Nizhal Tharum Vasantham - 17 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 17

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 17

சுபாவை பார்க்க பிரேம் தீபா உடன் போயிருந்தான். அவளுக்கென வாங்கிய பொருட்களை கொடுத்தான். எதுக்கு பிரேம் இவ்வளவு வாங்கினாய் என்றாள். அதெல்லாம் பரவாயில்லை அம்மா இப்போது எப்படி இருக்கிறார்கள் ? தேவலாம் நான் என்னோடு வந்துவிடும்படி கூப்பிட்டு பார்த்தேன் அப்பா பிடிவாதமாக இருக்கிறார் .தீபா நீ காலேஜ் போகவில்லையா ? இல்லை நான் நிறுத்திவிட்டேன் என்றாள்.இருங்கள் காப்பி போட்டு எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனாள் சுபா.பிரேம் நீ அதற்குள் எல்லாரிடமும் நான் காலேஜ் போகவில்லை என்று சொல்லிவிட்டாயா ? நான் சொல்லவில்லை நீயாகத்தான் சொன்னாய் என்றான். ம் என்று அவனை செல்லமாக கிள்ளினாள். நீ போய் அவளுக்கு உதவு என்றான். சரி.

கிச்சன் உள்ளே போனாள். நாங்கள் அடுத்த வாரம் ட்ரிப் போகிறோம் என்றாள் தீபா. ஹனிமூன் ட்ரிப்பா ?அப்படித்தான். எங்கு போகிறீர்கள் அதெல்லாம் அப்பா சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்கிறார்.ம் சந்தோஷமாய் போய் வாருங்கள். காப்பி ரெடி ஆகி விட்டது. மூவரும் காப்பி குடித்தனர். லலிதா மேடம் எப்படி இருக்கிறார்கள் .பரவாயில்லை எப்படியோ நாங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம் என்றாள் சுபா.சரி சுபா நாங்கள் கிளம்புகிறோம் அடுத்த வாரம் கிளம்புவதற்கு முன்பு ஃபோன் செய்கிறோம்.நாமெல்லாம் சேர்ந்து கேரளா ட்ரிப் போனால் என்ன ? என்றாள் சுபா. நிச்சயமாக நான் ரஞ்சனியிடம் சொல்கிறேன். அவளுக்கும் கேரளா என்றால் இஷ்டம்.சுபா ரொம்பவும் தனிமையில் இருக்கிறாள் தீபா.. அவளுக்கு அது பழக்கம் ஆகி விட்டது .போலாமா என்று வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

இப்போதெல்லாம் நிறைய நேரம் இருக்கிறது தீபாவுக்கு. தீபா படிப்பை விட்டதில் பிரேமுக்கும்,குமரகுருவிற்கும் ரொம்ப வருத்தம். செடிகள் வாங்கி வளர்க்க ஆரம்பித்திருந்தாள் தீபா. அவற்றை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு கொண்டிருந்தாள். அவளுக்கு அதுவே ஹாபி ஆகி விட்டது. பிரேம் அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவனை சுற்றி சுற்றி வருவாள்.ரஞ்சனி ஃபோன் பண்ணினாளா என்றான். ம் அவள் அப்டேட் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறாள். பொருத்தமான நல்ல பாய் ஃப்ரெண்ட் கிடைக்கவில்லை என்கிறாள். நாம் வெளியே வாக்கிங் போவோமா கொஞ்ச தூரம் என்றான். போகலாமே இப்போதே ரெடி ஆகிறேன் . அவள் அவனுடன் கைகோர்த்து கொண்டாள். நமக்குள் நெருக்கம் இருக்கிறது ஆனால் இல்லை என்றாள். அதெல்லாம் நம்பாதே என்றான்.எல்லாவற்றையும் இந்த ஹனிமூன் ட்ரிப்பில் சரி செய்து விடுகிறேன். ம் நான் உன்னை விட்டு விட மாட்டேன்.

நாளை காலேஜ் போய் என்னுடைய சர்டிபிகேட் எல்லாம் வாங்கவேண்டும் என்றாள். சரி போய் வா. எனக்கு கொஞ்சம் அர்ஜண்ட் மீட்டிங் இருக்கிறது. மதியம் வந்துவிடுவாயா என்றான். ம் அவ்வளவு நேரமெல்லாம் ஆகாது முன்பே வந்துவிடுவேன் . நான் ஏற்கனவே பேசிவிட்டேன்.அவர்கள் இப்போது ஒரே படுக்கையில் படுத்திருந்தார்கள். பிரேம் இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது என்றாள். இவன் தூங்கிவிட்டிருந்தான் . அவள் நினைத்ததை விட கல்லூரி நிர்வாகம் வேகமாய் இருந்தது. 11 மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்து விட்டது.வீட்டுக்கு வந்தாள்.ரஞ்சனிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொன்னாள். அக்கா நீ இனி சுதந்திர பறவை என்றாள். நீ என்னை கிண்டல் பண்ணாதே . ஒருவகையில் இனி மாமா கூட டைம் ஸ்பெண்ட் பண்ண ஒரு தடையும் இல்லை. ஆமாம் நீ ஒழுங்காக சாப்பிடுகிறாயா இளைத்தார் போல இருக்கிறாயே என்றாள் . அதெல்லாம் நான் வெரைட்டி ஆக சாப்பிடுகிறேன். சரி நான் போய் சமைக்கிறேன்.ஓகே அக்கா.
பிரேம் குமரகுருவிடம் பேசினான். இப்போது எப்படி இருக்கிறீர்கள் ? பரவாயில்லை பிரேம் ஆனால் அடிக்கடி சோர்ந்து போகிறேன் என்றார். டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் வாங்க வா என்றான். அதெல்லாம் வேண்டாம் நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன் என தோன்றுகிறது. இவன் அதிர்ந்து போனான். அப்படி சொல்லாதீர்கள்.உண்மை அதுதான். நான் சில தவறுகளை செய்தேன் . அது சுயநலம்தான் ஆனால் எனக்கு வேறு வழியில்லை . பிறகு நான் பேசுகிறேன் என்றார்.மாலையில் வீடு திரும்பியதும் தீபாவிடம் மாமா ரொம்ப சோர்வாக இருக்கிறார் என்றான். எனக்கும் அப்படித்தான் பட்டது. அவரை இதற்கு பிறகு எங்கேயும் அனுப்பக்கூடாது . அதை தீபா ஆமோதித்தாள் . ஆபீஸ் பொறுப்புகள் இவனிடத்தில் முழுமையாக வந்து சேர்ந்தன.

நாளைக்கு கோவிலுக்கு போய் வரலாமா என்றாள். என்ன விசேஷம்.விசேஷம் எல்லாம் ஒன்றுமில்லை. சரி போகலாம். காலையிலேயே கூட்டம் இருந்தது. ரஞ்சனி வரவில்லையா என ஐயர் விசாரித்தார். அவள் ஊரில் இல்லை என்று சொன்னாள். பிரசாதம் வாங்கிகொண்டார்கள்.அங்கிருந்த நிழலான மரத்தடி அருகே நின்றார்கள். ஏதாவது வேண்டுதலா தீபா ? அதெல்லாம் சொன்னால் பலிக்காது. ம் நீயே ஒரு ரகசியம் இதில் உனக்கொரு ரகசியமா என்றான்.அப்படியில்லை . சௌமியா ஃபோன் பண்ணினாளா என்றாள். இல்லை நீ சொன்ன பிறகு நான் அவளை தொடர்பு கொள்ளவில்லை அவளும் என்னிடம் பேசவில்லை .சில சமயம் அப்படித்தான் ஆகிறது பிரேம் .

ரஞ்சனி சிங்கப்பூர் முடித்து மலேசியா போயிருக்கிறாள். எப்போது தான் டூர் முடிந்து திரும்ப வருவாய் என மெசேஜ் அனுப்பியிருந்தான் பிரேம்.அவள் எதுவும் பதில் சொல்லவில்லை. தீபாவோடு நெருக்கம் அதிகரித்தது .காலம் வேகமாய் ஓடியது. ரஞ்சனி இவர்கள் ட்ரிப் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக வந்து சேர்ந்தாள். எப்படி இருந்தது டூர் ? fantastic என்றாள். நீங்கள் இருவரும் இல்லாததுதான் குறை. எனக்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள். சரி போய் ஃபிரெஷ் ஆகி வா என்றான். தீபா அவள் கூட ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ரஞ்சனி இரவு நெடு நேரம் வரை நண்பர்களுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள். தீபா போய் நீயே இப்போதுதான் வந்தாய் கொஞ்சமாவது ரெஸ்ட் எடு என்றாள். சரி அக்கா .

குமரகுரு, ரஞ்சனியுடன் ஏர்போர்ட் வந்திருந்தார் கவனம் பிரேம் . தீபா உன்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று நான் நம்புகிறேன் என்றார். தாங்க்ஸ் அப்பா
அவர்கள் ஹனிமூன் ட்ரிப் சந்தோஷமாக அமைய வாழ்த்துக்கள் என்று சுபா மெசேஜ் பண்ணியிருந்தாள்.தீபா பிரேம் அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசினாள். நல்லபடியா போய்ட்டு வாம்மா என்றாள். ஆபீஸ் வேலைகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் பிரேம் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இவர்கள் காஷ்மீருக்கு தான் பயணம் போனார்கள். தீபா ரொம்பவே ஆர்வமாக இருந்தாள்.அவனுக்கும் முதல் அனுபவம்தான். பனி எங்கு பார்த்தாலும் பனி . அவளுக்கு பிடித்துவிட்டது. அவர்களுக்கென அறை ஏற்கனவே அந்த ஹோட்டலில் புக் செய்யப்பட்டு இருந்தது. டாக்ஸி உட்பட எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருந்தார் குமரகுரு.

அவள் உன்னோடு இத்தனை நெருக்கமாக இருப்பதற்காக எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா என்றாள். அவள் மனதில் பட்டதை பேசினாள். இவன் அவள் பேசும் அழகை ரசித்தான். என்ன பிரேம் பிரீஜ் ஆகி நின்று விட்டாய் போய் ரெடி ஆகு நமக்கென இந்த பனி பிரதேசம் காத்திருக்கிறது என்றாள்.சரி தீபா உடனே தயாராகிறேன் என்றான்.அவள் காபி ஆர்டர் செய்திருந்தாள். தாங்க்ஸ் தீபா என்றான்.அவர்களுடைய உடைகள் மிக நேர்த்தியாக இருந்தன பொருத்தமானதாகவும் இருந்தது. எல்லாம் ரஞ்சனியின் ஏற்பாடு.காலை மணி 9 போல ஹோட்டல் விட்டு கிளம்பினார்கள்.எல்லா இடங்களையும் அறிந்த டிரைவர் இருந்தார். அவர் சற்றே வயதானவராக இருந்தார். நிதானமாக வண்டியை செலுத்தினார். மதியம் ஹோட்டல் வந்துவிட்டார்கள் . இனி மாலை சுற்றிப்பார்க்கலாம் என்றான் பிரேம்.பிரேம் அவளுக்கு பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்தான்.

ரஞ்சனி காலேஜ் போயிருப்பாள் அவளுக்கு இரவு ஃபோன் பண்ணிக்கொள்ளலாம் என்றான். அதுவும் சரிதான். குமரகுருவின் உடல்நிலை குறித்த கவலை பிரேமுக்கு இருந்தது. என்னை கொஞ்சம் கவனி என்றாள். அந்த மதியம் அவர்கள் தங்களை மறந்தார்கள்.பிரேம் வாயேன் நடக்கலாம் கொஞ்ச தூரம் என்றாள். உனக்கு வழி தெரியுமா இருக்கவே இருக்கிறது மேப் . ஆனாலும் உனக்கு தைரியம்தான் என்றான். எனக்கு உன்னோடு பைக் ரைட் செய்ய வேண்டும் போல இருக்கிறது . நாளை அதை செய்யலாம் என்றான். அவள் சந்தோஷத்தின் எல்லையை உணர்ந்தாள் .டீ குடித்தார்கள். பிரேம் அவளுக்கென ஒரு பூங்கொத்து ஒன்றை வாங்கி குடுத்தான் . அதில் ஒன்றை உருவி அவள் தலையில் வைத்தும் விட்டான். நேரமாகிவிட்டது. ரஞ்சனியிடம் பேச வேண்டும் என்றாள்.

ஹோட்டல் அறைக்கு வந்து பேசினாள். என்னக்கா எப்படி இருக்கிறாய்? என்னை மறந்துவிட்டாயா இல்லை ரஞ்சனி நீ காலேஜ் போயிருப்பாய் அதுதான் ஃபோன்பண்ண வில்லை. அவளிடம் ஒரு அரைமணிநேரம் பேசி இருப்பாள். இரவு டின்னர் சாப்பிடுவிட்டு ரூம் வந்து சேர்ந்தார்கள்.பிரேம் அவளை அணைத்து கொண்டான். அந்த குளிர் அவர்களை ஒன்றிணைத்தது.மறுநாள் இன்னும் சில இடங்களை சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் அங்கிருந்து சில ஊர்களுக்கு சென்று வந்தார்கள். அந்த டிரைவர் ஒரு நல்ல வழிகாட்டியாய் இருந்தார்.பிரேம் எல்லா புகைப்படங்களையும் ரஞ்சனிக்கும் , சுபாவுக்கும் அனுப்பினான். ஊர் திரும்பும் நாள் வந்தது. என்ன அதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது என்றாள். நாம் அதிகமாகவே தங்கி விட்டோம் என்றான்.டிரைவருக்கு நன்றி சொன்னார்கள். நாம் எல்லோரையும் அழைத்துகொண்டு திரும்ப வருவோம் என்றான். நிச்சயமாக என்றாள்.

கிளம்புவதற்கு முன் குமரகுருவிடம் பேசினான்.ஆபீஸ் விஷயங்கள் சிலவற்றை சொன்னார். கவனமுடன் கேட்டுக்கொண்டான். தீபாவும், பிரேமும் ஊர் வந்து சேர்ந்தனர். ரஞ்சனி என்னக்கா மாமாவும் நீயும் ரோஸ் கலர் ல வந்திருக்கீங்க என்றாள். கிண்டல் பண்ணாதே ரஞ்சனி. இனி எப்பவுமே நீங்க ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் என் ஆசை என்றாள் .பிரேம் பயண களைப்பால் தூங்கி போய்விட்டான். காலை 9 மணிக்குத்தான் எழுந்தான். தீபா புதியதொரு பெண்ணாக தோன்றினாள். அவள் அவனை உண்மையாக நேசித்தாள் .குளித்து விட்டு வந்தவன் உடை மாற்றிக்கொண்டான். தீபா மதியம் ஆபீஸ் வந்தா போதும் அப்படின்னு அப்பா சொன்னார். நீ பூங்கொத்து மாதிரி இருக்கிறாய் என்றான்.

மதியம் போல ஆபீஸ் சென்றான். சிக்கலான சில விஷயங்கள் குறித்து குமரகுரு சொல்லிக்கொண்டிருந்தார். இவன் அவருக்காக லஞ்ச் எடுத்து போயிருந்தான். ரொம்ப தாங்க்ஸ் பிரேம் என்றார்.அவர் ரொம்ப நாட்கள் கழித்து வீட்டு உணவு சாப்பிடுகிறார். பிரேம் இது என் பாங்க் லாக்கர் சாவி இதை இனி நீயே வைத்துக்கொள். நான் அதிகம் மறதி உடையவன் ஆகிவிட்டேன் என்றார். பிரேம் நான் இருக்கும் வரை உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்றான். அவர் புன்னகைத்தார்.