Nerungi Vaa Devathaiye - 17 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 17

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 17

எப்போதும் போல ரிகர்சல் முடிந்ததும் எல்லோரும் தங்களது கருத்துக்களை சொல்வது தி ஈகிள்ஸ் பாண்டின் வழக்கம், அன்றும் எல்லோரும் பேசினார்கள். ஜோ வழக்கம் போல குறும்பாக பேசினான். ரஷ்மியும், அருணும் அடுத்த கட்டத்துக்கு தங்கள் பாண்டின் இசையை எடுத்து செல்வதை பற்றி பேசினர் .சுகன்யா பேசும் முறை வந்ததும் தயங்கினாள். நீ எதுவானாலும் தயங்காமல் சொல்லு என்றான் ராகவ். என்னை எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்றாள் சுகன்யா. நான் மியூசிக் பாண்ட் விட்டு விலகுகிறேன் என்றாள். என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தென்றலுக்கும், சௌமியாவுக்கும் கூட புரியவில்லை. சுகன்யாவே தொடர்ந்து பேசினாள். நான் தனியாக ரிகர்சல் வருகிறேன் தனியாகவே போகிறேன் என்னிடம் யாரும் பேசுவதில்லை என்றாள். சௌமியா நாம் இது பற்றி பேசலாம் அதற்காக பாண்ட் விட்டு விலகுவது பெரிய முடிவு என்றாள். நீங்கள் தான் பூஜாவை பாட வைக்கிறீர்களே என்றாள். அதுதான் உன் வருத்தம் என்றால் முன்பே சொல்லி இருக்கலாம் அல்லவா என்றாள் ரஷ்மி. எனக்கு நெருக்கமானவர்கள் யார் இருக்கிறார்கள் இந்த பாண்டில் ? நான் போகிறேன் என்றாள். ஜோ அவசரப்படாதே சுகன்யா நாம் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம் என்றான். சௌமியா, ரஷ்மி, தென்றல், சுகன்யா எல்லோரும் கூடி பேசினார்கள். சுகன்யா அழுது விடுவாள் போல இருந்தாள்.

இனி வாரம் ஒரு முறை எல்லோரும் வீக்கெண்ட் சந்திப்பதென்று முடிவு எடுத்தார்கள். எல்லோரும் தங்கள் மனதில் உள்ளதை அப்போது சொல்லலாம் என்று சொன்னாள் சௌமியா. எல்லாம் ஓகே தானே ஓகே தானே சுகன்யா இனி அந்த மாதிரி பிரச்சனை வராது என்றாள் . சரி மேம் நீங்கள் இவ்வளவு தூரம் சொல்வதால் ஏற்றுக்கொள்கிறேன் என்றாள் சுகன்யா. ரஷ்மி நானே சொல்லலாம் என்று இருந்தேன் சுகன்யா சொல்லிவிட்டாள் என்றாள். எல்லோரும் கலைந்து சென்றார்கள். ரஷ்மி நான் சுகன்யாவை வீடு வரை விட்டு வருகிறேன் என்றாள். சரி ரஷ்மி மேலும் அவளிடம் கேள்விகள் கேட்காதே என்றான் ராகவ். சரி சரி எனக்கு புரிகிறது என்றாள். ரஷ்மி இரவு ராகவுக்கு ஃபோன் செய்தாள். என்ன சுகன்யாவுக்கு லவ் பிரச்சனை இருக்கிறதா என்றான். அதெல்லாம் இல்லாததுதான் அவள் மன சிக்கலுக்கு காரணம் என்றாள். என்னாச்சு அவள் அருணை விரும்பியிருக்கிறாள், இப்போது பூஜா வேறு குறுக்கே வந்தால் எப்படி அவளால் தாங்க முடியும் அதுதான் பொங்கி விட்டாள். ம் நீ என்ன சொன்னாய். நான் அருணை விரும்பவில்லை என்று சொன்னேன். அருண் என் பின்னே சுற்றுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாள் . அருண்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும் .

ஜோவிடம் சொல்லி அருணிடம் சுகன்யாவுக்காக பேச சொன்னான் ராகவ். அருண் நானே ரஷ்மி மேல பைத்தியமா சுத்திட்டு இருக்கேன் இப்போ போய் சுகன்யாவுக்காக வக்காலத்து வாங்குறீங்களா ரெண்டு பேரும் என்றான். அதெல்லாம் முடியாது. வேணுமென்றால் ராகவை போய் சுகன்யாவை லவ் பண்ண சொல்லு என்று காட்டமாக சொல்லிவிட்டான். இதை எதிர்பார்க்கவில்லை ராகவ். சீக்கிரமே ரஷ்மியும் ராகவும் ஜோடியாக அவன் முன்னால் இருப்பதை அவன் பார்ப்பான் என மனதுக்குள் சொல்லிக்கொண்டான். விடு ஜோ சுகன்யாவுக்கு இது தெரிய வேண்டாம் என்றான் ராகவ். இது தெரிஞ்சா அவ இன்னும் வேதனைப்படுவாள் என்றான் ஜோ. சௌமியா அதிகம் பேசும் மனநிலையில் இல்லை. அவளுக்கு அவளுடைய பிரச்சனைகள் . அதை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது. ராகவ் சௌமியா கேட்ட புதிய பாட்டை ஒரு வழியாக நிறைவு செய்தான்.
சௌமியாவுக்கு அது பிடித்திருந்தது. சுகன்யாதான் அந்த பாட்டை பாட வேண்டும் என சொல்லிவிட்டாள். சுகன்யாவுக்கும் அது பிடித்திருந்தது.
தடுமாறும் நெஞ்சம் உனக்காகவே என்று தொடங்கியது பாடல். ரஷ்மிக்கு அந்த சோக பாடலில் அவ்வளவு இண்டரெஸ்ட் இல்லை. தென்றலுக்கு பிடித்திருந்தது.

அதற்கென இசைக்கோர்வை செய்தான் அருண். அருண் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் சுகன்யா. அவளுக்கு காதல் ஏக்கம் உண்டாயிற்று. தன் காதல் காற்றில் தவிக்கிறது என்று முடியும் படி பாட்டு இருந்ததை அருமையாக பாடினாள் சுகன்யா. எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இது ஒரு சிறப்பான தொடக்கம் ராகவ் என்று சௌமியா பாராட்டினாள் . அருண் சுகன்யாவிடம் ஏதோ அவள் தோளை தட்டி கொடுத்தவாறு சொன்னான். அப்போதுதான் அவள் சிரித்தாள். எல்லோருக்கும் அது சந்தோஷத்தை கொடுத்தது. ரஷ்மி ராகவ் நீயா இதை எழுதியது என்று கிண்டல் செய்தாள் . அவன் அவளை துரத்திக்கொண்டு ஓடினான். ஏன் அப்படி சொன்னாய் என்றான். சும்மாதான் அப்போதுதான் நீ அந்த மூடில் இருந்து வெளியே வருவாய் என்றாள். சும்மா என்னை டெஸ்ட் பண்ணாதே என்றான். சுகன்யா ராகவுக்கு நன்றி தெரிவித்தாள். தனக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் இந்த பாடல் உற்சாகம் தரும் என்றாள். என்னவோ சாதித்து விட்டதாய் ராகவ் நினைத்து கொண்டான். ரஷ்மி சுகன்யாவை வெளியில் போய் சாப்பிடலாம் என அழைத்தாள். ராகவ் பில் நீ பே பண்ணு என்றாள்.

சுகன்யா நீ சீரியஸ் ஆகவே அருணை விரும்புகிறாயா என்றாள் ரஷ்மி. ஆமாம் அவன்தான் என் இசைக்கு இன்ஸ்பிரேஷன் என்றாள். சரி என்ன சாப்பிடுகிறாய் சுகன்யா என்று கேட்டு ராகவ் ஆர்டர் செய்தான். நீ எப்போது வேண்டுமானாலும் எங்களை கூப்பிடலாம். நாங்கள் உன்னுடைய நண்பர்கள் மட்டுமில்லை. உன்னுடைய நலம் விரும்பிகள். இதை எப்போதும் நினைவில் கொள் என்றான். ம் நீதான் ரஷ்மி பின்னால் சுற்றுகிறாயே என்றாள் சுகன்யா. இதை கேட்ட ரஷ்மி இந்த அவமானம் உனக்கு தேவையா ராகவ் என சிரித்தாள். ம் இது எனக்கு பிடித்திருக்கிறது என்றான். நீ சுகன்யா வை வீட்டில் விடு என்றாள் ரஷ்மி. சரிங்க மேடம் என்றான். சுகன்யா தாங்க்ஸ் ரஷ்மி என்றாள். சுகன்யாவை வீட்டில் விட்டான். என்னவோ என் மனம் புதிய நம்பிக்கை கொண்டிருக்கிறது என்றாள் சுகன்யா. அதுதான் முக்கியம் என்றான். சரி நான் கிளம்புகிறேன் என்று விடைபெற்றுக்கொண்டான்.சுகன்யா மனதில் இவ்வளவு துயரம் இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள் என்ன சொல்கிறாள் சுகன்யா என்று கேட்டாள். அவள் இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்கிற விதமாய் பேசி இருக்கிறாள் என்றான் ராகவ்.

ராகவ் நான் அந்த பாடலை பாடவா என்றாள் சௌமியா இப்போதா நான்தான் கிடைத்தேனா என்றான் . உதை விழும் கேளு ஒழுங்கா என்றாள். அருமையாக பாடினாள் சௌமியா. அதை பாடி முடித்ததும் எப்படி இருந்தது என்றாள் . அருமையா இருந்தது பேசாமல் நீங்களும் பாண்டில் சேருங்கள் என்றான். சும்மா சொல்லாதே என்றாள். நீங்கள் எப்போதும் மகிழ்வோடு இருக்க வேண்டும் அதுதான் என் விருப்பம் என்றான் ராகவ். ம் ரஷ்மி உனக்கு ஃபோன் பண்ணும் நேரம் ஆகிவிட்டது நான் வேறு கரடி மாதிரி என்றாள்.நீங்கள் பேசுங்கள் உங்கள் மனம் திறந்து பேசுங்கள் என்றான் ராகவ். தாங்க்ஸ் ராகவ் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
ரஷ்மி ஏதோ வேலையாய் இருந்தாள் போல ஃபோன் பண்ணவில்லை. இவன் மனம் எங்கும் சுகன்யா பற்றியும் சௌமியா பற்றியும் யோசனையாய் இருந்தது. காதலுக்காக ஏங்கும் சுகன்யாவும், காதல் தோல்வியில் வாடும் சௌமியாவும் ஒரே மாதிரி கஷ்டப்படுகிறார்கள் என நினைத்தான். 11 மணிக்கு ரஷ்மி ஃபோன் செய்தாள். இவன் அரைத்தூக்கத்தில் இருந்தான். என்ன ரஷ்மி இந்நேரத்தில் ஏண்டா அதுக்குள்ள தூக்கமா என்றாள். என்னவோ உன்னாலே என் தூக்கம் போச்சு என்றான். சரி தூங்கித் தொலை குட் நைட் ராகவ் என்று முத்தமிட்டாள். காலையில் எழும் போதுதான் அவள் கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. அதை கூட உணராமல் தூங்கி இருக்கிறான். இப்போது ஃபோன் பண்ண வேண்டாம் காலேஜ் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினான்.

ரஷ்மிக்கென புதிய ரோஸ் சிலவற்றை வாங்கிகொண்டான். இன்று பிரச்சனைகள் எதுவும் புதிதாக வந்திருக்க கூடாது என நினைத்துக்கொண்டான். ரஷ்மி கேண்டீன் போயிருந்தாள். அவள் மனம் ராகவ் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது. அப்போது அருண் வந்தான் என்ன தனியா கேண்டீன் வந்திருக்கே என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை. வீட்டுல அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் சமைக்கவில்லை என்றாள்.சரி நாம் அடுத்த டூர் போக நேரம் வந்து விட்டது என்றான் . எங்கே என்றாள் ஆர்வமாய்... ஊட்டிக்கு போகிறோம்.எல்லோருமா ஆமாம் எல்லோரும்தான் என்றான். அப்போதுதான் ராகவ் கேண்டீன் உள்ளே நுழைந்தான். வா ராகவ் நீ எப்படியும் வருவாய் என தெரியும் என்றான் அருண்.நாம் எல்லோரும் ஊட்டி போகிறோம் என்றான் அருண். ரொம்ப சந்தோஷமான விஷயமா இருக்கே மேம் வருவாங்களா என்றான் ராகவ்.ஏன் அவங்களுக்கென்ன என்றான் அருண். நீ சும்மா இரு ராகவ் அவங்க இல்லாம நிகழ்ச்சியா நிச்சயம் வருவாங்க என்றாள் ரஷ்மி.அதென்ன ரோஸ் ஆ ரஷ்மிக்கா கொடு கொடு என்றான் அருண். ரஷ்மி நீயே வைத்துவிடு ராகவ் என்றாள். இதை பார்த்த அருண் சரி நான் கிளம்புகிறேன் என்றான். சரி பார்க்கலாம் என்றான் ராகவ். இந்த ரோஸ் லவ்லீ என்றாள் ரஷ்மி. ரோஸ் மட்டும்தானா என்றான் ராகவ்.ம் ராத்திரி முத்தம் கொடுத்தால் தூங்கி வழிந்தால் என்ன செய்வது என்றாள் ரஷ்மி. அதெல்லாம் பரவாயில்லை. சௌமியா மேம் வந்துவிட்டார்களா நீ அவங்களை பார்த்தாயா என்றான் . இல்லை வா அவங்க லைப்ரரில தான் இருப்பாங்க போய் பார்ப்போம் என்றாள். சௌமியா லைப்ரரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இவர்களை பார்த்ததும் கட்டிக்கொண்டு கங்க்ராட்ஸ் என்றாள். சௌமியாவை இவ்வளவு உற்சாகத்துடன் பார்ப்பதே மகிழ்ச்சியாய் இருந்தது ராகவுக்கும், ரஷ்மிக்கும்.