நரேஷ் குமாரை எப்படியாவது பழி வாங்கும் உணர்வோடு இருந்தான். ஆனால் அப்போதைக்கு அவனால் என்ன செய்ய முடியும் என தீர்மானிக்க கூடிய இடத்தில் அவன் இல்லை. நிர்மலா கொலை சம்பந்தமாக யாராவது தவறாக வழி நடத்தினால் உடனே அவர்களை பின் தொடருகிற பக்குவத்துக்கு வந்திருந்தான். ஷிவானி அதை எப்படியோ அறிந்திருந்தாள். நரேஷ் எதையாவது ஏடாகூடமாக செய்து வைக்குமுன் அவனை அதில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே ஷிவானியின் நோக்கமாக இருந்தது. இதற்கிடையில் உதித் அவ்வப்போது தனியாக ஷெரினை சிறைக்கு சென்று சந்தித்து வந்தான். ஷெரின் அவனை பக்குவப்படுத்தினாள் . கிரண் நரேஷை கடத்த திட்டமிட காரணமும் அதுதான். அவன் ஒரு எளிய இலக்காக இருந்தான். கிரண் அவ்வப்போது நரேஷ் உடன் பேசி வந்தான். அவன் குமாரை கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக போலியான வாக்குறுதிகளை நரேஷ் மனதில் பதிய வைத்தான். குமாரை எழில் விசாரிக்க தொடங்கினான். குமார் பிடி கொடுக்காமல் இருந்தான்.
என்ன நரேஷ் குமாரை சந்திக்க தயாரா எந்த நரேஷுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். நான் எப்பவும் என் அக்கா நிர்மலா சாவுக்கு காரணமானவர்களை சும்மா விட போவதில்லை என்றான். அப்போது நாளைக்கு மாலை 5 மணிக்கு நான் சொல்லும் இடத்துக்கு வந்துவிடு என்றான். சரி கிரண் சார் என்றான். நீ இதை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்றான். நிச்சயம் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் . நீங்கள் எனக்கு செய்த செய்யப்போகும் உதவிக்கு நான் எப்பவும் நன்றிகடன் பட்டிருக்கிறேன் என்றான். குமார் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தான். கிரண் ஆனந்த் ஃப்ளைட் ஏறப்போகும் அதே நாளில் நரேஷ் கடத்தப்பட பிளான் செய்திருந்தான். ஷிவானி என்ன நரேஷ் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என கேட்டபோதும் ஏதோ சொல்லி மழுப்பி விட்டான் நரேஷ். ஒரு கட்டத்துக்கு மேல் ஷிவானியால் நரேஷின் மனதில் என்ன இருப்பது என கண்டறிய முடியவில்லை. என்னவோ நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது. எழிலிடம் சொன்ன போது நானும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன் அவன் சின்ன பையன் அவனிடம் அதிகம் கண்காணிப்பை செலுத்துவது நல்லதல்ல என்றான்.
கண்டெய்னர் தயார் நிலையில் இருப்பதை ஆனந்துக்கு தெரியப்படுத்தினான் கிரண். ஆனால் அதிகப்படியான செக்யூரிட்டி இருப்பது நல்லதல்ல என ஆனந்த் சொன்னான். அதை கடைசி நேரத்தில் குறைத்து விடுவேன் என கிரண் சொன்னான். குமார் பல விஷயங்களை மறைப்பதாக எழிலுக்கு தோன்றியது. உங்க மனசுல நிர்மலா கொலை விஷயமா இன்னும் ஏதும் இருந்தா சொல்லலாம் என்றான். நிர்மலா என் அப்பா சாவுக்கு காரணமானவர்களுக்கு ஆதரவாக வாதாடி இருக்க கூடாது . அவளுடைய சாவை அவளே தேடிக்கொண்டாள்.நரேஷ் கிரண் சொன்ன இடத்துக்கு வந்துவிட்டான். சிறையில் இருந்து ஃபார்மாலிட்டீஸ் முடிந்து ஆனந்த் ஏர்போர்ட்டுக்கு செல்ல காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டான். எழில் வந்து செக்யூரிட்டி முழுவதையும் பார்வையிட்டு சென்றான். கிரண் அவனுடைய ஆட்களை அனுப்பி நரேஷை வேறு இடத்துக்கு மாற்றினான். எழிலுக்கு அவனுடைய ஆட்கள் ஃபோன் செய்தார்கள். எழில் நீ புறப்பட்டு நாங்கள் சொல்கிற இடத்துக்கு வந்து சேர் இல்லையென்றால் நரேஷ் உயிரோடு இருக்க மாட்டான் என்றார்கள். நரேஷ் ஏமாற்றபட்டதை உணர்ந்தான் அதே சமயம் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. கோவத்துடன் கிரணுக்கு ஃபோன் செய்தான். எதுக்காக இப்படி செய்தீர்கள் ? நீ பொடியன் என்பதை உனக்கு உணர்த்தவே இதை செய்தேன் . அப்போ எனக்கு குமாரை பழிவாங்க உதவி செய்யவில்லையா ? ம் குமார்தான் உன்னை கடத்த சொல்லி ஐடியா குடுத்தார். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு முடிந்தவுடன் உன்னை சந்திக்கிறேன் என்றான்.
எழில் அந்த செய்தியை எதிர்பார்த்தபடிதான் இருந்தான். நரேஷ் வாழிய போய் ஆபத்தில் மாட்டிக்கொள்வான் என நினைத்தது போல நடந்து விட்டது. ஷிவானிக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னான். அவள் நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் எக்காரணம் கொண்டும் ஆனந்த் விஷயத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டாம் என்றாள். ஷிவானி நரேஷை கடத்திய கும்பல் சொன்ன இடத்துக்கு போவதாக முடிவெடுத்தாள். நரேஷ் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. உதித் அதே நேரம் ஏர்போர்ட் சென்றிருந்தான் ஷெரின் உத்தரவுப்படி. ஷெரின் அவனை எச்சரித்திருந்தாள் . விமான நிலையத்தில் கண்டெய்னர் நிற்பதை கண்டறிந்தான் உதித். அதை உடனடியாக எழிலுக்கு சொன்னான். இதை எதிர்பாராத எழில் உடனே நீ அங்கிருந்து போய்விடு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் . சரி எழில் சார் என்றான். ஷிவானி கடத்தல்காரகள் சொன்ன இடத்துக்கு போக தயார் ஆனாள் . நரேஷ் இப்படி போய் மாட்டிக்கொள்வான் என அவள் நினைக்கவில்லை.ஆனந்த் சென்ற வாகனத்தை தன்னுடைய வண்டியில் பின் தொடர்ந்தான் எழில். எழில் வருவதை பார்த்த கிரண் எரிச்சல் அடைந்தான். மறுபடியும் கடத்தல்காரர்களுக்கு கிரண் ஃபோன் செய்தான். என்னடா பண்ணுறீங்க இங்க எழில் ஹாயா எங்களை ஃபாலோ பண்ணுறான்.அவர்கள் மறுபடி எழிலுக்கு ஃபோன் பண்ணினார்கள். எழில் போனை எடுத்தான். நீ எங்களோட வீணா விளையாடாதே நரேஷ் உயிர் போய்விடும் என எச்சரித்தார்கள். அவர்கள் பேசி முடிப்பதற்கும், ஷிவானி அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கும் சரியாக இருந்தது. அவர்கள் அங்கிருந்து ஓடினர். நரேஷ் ஏன் இப்படி பண்ணினே என்றாள் ஷிவானி.
ஷிவானி இப்படி செய்வாள் என கிரண் எதிர் பார்த்திருக்கவில்லை. அந்த ஷிவானி வந்து நரேஷை கூட்டிப்போய்விட்டாள் . எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று சொன்னார்கள் கிரணிடம் . நரேஷ் ஷிவானியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். இனியொரு முறை இதைபோல் செய்ய மாட்டேன் என சொன்னான் . உதித் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பினான். எழில் பார்க்கும் முன் கண்டெய்னர் அகற்ற உத்தரவிட்டான் கிரண். வேறு ஒரு வழியையும் ஏற்பாடு செய்திருந்தான். அதன் படி ஆனந்த் க்கு பதிலாக வேறு ஒருவனை அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான். அதன்படி வண்டியை வழியிலே நிறுத்தினான். என்னாச்சு என கேட்டபடி எழில் வந்தான். ஆனந்த் அவசரமாக பாத்ரூம் போக வேண்டுமாம் என சொன்னான் கிரண். இதெல்லாம் வெறும் டிராமா என்றான் எழில். இதற்கெல்லாம் தனி ரூல்ஸ் கிடையாது.ஆனந்தை வேறு வழியில்லாமல் பாத்ரூம் செல்ல பெட்ரோல் பங்க் ஒன்றில் நிறுத்தினான். அதற்குள் ஷிவானியிடம் இருந்து ஃபோன் வந்ததும் சற்று தள்ளி வந்து பேசினான். என்னாச்சு ஷிவானி நரேஷ் ஓகே நான் போனதும் அவங்க எல்லாம் எஸ்கேப் ஆயிட்டாங்க என்றாள். சரி ஷிவானி நான் அப்புறமா கூப்பிடுறேன் என்றான்.
அதற்குள் ஆனந்த் மயங்கி விழுந்து விட்டான் என்ற செய்தி பரவ ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அவசரமாக அவனை ஏற்றி அனுப்பினார்கள். இதை எதிர்பார்க்காத எழில் ஆம்புலன்ஸ் வண்டியை பின் தொடர முயன்றபோது அவனுடைய வண்டி பிரேக் டவுன் ஆகி நின்றது. இதுவும் அந்த கிரண் வேலையோ என நினைத்தபடி வேறு ஒரு வண்டி பிடித்து ஹாஸ்பிடல் போய் சேர்ந்தபோது கிரண் ஹாஸ்பிடல் வாசலில் துப்பாக்கி குண்டு காயத்தோடு இருந்தான். என்னை சுட்டுட்டு ஆனந்த் எஸ்கேப் ஆயிட்டான் என்றான். அவன் வந்த அதே ஆம்புலன்ஸ் மூலமாக எஸ்கேப் ஆயிட்டான். இதை கேட்ட எழில் முதலில் நீ ட்ரீட்மெண்ட்டுக்கு போ கிரண் என்று சொன்னான். ஆம்புலன்ஸ் போன வேகத்தில் எங்கு போய் சேர்ந்தது என்பதை கண்டுபிடிப்பது சிரமம். போலீஸ் வட்டாரத்தில் எழில் அலட்சியத்தால் ஆனந்த் தப்பினான் என்று செய்தி பரப்பப்பட்டது.உயரதிகாரிகள் உடனே ஒன்று கூடி எழிலை இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர். எழில் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் அவனை நம்ப தயாராய் இல்லை. ஷிவானி வந்து கிரணை பார்த்தாள் . எழில் பலிகடா ஆக்கபட்டதை புரிந்து கொண்ட ஷிவானி எழிலை சமாதானப்படுத்தினாள். இப்போது ஆனந்த் எங்கு போயிருப்பான் என்பது புரியாத புதிராக இருந்தது.
ஸ்வேதா , சிவா இரண்டு பேரையும் ஜாக்கிரதையாக இருக்கும்படி எழில் சொன்னான். ஆனந்த் தப்பிய ஹாஸ்பிடல் சிசிடிவி ஃபுடேஜ் கிரணுக்கு சாதகமாக இருந்தது. உதித் என்ன சார் இப்படி ஆயிடுச்சே என்றான் எழிலிடம். இதெல்லாம் கிரண் வேலை தான் அவன் தான் அவனை பாத்ரூம் அனுப்புவதாக சொல்லி அவனை தப்ப வைத்தான் என்றான் எழில். சிவா நரேஷ் ஷிவானி மேடம் மட்டும் ரிஸ்க் எடுத்து உன்னை காப்பாற்ற வராவிட்டால் உன் நிலைமை என்ன? இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ளாதே என்றான். அந்த ஆம்புலன்ஸ் ஆந்திர எல்லையோரம் தனியாக நின்றது. ஆனந்தின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஊகிக்க முடியவில்லை எழிலால். குமார் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜாமீன் வாங்கினான். எழில் நீண்ட இடைவெளி ஒன்றை அனுபவிக்க தயாரானான் . ஷிவானி டூட்டியில் இருப்பது ஒன்றுதான் ஆறுதலாய் இருந்தது. கிரண் இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருந்தான். அவனுடைய காலில் சுடப்பட்டு இருந்தது. போலீஸிடம் இருந்து துப்பாக்கியை பறித்து ஆனந்த் அவனை சுட்ட காட்சி திரும்ப திரும்ப எழில் நினைவில் ஓடி கொண்டிருந்தது.எல்லாவற்றையும் கச்சிதமாக செய்து வைத்திருந்தான் கிரண். ஷிவானி அங்கு போய் விசாரித்த பொது ஒருவர் கூட கிரணுக்கு எதிராக சாட்சி சொல்ல தயாராய் இல்லை. எழில் சிவாவையும்,ஸ்வேதாவையும் போய் பார்த்தான். நரேஷ் எழிலை பார்த்ததும் ரொம்ப சாரி சார் என்றான். பரவாயில்லை நரேஷ். அந்த நபர்கள் வேறு ஏதாவது கிரணை பற்றி பேசினார்களா . இல்லை சார்.