Tamil Quote in Poem by Mahendran Sandhiya

Poem quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Tamil daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

என்னவனுக்காக

என் மனதில் அவ்வபோது தோன்றி மறையும்  சில கிருக்கல்கள் !

உன் புன் சிரிபொன்று போதும் நான் என்னையே மறக்க...

நீ என்ன செய்தாலும் மறந்து விடுகின்றேன். அப்படி என்னை என்ன தான் செய்தாயோ?

உன் முகம் காணாமல் தவிக்கின்றேன், சிலநேரம்

அதன் வெளிப்பாடே இந்த கோப முகமூடி😡

அதுவும் உன் சிறு கண் அசைவிலும் 😍

ஒரு மென் சிரிப்பிலும் காணாமல் போவதன்
மாயம் என்னவோ !

உன்னுடைய ஒரு அணைப்பு இழைந்த என் தாயின் அரவணைப்பையே மிஞ்சும்.

உன் விலகலோ உலகமே இருண்டது போல் ஒரு பிரம்மை.

உன் கோபத்தை கூட சீண்டி விளையாட தான் ஆசை கொள்கிறது என் மனது !

உன் கோபம் கூட நீ என்மீது வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடு என்பதனால் என்னவோ?

ஆனால் கோபத்தில் நீ உதிர்க்கும் சுடுசொற்கள் தீயினால் சுட்ட புண் போல ஆழ்மனதை ரணமாக்குவதேனோ?

அந்த காயத்திற்கும் மருந்தாய் நீயே மாறி என்னை நீ தோற்றும் விந்தை தான் எனக்கு வரவில்லை...

இப்படியெல்லாம் கவிதை எழுத ஆசை தான்... ஆனால் இதை கவிதையென்று யார் ஒற்றுக்கொள்வது?

ஆகவே, கவிதை எழுத தான் கவிஞன் அல்ல ! கட்டுரை எழுதி பேச பேச்சாளரும் அல்ல!

என்மீது நீ வைத்த காதலினால் உருவான உன் காதல் மனைவி

இப்படிக்கு
Puppyma ♥️

Tamil Poem by Mahendran Sandhiya : 112031907
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now