காதல்
கண்களுக்குத் தெரியாத
காற்று....
சகல உயிர்களுக்கும்
சமம்....
சுவாசக் காற்றைவிட
சுகமானது
இந்தக் காதல் காற்று.....
நிறமாறும்
மனித கூட்டத்தில்
காதல்நிறம் மட்டும்
கலையாது....
வஞ்சகமில்லாத
நெஞ்சங்களில்
வாசம் வீசும்
காதல்...
அழகை அணிகலனாக
மாற்றும்
மனதை மணிமகுடமா
சூட்டும்...
உலகத்தில்
உலவும் இரண்டு
காற்றில்
காதல் காற்று
கவிதையில் கரையும்
மற்றொரு காற்று
உடலோடு மறையும்....
ஆனாலும்
இந்தக் காற்றிரண்டும்
ஒருஃபீனிக்ஸ் பறவைபோல்
பின்தொடரும்...
இளமையின்
இரகசியங்களில்
புனிதம் பூபூக்கும்
புதிய உணர்வுகள்
புதிர் போடும்
காதல் காற்றுக்கு
புயல் வீச தெரியாது
சூறாவளி போல்
சுழலாது
தென்றல் போல்
தாலாட்டும்
தினந்தினம் தித்திக்கும்....
வாழ்க்கையின்
நிலப்பரப்பில்
பசுமையால் ஆடை
கட்டும் காற்று
காதல் காற்று...
உலகம் உயிர்வாழும்
மூச்சுக்காற்றை
இனிய
காதல் காற்றால்
ஓவியம் வரையலாம்
வாழ்க்கை மணம் வீச
காதல்காற்றில்
பறந்துவா
இதயங்களே...!
இப்படிக்கு
காதல்