Nerungi Vaa Devathaiye - 6 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 6

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 6

ரஷ்மி தன் மனதில் இருந்த சலனங்களை போக்க இசையில் கவனம் செலுத்தினாள் .அருண் அதற்கு உறுதுணையாய் இருந்தான்.தென்றலோ ராகவ் தன்னை உண்மையாகவே காதலிக்கிறானா என்ற சந்தேகத்தில் இருந்தாள். சொன்ன மாதிரி 15 ம் தேதி மியூசிக் பாண்ட் sponser செய்வதாக கூறியவர் காலேஜ் வந்துவிட்டார். சௌமியா அவரை வரவேற்றாள். ஓரளவு நன்றாக பிராக்டிஸ் செய்து இருந்த படியால் அவருக்கு திருப்தியாய் இருந்தது. ரஷ்மிக்கு புதிய நம்பிக்கை வந்திருந்தது. சௌமியா மியூசிக் பாண்ட் மெம்பர்களை வந்தவருக்கு அறிமுகபடுத்தி வைத்தாள். ஏன் ராகவ் நீ பாட மாட்டாயா என்று கேட்டார். இல்லை இல்லை எனக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம் என்றான் அவசரமாக. நீயும் இந்த பாண்டில் இருந்தால் எனக்கு சந்தோஷம் என்றார். நான் யோசிக்கிறேன் சார் என்றான். ரஷ்மி முகம் மலர்ந்தது. நீ மியூசிக் பாண்டில் சேர்வது பற்றி எல்லோருக்குமே சந்தோஷமாய்த்தான் இருக்குமென்று நினைக்கிறேன் என்றார். தென்றல் நீயும் பாண்டில் சேர்ந்து கொள் என்று சொன்னாள். இது என்ன விளையாட்டா ? அதில் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்று சொன்னான். ரஷ்மி நீ மட்டும் சரி என்று சொல் ராகவ் நான் மற்றதை பார்த்துக்கொள்கிறேன் என்றாள். அருணும் அரைமனதாக ஒத்துக்கொண்டான். ஜோவும், சுகன்யாவும் அதை வரவேற்றார்கள். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும் கொஞ்சம் டைம் கொடுங்கள் என்றான் ராகவ். எவ்வளவு டைம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் ஆனால் பாசிட்டிவ் ஆக முடிவு சொல் என்றாள் ரஷ்மி. சௌமியா நீ மனது வைத்தால் மியூசிக் பாண்ட் இன்னும் பெரிய உயரங்களை அடைய முடியும் என்றாள்.

வெளியே வந்து அருண் ஜோவிடம் ராகவுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை என்றான். என்ன பண்ணுவது அவன் மியூசிக் பாண்ட் மெம்பர் ஆவது விதி என்றால் அதை மாற்ற யாரால் முடியும் என்றான் ஜோ. சௌமியா மேம் சப்போர்ட் வேற என்றான் அருண். அதெல்லாம் அவனால் முடியாது என்றும் சொன்னான். முயன்று பார்க்க வேண்டியதுதான் என்றான் ஜோ. தென்றலுக்கு இதில் மகிழ்ச்சி இனி ராகவுடன் அதிக நேரம் செலவிடலாம் என்று எண்ணினாள். ஆனால் ரஷ்மி மனதிலும் அதே எண்ணம் இருந்தது. ரஷ்மி ராகவுக்கு ஃபோன் பண்ணினாள். என்ன முடிவு பண்ணினே ? அருணுக்கு இதில் விருப்பமில்லை போல என்றான் . அதைபத்தி உனக்கென்ன கவலை. நீ என்ன நினைக்கிறாய் இது ஒரு பெரிய வாய்ப்பு. தவற விடாதே என்றாள். உன்னை எப்படி நான் தவற விடுவேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். நாளைக்கு சொல்லட்டுமா என்றான். ஓகே நான் காத்திருப்பேன் என்றாள் ரஷ்மி. நீ எனக்காக ரொம்பவும் மெனக்கெடுகிறாய் என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை . சௌமியாவும் பேசினாள் எனக்கு எதிர்பாராத சந்தோஷம்தான். நீ சீக்கிரம் உன் முடிவை சொல் என்றாள். நான் அதற்கு ஏற்றார் போல எல்லாம் செய்ய வேண்டும் என்றாள்.

ரஷ்மியிடம் தன் சம்மதத்தை தெரிவித்தான். முதலில் ஒரு மியூசிக் மாஸ்டர் மூலமாக அடிப்படைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சௌமியா சொன்னாள். ரஷ்மி அவளுடைய இசை குருவை அறிமுகபடுத்தி வைத்தாள். அவர் இவனையும் தொட்டு தொட்டு தான் பேசினார். அவரை தவறாக நினைத்ததற்காக வருத்தப்பட்டான். தம்பி எப்படியோ நீ இசை உலகத்துக்கு அறிமுகமாக போகிறாய் . ரஷ்மி எல்லாம் சொல்லிவிட்டாள். இன்னும் மூன்று மாதங்களில் நீ அடிப்படைகளில் தேறி இருப்பாய் என்றார். ரஷ்மி தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவனுடைய வருகையை ஆவலாக எதிர்பார்த்திருந்தாள் . ராகவுக்கு இது புது அனுபவமாக இருந்தது. தான் மியூசிக் பாண்ட்டில் சேர்வதை கனவிலும் நினைத்ததில்லை ராகவ். ரஷ்மியும், சௌமியாவும் அவனை ஊக்கப்படுத்தினார்கள். தென்றலிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டான் ராகவ். கொஞ்ச நாள் எனக்காக காத்திருக்க வேண்டும் என்றதும் ஏமாற்றம் அடைந்தாள் . ஆனால் என்ன கொஞ்ச நாள்தானே என்று தன்னை சமாதானபடுத்தி கொண்டாள். ரஷ்மியிடம் தோற்று விடக்கூடாதென்பதும் அவள் எண்ணமாக இருந்தது.

மியூசிக் பாண்ட் என்றதும் அதற்கு பெயர் சூட்டவும் வேண்டுமே என்றாள் சுகன்யா. எல்லோரும் அவரவருக்கு பிரியப்பட்ட பெயர்களை சொன்னார்கள். இறுதியில் தி ஈகிள்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது. sponser செய்தவருக்கும் இந்த பெயர் பிடித்து விட்டது. படித்த நேரம் போக மியூசிக் பிராக்டிஸ் செய்ய அவர்களுக்கென காலேஜில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ராகவ் தன்னுடைய தன்னம்பிக்கையை சோதித்து பார்க்கும் இடமாக அது இருந்தது. சௌமியாவுக்கு குமார் மூலமாக பிரச்சனைகள் வந்தாலும் அதை பெரிது படுத்தாமல் இருந்தாள். ரஷ்மி அவள் வீட்டுக்கு தென்றலையும்,ராகவையும் மதியம் லஞ்ச் கூப்பிட்டிருந்தாள் . தென்றல் முதலில் மறுத்தாலும் பிறகு ராகவை தனியாக அனுப்ப வேண்டாம் என முடிவெடுத்து அவளும் வந்திருந்தாள். எதுக்காக திடீர்னு இந்த லஞ்ச் என்றாள் தென்றல். ரஷ்மி அவளே சமைத்திருந்தாள்.சும்மாதான் இனிமே நாம எப்பவுமே ஒன்னாதான் இருக்க போறோம் என்றாள் ரஷ்மி. லஞ்ச் சிம்பிள் ஆக இருந்தாலும் நேர்த்தியாக இருந்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்றாள் ரஷ்மி.அவள் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அப்போது பாண்ட் டெவலப்மெண்ட் பற்றி தென்றலும் தனக்கு தெரிந்ததை சொல்லி கொண்டிருந்தாள். அப்போது ஜோவிடம் இருந்து தென்றலுக்கு ஃபோன் வந்தது. சரி நான் கிளம்பட்டுமா என்றாள். சரி நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்றான் ராகவ்.

ராகவ் நீ மட்டும் இதுல ஷைன் பண்ணா போதும் . நாம ஒரு ட்ரிப் போகலாம். எங்கு வேணா போகலாம். தி ஈகிள்ஸ்னு வெப் பேஜ் ஓபன் பண்ணியிருக்கேன் . instagaram ,பேஸ்புக் எல்லாவற்றிலும் நம்ம மியூசிக் பாண்ட் பேஜ் ஓபன் பண்ணியிருக்கேன் என்றாள். அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் கொஞ்சம் பேச மாட்டாளா என்று இருந்தது. விடை பெற்று கொண்டான். தென்றலிடம் இருந்து ஃபோன் வந்தது கிளம்பிவிட்டாயா என்று . இதோ கிளம்பிவிட்டேன் என்றான். காதல் என்றாலே தொல்லைதான் என்றான். அதெல்லாம் இல்லை அது நீ உண்மையில் அந்த அன்பை நேசிக்கிறாயா என்பதை பொறுத்தது என்றாள் ரஷ்மி. அருண் அப்போது தான் ரஷ்மி வீட்டுக்குள் நுழைந்தான். என்னடா ராகவ் இங்கேயே தங்கிட்டயா ? என்றான் சிரித்து கொண்டே. அதெல்லாம் அப்படித்தான் என்றாள் ரஷ்மி. ராகவ் இவன் வேற அடிக்கடி க்ராஸ் பண்ணுறானே என யோசித்தான். ஜோ என்னதான் சொல்லுறான் ராகவ் என்றான் தென்றலிடம். ரஷ்மிக்காக அவன் மனசு கிடந்து அலைபாயுது என்றாள். அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே நீ அவன் கூட குளோஸ் ஆக என்ன பண்ணுன. நானும் என்னென்னவோ பண்ணி பார்க்குறேன் ஒண்ணும் நடக்கலை என்றாள். நீ ஒண்ணு பண்ணு ரிகர்சல் அரேஞ்ச் பண்ணுறேன். கொஞ்ச நேரம் தனியா மனசு விட்டு பேசுங்க என்றான். சரி ஜோ என்றாள்.

நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு ரிகர்சல் என்று ஜோ ராகவுக்கு மெசேஜ் பண்ணியிருந்தான். அவசரமாக கிளம்பி போய் பார்த்த போது தென்றல் மட்டும் இருந்தாள். என்னாச்சு மத்தவங்க எல்லாம் எங்க. மத்தவங்களா இல்ல ரஷ்மியா ? சே எப்ப பாரு அவளைப் பத்தியே பேசிக்கிட்டு . அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாம ரெண்டு பேர்தான் இன்னைக்கு என்றாள். ம் அப்போது சௌமியா மேம் வந்துவிட்டாள் . என்ன இன்னைக்கு நீங்க ரெண்டு பேர் மட்டுமா நடத்துங்க நடத்துங்க என்றாள். இவன் எதையோ எழுதி வைத்திருந்ததை காட்டினான். நல்லா இருக்கே என்றாள் சௌமியா. ஒரு அரை மணி நேரம் ஆனதும் தென்றல் நாம ஒரு பிரேக் எடுத்துக்கொள்ளலாம் என்றாள். ரஷ்மியிடம் இருந்து சௌமியாவுக்கு ஃபோன் வந்தது. என்னையும் கூப்பிட்டு இருக்கலாமே என்றாள். அவசரமாக ஓடி வந்தாள் ரஷ்மி. அவள் முகம் ஏக்கம் நிரம்பியதாக இருந்தது. நாங்க முடிச்சிட்டோம் என்றாள் தென்றல் அவளை பார்த்து. சரி ராகவ் நீ என்னை மியூசிக் ஷாப் ல டிராப் பண்ண முடியுமா என்றாள். தென்றலை பார்த்தான். அவள் முகம் திருப்பிக்கொண்டாள் . சரி வேண்டாம் என்றாள் ரஷ்மி. சௌமியாவும் ரஷ்மியும் பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் கிளம்புகிறோம் என்றாள் தென்றல். நாளைக்கு காலைல 7 மணிக்கு எல்லோரும் வராங்க நீங்களும் வாங்க என்றாள் ரஷ்மி. கண்டிப்பா என்றான் ராகவ்.

மறுநாள் யாரும் வரவில்லை ரஷ்மி மட்டுமே இருந்தாள். ராகவ் படபடப்புடன் இருந்தான். என்னாச்சு ராகவ் ஏன் டென்ஷன் ஆக இருக்க என்றாள். இப்போதானே ஸ்டார்ட் பண்ணியிருக்கேன் அதனாலேதான். ரிலாக்ஸ் இன்னும் நிறைய முக்கியமான பகுதி நாம கடக்க வேண்டியிருக்கு என்றாள். அவன் எழுதியிருந்த லிரிக்ஸ் வாசித்து பார்த்து மகிழ்ந்தாள். இன்னும் கொஞ்சம் matured ஆக எழுது ராகவ் என்றாள். ராகவ் எனக்கு இப்போது ஒண்ணு சொல்ல தோணுது ஆனால் நீ என்ன நினைப்பாயோ என்று நினைக்கும்போது அதை சொல்ல தயக்கமாக இருக்கிறது.தயங்காமல் சொல்லு ரஷ்மி. ஒண்ணுமில்லை தென்றல் கூட உனக்கு எவ்வளவு நாளா பழக்கம் ஒரு மூணு மாசமா உனக்கு தென்றலை பிடிக்கல அப்படித்தானே ம் அப்படி சொல்ல முடியாது. என்னவோ ஒத்து போகலை. அப்போ ஏன் நீ ஏன் உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு என்னையும் கஷ்டபடுத்துற என்றாள். அவள் முகம் வேறு ஏதோ திசை நோக்கி இருந்தது. ரஷ்மி ரஷ்மி என்றான். என்ன சொல்லிட்டு இருந்தேன். அதை விடு நான் தென்றல் கூட breakup பண்ணி கொள்கிறேன். உனக்கு ஓகே வா சொல்லு நான் எதையும் விட்டு தரேன் என்றான். நான் அப்படி சொல்லலை உன்னோட கம்ஃபர்ட் ஜோன் விட்டு கொடுக்காதே என்று தான் சொல்கிறேன் என்றாள். ம் எனக்காக இவ்வளவு யோசிக்கும் உன்னை எப்படி நான் நெருங்காமல் இருப்பேன் என்று அவளை அருகில் போய் அணைத்தான். அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .