ரஷ்மியும்,ராகவும் டூர் முடிந்து ஊர் திரும்பினார்கள். நிறைய பொருட்களை எல்லோருக்காகவும் வாங்கி வந்திருந்தார்கள். வந்து freshup ஆனதும் சௌமியாவுக்கு ஃபோன் செய்தாள் ரஷ்மி. எப்படி இருந்தது டூர் என்ஜாய் பண்ணினீர்களா என்றாள் சௌமியா. அதெல்லாம் சூப்பர். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றாள். நான் நல்லா இருக்கேன் . இன்னைக்கு காலேஜ் வரியா?மதியம் போல வருவேன் என்றாள் ரஷ்மி. பூஜா ஊரில் இருந்து வந்திருக்கிறாள். அவள் உன்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாள்.என் வீட்டில்தான் இருக்கிறாள். மதியம் காலேஜில் பார்க்கிறேன் என்று சொல்லுங்கள். சரி ரஷ்மி. ராகவ் இன்று காலேஜ் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.ராகவுக்கு ஃபோன் செய்தாள் என்ன ரஷ்மி என்றான் இன்னுமா தூங்குகிறாய் நான் காலேஜ் போகிறேன் என்றாள். பேசாம ரெஸ்ட் எடு ரஷ்மி, பூஜா வந்திருக்கிறாளாம் நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்றாள். சரி அவளை கேட்டதாக சொல் ஈவினிங் வந்து பார்க்கிறேன் ஓகே பை என்றான்.
பூஜாவை மதிய இடைவெளியில் பார்த்தாள் ரஷ்மி. என்ன ரஷ்மி செம ஜாலியா என்றாள். ம் ஒரு வகையில் ஜாலிதான் என்றாள்.
நீ எப்படி இருக்கிறாய் பூஜா அருண் உன் நினைவாகவே இருக்கிறான் என்றாள். ம் அது ஒன்றுதான் மிச்சம் அவனுக்கு நேரமே கிடைப்பதில்லை என்றாள் பூஜா. சரி பூஜா நீ சாப்பிட்டாயா ம் சாப்பிட்டேன். சரி பூஜா ஈவினிங் சௌமியா மேம் வீட்டில் பார்க்கலாம் என்றாள்.எங்கே எனக்காக ஒன்றும் வாங்கி வரவில்லையா என்றாள். ம் அதெப்படி மறப்பேன் எல்லாம் ராகவிடம் இருக்கிறது அவன் காலேஜ் வரவில்லை. ஈவினிங் கொண்டு வந்து தருவான் என்றாள். ம் சரி ரஷ்மி நான் வருகிறேன் என்று விடைபெற்றுக்கொண்டாள்.intercollege singing காம்படிஷன் அழைப்பு வந்திருந்தது. சௌமியா யாரை அனுப்பலாம் என யோசனை செய்தாள். ஈவினிங் தான் எல்லோரையும் பார்க்க போகிறோமே அப்போது முடிவு செய்யலாம் என நினைத்தாள். மாலை அருண்,ராகவ்,ஜோ, ஸ்ருதி,ரஷ்மி,பூஜா, தென்றல்,சுகன்யா எல்லோரும் சௌமியா வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது intercollege singing காம்படிஷன் நோட்டீஸ் ஒன்றை சௌமியா காட்டினாள். ஜோவை அனுப்பலாமா என்று கேட்டாள் சௌமியா. நல்ல ஃபிரெஷ் வாய்ஸ் ஆக இருந்தால் நல்லது என்றான் அருண். குடித்து குடித்து குரல் போய்விட்டது ஜோவுக்கு என்றான் அருண். ஜோ அருணை முறைத்தான் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. ரஷ்மி போய் டீ போட்டு பிஸ்கட்டும் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்தாள் .
பூஜா நாம் ஸ்ருதியை அனுப்பலாம் என்றாள். ஸ்ருதி நானா என்று தயங்கினாள். எல்லோரும் ஸ்ருதியே போகட்டும் என்றார்கள். அருண் நீ பயப்படாதே ஸ்ருதி இன்னும் இரண்டு வாரங்கள் டைம் இருக்கிறது நாம் தயார் செய்து விடலாம் என்றான். தென்றலும், சுகன்யாவும் எப்பவும் போல அமைதி காத்தனர். ஸ்ருதி நீங்கள் இருக்கும தைரியத்தில்தான் நான் ஒத்துக்கொள்கிறேன் என்றாள் . சரி அப்போ போலாமா என்றான் ஜோ. சரி நீ கிளம்பு என்றான் அருண். வாடா எப்போ பார்த்தாலும் பூஜா பின்னாடியே சுத்திகிட்டு அவங்க லேடீஸ் ஏதாவது பேசுவாங்க என்றான். ராகவ் நானும் போகட்டுமா என்பது போல பார்த்தான். ரஷ்மி அவனை கண் ஜாடையில் இருக்க சொல்லி சொன்னாள். சௌமியா ஆன்லைன் மூலமாக பாட்டு போட்டிக்கு பதிவு செய்தாள். சௌமியா என்ன சுகன்யா நீயும் போகிறாயா போட்டிக்கு உனக்கும் ஒரு சேஞ்ச் ஆக இருக்கும் என்றாள். வேண்டாம் மேம் ஸ்ருதியே போகட்டும் அவள்தான் இதற்க்கு பொருத்தமானவள் என்றாள். சுகன்யாவும் தென்றலும் கிளம்பி விட்டனர். என்ன ரஷ்மி டூர் ல உன் ரொமான்ஸ் தான் சூப்பர்னு பேச்சு அடிபடுது. அதெல்லாம் ஒண்ணுமில்லை மேம் என்றான் ராகவ். நீ கிளம்பு ராகவ் நான் ரஷ்மியிடம் பேச வேண்டும் என்றாள் பூஜா, சரி அந்த அருவி மேட்டர் மட்டும் சொல்லாதே ரஷ்மி என்றான் ராகவ்.
நைட் பூஜா திரும்ப ஊருக்கு கிளம்பினாள் . பூஜா அழுதுவிடுவாள் போல இருந்தாள். எதுக்கு இப்போ மூஞ்சை தூக்கி வைத்திருக்கிறாய் . நாமளும் டூர் போகணும் அதே மாதிரி அருவில குளிக்கணும் என்றாள். ம் ரஷ்மி சொன்னாளா அவ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா?சரி போவோம் நாம ரெண்டு பேர் மட்டும். தாங்க்ஸ் அருண். நீ ஸ்ருதியை பாடுறதுக்கு மட்டும் ரெடி பண்ணு ரொம்ப டீப்பா போகாதே என்றாள். அவளுக்கு ஒரு மோதிரம் அணிவித்தான் என்ன திடீர்னு என்னவோ எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் நீ எப்படியாவது கொண்டாட வேணாமா அதுதான். ஸ்ருதி பாடுறப்போ நான் வருவேன் என்றாள் பூஜா. சரி பார்க்கலாம் என்று விடை கொடுத்தான் அருண். அருணுடைய கண்கள் கலங்கி இருந்தன. சீக்கிரம் டீம் மொத்தமும்
அழைத்துக்கொண்டு ஒரு டூர் போக வேண்டும் என நினைத்தான்.காம்படிஷன் பலவற்றில் ஸ்ருதி கலந்து கொண்டிருந்தாலும் இது அவளுக்கு சவாலாகவே இருக்கும் என்று தோன்றியது.
ஓரளவு தயார் ஆனா பிறகு எல்லோர் முன்பும் பாடிக்காண்பித்தாள் ஸ்ருதி. ஸ்ருதி நீ நன்றாக பாடுகிறாய் ஆனால் இது ஒரு காம்படிஷன் அதனால் உன்னுடைய ஃபோகஸ் முழுவதும் இசையில் இருக்க வேண்டும். நல்ல பாடிலாங்குவேஜ் உடன் இருக்க வேண்டும் என்றாள் சௌமியா. காம்படிஷன் நடக்கும் இடத்துக்கு காரில் போய்விடலாம் என்றே சொன்னாள் சௌமியா. விழா துவங்க இன்னும் ஒரு வாரமே இருந்தது. பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தாள் ஸ்ருதி.தி ஈகிள்ஸ் லோகோ பொறிக்கப்பட்ட புதிய உடையை ஸ்ருதிக்காக தயார் செய்தாள் சௌமியா. பூஜாவும் அவ்வப்போது வீடியோ காலில் வந்து ஆலோசனைகள் வழங்கி வந்தாள் .ரஷ்மியும், ராகவும் ஸ்ருதி வெற்றி பெற கோவிலுக்கு சென்று வேண்டி கொண்டனர். ஸ்ருதி வெற்றி பெற்றால் கேக் வெட்டி கொண்டாடுவது என முடிவு செய்தனர்.என்ன ரஷ்மி வேறு ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா இப்போதே சொல்லிவிடு லாஸ்ட் மினிட்டில் சொல்லி ஸ்ருதியை தவிக்க விடாதே என்றான் ராகவ்.
ஸ்ருதி இடையிடையில் நன்கு ஓய்வும் எடுத்துக்கொள் என்றாள் ரஷ்மி. சில காம்படிஷன் வீடியோவையும் எல்லோரும் சேர்ந்து பார்த்தனர். ஸ்ருதி நீ பேனல் மெம்பர்ஸ் என்ன கேள்வி கேட்டாலும் தைரியமாக பதில் சொல் அதே சமயம் பணிவாகவும் சொல் என்றான் ஜோ. தென்றலும் சுகன்யாவும் அவள் என்னதான் செய்கிறாள் பார்ப்போமே என்று எண்ணி இருந்தனர். விழா துவங்க 3 மணி நேரம் முன்பே ஸ்ருதியை அழைத்து கொண்டு அந்த குறிப்பிட்ட காலேஜ் போய் விட்டாள் சௌமியா . ஸ்ருதி பதட்டமில்லாமல் இருந்தாள். நீ ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் உன் திறமை மாற போவதில்லை என்றாள் சௌமியா. நீ இன்னைக்கு எப்படி பாடுகிறாய் எப்படி தாளங்களுக்கேற்ப பாடுகிறாய் என்பதே முக்கியம் என்றாள் சௌமியா. என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து உள்ளீர்கள் நான் அதை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றாள் ஸ்ருதி. பேனல் மெம்பர்ஸ் 3 ஆண்களும் இரண்டு பெண்களும் இடம் பெற்றிருந்தனர், ஜோ , அருண், தென்றல், சுகன்யா, ரஷ்மி, ராகவ் எல்லோரும் வந்திருந்தனர். பூஜா வர தாமதம் ஆனது, இவன் ஃபோன் செய்தான் , நான் கிளம்பி விட்டேன் டிராஃபிக் ஆக இருக்கிறது, நீ கவலைபபடாதே எப்படியும் ஸ்ருதி பாடும் போது நான் அங்கு இருப்பேன் என்றாள்.
நிகழ்ச்சி துவங்கியது ஒவ்வொரு காலேஜ் மெம்பர் பாடும் போதும் விசில் பறந்தது. ஸ்ருதி ராகவை சந்திக்க விரும்பினாள் . ராகவ் நீ ஒன்றும் பயப்படவேண்டாம் நாங்கள் எப்போது உனக்கு உறுதுணையாய் இருப்போம் என்றான். பூஜா வந்துவிட்டாள். அவள் போய் ஸ்ருதியை பார்த்தாள். நீ ஒரு அருமையான பாடகி இது ஒரு அருமையான வாய்ப்பு இதை மனதில் வைத்து கொண்டு பாடு என்றாள் பூஜா. ஸ்ருதி முறை வந்ததும் மேடை ஏறினாள். பேனல் மெம்பர்களுக்கு வணக்கம் சொன்னாள். அவளை அறிமுகபடுத்திக்கொண்டாள். ஸ்ருதி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னாள் .சிறப்பாக பாடினாள். எல்லோரும் கை தட்டி பாராட்டினார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். ஸ்ருதி முகம் வாடியிருந்தது. நான் என் முழு திறமையையும் பயன்படுத்தவில்லை என்றாள். போனால் போகிறது அடுத்த நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்று பூஜா சொன்னாள். எல்லோரும் சேர்ந்து எங்காவது தீம் பார்க் போகலாம் என்று சௌமியா சொன்னாள். ஸ்ருதி நான் வரவில்லை மேம் என்று சொன்னாள். ஸ்ருதி நான் உன்னை வீட்டில் விடுகிறேன் என்று சொன்னாள் சௌமியா. சரி மேம்.அருகில் இருந்த தீம் பார்க் சென்றார்கள் எல்லோரும் .
ரஷ்மியும் ராகவும் உற்சாகமாக சுற்றி வந்தனர். ஜோ, தென்றல், சுகன்யா மூவரும் வாட்டர் ஃபால்ஸ் அருகே விளையாண்டு கொண்டிருந்தனர். சௌமியா பிரதீபாவுக்கு ஃபோன் செய்தாள். எப்படி இருக்கிறாய் பிரதீபா ? நான் நன்றாக இருக்கிறேன் ஆண்ட்டி . ஸ்ருதி அக்கா எப்படி பாடினார்கள். அவள் நன்றாகத்தான் பாடினாள். பரிசு கிடைத்ததா? அதை அப்புறம் சொல்வார்களாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் இங்கே தீம் பார்க் வந்தோம் என்றாள். நானும் வந்திருப்பேனே கூப்பிட்டிருந்தால். இப்போது சரியான வெயில் அதனால்தான் உன்னை கூப்பிடவில்லை என்றாள். சரி ஆண்ட்டி. சுகன்யா மீதும், ஜோ மீதும் நீரை வாரி இறைத்து விளையாடி கொண்டிருந்தாள் தென்றல்.ரஷ்மி நீ என்ன நினைக்கிறாய் ஸ்ருதிக்கு பரிசு கிடைக்குமா அவளுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றாள். ரஷ்மியும் , ராகவும் செயற்கை அருவி அருகே சென்றார்கள். தென்றலும் சுகன்யாவும் உடனே அங்கிருந்து கிளம்ப தயாராய் ஆனார்கள். நீங்கள் இருங்கள் நாங்கள் சும்மாதான் வந்தோம் என்றான் ராகவ். இருந்தாலும் தென்றலும் சுகன்யாவும் அங்கிருந்து போனார்கள். ஜோ அவர்கள் பின்னாடியே போனான்.