கல்லூரி பயணம்.....
முகமறியா சொந்தங்களுடன் நுழைந்த விடுதிகள்
எதிர்பாராமல் உருவான உயிர் நட்புகள்
கூட்டாய் அமர்ந்து பேசிய நொடிகள்
தாமதம் புரிந்து விரைந்தோடிய படிகள்
பிறந்தநாள் நள்ளிரவு வாங்கிய அடிகள்
ஆசையாய் பயிர் செய்து வளர்திட்ட செடிகள்
நகைச்சுவையற்ற நண்பனின் கடிகள்
எண்ணெயில் ஊறிய மாஸ்டரின் வடை கள்
விவசாயம் போதித்த வல்லமை பேராசிரியர்கள்
உடன்பிறந்தோர் என்றான அன்பு இளவல் கள்
ரோமியோ ஜுலியட் ஆன காதலர்கள்
ஓர் தட்டில் பசியாறிய மூவிரு கைகள்
கஷ்டத்தில் தலைசாய்த்த மச்சானின் மடிகள்
பருவம் தவறா கல்வி சுற்றுலாக்கள்
கல்லூரி பேருந்து கண்ட குத்தாட்டங்கள்
பாசத்தை பொழிந்த நண்பர் குடும்பங்கள்
கூத்தடித்த கல்லூரி கலை நிகழ்ச்சிகள்
இத்தனை வரங்களை அள்ளிக்கொடுத்த கல்லூரி தாயே...!
உம்மை நினைக்காமல் மறந்திடுமோ மனம்...!
-பரமேஸ்வரன்