Nerungi Vaa Devathaiye - 16 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 16

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 16

அன்று சௌமியா காலேஜ் வரவில்லை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்லியது. ரஷ்மி நாம் போய் மேம் வீட்டில் பார்த்தால் என்ன என்றாள். சாயங்காலம் போவோம் என்றான் ராகவ். மதியமே போகலாம் எனக்கு மேம் பற்றி கவலையாக இருக்கிறது என்றாள் ரஷ்மி. சரி . மதியம் போன போது சௌமியா கவலையாக உட்கார்ந்திருந்தாள் . என்ன ஆச்சு மேம் ஃபோன் ரிப்பேரா என்றான் ராகவ். அருகில் சுருட்டி வைத்திருந்த பேப்பரை பார்த்தான். அது விவாகரத்து பத்திரம். குமாரும் சௌமியாவும் கையெழுத்து போட்டிருந்தனர். ராகவ் அதை ரஷ்மியிடம் நீட்டினான். அதை பார்த்தவள் நீங்கள் ஏன் மேம் இதற்கு ஒத்துக்கொண்டீர்கள் என்றாள். எல்லாம் என் விதி என்றாள் சௌமியா. சரி ஏதாவது சாப்பிட்டீர்களா எனக்கு பசியில்லை என்றாள் சௌமியா. இருங்கள் ஏதாவது செய்து எடுத்து வருகிறேன் என்றாள் ரஷ்மி. எனக்கு அழ வேண்டும் போலிருக்கிறது. என் அம்மா கூட என்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் என்றாள். நாங்கள் எல்லாம் இருக்கும் போது உங்களை அப்படியே விட்டு விடுவோமா என்றாள் ரஷ்மி. ம் சரி ரஷ்மி போய் ஏதாவது சமைத்து கொண்டுவா, ஏதாவது தேவையென்றால் சொல்லு வாங்கி வருகிறேன் என்றான் ராகவ். அடுத்த அரைமணி நேரத்தில் தக்காளி சாதம் சமைத்தாள் ரஷ்மி. கொஞ்சமாவது சாப்பிடுங்க மேம் என்று இருவரும் சொன்னார்கள். அவள் சாப்பிட்டுவிட்டு நன்றாக செய்திருக்கிறாய் என்றாள்.நீங்கள் இதை யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் ரஷ்மி, ராகவ். சரி மேம். நான் நாளைக்கு காலேஜ் வருவேன் என்றாள்.

நீயும் இப்படி என்னை ஏமாற்ற மாட்டாயே ராகவ் என்றாள் ரஷ்மி. எதற்கு அப்படி சொல்கிறாய் . எல்லாமே கொஞ்ச நாள்தான் நீடிக்கிறது அதுதான் கேட்டேன் . நீயும் உன் சந்தேகமும் என்றான்.தென்றல் ஃபோன் பண்ணியிருந்தாள் ரஷ்மிக்கு என்ன ஆச்சு ரெண்டு பேரையும் காணோம், சௌமியா மேமும் வரலை ஏதாவது பிரச்சனையா ?அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க சும்மாத்தான் வெளியே வந்தோம் என்றாள் ரஷ்மி. சரி ரஷ்மி. நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்றாள் ரஷ்மி. ஓகே நாளை பார்க்கலாம் என்றான் ராகவ். குமாரை பார்த்து பேசினால் தேவலை என்று இருந்தது. எதற்காக விவாகரத்து என்பதே புரியவில்லை. இரவு 10 மணி இருக்கும் சௌமியாவுக்கு ஃபோன் செய்தாள் ரஷ்மி. என்ன ஆச்சு ரஷ்மி ?எனக்கு உங்களை பற்றி கவலையாக இருந்தது மேம் அதுதான் ஃபோன் பண்ணினேன் என்றாள். இதில் கவலைப்பட என்ன இருக்கிறது காதலிக்கும்போதே எல்லாவற்றுக்கும் தயாராய்த்தான் இருக்க வேண்டும் நீயும் ராகவும்தான் எனக்கு ஒரே ஆறுதல் என்றாள்.சரி ரஷ்மி நீயும் ஜாக்கிரதையாக இரு அதோடு எப்பவும் ஒரே மாதிரி வாழ்க்கை இருக்காது என்றாள்.

ராகவ் ரஷ்மிக்கு ஃபோன் பண்ணியிருந்தான் என்ன பிஸி ஆ இருந்தது . சௌமியா மேம் கிட்ட பேசிட்டு இருந்தேன் என்றாள். என்ன சொன்னாங்க அவங்க என்ன சொல்வாங்க பார்த்து ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க. அது சரி தெரியாம உனக்கு ஃபோன் பண்ணிட்டேன் நான் தென்றலுக்கே ஃபோன் பண்ணி இருக்கலாம். ம் பேச்சுல ஒரு திமிர் தெரியுது என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு தூக்கம் வருது ரஷ்மி குட் நைட் என்றான். சரிடா நல்லா தூங்கு என்றாள். மறுநாள் ரிகர்சல் நடந்தது சௌமியா வந்திருந்தாள். பூஜா ஃபோன் பண்ணியிருந்தாள் அருண் உன்னை ரொம்பவும் விசாரித்தாள் என்று சொன்னாள் . அவ ஃபோன் நம்பர் மெசேஜ் பண்ணியிருக்கா உன்னை பேச சொன்னா அருண் என்றும் சொன்னாள் . ரொம்ப தாங்க்ஸ் மேம் என்றான் அருண். ரொம்ப வழியாதே அருண் பிறகு காலேஜ் பேர் கெட்டுவிடும் என்றான் ஜோ. அருணுக்கு ரஷ்மி மேல் இருந்த காதல் இன்னும் குறையவில்லை. அவளுக்கு பொறாமை ஏற்படுத்தும் விதமாக பூஜாவிடம் பழகி வந்தான். ரஷ்மி அதை உணர்ந்து இருந்தாள். அருண் பார்த்தியா ரஷ்மி எங்கிருந்தோ வந்த பொண்ணுக்கு தெரியற அருமை உனக்கு தெரியல அதுதான் என்னுடைய நேரம் என்றான். பார்த்து அருண் அவளுக்கு பாய் ஃப்ரெண்ட் யாராவது இருக்க போறான் என்றாள். ம் உனக்கு பொறாமை என்றான் அருண். அதை கேட்டு ரஷ்மி விழுந்து விழுந்து சிரித்தாள்.

புதிய பாட்டு ஒன்றை எழுதி தருமாறு ராகவிடம் சௌமியா சொல்லி இருந்தாள். அதெல்லாம் ரொம்ப கஷ்டம் மேம் என்றான் ராகவ். அதெல்லாம் எனக்கு தெரியாது அடுத்த நிகழ்ச்சிக்கு புதிய பாட்டு ஒன்று கண்டிப்பாக தேவை என்றாள் சௌமியா. சரி மேம் நான் முயற்சி செய்கிறேன் ரஷ்மியை கோஆர்டினேட் செய்ய சொல்லுங்கள் கொஞ்சம் என்றான். சரி சொல்கிறேன் என்றாள். சுகன்யா நானும் ஹெல்ப் பண்ணுகிறேன் என்றாள். தாங்க்ஸ் சுகன்யா என்றான். பாட்டு எப்படி இருக்கவேண்டும் என ரஷ்மி கூட டிஸ்கஸ் செய்தான். அது ஒரு காதல் சோகம் நிறைந்த பாட்டாக இருக்க வேண்டும் . ஏக்கம் நிரம்பிய பெண் பாடியதாக இருக்க வேண்டும் என்று சௌமியா சொல்லி இருந்தாள். ஒருவேளை சௌமியாவின் விருப்பமாகவே அது இருக்கலாம் என்று நினைத்தான். அப்போதுதான் அருண் ஒரு ஐடியா கொடுத்தான் ஏதாவது மியூசிக் பாண்ட் சம்பந்தப்பட்ட படமாக எல்லோரும் சேர்ந்து பார்க்கலாம் என்றான். லேடீஸ் எல்லாம் பார்க்க வருவதால் மூவி டீசண்ட் ஆக இருக்க வேண்டும் என ராகவ் திட்டவட்டமாக சொல்லிவிட்டான். வருகிற வெள்ளிக்கிழமை ஈவினிங் என் வீட்டிலேயே பார்க்கலாம் என்றான் அருண். அருண் வீட்டு மாடி எல்லாவற்றுக்கும் சவுகரியம் . சரி அங்கேயே வைத்துக்கொள்ளலாம் சௌமியா மேம் அவசியம் வரவேண்டும் என அருண் கேட்டுக்கொண்டிருந்தான்.

வெள்ளிக்கிழமை சாயங்காலம் அருண் வீட்டில் எல்லோரும் ஆஜர் ஆனார்கள். சௌமியா கொஞ்சம் லேட் ஆக வந்தாள். சாரி படம் போயிடுச்சா என்றாள். அதெப்படி நீங்கள் இல்லாமல் படம் போடுவோம் என்றான். ஃபிஷ் ஸ்டோரி என்ற japanese மூவியை தேர்ந்தெடுத்து இருந்தான் அருண். இசைகுழுவின் கடைசி பாடல் உலகத்தை எப்படி காக்கிறது என்பதுதான் கதை. படம் நேர்த்தியாக இருந்ததாக ராகவ் சொன்னான். எல்லோருக்கும் படம் பிடித்திருந்தது. ரஷ்மி அந்த பாடலை திரும்ப போடும்படி சொன்னாள் . அதை கவனமாக கேட்டுக்கொண்டாள் .எனக்கு இந்த படம் ரொம்ப பிடித்திருக்கிறது நான் காப்பி செய்துவிட்டு தருகிறேன் என்றாள் ரஷ்மி. சரி என்று பென் டிரைவை ரஷ்மியிடம் கொடுத்தான் அருண். நானே வீட்டில் வந்து பென்டிரைவ் வாங்கிக்கொள்கிறேன் என்றான் அருண். ரஷ்மியை வீட்டில் விட்டான் ராகவ். நாம் இருவரும் சேர்ந்து அதே படத்தை பார்ப்போம் என்றாள் ரஷ்மி. அதில ஒண்ணும் ஸீன் இல்லையே என்றான் ராகவ். அதனால்தான் உன்னை கூப்பிட்டு இருக்கிறேன் நீ ஏதும் ஸீன் கிரியேட் பண்ணாதே என்றாள். அருண் வந்திருந்தான் ரஷ்மி வீட்டுக்கு.
நானும் உனக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறேன் உன்னுடைய சம்மதம் மட்டும் கிடைக்க மாட்டேன் என்கிறது என்றான் அருண். அருண் உனக்குத்தான் பூஜா இருக்கிறாளே என்றாள் ரஷ்மி. ஏன் அப்படி சொல்லுகிறாய் அவள் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றான்.


ரஷ்மியும், ராகவும் ஃபிஷ் ஸ்டோரி படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க தயாராய் இருந்தனர். அது ரஷ்மியுடைய அறையாக இருந்தது. சில்மிஷம் எல்லாம் பண்ணக்கூடாதென்று ரஷ்மி சொல்லி இருந்தாள். நீ சொல்லும்போதே தெரியுது உனக்கு என் மேல ஆசைதான் என்றான் ராகவ். சே சே படத்தை பாரு பேசாம என்றாள். படம் பாதி ஓடும் போதே ரஷ்மி மடியில் படுத்து கொண்டான் ராகவ். அதோடு தூங்கியும் விட்டான். நீ ஒரு வேஸ்ட் என்றாள். நான் தூங்கிட்டேனா என்றான் வியப்புடன். பின்னே என்னவாம் ஒரு அருமையான ரொமான்டிக் மூவி பார்ப்போம் அடுத்த முறை என்றான். நீ நல்லா பார்த்தே என்றாள் ரஷ்மி . அவளை அணைத்தான். நீ என்னை எழுப்பி இருக்கலாம் என்றான். இப்போ நீ கெளம்பு என்றாள். சரி ரஷ்மி அவ்வளவுதானா ? எல்லாம் இன்னைக்கு அவ்வளவு தான் என்றாள். ராகவ் அந்த படத்தை தன்னுடைய லேப்டாப்பிலும் ஏற்றிக்கொண்டான். சௌமியா சொன்ன பாட்டை ரெடி பண்ண வேண்டும் என்று நினைத்தான். சுகன்யாவிடம் அதற்கு ஐடியா கேட்டிருந்தான். அவளும் என்னென்னவோ சொன்னாள் ஒண்ணும் கிளிக் ஆகவில்லை. அதற்காக மனம் தளராமல் சௌமியா மேம் கிட்டயே கேட்டுவிடுவோம் என முடிவெடுத்தான்.

சௌமியா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள் . இவன் போன போது மணி 12 வெயில் உச்சியை தொட்டிருந்தது. என்ன ராகவ் இந்த வெயில்ல வரணுமா என்றாள். அதெல்லாம் பரவாயில்ல அந்த தீம் பத்தி இன்னொரு தடவை சொல்லுங்க. இதெல்லாம் சொல்லி புரியறதா என்றாள். சரி சொல்லுறேன் அவ வெறும் ஃபர்ஸ்ட் இயர் தான் படிக்கிறா அவ மனசுல அவ கணக்கு சார் மேல காதல் அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியாம தவிக்கிறா போயும் போயும் கணக்கு சார் மேலயா ? அது அப்படித்தான். அவள் அவரை நேசிக்கிறதை கண்டுபிடிக்கிற சார் அவளுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். ஆனா அவளோ பிடிவாதமா இருக்கிறார். இந்த சூழ்நிலைல சார் ட்ரான்ஸ்பர் ஆகி போறார் . அவர் மனசுலயும் சங்கடம். கடைசியா ஒரு தடவை அவளை பார்க்கணும்னு போகிறார். அவள் ஒரு ஆக்சிடென்ட் ஏற்பட்டு இறந்து விட்டதாக செய்தி வருது.அவர் கதறி அழறார் . கேக்கும்போதே ஏதோ பண்ணுது மேம் . இதைத்தான் ஒரு பாட்டா மாத்தி எழுதி கொடு என்றாள். சரி மேம் உங்க மனசுல காதல் வந்த கதையை எப்ப சொல்வீங்க என்றான். நீ ரஷ்மியை கல்யாணம் பண்ணுறப்போ அந்த கதை நான் சொல்லாமலேயே உனக்கு புரியும் .. அப்போ சொல்லமாட்டீங்க அப்படித்தானே என்றான். ம் நான் அதையெல்லாம் கடந்து வந்துட்டேன் நீ தைரியமா இருக்கணும் அதுதான் முக்கியம். வீட்டுல சொல்லுறாங்க அப்படின்னு எல்லாம் ரஷ்மியை கைவிட்டுட கூடாது என்றாள். சரி மேம் நான் கிளம்புறேன் என்றான். இரு ஜூஸ் போட்டு எடுத்து வரேன் என்றாள் சௌமியா . அதெல்லாம் வேணாம் நான் கிளம்புகிறேன் என்றான்.