அருண் போனை எடுக்கவில்லை. 10 நிமிடம் கழித்து கூப்பிட்டான். என்னாச்சு என கேட்டான் அருண் ஒண்ணுமில்லை ரஷ்மிக்கு ஃபோன் பண்ணினேனா ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஓ அதுவா நாங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வந்திருக்கிறோம் அவளுக்குத்தான் பக்தி அதிகம் ஆச்சே அதுதான் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா என்றான். நான் அவ கிட்டயே போனை குடுக்குறேன் பேசு என்றான். என்ன கல்யாண பார்ட்டி எப்படி போகுது என்றாள். ம் நல்லாத்தான் போகுது . உன்னைய மிஸ் பண்ணுகிறோம் என்றான் . நானும் தான் உன்னைய மிஸ் பண்ணுறேன் என்றாள். அருண் மறுபடி வாங்கி பேசினான். இப்போதான் கோவில் வரைக்கும் வந்துருக்கோம் இனிமே ஃபோன் பண்ணாதே ராகவ் பிளீஸ் என்றான். எதற்காக ரஷ்மியின் நினைப்பு திடீரென வாட்டி எடுக்கிறது என புரியவில்லை. சீக்கிரம் கிளம்பி போய் அவளை பார்த்தால் தேவலை என்று இருந்தது. அவள் சொன்ன பொருட்களை கன்யாகுமரியில் வாங்கிகொண்டான். ஜோ நீ ஒண்ணும் கவலைப்படாதே ரஷ்மி நீ நினைப்பதை விட உறுதியானவள். உன்னிடம் சொல்லாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டாள் என்றான்.
மூன்று நாட்கள் கழித்து ரஷ்மியை பார்க்க போகிறோம் என்பது மகிழ்ச்சியை அளித்தது. அவளுக்கு ஃபோன் பண்ணினான். நான் இப்போ வீட்ல இல்லை அருண் கூட மூவி வந்திருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்ல இருப்பேன் என்றாள். சரி அப்போ நாளைக்கு பார்க்கிறேன் என்றான். இவன் என்ன எதிர்பார்க்கிறாண் என்று இவனுக்கே புரியாத போது ரஷ்மிக்கு எப்படி புரியும். மறுநாள் அவள் வீட்டுக்கு போய் எல்லா பொருட்களையும் கொடுத்தான். அவள் எதுவும் பேசவில்லை. நல்லாயிருக்கு என்று மட்டும் சொன்னாள். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் நாளைக்கு ஈவினிங் பீச்ல மீட் பண்ணுவோம் என்று சொன்னாள். பீச்சில் அருண், சுகன்யா, தென்றல் ஆகியோரும் இருந்தனர். ஜோ வரவில்லை. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னியே ம் நீ ஏதோ என்னை ரொம்ப மிஸ் பண்ணினதா இவளுங்க ரெண்டு பேரும் சொல்லுறாளுங்க அப்படின்னா எனக்கு அதிலே வருத்தம்தான். போன இடத்துல ஜாலியா இருப்பே அப்படின்னுதான் எதிர்பார்த்தேன் என்றாள். அருண் ஏதோ தென்றல் கூட பேசிக்கொண்டிருந்தான்.
ஜோ நேத்தி ஏண்டா வரலை பீச்க்கு என்றான் அருண். என்னவோ வர வர ரஷ்மி கூட பழகுறதே பிடிக்கலை . ஏண்டா அப்படி சொல்லுறே. எதுக்குமே ஒத்து வர மாட்டுறா. லவ் பண்ணமாட்டாளாம் ஆனா நெருங்கி பழகுவாளாம். இது எந்த ஊரு நியாயம் என்றான். அதுக்குதான் நான் பிளான் போட்டிருக்கேன். எப்படியும் வருகிற பிப்ரவரி 14 அவளை ஒரு முடிவு சொல்ல வைக்க போறேன். நீ ப்ரபோஸ் பண்ண போறியா? இல்ல ராகவ் தான் ப்ரபோஸ் பண்ண போறான். அது எப்படிடா ? ராகவ் சொல்லமாட்டானே அதனாலதான் தென்றல் மூலமா ராகவ் மனசுல இருக்குறத சொல்ல வைக்க போறேன். தென்றல் ஏற்கனவே அவனை விரும்புறா. அப்படியா ஆல் தி பெஸ்ட் டா மச்சான். ரஷ்மி எனக்குத்தான். எனக்கு மட்டும்தான் என்றான் அருண். சௌமியா எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவர்களே தங்களை சரிப் படுத்தி கொள்வார்கள் என பொறுமை காத்தாள் . காதலர் தினம் வர இன்னும் ஒரு வாரமே இருந்தது. ரஷ்மி அன்றைய தினம் லீவு போடுவதாக முடிவு செய்தாள். தென்றல் அருண் ஆலோசனைப்படி ராகவுக்காக ஒரு சாக்லேட் பெட்டி ஒன்றை வாங்கினாள் . அதன் உள்ளே ஐ லவ் யு ராகவ் என எழுதி அப்படியே தர உத்தேசித்திருந்தாள் .
அந்த நாளும் வந்தது. ரஷ்மி காலையிலேயே ராகவுக்கு ஃபோன் செய்தாள் . என்ன ராகவ் காலேஜ் போறியா இல்லை லீவா என்றாள். அவசியம் போகணும் இன்னைக்கு செம ஜாலியா இருக்கும் என்றான். சரி போயிட்டு வா நான் இன்னைக்கு லீவு எனக்கு என்னவோ வர பிடிக்கலை என்றாள். தென்றல் அவனுக்காக காத்திருந்தாள். தென்றல் அவன் வருவதை பார்த்ததும் தன்னை ஒழுங்கு படுத்திக்கொண்டாள் . அவனுக்காக வாங்கி வைத்திருந்த சாக்லேட் பாக்ஸ் குடுத்தவுடன் வெட்கப்பட்டாள் . என்ன வெட்கம் எல்லாம் படுற என்றான். அதை திறந்து பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தான். லேசாக புன்முறுவல் பூத்தான். எதுக்காக இதெல்லாம் நீ முன்னாடியே இதை சொல்லி இருக்கலாமே என்றான். நீதான் ரஷ்மி நினைப்பாவே இருக்கியே என்றாள். எல்லோரும் பார்க்கிறார்கள் இல்லை பரவாயில்லை ஒரு பதில் சொல்லிட்டு போ. நானும் தான் உன்னை விரும்புகிறேன் என்றான் தன்னையறியாமல் . ஒரே கொண்டாட்டம் தான் அருணுக்கு. அப்போதே ஃபோன் பண்ணி விஷயத்தை ரஷ்மியிடம் சொன்னான். ரஷ்மி வாழ்த்துக்கள் சொன்னேன் என்று சொல் என்றாள். ராகவ் சொல்லிவிட்டானே தவிர அவன் மனம் முழுக்க ரஷ்மி நினைப்பாவே இருந்தது.
தென்றல் அவனையும் கூட்டிக்கொண்டு ரஷ்மியை போய் பார்த்தாள் . தென்றலுக்கு ஏதோ சாதித்தது போல இருந்தது. ரஷ்மி இவனை பார்த்ததும் தலை தாழ்த்தி கொண்டாள் . வாழ்த்துக்கள் இருவரும் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்றாள். இருங்க ஜூஸ் எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனாள். தென்றல் இவன் கன்னத்தை தட்டி இப்போது வந்து விடுகிறேன் என்று கிச்சன் உள்ளே போனாள். என்னடி திடீர்னு லவ் பண்ணுறேன்னு சொல்லி இருக்கே. என்னவோ எனக்கு அவனோட innocence ரொம்ப பிடிச்சு போச்சு அதான் ப்ரபோஸ் பண்ணினேன் அருண்தான் இந்த ஐடியா குடுத்தான் என்றாள் தென்றல். ஜூஸ் குடித்து விட்டு விடை பெற்றான் ராகவ். தென்றல் கூட பேசிக்கொண்டிருந்தாள் ரஷ்மி. ரஷ்மி மனதில் ஏக்கம் உண்டாயிற்று. இனி பழையபடி ராகவ் தன்னுடன் நேரம் செலவிட முடியாது என்று தோன்றியது.ராகவ் தான் செய்தது சரியா தவறா என்று புரியாமல் தவித்தான். சௌமியா அவனுக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். என்ன ராகவ் இப்படி பண்ணுவாய் என எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துக்கள் என்றாள்.
ஜோ மச்சான் நீ கில்லாடி டா ஏதோ ஒண்ணு செட் பண்ணி நல்லா இருக்க முடிவு பன்னிட்ட . அருண் நினைச்சபடி நடந்துடுச்சு. ம் எல்லாம் நல்லதுக்குத்தான் . ஜோ நீ என்ன அந்த சுகன்யாவை சுத்தி சுத்தி வருகிறாயே என்றான் . ஓ அது லவ் எல்லாம் இல்ல . பின்னே அது அப்படித்தான் டைம் பாஸ் என்றான். தென்றல் இவனுக்கு ஃபோன் பண்ணினாள். எங்கே இருக்கே நீ ? ஜோ கூட பேசிட்டு இருக்கேன் . எங்க வீட்டுக்கு வரியா ஒரே போர் அடிக்குது என்றாள். சரி வரேன் என்றான். என்ஜாய் பண்ணு மச்சான் என்றான் ஜோ. தென்றல் வீடு நல்ல பெரிய வீடாக இருந்தது. அவள் அப்பா அரசு அதிகாரியாக இருந்தார். வா ராகவ் என்று கை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள் தென்றல். எனக்கு தெரியும் நீ இன்னும் ரஷ்மியை மறக்கலேன்னு . நான் வெயிட் பண்ணுறேன் . அதுக்காக எப்பவுமே அவளையே நினைக்காதே என்றாள். ஸ்வீட்ஸ் அடங்கிய தட்டு ஒன்றை கொண்டு வந்து வைத்தாள். இவனும் அவளும் சேர்ந்து சாப்பிட்டனர். அப்போ சரி போகட்டுமா இன்னும் கொஞ்ச நேரம் இரேன் டிவி பாரு இப்போ வரேன் என்று உள்ளே போனாள். ரஷ்மிக்கு தான் ஃபோன் பண்ணியிருந்தாள். ரஷ்மி உன்கிட்ட பேசனுமாம். என்ன ரஷ்மி வெறுமனே வேடிக்கை பார்க்காதே அன்னைக்கு படத்துல எத்தன ஸீன் பார்த்தோம் என்று சிரித்தாள்.
ரஷ்மி ஏதோ விளையாடுகிறாள் என்று நினைத்தான். கண்ணாமூச்சி ஆட்டத்தில் முதலில் அவுட் ஆனது இவன்தான். இவனுடைய முறை இப்போது அடுத்த ஆளை பிடிக்க வேண்டும். சௌமியா ரஷ்மியை காலேஜ் கேண்டீன் அருகே பார்த்தாள் . என்ன ரஷ்மி போனையே காணோம் என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை கொஞ்சம் பிஸி என்றாள் ரஷ்மி. அடுத்த வாரம் வீட்டுக்கு வரேன் என்றாள் ரஷ்மி. சரி ஓகே. ரஷ்மி மனதிலும் தன்னுடைய நடவடிக்கைகள் பற்றி அச்சம் உண்டாயிற்று, தான் இப்படியே போனால் யாருடைய நம்பிக்கையையும் பெற முடியாமல் போய்விடும் என அஞ்சினாள் . இரவு முழுக்க தூக்கம் இல்லை. பேசாமல் ராகவ் கிட்டே பேசி பார்ப்போமே என்று ஃபோன் செய்தாள். அருண் உன்னை விரும்புவது உனக்கு தெரியும் அல்லவா அதை பற்றி யோசித்து பாரேன் என்றான் ராகவ். எனக்கு அருணை பிடிக்கும் ஆனால் ஃப்ரெண்ட் ஆக. ஒரு சான்ஸ் குடுத்து பாரேன் என்றான் ராகவ். அதெல்லாம் வேண்டாம், நானே முடிவெடுக்கிறேன் . அப்போது உனக்கு சொல்லிவிட்டுத்தான் அவனிடம் சொல்வேன் என்றாள்.
ரொம்ப நாள் கழித்து எல்லோரும் சந்தித்தார்கள் தென்றல் ராகவுடைய தோளில் கை போட்டிருந்தாள். ரஷ்மி அதை கவனிக்க தவறவில்லை. அவள் எப்போ பார்ட்டி தர போறீங்க ராகவ் ,தென்றல் என்றாள். அடுத்த வாரம் என்றாள் தென்றல். ஜோ என்ன எதுவும் பேசாம வருகிறாய் என்றாள் ரஷ்மி. எப்படி கரெக்ட் பண்ணுறதுன்னு இன்னமும் புரியல என்று சிரித்தான். எல்லோரும் சிரித்தார்கள். சுகன்யாவை ஜோவின் வண்டியில் ஏற்றிக்கொண்டான். தென்றல் ராகவின் வண்டியில் ஏறிக்கொண்டாள். ரஷ்மி நான் சௌமியா மேம் வீட்டுக்கு செல்ல வேண்டும் நான் போய்க்கொள்கிறேன் என்றாள். நான் வேண்டும்என்றால் டிராப் செய்யவா என்றான் அருண். அதெல்லாம் வேண்டாம் என்றாள். வா ரஷ்மி நீ கடைசியில் தனியாய்த்தான் வருவாய் என தெரியும் என்றாள் சௌமியா. நான் யாரையும் ஏமாற்றவில்லை எனக்கு என்னுடைய limits தெரியும் என்றாள். ம் இப்போது நீ பழையபடி உற்சாகமாய் இல்லை. அது என்னவோ உண்மைதான். உன்னுடைய நண்பர்கள் உன்னை விரும்புவதில் என்ன தவறு. அவர்கள் அந்த நோக்கத்தை மறைப்பதுதான் தவறு. நைசாக பழகி என்னை எடுத்துக்கொள்ள பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையே தப்பு. என் மனதில் என்ன இருக்கிறது என்பதையே அவர்கள் நினைப்பதில்லை. ம் சரி ரொம்ப கோவமாய் இருக்கிறாய் போல நான் போய் குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வருகிறேன் என்றாள். வேணாம் மேம் நான் அழுதுவிடுவேன் போல இருக்கிறேன் கிளம்புகிறேன் என்றாள் ரஷ்மி.