Nizhal Tharum Vasantham - 12 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 12

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 12

தீபாவுக்கு இந்த பயணம் மகிழ்ச்சியை தந்தது. அவள் மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் போய்விட்டது. இப்போது பிரேம் அவனுடனான கல்யாணம் இதைப்பற்றி மட்டுமே அவள் மனம் சிந்தித்து கொண்டிருந்தது. என்ன தீபா உனக்கு நீயே சிரித்து கொள்கிறாய் என்ன விஷயம் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை உன்னுடைய சின்ன வயசு போட்டோ நினைவுக்கு வந்துவிட்டது அதை நினைத்துதான் சிரித்தேன். ஓ அது எப்போதோ எடுத்தது. பரவாயில்லை நீ சிறுவயதில் அழகாய்த்தான் இருக்கிறாய் என்றாள். தாங்க்ஸ் தீபா. ம் மாமாவுக்கு குறும்பு என்றாள் ரஞ்சனி.வீடு வந்து சேர்ந்ததும் பிரேம் அம்மாவுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதாக ஃபோன் பண்ணி சொன்னார்கள் . இதெல்லாம் இப்போது யார் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்றாள் ரஞ்சனி.எல்லாம் பிரேம் மன திருப்திக்குத்தான் .

ரஞ்சனி தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. அவள் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகியிருந்தாள் . தீபா அவளை தூக்கி சுற்றினாள். போதும் அக்கா நான் ஏதோ ஸ்டேட் ரேங்க் வாங்கியதை போல .. பிரேம் ரஞ்சனிக்கு வாழ்த்து தெரிவித்தான். குமரகுரு ஃபோன் பண்ணி பேசினார் அவள் விருப்பம் போல எது வேண்டுமானாலும் படிக்கட்டும் பிரேம் என்றார். அவளை நல்ல காலேஜ் ஒன்றில் சேர்ப்பது உன் பொறுப்பு என்றும் சொன்னார். நிச்சயமாக என்றான். ரஞ்சனி இப்போது இன்னும் பக்குவப்பட்ட பெண்ணாக தோன்றினாள் .காலேஜ் சேர இன்னும் நாட்கள் இருந்தன . கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன. பிரேம் அம்மாவை ஒரு வாரம் முன்பே வர சொல்லிவிட்டான். சௌமியாவும், சுபாவும் முன்கூட்டியே வந்து விடுவார்கள். தீபா தன் ஸ்கூல், காலேஜ் நண்பர்களுக்கு பத்திரிகை வைக்க தொடங்கினாள் . கிருஷ்ணா பிரேம் எப்படி இருக்கிறார் என விசாரித்தான். அவருக்கென்ன எப்போதும் பிஸி என்றாள்.

எல்லாம் சீராக போய்க்கொண்டிருப்பது போல தோன்றிற்று நவீன் என்ன செய்கிறானோ என்ற கவலையும் உண்டாயிற்று. தீபா இவன் கவலைப்படுவதை கண்டுபிடித்து விட்டாள். என்ன ஆச்சு பிரேம் ஏன் டல் ஆ இருக்கே நவீன் ஃபோன் பண்ணினானா? என்றாள். எப்படியோ அவளுக்கு ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. அதெல்லாம் இல்லை அவன் எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என்பது தெரியவில்லை அது ஒருவகையில் நல்லது என்றாலும்.. நீ வீணாக கவலைப்படுகிறாய் அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாள். எப்போ அது நடந்து 3 மாதங்கள் இருக்கும். நீ ஒன்றுமே சொல்லவில்லை நான் என்ன சொல்ல.. என் ஃப்ரெண்ட் ஒருத்திதான் சொன்னாள் . அவனைப்பற்றி பேச கூட நான் விரும்பவில்லை. சரி இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது . தீபாவை கட்டி அணைத்துகொண்டான். என்ன பிரேம் திடீரென பாசமழை பொழிகிறாய் என்றாள்.

ஒரு நல்ல நாள் பார்த்து ரஞ்சனியை காலேஜ் அனுப்பினான். அவள் பிரேம் மீது நிறைய மரியாதை வைத்திருந்தாள் . அதை அடிக்கடி வெளிக்காட்டவும் செய்தாள் . சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். என்ன பிரேம் எப்படி இருக்கிறாய் என்றாள். நான் நன்றாக இருக்கிறேன் . நீயும் உன் கணவரும் வருகிறீர்கள் தானே என்றான்.நிச்சயம் வருகிறேன் . தீபாவிடம் பேச வேண்டும் போல இருக்கிறது என்றாள். தீபா தீபா என குரல் கொடுத்தான் . அவள் என்ன பிரேம் என்றாள் . சௌமியா உன்னிடம் பேச வேண்டுமாம் என்றான். அவள் ஃபோன் எடுத்துக்கொண்டு போய்விட்டாள் . என்ன ரகசியம் பேசினீர்கள் என்றான். ஒன்றுமில்லை சௌமியாவும். அவள் கணவரும் இங்கே அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க இருக்கிறார்களாம் .அவள் உன்னை இப்பவும் மிஸ் பண்ணுகிறாள் பிரேம். சரி ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதே அவள் அவன் கன்னத்தை கிள்ளினாள் .

பிரேம் அம்மா வந்துவிட்டாள் . பிரேம் அப்பாவும் தம்பியும் கல்யாணதுக்கு இரண்டு நாட்கள் முன்பாக வருவார்கள் என்றாள். ரஞ்சனியும் தீபாவும் மகிழ்ச்சி அடைந்தனர். எங்களுக்கு எதை எப்படி செய்வது என்று புரியாமல் தவித்திருந்தோம் . நல்ல வேளை நீங்கள் வந்துவிட்டீர்கள் என்றாள் தீபா. பிரேம் அம்மா எல்லாவற்றையும் சுத்தப்படுத்த தொடங்கினாள். அதுக்கெல்லாம் ஆள் இருக்காங்க என்றார்கள். இருக்கட்டும் இது நம்ம வீட்டு கல்யாணம் என்றாள். ரஞ்சனியும் தீபாவும் அவளை போட்டி போட்டு கவனித்தனர். போதும் எங்கம்மாவை ஒரு வழி பண்ணிவிடுவீர்கள் போல என்றான் பிரேம். பிரேம் ஒரு முக்கியமான விஷயம் நாளை புரொஃபசர் கிருஷ்ணாவை டின்னர் கூப்பிட்டு இருக்கிறேன் வீட்டுக்கு. சரி எல்லா சிறப்பு உணவும் ஏற்பாடு செய்து விடுவோம். நீ கட்டாயம் 7 மணிக்கெல்லாம் ஆபீஸில் இருந்து வந்து விடு என்றாள். நிச்சயம்.

கிருஷ்ணா குறித்த நேரத்துக்கு வந்து விட்டான். ரஞ்சனியையும்,பிரேமையும், பிரேமுடைய அம்மாவையும் அறிமுகபடுத்தினாள் .வீடு அருமையாக இருக்கிறதென்றான்.நீங்கள் உட்காருங்கள் பிரேமுடன் பேசிக்கொண்டிருங்கள் நான் கிச்சன் உள்ளே சென்று பார்த்து வருகிறேன். ரஞ்சனி படிப்பு சம்மந்தமாக பேசினார்கள். கல்யாணத்துக்கு அவசியம் வர வேண்டும் என பிரேம் சொன்னான். ரஞ்சனி அவருக்கு ஒரு புக் கிப்ட் ஆக கொடுத்தாள் . சோ நைஸ் என்றான் கிருஷ்ணா. நீங்கள் என் அக்காவிற்கு செய்த உதவிக்கு நன்றி என்றாள். இதுக்கு போய் நன்றி எல்லாம். என்னுடைய கடமை என்றான். எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டார்கள். ரொம்ப நல்லா இருந்தது என்றான். ஐஸ் கிரீம் கொண்டு வந்து கொடுத்தாள்.கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு புகைப்படம் எடுத்து கொண்டார்கள். பிறகு விடைபெற்றுக்கொண்டான்.

சுபாவும், சௌமியாவும் வந்து சேர்ந்துவிட்டார்கள். தீபா அவர்களை வரவேற்றாள். சௌமியா உங்கள் மேல் எனக்கு கோபம் , ஏன் இவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது ஹோட்டலில் தங்க வேண்டும் என்றாள். அதெல்லாம் நினைத்து திட்டமிடவில்லை. உங்களுக்கு எதற்கு சிரமம் என்றாள். சுபாவும் சௌமியாவும் பேச தொடங்கினார்கள். தீபா நான் இப்போது வந்து விடுகிறேன் இந்த பிரேம் எப்பவுமே லேட் தான் என்றாள். பிரேம் அம்மாவை சுபாவும்,சௌமியாவும் சந்தித்தார்கள். நீ பிரேமை மன்னித்துவிடு சௌமியா என்றாள்.எதற்க்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுகிறீர்கள் . அவன் நன்றாய் இருந்தாலே போதும். பிரேம் வந்து விட்டான். வா சுபா வா சௌமியா ஏதாவது சாப்பிட்டீர்களா ?ஜூஸ் குடித்தோம் என்றார்கள்.பேசிக்கொண்டிருங்கள் இப்போது வந்து விடுகிறேன் என்றான். சௌமியா சொன்ன சொல் தவறாமல் வந்துவிட்டாள் . அவளை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் அவள் மனம் புண்படும்படி பேசி விட கூடாது என நினைத்துக்கொண்டான்.

ரஞ்சனி காலேஜில் இருந்து வந்து விட்டாள். வாங்க வாங்க என்றாள் சுபாவையும்,சௌமியாவையும். எப்படி இருக்கீங்க நீங்க வந்ததிலே ரொம்ப சந்தோஷம் என்றாள். சுபாவுக்கு தங்கும் அறையை ஏற்பாடு செய்து கொடுத்தாள் ரஞ்சனி. அங்கேயே சௌமியாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் சுபா. நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள கூடாது சுபா. எனக்கு வெறுத்து விட்டது உன் ஹவுஸ் ஓனர் வர வில்லையா நாளைக்கு வருவார்கள் என்றாள். சரி சாப்பிடலாம் வாருங்கள் என்றாள் தீபா. சௌமியா முகத்தையே பார்த்தபடி இருந்தான் பிரேம். இதை தீபா கவனிக்க தவறவில்லை. சுபா நான் ரூமுக்கு போகிறேன் என்றாள். நான் சௌமியாவை ஹோட்டலில் விட்டு விட்டு வருகிறேன் என்றான். இல்லை நான் போய்க்கொள்கிறேன். அதெல்லாம் முடியாது பிரேம் நீ வண்டி எடு என்றாள் தீபா.


ஹோட்டல் வந்ததும் என் கணவரை அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என அழைத்து போனாள் . அவர் தூங்கி கொண்டிருந்தார். இவள் பெல் அடித்ததும் சற்று தாமதமாக கதவை திறந்தார். இவனை பார்த்ததும் முகம் மலர்ந்தார். வா பிரேம் கல்யாண வேலை எல்லாம் எப்படி போகிறது என்றார். நன்றாக போகிறது.காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்றார். சரி நீங்கள் ரெஸ்ட் எடுங்கள் . நான் நாளை வந்து சந்திக்கிறேன் என்றான். எனக்கு அமெரிக்கா நேரம் அட்ஜஸ்ட் ஆக வில்லை அதுதான் தூங்கிவிட்டேன் என்றார். நான் வருகிறேன் சௌமியா என்று விடை பெற்று கொண்டான்.குமரகுருவை ஏர்போர்ட் போய் அழைத்து வந்தான். பிரேம் அம்மாவை பார்த்ததும் கும்பிட்டார். எல்லாம் சரியாக நடக்கிறதா இந்த பெண்கள் சொன்ன பேச்சை கேட்கிறார்களா என்றார். இருவருமே அருமையான பெண்கள் என்றாள்.

இன்னும் 3 நாளில் கல்யாணம் எல்லா வேலையும் பார்க்க வேண்டும் . நான் கோவிலில் சொல்லிவிட்டேன் . நீயும் தீபாவும் போய் ஒருமுறை உறுதிபடுத்தி கொண்டுவிடுங்கள். ரஞ்சனி தூங்கிவிட்டாளா என்றார். பிரேம் எல்லாவற்றிலும் கவனம் தேவை என்றார். அப்பாவும் தம்பியும் எப்போது வருகிறார்கள் . நாளை வருவார்கள் என்றான். அவன் பம்பரமாக இயங்கினான். இரவு 2 மணி ஆகிவிட்டது தன் அறைக்கு செல்ல. தீபா வந்தாள் என்ன தூக்கம் வரவில்லையா என்றான் . அதெல்லாம் வருகிறது . நீ ஓயாமல் வேலை செய்கிறாய் இடையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள் என்றாள். இதை சொல்லத்தான் வந்தாயா என்று அவளை இழுத்து பிடித்தான். ம் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றாள். அந்த சௌமியா முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாயே .. அப்படி இல்லை என்னால் அவள் மேல் இருக்கும் பரிதாப உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம்தான்.ஐ லவ் யு பிரேம் என்று சொல்லிவிட்டு போனாள் .


கதிரேசன் குடும்பத்தோடு வந்துவிட்டான். லலிதா மேடம் சுபா அறையிலேயே தங்கி கொள்வதாக சொல்லிவிட்டார்கள். கதிரேசன் பிரேம் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இரவு லேட் ஆக பிரேம் அப்பா , பிரேம் தம்பி வந்தார்கள். எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் . குமரகுரு வாசல் வரை வந்து வரவேற்றார். அவருக்கென இருக்கும் அறைக்கு கூட்டிப்போனார். சாப்பாடு தயார் பண்ணுங்கள் என்றார் ரஞ்சனியிடம். பிரேம் தம்பி வீட்டை சுற்றி பார்த்தான். சுபா அக்கா எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்தான். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றான். பிரேம் லேட் ஆக வீட்டுக்கு வந்தான். அவன் அப்பாவை பார்த்தான். ரொம்ப சந்தோஷம் பா நீ பெரிய பொறுப்பு ல இருக்கிறத நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்றார்.

எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். கல்யாண வேலைகள் வேகமாய் நடந்தன. மறுநாள் கோவிலுக்கு போனார்கள் தீபாவும். பிரேமும். கோவில் ஆபீசரிடம் பேசிவிட்டு வந்தார்கள். தீபா இந்த கோவிலில்தான் நம் வாழ்க்கை மாறபோகிறது என்றான். நான் என்ன சொல்வது நீ இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை என்றாள். அவன் வீட்டுக்கு வந்திருக்கும் எல்லாரையும் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்றான் . நீ என்னை கவனித்து கொள் என்றாள் சிரிப்புடன்.