Oru Naalum Unai Maraven - 21 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | ஒரு நாளும் உனை மறவேன் - Part 21

Featured Books
Categories
Share

ஒரு நாளும் உனை மறவேன் - Part 21

எழில் நிதானமாக நடந்தவற்றையெல்லாம் யோசித்து பார்த்தான். முதலில் கமலன் கொலை பிறகு நிர்மலா அப்புறம் யாழினி.குமார் இன்னும் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஆனந்த் தப்பி ஓடிவிட்டான். கிரணை நம்பி பிரயோஜனம் இல்லை. அவன்தான் ஆனந்தை தப்ப வைத்தவன். இப்போது எழிலும் சஸ்பெண்ட் ஆகிவிட்டதால் அவனுடைய ஆட்டம் இன்னும் அதிகரிக்கும். ஷிவானி அவனை ஆறுதல் படுத்துவது போல அணைத்துக்கொண்டாள். எழில் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் ல இரு. என்ன ஷிவானி சொல்லுறே ஆனந்த் வெளியே இருக்குறது எவ்வளவோ பேருக்கு ஆபத்து தெரியுமா ? என்றான். புரியுது எழில் அதுக்காக நாம சட்டத்தை கையிலெடுத்து விட முடியுமா என்றாள் . நீ கிரணை குளோஸ் ஆக ஃபாலோ பண்ணு என்றான் எழில். பண்ணுறேன் எழில் . குமார் வேறு ஜாமீனில் வெளிவந்து விட்டான் அவன் என்னென்ன செய்ய போகிறானோ என்றான் எழில். சிவாவும் நரேஷ்,உதித் உடன் இதை பற்றி ஆலோசித்தான். உதித் நீ தேவையில்லாமல் ஆபத்தை தேடிக்கொள்ளாதே என்றாள் ஸ்வேதா. நரேஷ் ஹாஸ்டலில் தங்கி படிக்கட்டும் அதுதான் அவனுக்கு பாதுகாப்பு என்றான் சிவா. முதலில் தயங்கினாலும் பிறகு நரேஷ் அதற்கு ஒப்புக்கொண்டான். சிவா அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொன்னான்.

குமார் அவனுக்கு எதிரான சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக மாற்ற முயற்சித்து கொண்டிருந்தான். கிரண் இன்னும் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகாத நிலையில் எதுவும் செய்ய முடியாமல் இருந்தான். ஷிவானி ஆனந்த் எங்கு போயிருப்பான் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கினாள். ஸ்வேதாவிடமும் விசாரித்தாள். அவளை ஆனந்த் நிச்சயம் தொடர்பு கொள்வான் என நினைத்தாள் . உடனடியாக இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாதபோது நிச்சயம் தொடர்பு கொள்வான் என நினைத்தாள் .ஸ்வேதாவிடம் அலர்ட் ஆக இருக்கும்படி சொன்னாள் ஷிவானி . நினைத்தது போலவே இரண்டு நாட்கள் கழித்து ஸ்வேதாவுக்கு கால் செய்தான் ஆனந்த் என்ன என் எக்ஸ் பொண்டாட்டி நீயும் சிவாவும் என்னை ஜெயிலுக்கு அனுப்பனீங்க அதோட ஷெரினை ஏவி என்னை கொல்லவும் பார்க்குறீங்க என்றான். நீ பண்ண பாவத்துக்கு உன் மனைவியா இருந்ததற்கே வெட்கப்படுறேன் . சேகரை இழந்தோம். ரம்யாவையும் இழந்தோம் எல்லாம் உன்னாலேதான். ரொம்ப பேசாதே ஸ்வேதா . நான் மறுபடி வருவேன் அப்போ எனக்காக நீ மட்டும்தான் இருப்பே என்றான். இதை வாய்ஸ் டேப் பண்ணி வச்சு ஷிவானிகிட்டே குடு அவளும் கேக்கட்டும் என்றான். ஸ்வேதா என்ன சொல்வதென்று தெரியாமல் ஃபோன் இணைப்பை துண்டித்தாள்.


ஷிவானி ஆனந்த் ஸ்வேதாவிடம் பேசிய நம்பர் வாங்கிக்கொண்டு அதை டிரேஸ் செய்ய முயன்றாள் . ஸ்வேதா அவன் இன்னமும் திருந்தலை ஷிவானி மேடம் என்றாள். ஸ்வேதா ஆனந்துடன் பேசிய பதிவை கவனமுடன் கேட்டாள் ஷிவானி. அவன் உன்னைத்தான் டார்கெட் பண்ணியிருக்கான் அதோட அவன் சேஃப் ஆன இடத்துல செட்டில் ஆயிட்டான். அவன் மறுபடி நிச்சயம் கால் பண்ணுவான். எப்படியாவது அவனோட லொகேஷன் டிரேஸ் செய்யணும் என்றாள். ஒரு வேளை அவன் வெளிநாடு போயிருப்பானோ ? என்றாள் ஸ்வேதா.நாங்க தரவா செக் பண்ணிட்டோம் அவன் இங்கதான் எங்கேயோ இருக்கான். வெளிநாடு எல்லாம் போகலை . அந்த பதிவு செய்யப்பட்ட ஆனந்தின் கால் இன்டர்நெட் கால் ஆக இருந்தது. எளிதில் டிரேஸ் பண்ண முடியாதபடி இருந்தது. எழிலிடம் இதை பற்றி சொன்னாள் ஷிவானி. அவன் ஒன்றும் சொல்லவில்லை. குமார் மேல் சந்தேகம் இருந்தது . ஒருவேளை குமாருக்கும் ஆனந்துக்கும் தொடர்பு இருக்குமோ என எழில் யோசித்தான். குமார் ஆனந்துக்கு அடைக்கலம் கொடுத்திருப்பானா என்ற கோணத்திலும் யோசித்து பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

இருந்தாலும் ஷிவானியிடம் சொல்லி குமார் வீட்டை கண்காணிக்க சொன்னான். ஷிவானி குமார் வீடு வேலைக்காரனை அவன் வீட்டில் போய் சந்தித்தாள். ஆனந்தின் புகைப்படத்தை காட்டி விசாரித்தாள். அவன் முதலில் தனக்கு எதுவும் தெரியாது என சொன்னான். பிறகு தான் அவனை பார்த்தால் ஷிவானிக்கு தகவல் தருவதாக சொன்னான். ஷிவானி அந்த பக்கம் போனதும் குமாருக்கு ஃபோன் ஷிவானி வந்து போன விஷயத்தை சொன்னான். ஷிவானி வேலைக்காரன் வீட்டில் வைத்த வாய்ஸ் ரிக்கார்டர் மூலமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள். அவன் பொறியில் சிக்குவான் என எதிர்பார்த்தாள்.அவனை இப்போது கஸ்டடியில் எடுக்க வேண்டாம் குமார் உஷார் ஆகிவிடுவான் என்று எழில் சொன்னான். அவன் பெயர் ரவி என்று கேட்டு தெரிந்து கொண்டான் எழில். குமாருக்கு பண்ணை பங்களா ஒன்று உண்டு என்பது தெரிய வந்தது. பங்களாவை நோட்டமிட்டான் எழில். உள்ளே என்ன நடக்கிறது யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியாத போது ரவி அங்கு வந்து செல்வதை கண்டான்.

எழில் தன்னுடைய ஜூனியர் போலீஸ் ஆபிசர் ஒருவரை ரவியின் வீட்டை சோதனை போட அனுமதிக்கு ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தான். ஷிவானிக்கு ஸ்வேதாவுக்கு அந்த இன்டர்நெட் கால் எங்கிருந்து வருகிறது என்பதை திறக்க செய்ய ஹேக்கர் பையன் ஒருவனை அணுகினாள் .அந்த கால் ரவி வந்து போகும் பங்களா முகவரியில் இருந்துதான் செய்யப்படுகிறது என்ற தகவல் கிடைத்தது. ரவியை போலீஸ் அரெஸ்ட் செய்தது. அவனுடைய வீட்டில் ஆனந்தின் உடைகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் கிடைத்தன. ரவியை விசாரித்த போது ஒப்புக்கொண்டான். கொஞ்ச நாள் ஆனந்த் அங்கு தங்கி இருந்ததாகவும் பிறகு இடத்தை மாற்றிவிட்டதாகவும் சொன்னான். ஷிவானி அங்கிருந்த வாய்ஸ் ரிக்கார்டர் சோதித்ததில் ரவி சொல்வது உண்மை என தெரிந்தது. குமாருடைய பண்ணை பங்களாவையும் சோதனையிட்டாள் ஷிவானி. முதலில் குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு அனுமதித்தான். அந்த ரவி சொன்னதை கேட்டு ஏமாந்துட்டீங்களா என்றான். நான் ஏமாறவில்லை. கூடிய சீக்கிரம் நீயும் அவனும் சேர்ந்து ஜெயிலுக்கு போற நிலைமை வரும் என்றாள்.


என்னாச்சு ஷிவானி ஏதும் கிடைக்கவில்லையா இல்ல அதுக்குள்ள அவனை இடம் மாத்தி விட்டு விட்டான் போல. இந்த முறை ஹாக்கர் எந்நேரமும் ஸ்வேதாவுக்கு வரும் ஆனந்தின் ஃபோன் காலை கண்காணிக்க சொல்லி இருந்தாள் ஷிவானி அதற்க்கு பலன் கிடைத்தது. ஆனந்த் மறுபடி ஸ்வேதாவிடம் பேசும்போது குமாரின் குரலும் கேட்டது. குமாரின் ஃபோன் மூலமாகத்தான் ஆனந்த் பேசுகிறான். ஸ்வேதா என்னை பிடிக்க அந்த ஷிவானியும்,எழிலும் அலையுறத பார்க்க பரிதாபமா இருக்கு என்றான். ரவியிடம் நடத்திய விசாரணையில் குமார் இரவு 9 மணிக்கு மேல் தினமும் ஒரு caravan வண்டியில் வெளியில் செல்வதாக ஒரு தகவலை சொன்னான். அந்த வண்டி குமார் வீட்டுக்கு வந்து விடுவதாகவும் அதற்கு முன் அந்த மாதிரி வண்டி வந்ததில்லை எனவும் சொன்னான். வண்டி எண் பற்றிய தகவல் தெரியவில்லை. அது ஒரு பிரவுன் கலர் வாகனம் என்று சொன்னான்.ஆக அந்த மாதிரி ஒரு வண்டியில்தான் சுற்றிகொண்டிருக்கிறான் ஆனந்த் என முடிவுக்கு வந்தாள் ஷிவானி.

போலீஸ் வெயிட் பண்ணி அந்த கேரவேனுக்காக காத்திருந்தார்கள். அந்த வண்டி விடிகாலை 3 மணிக்குதான் வந்தது. அதில் ஏறி குமார் அமர்ந்தான். அந்த வண்டியை போலீஸ் ஃபாலோ செய்தது. அந்த கேரவேன் துறைமுகத்தில் கண்டெய்னர் உள்ளே ஏறி நின்றது. குமார் சிறிது நேரம் கழித்து கண்டெய்னரில் இருந்து வெளியே வந்தான். அவன் ஷிவானியை கண்டதும் உறைந்து போய் நின்றான். போலீஸ் கேரவேன் உள்ளே செக் செய்தது. உள்ளே ஆனந்த் இல்லை. குமாரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. ஆனந்த் நேற்று வரை அவன் கூட கேரவேனில் சுற்றியது உண்மைதான் எனவும் இன்று அவன் அதில் இல்லை எனவும் அது தனக்கே வியப்பளித்ததாகவும் கூறினான். குமாருடைய ஃபோன் மற்றும் அவனுடைய லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. குமார் சிறையில் அடைக்கப்பட்டான். நீ கேரவேனை முழுமையாக சோதித்தாயா என்றான் எழில் . நல்லா பார்த்தேன் அவன் அங்க இல்லை. அவன் அங்கு இருந்ததற்கான அடையாளமே இல்லை. சரி ஷிவானி குமார் மொபைல் மூலமா ஆனந்த் கால் பண்ணின நம்பர் யாராவது அவனை திருப்பி கூப்பிடுவாங்க அப்போ நிச்சயம் அவன் சம்பந்தபட்ட யாராவது மாட்டுவான் என்றான் எழில்.


இவ்வளவு நெருங்கியும் ஆனந்தை பிடிக்க முடியவில்லையே ஒருவேளை கிரண் மூலமாக பதுங்கி இருந்தால் நிச்சயம் ஒரு வாய்ப்பிருக்கிறது. விசாரித்தபோது கிரண் நேற்று இரவு தான் டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல் வந்தது. கிரண் வீட்டுக்கு விரைந்தாள் ஷிவானி. கிரண் வீடு பூட்டியிருந்தது. வேறு வழியில்லாமல் திரும்ப நினைக்கும் போது அந்த ஃபோன் வந்தது. ஸ்வேதாவை காணவில்லை என சிவா பரபரப்புடன் கூறினான். நேத்து நைட் முதல் வேலைக்கு போன ஸ்வேதாவை காணவில்லை என்று சிவா கூறினான். கிரணுக்கு ஃபோன் செய்த போது என்ன மேடம் ஸ்வேதாவை காணவில்லையா? நல்ல போலீஸ் நீங்க என்று கிண்டல் செய்தான். சிவா நீங்க எதுக்கும் அவங்க ஆபீஸ் டிரைவர விசாரிங்க. எனக்கு ஸ்வேதா ஆபீஸ் அட்ரஸ் அனுப்புங்க என்றாள். சரி மேடம். ஸ்வேதாவை ஒரு வேளை ஆனந்த்தான் கடத்தியிருப்பானோ என நினைக்கும் வேளையில் எழில் ஃபோன் செய்தான். என்னாச்சு ஷிவானி ஸ்வேதா காணவில்லையாமே நான் போய் சிவா வீட்டுல பார்க்கிறேன் என்றான் எழில். ஆனந்த் எதற்கும் துணிந்தவன். சிவா எப்படியாவது அவளை காப்பாத்துங்க சார் ஆனந்த் அவளை ஏற்கனவே மிரட்டி இருக்கான் என்றான். விஷயத்தை கேள்விபட்ட உதித் , நரேஷ் இருவரும் வீட்டுக்கு வந்து விட்டனர். அவர்கள் ஆளுக்கொரு திசையில் தேட தொடங்கினர். ஸ்வேதா எங்கிருக்கிறாளோ என்ற தவிப்பு மேலிட எல்லோருமே தேடினார்கள் அப்போது அந்த ஃபோன் சிவாவுக்கு வந்தது .