தயங்கி தயங்கி உன் பெயரை சொன்னாய்
நீ அவ்வளவு தயங்கி இருக்க வேண்டியதில்லை
அழகாக இருப்பதெல்லாம் உன் பெயரே
நீ டீ குடித்தாயா என்று கேட்டாய்
நான் உன் பார்வைகளின் ஆழத்தை அறிந்திருக்கவில்லை
ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிறாய்
நான் அங்கேயே மிதந்து கொண்டு இருக்கிறேன்.