ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் இருந்தது. அவளுடைய தோழிகள் சுகன்யாவுக்கும்,தென்றலுக்கும் அதே வகுப்பில் இடம் கிடைத்தது ரஷ்மிக்கு கூடுதல் மகிழ்ச்சி. மறுநாள் காலையிலேயே தென்றலும், சுகன்யாவும் ரஷ்மியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள். என்ன ரஷ்மி நைட்டெல்லாம் தூங்கலியா என்றாள் தென்றல். ஹேய் அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கிளம்பலாமா என்றாள் . அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் ரஷ்மி. ரஷ்மி காலேஜ் பஸ்சில் போவதாய் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள் . பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா என்றனர். ஹேய் உனக்கு தெரியுமா லாஸ்ட் சமயத்துயல அருணும் நம்ம கிளாஸ் ல ஜாயின் பண்ணியிருக்கானாம் என்றாள் சுகன்யா. நேத்து நைட் ஃபோன் பண்ணினான். நம்ம கூட ஸ்கூல் படிச்ச அருணா ஆமாம் அவனேதான். அவன் இருக்குறது ஒரு வகையிலே நல்லதுதான். அவன் ரொம்ப நல்லா பழகுவான் என்றாள் ரஷ்மி. அவளுடைய கனவுகளுக்கு எல்லை இல்லை. காதல் எல்லாம் அவளுக்கு இரண்டாம்பட்சம் தான். படிப்புதான் அவளுக்கு முக்கியம் என்று எண்ணினாள் .
ராகவ் வேண்டா வெறுப்பாக இன்ஜினியரிங் சேர்ந்து இருந்தான். அவனுக்கு விளையாட்டில் தான் ஆர்வமிருந்தது. அவனுடைய நண்பன் ஜோ தான் அவனை கட்டாயப்படுத்தி அவனை இன்ஜினியரிங் சேர செய்தான். எதுக்கு மச்சான் இந்த படிப்பு படிச்சிட்டு வேலையில்லாம சுத்தவா? என்றான் ராகவ். அதெல்லாம் கிடையாது. நீ ஸ்போர்ட்ஸ் ல ஆர்வமா இருந்தாலும் இன்ஜினியரிங் டிகிரி ரொம்ப முக்கியம் என்றான் ஜோ. அவனுடைய முழுபெயர் ஜோசுவா சுருக்கமாக ஜோ . அருண் ராகவுக்கு ஃபோன் பண்ணினான். என்ன மச்சான் ரெடி ஆகி விட்டாயா . வேணாம் வேணாம்னு சொல்லி கிட்டே இன்ஜினியரிங் சீட் வாங்கிட்ட போல என்றான். அத விடு மச்சான் அங்க ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி எல்லாம் எப்படிடா? என்றான். அதெல்லாம் சூப்பர் . நீ கவலைப்படாதே என்றான். அருணும்,ஜோவும் நெருங்கிய நண்பர்கள். ஆகையால் ராகவும் அவனுடைய நெருங்கிய நண்பனாகி விட்டான். அதிகம் பேசும் டைப் இல்லை ராகவ் . அன்றைய முதல் தினமே அவன் மறக்க முடியாததாகி விட்டிருந்தது. ரஷ்மியை அருண் ஜோவுக்கும் ராகவுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான். ரஷ்மியின் அறிமுகம் கூச்ச சுபாவமுள்ள ராகவுக்கு புதியதொரு அனுபவமாக இருந்தது. ஜோ அவர்களுடன் எளிதில் இயல்பாய் பேச்சில் கலந்து கொண்டான். தென்றலும்,சுகன்யாவும் அவ்வாறே பழகினர் .
நீ என்ன மச்சான் நெனைக்கிற ரஷ்மி பத்தி என்றான் ஜோ. நேத்து தாண்டா அவளை பார்த்தோம் அதுக்குள்ளயா என்றான் ராகவ். சும்மாதான் கேட்டேன் நீ டென்ஷன் ஆகாதே. அருண் அவ எல்லாம் உனக்கு செட் ஆக மாட்டா . எத்தனையோ பேர் ப்ரபோஸ் பண்ணியும் மயங்காதவ அவ. அவளுக்கு அவளுடைய படிப்புதான் முக்கியம் என்றான் அருண். பேசாம தென்றலையோ சுகன்யாவையோ ட்ரை பண்ணு. அவங்க தான் உனக்கு மேட்ச் ஆவாங்க என்றான். இப்போதானடா காலேஜ் சேர்ந்தோம் அதுக்குள்ள லவ்வா . அதெல்லாம் அப்படித்தான் என்றான் ஜோ. பாடங்கள் சுமையாய் இருந்தது ராகவுக்கு. ஆனால் எல்லாவற்றிலும் ஷைன் பண்ணினாள் ரஷ்மி. ரஷ்மி ஒரு நாள் என் வீட்டுக்கு வாங்களேன் என்றாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்றான் ஜோ. அதெல்லாம் வேண்டாம் இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னான் ராகவ். அந்த வார கடைசியில் ரஷ்மி வீட்டுக்கு வருவதாக ராகவும், ஜோவும் சொன்னார்கள். கடைசி நேரத்தில் ஜோ வரவில்லை. ராகவுக்கு ரஷ்மி ஃபோன் செய்தாள். எங்கே இருக்கீங்க ரெண்டு பேரும் என்றாள். இதோ அரை மணி நேரத்துல வந்து விடுகிறோம் என்றான். ஜோவுக்கு ஃபோன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது, அவன் வீட்டுக்கு போய் விசாரித்த போதும் எங்கே போயிருக்கிறான் என்று தெரியவில்லை.
ரஷ்மி ராகவை அவளுடைய பெற்றோர்களுக்கு அறிமுகபடுத்தி வைத்தாள். மதியம் சாப்பிட்டு விட்டு தான் போகணும் என்று சொல்லிவிட்டாள்.இவன் அருணுக்கு ஃபோன் செய்தான். அருணும், ஜோவும் சேர்ந்துதான் சினிமாவுக்கு போயிருக்கிறார்கள். கூடவே தென்றலும், சுகன்யாவும் போயிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. அவளுடைய அறை மாடியில் நேர்த்தியாக இருந்தது. எனக்கு ஒரே ஆசைதான் என் இன்ஜினியரிங் கனவு மட்டும்தான் என்றாள். இந்த வயசுலே கனவா இருக்கிறதெல்லாம் கொஞ்ச நாளிலே மாறிடும் என்றான். நிச்சயமா ? என்றாள் நிச்சயம். இருக்கிற வாழ்விலே கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிப்பதுதான் நல்லது என்றான் ராகவ். நீங்க ரொம்ப வித்தியாசமாய் இருக்குறீங்க என்று சிரித்தாள் ரஷ்மி.
ராகவ் விடைபெற்றுக்கொண்டான். என்னடா என்னை விட்டுட்டுசினிமாவுக்கு போய் விட்டீர்கள் என்றான் ராகவ்.அதை விடு ரஷ்மி என்ன சொன்னா என்னை கேட்டாளா என்றான் ஜோ. அவளுக்கு நம்மை பற்றியெல்லாம் நினைக்க நேரம் இல்லை அவளுடைய சிந்தனைகள் வேறு மாதிரி இருக்கிறது என்றான்.
அன்று இரவு தென்றலிடம் இருந்து ஃபோன் வந்தது. என்ன ராகவ் அவ உன்னை பத்தியே பேசுறா ? என்ன விஷயம் என்றாள். அதெல்லாம் ஒன்னுமில்லே என்றான் . இவர்களுக்கு எப்படி காதல் என்கிற சிந்தனை சதா தோன்றுகிறது என்று ஆச்சரியப்பட்டான் .மறுநாள் ரஷ்மியிடம் தயங்கியவாறு சாயங்காலம் மேட்ச் இருக்கு பார்க்க வரீங்களா என்றான். நீங்க என்னை வா போன்னே கூப்பிடுங்க நான் நிச்சயம் வரேன் என்றாள்.
சாயங்காலம் சரியான மழை . மேட்ச் கேன்ஸல் ஆகிவிட்டது. ரஷ்மி காலேஜ் பஸ் மிஸ் பண்ணிவிட்டாள் . இவன் அவளிடம் ரொம்ப சாரி இப்போ எப்படி போவீங்க என்னோட பைக் ல வாங்க என்றான். கொஞ்சம் யோசித்தவள் சரி போகலாம் என்றாள். மழை சற்று ஓய்ந்திருந்த போது மணி 7 ஆகிவிட்டது. ஒரு வழியாக அவளை வீட்டில் கொண்டு போய் விட்ட போது மணி 8 ஆகி விட்டது. வீட்டில் யாரும் இல்லை. அவங்க கல்யாணத்துக்கு போயிருக்காங்க உள்ளே வா ராகவ் என்றாள். அவனுக்கு துவட்ட டவல் கொண்டு வந்து கொடுத்தாள் . அவள் போய் உடை மாற்றி வந்தாள். காப்பி போட்டு குடுத்தாள் . இவன் நான் உங்களை தொந்தரவு பண்ணி விட்டேன் என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாளைக்கு பார்க்கலாம் என விடை கொடுத்தாள்.
என்னடா நேத்து ஒரே ஸீன் ஆச்சா ?எங்ககிட்ட சொல்லவேயில்ல என்றான் ஜோ. ஒண்ணுமில்லை. மழையில மாட்டிக்கிட்டோம் அவ்வளவுதான். அவ்வளவுதானா? நான் என்னவோ ஏதோ அப்படின்னு நினைத்து விட்டேன். மறுநாள்தான் அந்த சம்பவம் நடந்தது. சீனியர் ஒருத்தன் மதிய இடைவேளையில் ரஷ்மியிடம் வம்பு வளர்த்திருக்கிறான். என்ன ரஷ்மி என்னையெல்லாம் லவ் பண்ண மாட்டாயா என்று கேட்டிருக்கிறான். அவள் அவனை ஓங்கி அறைந்து விட்டாள் . விஷயம் பிரின்சிபால் வரை போய் பிறகு ஓய்ந்தும் போனது. எங்கிருந்து இவங்களுக்கு ஒரு பொண்ணுகிட்ட இப்படி பேசுற தைரியம் வருது ராகவ் என்றாள். இவனுக்கு அவளை விட ஜோவை நினைத்து கவலையாய் இருந்தது. ஜோவும் லவ் என்று சொல்லிவிட்டால் அவள் என்ன செய்வாள் என்று திகைப்பாய் இருந்தது. தென்றலும், சுகன்யாவும் அவளை சமாதானப்படுத்தினார்கள்.
அருண் போய் அந்த சீனியர் பையனை பார்த்து ரஷ்மி சார்பாக மன்னிப்பு கேட்டு வந்தான். விளையாட்டுக்குதான் சொன்னேன் அதற்கெல்லாம் அடிப்பார்களா என சீனியர் பையன் கேட்டு விட்டிருக்கிறான் .
அந்த வாரம் எல்லோருக்கும் வார கடைசி எக்ஸாம் இருந்தது. ராகவ் ஒன்றும் தயார் செய்திருக்கவில்லை. ஜோ ஏதோ எழுதிகொண்டிருந்தான். இவன் அருகிலே அமர்ந்திருந்த ரஷ்மியை அப்போது தான் கவனித்தான். மேம் அடீஷனல் ஷீட், அடீஷனல் ஷீட் என்று அடுக்கி கொண்டிருந்தாள். இவனுக்கு தன் மீதே வெறுப்பாய் இருந்தது. இப்படி ஒருத்தியை ஃப்ரெண்ட் ஆக வைத்து கொண்டு முட்டாளாய் இருக்கிறோமே என்று மனம் வருந்தினான். இவனுடைய வெறும் பேப்பர் பார்த்து அவனை வெளியே போக சொல்லி விட்டார் மேம். வெளியே வந்து வகுப்பில் அமர்ந்திருந்தான். யாரும் இல்லை வகுப்பில். அப்போது ரஷ்மி வந்தாள். என்னாச்சு ஏன் வெறும் பேப்பர் குடுத்துட்டு வந்தே என்றாள். எனக்கு ஒண்ணும் பிடிபடல பேசாம படிப்பை விட்டுடலாம்னு நினைக்கிறேன் என்றான். ஒண்ணும் அவசரப்படாதே நாம முயற்சி பண்ணுறதை மட்டும் நிறுத்தி விடக்கூடாது என்றாள். வா கேண்டீன் போவோம் என்றாள். இவனும் அவள் கூடவே போனான். ரொம்பவும் தடுமாறுகிறேன் ரஷ்மி என்றான் ராகவ். நான் சௌமியா மேம் கிட்ட சொல்லி இருக்கேன் . நீ நாளைக்கு போய் அவங்கள அவங்க வீட்டுல போய் பாரு என்றாள்.
ரஷ்மி சொன்னதாக சௌமியாவிடம் சொன்னான். வா ராகவ் உனக்கு சில basics சொல்லி தரேன். அப்புறம் எல்லாம் ஈசி ஆக இருக்கும என்றாள். நீ உன்னை தயார்படுத்திக்கொள் என்றாள். அன்று நைட் ரஷ்மி ஃபோன் செய்திருந்தாள் . என்னாச்சு ராகவ் எல்லாம் ஓகே தான என்றாள் ஓகே தான் எனக்கு இப்போ லேசா நம்பிக்கை வந்திருக்கு என்றான். நீ கொஞ்சம் ட்ரை பண்ணு. சீக்கிரமே உன்னை பழையபடி பார்ப்பேன் அப்படின்னு நம்புறேன் என்றாள். சௌமியா இவனை திறம்பட வழி நடத்தினாள் . என்னடா சௌமியா மேம் எப்படி சொல்லி தராங்க என்றான் ஜோ.நானும் வேணா வரவா என்றான். அதெல்லாம் ஒண்ணும் வேணாம் . நானே பார்த்துக்கிறேன் என்றான் ராகவ். ராகவ் நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே என்றாள் சௌமியா. சொல்லுங்க மேம் . ரஷ்மி கூடிய சீக்கிரம் உன் கூட லவ் ல விழுந்துடுவான்னு நினைக்கிறேன் என்றாள் சௌமியா. ஏன் அப்படி சொல்லறீங்க மேம். அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது என்றாள்.