய் மாதிரி இப்போது அலைந்து கொண்டிருக்கிறேன் என்றான். தீபா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து பிரேம் கையை பிடித்து கொண்டு வெளியேறினாள். பிரேம் நீ என்ன நினைக்கிறாய் என்றாள். இதெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றான். ஐ லவ் யு பிரேம் என்று அவன் உதட்டில் முத்தமிட்டாள் தீபா.