Nerungi Vaa Devathaiye - 30 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 30

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 30

என்ன ரஷ்மி நம்மை பார்த்ததும் தென்றலும் சுகன்யாவும் ஒதுங்கி போகிறார்களே என்றான் ராகவ். அதற்கெல்லாம் காரணம் இருக்காது என்றாள் .ஆனாலும் அந்த அருவி குளியலை மறக்க முடியாது என்றான். ஒரு வாரத்தில் காம்படிஷன் ரிசல்ட் வந்து விட்டது, ஸ்ருதி மூன்றாவது பரிசு வாங்கியிருந்தாள் . எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் . அருண் பூஜாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான்.ஆனால் ஸ்ருதியோ சோகமாக இருந்தாள். ஃபர்ஸ்ட் ப்ரைஸ் அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றான் அருண். சௌமியாவும் மகிழ்ந்து போனாள். தென்றலும் சுகன்யாவும் ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஜோ இப்போ என்ன நடந்துவிட்டது நீ நன்றாகத்தான் பாடினாய்,அவர்கள் தீர்ப்பு அப்படி அமைந்து விட்டது என்றான். இதுக்கெல்லாம் கவலைபபடாதே இன்னும் நாம் நிறைய பயணிக்க வேண்டி இருக்கிறது என்றான். பெரிய கேக் ஒன்றை ராகவ் வாங்கி வந்திருந்தான், ஸ்ருதிதான் கேக் வெட்ட வேண்டும் என அடம் பிடித்தான். தாங்க்ஸ் ராகவ் அண்ணா என்றாள். இந்த குழு எப்பவும் இதே போல ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என சௌமியா கடவுளை வேண்டிக்கொண்டாள். ஜோ பேசியது ஸ்ருதிக்கு ஆறுதலாக இருந்தது இனி யாரையும் ஒதுக்கக்கூடாது என முடிவெடுத்தாள்.


இன்னும் இரண்டு வாரத்தில் தீபாவளி பண்டிகை வர இருந்தது. இப்போதே ஷாப்பிங் போக கிளம்பி விட்டாள் ரஷ்மி. சௌமியா வரவில்லை என சொல்லிவிட்டாள். தென்றலும் சுகன்யாவும் நீ ராகவ் கூடவே போ என்றனர். ராகவ் இதற்காக நீ வருத்தப்பட வேண்டாம் என்றான். டிரஸ் , பட்டாசு எல்லாம் வாங்க வேண்டும் என்றாள் ரஷ்மி. அருண் திருச்சியில் தீபாவளி கொண்டாட போக வேண்டும் என தீர்மானித்தான். சுகன்யாவும், தென்றலும் ஜோவை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் போனார்கள். ஸ்ருதியை கூப்பிடுவோமா என்றான் ராகவ் . சரி ஸ்ருதி நாங்கள் தீபாவளி ஷாப்பிங் போகிறோம் வருகிறாயா என்றான். சரி வருகிறேன் என்றாள். நானே வந்து விடுகிறேன் என்றாள் ஸ்ருதி. மூவரும் தங்களுக்கு தேவையான உடைகளை எடுத்தனர். பட்டாசுகள் வாங்கினர். சௌமியாவுக்கு ஒரு சாரி எடுத்தனர், பிரதீபாவுக்கும் டிரஸ் எடுத்தனர். அதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தனர். ரஷ்மி நீண்ட நேரமாக ராகவுக்கு ஒரு ஜீன்ஸ் பந்த் தேடினாள் . கடைசியில் ஆர்டர் செய்து தருவதாக கடைக்காரன் சொன்னான். அப்போதுதான் ரஷ்மிக்கு திருப்தி உண்டாயிற்று, கிருஷ்ணன் சாருக்கும் ஏதாவது எடு என்றான். அப்புறம் ஒரு வேஷ்டி சட்டை எடுத்தார்கள்.

ஷாப்பிங் செய்த கையோடு சௌமியா வீட்டுக்கு மூவரும் போனார்கள். அவள் எல்லாவற்றையும் பார்த்து நன்றாக இருக்கிறதென்று சொன்னாள். கிருஷ்ணன் சாருக்கு வேஷ்டி சட்டை எடுத்து இருப்பதாக சொன்னதும் மகிழ்ந்தாள். பிரதீபாவுக்கு நல்ல டிரஸ் எடுக்க வேண்டும் நாளை நான், கிருஷ்ணன் சார், பிரதீபா போகிறோம் என்றாள் . சூப்பர் மேம் கலக்குங்க என்றாள் ஸ்ருதி. ஸ்ருதி கிச்சன் உள்ளே தண்ணீர் குடிக்க போனாள். எனக்கும் கொஞ்சம் என்றான் ராகவ். உள்ளே போய் நீயே எடுத்துக்குடி என்றாள் ரஷ்மி. உள்ளே போனதும் உங்கள் இருவரை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்றாள் ஸ்ருதி . எவ்வளவு ஒத்துமையாக இருக்கிறீர்கள் நீங்க இருவரும் என்றாள் . கண்ணுபட்டு விட போகிறது என்றான் ராகவ்.. ஏதாவது சமைக்கலாமா என்றாள் ஸ்ருதி. சரி என்று ஸ்ருதியும்,ரஷ்மியும் கிச்சன் உள்ளே போனார்கள். இவன் அவர்கள் சொன்னபடி காய்கறி நறுக்கி கொடுத்தான். ஒரு மணி நேரத்தில் சமையல் தயாரானது. நான்கு பேரும் சேர்ந்து சாப்பிட்டனர். என்ன ஸ்ருதி உப்பு நீதான் போட்டாயா என்றான் ராகவ். ஆமாம் நல்லா இல்லையா துல்லியமாக இருக்கிறது என்றான். தாங்க்ஸ் அண்ணா என்றாள்.

ஸ்ருதி சௌமியா கூட பேசிக்கொண்டிருந்தாள். ராகவும் ரஷ்மியும் கிளம்பினார்கள். ஸ்ருதி சௌமியாவோடு ரொம்ப அட்டாச் ஆகி இருந்தாள். சரி ஸ்ருதி ரொம்ப நேரம் ஆகிறது நீ கிளம்பு என்றாள் சௌமியா. இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் மேம் என்றாள் . நிச்சயமாக என்றாள் சௌமியா. ஸ்ருதி விடை பெற்றுக்கொண்டாள். மறுநாள் கிருஷ்ணனும் , சௌமியாவும் ஷாப்பிங் சென்றனர், கூச்சப்படாதீங்க சௌமியா உங்களுக்கு எந்த மாதிரி டிரஸ் வேணுமோ எடுங்க என்றார், பிரதீபா வரவில்லை.பஜார் கூட்டமாய் இருந்ததால் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார் கிருஷ்ணன். பிரதீபா வீடியோ காலில் வந்து தனக்கு பிடித்த உடைகளை தேர்வு செய்தாள் .தீபாவளியை ராகவ் ரஷ்மியுடன் சௌமியா மேம் கூட கொண்டாடுவது என முடிவு செய்திருந்தான். அது பற்றி ரஷ்மியிடம் பேசிய போது அவளும் மகிழ்ச்சி தெரிவித்தாள் . கிருஷ்ணனும் பிரதீபாவும் கூட அவ்வாறே எண்ணியிருந்தனர். சௌமியாவுக்கு எல்லோர் கூடவும் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சிதான். ஏன் ராகவ் வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லையா தீபாவளிக்கு என்றாள்.உனக்கு என்ன வேண்டும் ஸ்பெஷல் ஆக அதை சொல் என்றான். இப்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை தோணும்போது சொல்கிறேன் என்றாள் . இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா என்றான் ராகவ்.

தீபாவளி என்றவுடன் புது உடைகளும்,பட்டாசும், ஸ்வீட்ஸ் போன்றவை தான் நினைவுக்கு வரும். திடீரென ரஷ்மிக்கு தன் மியூசிக் குரு நினைவு வந்தது. தீபாவளி அன்று அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று சொன்னாள் . சரி ரஷ்மி அதற்க்கு என்ன ஆசீர்வாதம் தானே வாங்கி விட்டால் போச்சு என்றான். நாம் போய் பாடகர் யாரையாவது பார்த்தால் என்ன ? சௌமியா மேமுக்கு பிடித்த பாடகர் யாரையாவது சர்ப்ரைஸ் ஆக போய் பார்த்தால் எப்படி இருக்கும். அதெல்லாம் ரொம்ப ரிஸ்க் அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றாள் ரஷ்மி. ரொம்ப நேரமாக பேசிக்கொண்டே இருக்கிறோமே நமக்குள் இடைவெளி அதிகமாய் இருக்கிறதே என்றான் ராகவ். நீ ஏற்கனவே அருவியில் செய்த காரியத்திற்கு உன்னை மன்னித்து விட்டேன் இப்போது மறுபடியும் ஆரம்பிக்கிறாயா ? ஆமாம் அன்று கொஞ்சம் ஓவர் ஆகத்தான் போய்விட்டேன். இன்னொரு வாய்ப்பு கொடு சரி செய்து விடுகிறேன் என்றான். தீபாவளி அன்று வைத்துக்கொள்ளலாம் நிஜமாவா ஆனால் ஆனால் என்ன ஒண்ணுமில்லை என்று வெட்க சிரிப்பு சிரித்தாள்.


தீபாவளி அன்று காலையிலேயே ஃபோன் பண்ணிவிட்டாள் பிரதீபா காப்பி தீபாவளி ராகவ் அண்ணா என்றாள் உற்சாகமாக. அவளுடைய புதிய உடையில் எடுத்த போட்டோவை whatsapp செய்திருந்தாள். ரஷ்மி அடுத்து ஃபோன் செய்திருந்தாள். சரி எத்தனை மணிக்கு மேம் வீட்டுக்கு போவோம் என்றாள் . 10 மணிக்கு போவபம் அதற்கு முன் நாம் கோவிலுக்கு போவோம் அரைமணியில் உன்னை நான் பார்க்கிறேன் என்றாள் ரஷ்மி. சரி ரஷ்மி. எல்லோரும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இருந்தனர். இவன் பட்டாசு வெடித்து முடிக்கவும் ரஷ்மி வரவும் சரியாக இருந்தது. இந்த டிரஸ் அருமையாக இருக்கிறது என்றான். சரி வா கிளம்பலாம் என்றாள் . உள்ளே வா அப்பா அம்மாவை பார்க்கலாம் என்றான். உள்ளே போய் ஆசீர்வாதம் வாங்கினாள். ஸ்வீட்ஸ் கொடுத்தார்கள். ஸ்ருதி ஏற்கனவே மேம் வீட்டில்தான் இருக்கிறாளாம் . அருண் எங்கே ஃபோன் கிடைக்கவே மாட்டேன் என்கிறதே என்றான்.அவன் எப்படி இங்கே இருப்பான் அவன் திருச்சி நேற்றே போய்விட்டான். ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்றான். என்னுடைய டிரஸ் எப்படி இருக்கிறது என்றான் ராகவ், நாந்தானே எடுத்தேன் நன்றாகத்தான் இருக்கிறது என்றாள் .


இருவரும் கோவிலை சுற்றி வந்தனர். அடுத்த வருடம் twins கூட வரவேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள் ஸ்வாமி என்றான். அவர் என்ன என்ன என்றார். இவள் ராகவை தோளில் தட்டினாள் . எப்போதும் நீ என்னை பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் என்றாள் ரஷ்மி. ஹாய் மேம் தீபாவளி வாழ்த்துக்கள் என்றாள் ரஷ்மி. எங்கே ஸ்ருதி. அதை ஏன் கேட்கிறாய் காலையில் வந்தவள் ஏதோ ஸ்வீட் செய்கிறேன் என்று கிச்சன் உள்ளே போனவள் இன்னும் வெளியே வரவில்லை. நான் போய் பார்க்கிறேன் என்று ரஷ்மி போனாள். ஹாப்பி தீபாவளி ஸ்ருதி என்றாள். ஹாப்பி தீபாவளி அக்கா என்றாள்.ஒரு வழியாக ஸ்வீட் வெளியே எடுத்து வந்த போது பார்க்கவும், சாப்பிடவும் அருமையாக இருந்தது.ஸ்ருதி சௌமியாவுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினாள். என்ன ஸ்ருதி அதற்குள் கிளம்பிவிட்டாய் என்றான் ராகவ். கொஞ்சம் வேலை இருக்கிறது என்றாள் ஸ்ருதி. அருண் ஒரு வழியாக திருச்சி போனான். பூஜாவுடைய ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களை அறிமுகபடுத்தி வைத்தாள். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு அப்புறமாக நாம் வெளியே போகலாம் என்றாள் பூஜா.

என்ன மேடம் புது உடையில் தேவதை போல இருக்கிறீர்கள் கிருஷ்ணன் சார் செலக்ட் பண்ணி கொடுத்தாரா? ஆமாம் என்றாள் வெட்கம் மின்ன. எப்படியோ இந்த வருட தீபாவளி சிறப்பாக தொடகி இருக்கிறது. கிருஷ்ணனும் பிரதீபாவும் மதியம் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போ நாங்கள் கிளம்புகிறோம் என்றாள் ரஷ்மி. கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்றாள் சௌமியா. அருண் ஃபோன் செய்திருந்தான். அவனுடைய வாழ்த்துக்களை மூவருக்கும் தெரிவித்தான் . ஜோ எங்கு மட்டையாகி கிடக்கிறானோ என ரஷ்மி கவலைப்பட்டாள். தென்றலும்,சுகன்யாவும் வந்தனர். அவர்கள் அமைதி தேவதைகள் போல இருந்தனர். கொஞ்ச நேரத்தில் ரஷ்மியும் ராகவும் மியூசிக் மாஸ்டர் பார்க்க கிளம்பி விட்டனர். மியூசிக் மாஸ்டர் இவர்களை வரவேற்றார். இவர்கள் பூ, பழம், தட்டு எல்லாம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினர். எப்பவும் இதே காதலோட இருக்கணும் ரெண்டு பேரும் என்றார். அவர் சில பாடல்களை கீபோர்டில் வாசித்து காட்டினார். சூப்பர் மாஸ்டர் என்றனர் ரஷ்மியும் ராகவும்.