Oru Naalum Unai Maraven - 1 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | ஒரு நாளும் உனை மறவேன் - Part 1

Featured Books
Categories
Share

ஒரு நாளும் உனை மறவேன் - Part 1

அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க கூடும். ஒருவேளை அவளும் இவனை போல தவித்திருப்பாளோ என்றெண்ணினான். மணி 12 தொட்டது. இவன் வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். டீ குடித்தால் தேவலை போல இருந்தது. தூங்கிட்டியா என்று மெசேஜ் ஸ்வேதாவிடம் இருந்து வந்தது. இப்போது ரிப்ளை பண்ண வேண்டாம் என்று நினைத்தான். ஜீரோ வாட்ஸ் லைட் போட்டான். டீ தூள் கொஞ்சமே இருந்தது . காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியவாறு டீ போட்டான். டீ குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. நீ தூங்குவது போல நடிக்கிறாயா என மறுபடியும் மெசேஜ் வந்தது. இவன் தொடங்கிய நாவலை எப்படி முடிப்பது என யோசித்தான். கொஞ்ச நேரம் எழுதலாம் என முடிவெடுத்தான்.

மணி காலை 3 இருக்கும் ஸ்வேதாவிடம் இருந்து கால் வந்தது. இவன் தயங்கியவாறே எடுத்தான் . எத்தனை முறை மெசேஜ் பண்ணினேன் உன்கிட்ட பேசணும் நான் மறுபடி 11 மணிக்கு அவன் ஆபீஸ் போன பின்பு கால் பண்ணுறேன் என்றவாறு இணைப்பை துண்டித்து விட்டாள் .விடிந்து விட்டது .அவன் அம்மா டேய் சிவா என்று சொல்லி உரக்க கூப்பிட்டாள். அவளுக்கு உரத்த குரலை விட்டால் வேறு வழியில்லை. என்னம்மா? அப்பா எழுந்து விடுவார் வேகம் போய் டீ தூள் வாங்கி வா என்றாள். அன்றைய தினம் அப்படித்தான் துவங்கியது. வருமானம் கொஞ்சமே இருக்கிற எழுத்தாளன் என்றால் அப்படித்தான். அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். இவனை பார்த்ததும் என்னடா நைட் எல்லாம் தூங்கலியா கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு என்றார் . அதெல்லாம் ஒண்ணுமில்லை கொஞ்சம் எழுத்து வேலை ..உனக்கு பொண்ணு தர தயாராய் இருக்காங்க ஒழுங்கா ஒரு வேலைக்கு போடா .. இன்னும் எத்தனை நாளைக்கு அந்த ஸ்வேதாவையே நினைச்சிக்கிட்டு இருக்க போறே என்றார் .

11 மணி போல ஸ்வேதா கால் செய்தாள். சிவா நான் ஆபீஸ்ல இருக்குறேன் அப்புறம் கூப்பிடுறேன் என்றான். சரி மறக்காம கால் பண்ணுடா என்றாள் . ஸ்வேதாவுக்கும், ஆனந்துக்கும் திருமணமாகி ஓராண்டாகிறது. குழந்தைகள் இல்லை. அவளாலும் மறக்க முடியவில்லை சிவாவாலும் மறக்க முடியவில்லை.வேலையெல்லாம் முடிந்து மணி மதியம் 2 ஆகியிருந்தது . ஆயிரம் இருந்தாலும் அவள் அடுத்தவன் மனைவி அல்லவா . ஸ்வேதாவுக்கு கால் செய்தான் என்ன ஸ்வேதா சாப்பிட்டியா என்றான் ?ம் ஆச்சு நீ? இனிமேதான் .. ஈவினிங் மீட் பண்ணலாமா எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்குடா என்றாள். வேண்டாம் ஸ்வேதா போன தடவையே ஆனந்த் கோவபட்டதா சொன்ன . அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ 6 ஓ கிளாக் ஷாப்பிங் மால் வந்துடு என்றாள். சரி ஸ்வேதா ட்ரை பண்ணுறேன் அதெல்லாம் முடியாது கட்டாயம் வா என்றாள். 5 மணிக்கெல்லாம் பர்மிஷன் வாங்கி கொண்டு ஷாப்பிங் மால் விரைந்தான் சிவா.

என்ன அதிசயம் நேரத்தோட வந்துட்ட என்றாள் . அதெல்லாம் ஒண்ணுமில்லை இப்போ அதிகம் வேலையில்லை .. சிவா எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு வேற ஏதாவது நடக்குறதா பேசேன்.. உனக்கு என்னை பிரிஞ்சிருக்க கஷ்டமாயில்லயா .. ஸ்வேதா எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியல என்றான் . ம் சரி சரி ஏதாவது சாப்பிட்டுகிட்டே பேசலாம் . அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தான். சாப்பிட்டு முடித்ததும் அவன் சாப்பிடுவதையே பார்த்தபடி இருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன, நான் உன்னை ஏமாத்திட்டதா நினைக்கிறியா சிவா ?சத்தியமா இல்லை. ஸ்வேதா விடைபெற்றுக்கொண்டாள். இது சரியா வராதென்று ஆரம்பத்தில் இருந்தே சிவா நினைத்தான். ஸ்வேதா தான் பிடிவாதம் பிடித்தாள் . அவளின் எல்லா முயற்சியும் தோற்றது அவள் அப்பாவின் எதிர்பாரா மரணத்தில்.
படிக்கிற காலத்தின் போதே ஸ்வேதாவுக்கு சிவா மேல் காதல். படிப்பு முடிந்ததும் எல்லோரையும் போல இருவரின் வாழ்க்கையும் திசை மாற தொடங்கியது . எங்கே போயிட்டு வரேன்னு கேட்டேன் ? அந்த யூஸ்லெஸ் ரைட்டர் சிவாவை பார்க்கத்தானே போன .. ஆனந்த் கொதிப்பானான் . உனக்கு அவன்தான் விருப்பம்னா என்னை ஏண்டி கல்யாணம் பண்ணின ?பதில் பேசாமல் அமைதியாய் இருந்தாள் ஸ்வேதா . இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் . ஸ்வேதா ரூமுக்கு போய் ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னையே பார்த்துக்கொண்டாள்.

சிவாவின் நண்பன் சேகர் வீட்டுக்கு வந்திருந்தான். நீயாவது சொல்லுப்பா இவனை சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்றார் சிவா அம்மா.நானும் சொல்லிக்கிட்டுதான் இருக்கிறேன்மா . நீயும் நிம்மதி இல்லாம மத்தவங்களையும் நிம்மதி இல்லாம ஏண்டா ஆக்குற என்றான் சேகர் . எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கட்டும் உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன் . இப்படித்தான் ஒவ்வொரு வருஷமும் ஓடுது.ஸ்வேதாவிடம் இருந்து ஃபோன் வந்தது ஒரு நிமிஷம்டா யாரு ஃபோன் ல ஸ்வேதாவா நீ திருந்த மாட்டடா என்றான். என்னாச்சு ஸ்வேதா ஆனந்த் எதுவும் சொன்னானா . சொன்னான் சொன்னான் உன்னை பார்க்க கூடாது பேசக்கூடாது அப்படின்னு, பேசாம செத்துடவா சிவா ? சே சே என்ன பேச்சு பேசற நான் இருக்குற வரை அப்படி ஒரு எண்ணமே உனக்கு வர கூடாது . ஓகே வா ஓகே சிவா . சேகர் வந்துருக்கான் அவன் கூட பேசிட்டு இருக்கேன் அப்புறமா கூப்பிடுறேன் . சரி சிவா சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடு .

ஆனந்த்திடம் ஏற்கனவே விவாகரத்து கேட்டு விட்டாள் ஸ்வேதா அவன் அதற்கு சம்மதம் தரவில்லை. உயிர் உள்ளவரை தரவும் மாட்டான் . பிடிவாதக்காரன் அவன். ஸ்வேதா சார்பில் பேசுவதற்கு அவள் உடன்பிறந்தவர்களோ சொந்தக்காரர்களோ யாருமில்லை. ஸ்வேதா இக்கட்டான நிலையில் சிவாவை மறக்க முடியாமலும் ஆனந்தை தவிர்க்க முடியாமல் இருந்து வந்தாள். சேகர் பேசாம அந்த ஆனந்தை போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போகட்டுமாடா என்றான் சிவா . அவசரப்பட்டு பேசாதே . உனக்கு என்னடா வயசு 25 தானே ஆகுது . கொஞ்சம் நிதானமா யோசிப்போம். மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான் சிவா. ஸ்வேதா ஆனந்திடம் போய் சாரி ஆனந்த் என்றாள். இட்ஸ் ஓகே நான் உன்னை நம்புகிறேன் என்றான். தாங்க்ஸ் ஆனந்த் . ஸ்வேதாவுக்கு ஆனந்த் சிவாவை ஏதும் செய்து விடுவானோ என்று உள்ளூர பயம் இருந்தது . அதை காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.

டாக்டர்கள் டெஸ்ட் எடுத்ததில் ஆனந்திடம் தான் குறை இருக்கிறது அதனால்தான் குழந்தை பிறப்பு தாமதமாகிறது என்று தெரிய வந்தது . அதையே காரணம் காட்டி விவாகரத்தும் கேட்க தீர்மானித்திருந்தாள் ஸ்வேதா. அவளுக்கு துணையென்று யாருமில்லாததால் பணம் கொடுத்து ரிப்போர்ட்களில் மாற்றங்கள் செய்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான் . ஸ்வேதா ஒரிஜினல் ரிப்போர்ட்களின் பிரதிகளை சிவாவுக்கு அனுப்பியிருந்தாள் . அதை வைத்துக்கொண்டு ஒரு வக்கீலிடம் பேசினான் சிவா. நாம வேணா போலீஸ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் ஆனா அந்த ஆனந்த் எல்லா இடத்துலயும் செல்வாக்கு உள்ளவரா இருக்காரு. நம்ம மேலேயே திரும்ப கேஸ் போட்டு அந்த பொண்ணு ஸ்வேதாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விடவும் தயங்க மாட்டாரு . இதுக்கு வேற வழியே இல்லையா ?காலம்தான் பதில் சொல்லணும். ஆனந்தே மனசு மாறுனா ஒழிய இதுக்கு வேற வழி கிடையாது . நாம இன்னொரு தடவை ஆனந்த்கிட்ட பேசிப்பார்க்கலாமா சேகர் ?நீ மனசு வெச்சா அது நடக்கும் என்றான் சிவா. ஆனந்த் ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்காரு அரவிந்த்னு அவர் மூலமா ட்ரை பண்ணுறேன் . சரி சேகர். நாளைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு . ஃபுல் டைம் ஜாப் னு சொல்லி இருக்காங்க போய் பார்க்கிறேன் என்றான் . ஆல் தி பெஸ்ட் சிவா என்றான்.

காலையிலேயே கோவிலுக்கு வர சொல்லி இருந்தாள் ஸ்வேதா . இன்னைக்கு உனக்கு இன்டர்வியூ ல அதுதான் சாமி பேருக்கு ஒரு ஸ்பெஷல் அர்ச்சனை கொடுத்திருந்தேன் . ம் வீட்டுக்கு வாயேன் என்றான் . உங்க அம்மா இன்னும் என் மேல கோவத்துல தானே இருக்காங்க.நான் சேகர் கிட்ட சொல்லி இருக்கேன் . சீக்கிரம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். நாம எங்கேயாவது போய் விடலாமா சிவா ? அதெல்லாம் ஒண்ணும் சரி வராது. நீ வந்து ரொம்ப நேரமாச்சு ஆனந்த் தேட போறான் என்றான். சரி நீ இன்டர்வியூ நல்லா பண்ணு . சிவாவின் நெற்றியில் விபூதியை பூசினாள். இன்டர்வியூ 11 மணிக்குத்தான் இவனுக்கு டென்ஷன் ஏதுமில்லை. அவனுடைய ஃப்ரெண்ட் ரம்யாதான் இவனை ரெஃபர் செய்திருந்தாள். ரம்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது என்னடா காலையிலே கோயில்ல ரொமான்ஸ் ஆ அதெல்லாம் ஒண்ணுமில்லை ஸ்வேதா தான் கோவிலுக்கு போலாம்னு கூப்பிட்டா .. சரி சரி நல்லா ப்ரிப்பேர் பண்ணியிருப்பன்னு நம்புறேன் . கரெக்ட் டையமுக்கு வந்துடு .. ஓகே ரம்யா .

இதுவரை பல வேலைகள் பார்த்து விட்டான். ஆனால் அவனுடைய சூழல் காரணமாக ஒன்றிலும் நிலைக்க முடியாமல் போயிற்று . ரிசப்ஷன் அருகிலேயே ரம்யா டென்ஷன் ஆக இங்குமங்கும் போய் வந்தாள். சிவா கரெக்ட் டையமுக்கு வந்து விட்டான். முகமெல்லாம் மலர அவனிடமிருந்து பயோடேட்டாவை வாங்கி கொண்டாள். வெயிட் பண்ணு கூப்பிடுவாங்க என்றாள். சிறிது நேரத்தில் உள்ளே அழைத்தார்கள் . இன்டர்வியூ ரொம்ப சிம்பிள் ஆக இருந்தது. ஒரு வாரத்தில் ஜாயின் பண்ண சொல்லி இருந்தார்கள் . ரம்யா அவனுக்கு வாழ்த்துக்கள் சொன்னாள் .வெளியே வந்து ஃபோனை சைலன்ட் மோடில் இருந்து நார்மல் மோடுக்கு மாற்றினான் . ஸ்வேதாவிடம் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது . ரம்யாவுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் . என்னாச்சு ஸ்வேதா இன்டர்வியூ இப்போதான் முடிஞ்சுது வேலை கிடைத்து விட்டது என்றான். ரொம்ப சந்தோஷம் சிவா. இப்போதான் ரம்யாகிட்டயும் பேசினேன். சாயங்காலம் பார்க்கலாமா ஒரு சின்ன பார்ட்டி கூட இல்லேன்னா எப்படி . சேகரையும், ரம்யாவையும் கூப்பிட்டுக்கலாம் . ஓகே ஸ்வேதா . 7 மணிக்கு எப்பவும் மீட் பண்ணுற இடத்துல என்றாள்.

பாவம்டா ஸ்வேதா என்றான் சேகர். நீ அரவிந்த் கிட்டே பேசுறேன்னு சொன்னியே என்னாச்சு ? அவர் ஊர்ல இல்லை . ரெண்டு நாளிலே வந்துடுவாரு . நான் பேசிட்டு சொல்லுறேன் . ஸ்வேதா போய் சேர்ந்த 10 நிமிடத்தில் அந்த ஃபோன் அழைப்பு வந்தது.ஆனந்த் தான் கால் பண்ணியிருந்தான்.