Nandhavanam - 13 in Tamil Love Stories by Narumugai books and stories PDF | நந்தவனம் - 13

Featured Books
  • જીવન પથ ભાગ-45

    જીવન પથ-રાકેશ ઠક્કરભાગ-૪૫         ‘જો નિષ્ફળતા તમને મજબૂત બન...

  • શિયાળાને પત્ર

    લેખ:- શિયાળાને પત્રલેખિકા:- શ્રીમતી સ્નેહલ રાજન જાનીઓ મારા વ...

  • The Madness Towards Greatness - 11

    Part 11 :દિવ્ય સંત ના ગાયબ થયા બાદ મુખ્ય ચુનોતી તો એ હતી કે...

  • ડકેત - 2

    નંદલાલના કાનમાં હજી પણ બંદૂકની ગોળીઓ અને ડાકુઓની ચીસો ગુંજી...

  • સાત સમંદર પાર - ભાગ 4

    પ્રિયાંશીના ક્લાસમાં મિલાપ નામનો એક છોકરો ભણતો હતો. પોણા છ ફ...

Categories
Share

நந்தவனம் - 13

அர்ஜுனின் வீட்டை அடைந்தவர்கள், யாழினி ரேவதியுடன் வீட்டின் முன் அமைந்திருந்த தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு சென்றனர். நந்தனாவைப் பார்த்த யாழினி வேகமாக ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டாள்,  யாழினியை அணைத்துகொண்டபொழுது இதுவரை இல்லாத ஒரு புதிய  உணர்வு  நந்தனாவிற்கு தோன்றியது, இவ என்னோட பொண்ணு யாரு சொன்னாலும் இனி இவளைப் பார்க்காமல் மட்டும் இருக்க கூடாது என்று நினைத்தவள், யாழினியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தோஸ்த் ஏன் என்ன பார்க்க நீங்க வரலை, நான் உங்களை ரொம்போ மிஸ் பண்னேன், அப்பா உங்களுக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னாரு, நிஜமாவா என்றால் யாழினி.

ஆமா யாழ் குட்டி, அதுனாலதான் உன்ன பார்க்க வரல, இனி அடிக்கடி வர, சித்தப்பாகிட்ட சொல்லி நாளைல இருந்து உன்ன கிளாஸ்க்கு அனுப்ப சொல்றேன் ஓகே வா என்றவளைப் பார்த்து வேகமாக தலையை ஆட்டினாள் யாழினி.

அப்ப என்ன யாரும் மிஸ் பண்ணலையா என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்த யாழினி, கதிரை பார்த்ததும் நந்தனாவிடம் இருந்து இறங்கி அவனிடம் ஓடினாள், கதிர் மாமா நானே உங்களுக்குப் போன் பண்ணலான்னு இருந்தேன் உங்க நம்பர் தெரியலையா அதுதான் கூப்பிடலை என்றாள்.

அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டே அங்கு வந்தான் அரவிந்த், சில நாட்களுக்கு பின் நந்தனாவைப் பார்க்கிறான், ஆரம்பத்தில் நந்தனாவை மறப்பது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது, வீட்டில் யாழினி எந்தநேரமும் நந்தனா பற்றி பேசிக்கொண்டிருந்ததும், நந்தனா அருகிருந்தபோது தன் அண்ணன் முகத்தில் இருந்த சிரிப்பும் அவனை நந்தனா நினைவுகளில் இருந்து மீட்டெடுத்தது. இதயத்தின் ஓரத்தில் வலி இருந்தாலும் அவனால் தற்போது நந்தனாவை இயல்பாக பார்த்து புன்னகைக்க முடிந்தது.

அரவிந்த் வந்ததை கவனிக்காமல் கதிரும் யாழினியும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்படியா யாழ்மா எனக்கு போன் பண்ணனுன்னு நினைச்சியா, எதுக்கு என்று கேட்டான் கதிர்,

நீங்கதான்  யாராவது என்கிட்ட சேட்டை செஞ்சா உங்ககிட்ட சொல்ல சொன்னீங்க மாமா

ஓஹ் யாரு என்னோட யாழ் கிட்ட சேட்டை செஞ்சது

என்னோட கிளாஸ் குகன் என்ன பார்த்து ஒய் குட்டி பொண்ணுனு கூப்பிட்டான், நீங்க நாளைக்கு என்கூட வந்து அவனை மிரட்டிவிட்டுடுங்க மாமா, என்று தலையை ஆட்டிப் பேசிய யாழினியைப் பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு இவளுக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றியது.

யாழினி பேசியதைக் கேட்டு நந்தனாவிற்கும், அர்விந்திற்கும் சிரிப்பு வந்தது, அதற்குள் நந்தனாவிற்கும், கதிருக்கும் டீ எடுத்துக்கொண்டு வந்த ரேவதி, அவர்கள் சிரிப்பதைப் பார்த்து என்னவென்று கேட்டுவிட்டு அர்விந்த் சொன்னதைக் கேட்டு தானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்.

நந்தனாவிடம் வீட்டில் இருப்பவர்களைப் பற்றிக் கேட்டவர், சந்தியாவிற்கு டெலிவரி ஆன விஷயம் கேட்டு சந்தோஷப்பட்டார். இந்த வாரத்தில் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார். கதிர், யாழினியுடன் இணைந்து பேசத் தொடங்கினான் அரவிந்த், சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்திரசேகரும் அவர்களுடன் பேச்சில் கலந்துகொண்டார். இப்படி அனைவருமாக அமர்ந்து தோட்டத்தில் பேசிச் சிரித்து கொண்டிருந்தனர்.

வீட்டு காம்பௌண்டுக்குள்ளே நுழையும் போதே நம்ப வீடா இது இவளோ சிரிப்பு சத்தம் கேட்குது என்று நினைத்த அர்ஜுன் தோட்டத்தில் யாழினியுடன் பேசி சிரித்துக்கொண்டிருந்த நந்தனாவைப் பார்த்து ஒரு நிமிடம் அசையாமல் நின்றான். அன்று அவர்கள் வீட்டில் அவளைப் பார்த்தது, ஒருவாரம் கழித்து இன்றுதான் பார்க்கிறான், யாழினியும் அவளும் கையை ஆட்டி கதை பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே நின்றவன், ஒரு பெருமூச்சோடு அவர்களை நோக்கி சென்றான்.

யாரோ வரும் அரவம் கேட்டு திரும்பியவள், அர்ஜுனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள், அவனை பார்த்தவுடன் அவனது மெலிந்த தோற்றம் தான் அவளது கண்களுக்குப் பட்டது, சாப்பிடுறாரா இல்லையா என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, அவள் அருகில் வந்தவன் உன்ன யாரு இங்க வர சொன்னது என்று கேட்டான்.

அதைக் கேட்டு ரேவதி, அரவிந்த் இருவரும் அதிர்ந்தனர், ரேவதி அர்ஜுனிடம் நான்தான் வர சொன்னேன், இப்ப என்ன அதுக்கு என்றார்

அம்மா நான் தான் போன் பண்ணாதீங்கன்னு சொன்னனே, அப்புறம் எதுக்கு வரச்சொன்னீங்க,

ஏன்டா போன் பண்ண கூடாது, இப்பதான் யாழினி பேசி சிரிச்சு சந்தோஷமா இருக்கா உனக்கு அது பிடிக்கலையா, என்றவரிடம் என்ன சொல்வது என்று அர்ஜுன் யோசிக்க,

என்ன பாஸ் இவ்வளோ யோசிக்குறீங்க சொல்ல வேண்டியதுதானே, அம்மா நந்தனா என்ன கல்யாணம் செஞ்சுக்கனுனு கேட்டா, அவங்க வீட்டுலையும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க, ஆனா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, நந்தனா இனி யாழினிய பாக்க கூடாது, பேச கூடாதுனு நான் சொல்லிட்டேன், அதுனால இனி நீங்க நந்தனாவுக்கு போன் பண்ணி வர சொல்லாதீங்க அப்படினு சொல்லுங்க பாஸ். என்றவளைப் பார்த்து அனைவரும் வாயடைத்துபோயினர்.

ரேவதி, சந்திரசேகர், அரவிந்த் மூவருக்கும் இது நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது, அதே சமயம் இவ்வளோ நடந்து இருக்கு நம்மகிட்ட சொன்னானா பாரு அழுத்தக்காரன் என்று ரேவதி மகனை மனதில் திட்டிக்கொண்டிருந்தார்.

அர்ஜுன் நிலையோ ரொம்போ மோசம் இப்படி விஷயத்தை சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அர்ஜுன் வந்து பேச தொடங்கியதும் யாழினியைச் சற்றுத் தள்ளி அழைத்து சென்று விளையாடிக் கொண்டிருந்தக் கதிருக்கு அவர்கள் பேசியது காதில் விழவில்லை, ஆனால் நந்தனா அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

ரேவதியிடம் சென்றவள், ஆன்ட்டி நான் உங்க பையனையும், அவர் பொண்ணையும்  நல்லா பார்த்துப்பேன், இவர்கிட்ட கொஞ்சம் நீங்க சொல்லுங்க என்றவளை அணைத்துக்கொண்ட ரேவதி இன்னும் என்ன ஆன்ட்டி, அத்தைனு கூப்பிடுமா என்றார்.

அம்மா, தேவையில்லாம யாரும் ஆசையை வளர்த்துக்காதீங்க இது நடக்காது. என்று சொன்னவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்,

ஒரு நிமிஷம் என்று அவனை தடுத்த நந்தனா அவன் முன்னாடி போய் நின்று, நான் நாளைக்கு ஆபீஸ் வருவேன், நாளைக்கு ஈவினிங் நானே வந்து யாழினிய டான்ஸ் கிளாஸ் கூட்டிட்டு போவேன், எப்பவும் போல அத்தை யாழினிய டியூஷனுக்கு அனுப்பி வைப்பாங்க, உங்களுக்கு என்ன பார்க்க பிடிக்கலைன்னா ஆபீஸ் வராதீங்க, அப்புறம் என்னோட பொண்ண என்கிட்ட இருந்து பிரிச்சு வெக்குற வில்லத்தனம் எல்லாம் வேண்டாம் புரிஞ்சுதா பாஸ் என்றவள் விலகி நின்று அவன் போக வழிவிட்டாள்.

அவளை முறைத்தவன், நீ நினைக்குறது நடக்காது என்றான். அவனைப் பார்த்து சிரித்தவள் சவால் பாஸ் கூடிய சீக்கிரம் மிஸஸ். அர்ஜுன் ஆகி காட்டுறேன் என்றாள். அவனுக்கு சக்தி இருந்திருந்தால் அவளை எரித்திருப்பான், அவ்வளவு கோபத்தோடு அவளை முறைத்து விட்டு சென்றான்.

அர்ஜுனும் நந்தனாவும் கடற்கரையில் நின்று கொண்டிருந்தனர், உன்னோடு பேசவேண்டும் என்று கூறி அர்ஜுன் தான் அவளை இங்கு அழைத்துவந்தான். வந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது இன்னும் அவன் எதுவும் பேசவில்லை. நந்தனாவும் அவனாகப் பேசட்டும் என்று அமைதியாகக் கடலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அன்று அர்ஜுன் வீட்டில் சொன்னதுபோல நந்தனா மீண்டும் அலுவலகம் செல்லத் தொடங்கினாள், யாழினி மீண்டும் கிளாஸ்ஸிற்கு சென்று வந்தாள். ரேவதியும், சதாசிவமும்  யாழினியைக் கூட்டிக்கொண்டு நந்தனா வீட்டிற்கு சென்று அவள் பெற்றோர்களைப் பார்த்து பேசிவிட்டு, சந்தியாவையும் குழந்தையையும் பார்த்துவிட்டு வந்தனர். அந்த வாரம் முதல் யாழினி டியூஷனிற்கும் வழக்கம் போல சென்று வந்தாள். யாழினி கேட்டுக்கொண்டதைப் போல கதிர் அவளுடன் ஒருநாள் பள்ளிக்குச் சென்று அவள் சொன்ன குகனை சந்தித்து பேசி இருவரையும் சமாதானம் செய்துவைத்துவிட்டு வந்தான். வந்தவன் நந்தனாவிடம் இவ்வளோ நாள் உனக்கு பாடி கார்ட் வேலை பார்த்தேன் இப்போ உன்னோட பொண்ணுக்கு பாக்குறேன் இது என்னோட குல தொழில் ஆகிடும் போல என்று சொல்லி சிரித்தான். நந்தனா தற்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நடந்தவற்றை நினைத்துக்கொண்டிருந்தவள் ஏதோ தோன்ற திரும்பி அர்ஜுனைப் பார்த்தாள், சரியாக அந்தநேரம் அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது பார்வை அவன் பேச தயாராகிவிட்டான் என்பதைச் சொன்னது.

எதுக்கு நந்தனா நீ இப்படி அடம்பிடிக்குற, நான் சொல்றதை கேளு உனக்கு இதைவிட நல்ல பெட்டர் லைப் கிடைக்கும். உன்னோட நல்லதுக்குதான் சொல்றேன்  என்றவனை கேலியாக பார்த்தவள் என்ன பாஸ் முதல்ல மிரட்டுனீங்க, அப்புறம் வீட்டுல போட்டு குடுத்தீங்க, இப்ப இப்படி பீலிங்ஸ் காட்டுறீங்க என்றாள்.

நீ என்ன லூசா எவ்வளவு சொல்றேன் இப்படி விளையாட்டுத்தனமா பேசிகிட்டு இருக்க என்று கோவத்தோடு சொன்னான். அவனையே ஆழமாகப் பார்த்தவள் அர்ஜுன் நீங்க என்ன சொன்னாலும் என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல, தேவையில்லாம உங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என்று சொன்னவள், தொடர்ந்து நான் ஒரு விஷயம் கேக்குறேன் உண்மையா பதில் சொல்லுங்க வேணுனா என்னோட முடிவ மாத்திக்குறத பற்றி யோசிக்குறேன் என்றாள்.

இவள் இவ்வளவு தூரம் யோசிக்கிறேனு  சொன்னதே பெரிசு என்று நினைத்தவன் என்ன கேட்கனும் உனக்கு கேளு என்றான் ஒரு நிமிடம் அவனையேப் பார்த்தவள்,

நீங்கதான் சொல்லனும் அர்ஜுன் இதுவரைக்கும் நீங்க யார்கிட்டயும் சொல்லாத உங்க வாழ்க்கை ரகசியம் என்ன, இந்த கல்யாணம் வேண்டானு நீங்க சொல்றதுக்கான உண்மையான காரணம் என்ன என்று கேட்டவளை அதிர்ந்து போய் பார்த்தான் அர்ஜுன்.

இவளுக்கு எப்படி தெரிஞ்சது என்று யோசித்தவன், ஒருவேளை அதை சொன்னாலாவது இந்த கல்யாணப் பேச்சை இவள் நிறுத்துவாள் என்று எண்ணி தன் பெற்றோர், தோழன் போல இருக்கும்  தம்பி என்று யாரிடமும் சொல்லாத அவனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை நந்தனாவிடம் சொல்ல தயாரானான். அன்று யாழினி பற்றி கேட்டபோதும் சரி இன்று அவனது வாழ்க்கைப் பற்றிக் கேட்டகும்போதும் நந்தனா கேட்டால் தன்னால் சொல்லாமல் இருக்க முடிவதில்லை என்பதை அவனும் உணர்ந்துதான் இருந்தான்.

என்னோட அப்பாவுக்கு நான் அவரோட பிசினெஸ்ஸை பார்த்துக்கனுனு ஆசை, ஆன எனக்கு சின்ன வயசுல இருந்து டிவில வர விளம்பரங்கள் மீது பிரமிப்பு அதிகம், இந்த பொருளுக்கு எப்படி விளம்பரம் பண்ணலாம், இதை எப்படி மக்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்லலாம்னு யோசிச்சு நிறைய ஐடியா ஸ்கூல் படிக்குறப்பவே எழுதி வெச்சிருக்கேன். 12th முடிச்சுட்டு அப்பா கிட்ட என்னோட விருப்பத்தை சொன்னபோது உன்னோட இஷ்டம் போல செய்னு விஸ்காம் குரூப்ல சேர்த்து விட்டாரு. முடிச்சுட்டு ஒரு கம்பெனில ஒர்க் பண்ணிகிட்டே அட்வெர்டைசிங் பீல்ட்க்கு தேவையான கோர்ஸ் எல்லாம் படிச்சேன். என்னோட MD, எம் பி ஏ படி உன்னோட சொந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ண ஹெல்ப இருக்குனு சொன்னாரு, அவரு கம்பெனியில பார்ட் டைம் பண்ணிகிட்டே எம் பி ஏ முடிச்சேன்.

முடிச்சவுடனே நல்ல கம்பெனில அதிக சம்பளத்தோடு வேலை கிடைச்சுது, என்னோட பழைய MD ரொம்போ சந்தோசமா அனுப்பிவெச்சாரு. இப்ப மாதிரி எல்லாம் நான் அப்ப கிடையாது அம்மா தான் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் எல்லாம் அவங்ககிட்டதான் ஷேர் பண்ணுவ அப்படி என்னோட வேலை எல்லாம் பற்றி அவங்ககிட்ட நான் சொல்ல, ஒரு அம்மாவ எங்க பையன் அட்வெர்டைஸ்மென்ட்ல நடிக்க வர பொண்ண பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிவைங்கன்னு சொல்லிடுவானோனு பயந்து எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.

நான் கேட்டனு எனக்கு பிடிச்ச பீல்ட்ல ஒர்க் பண்ணவிட்டாங்க, அவங்க கேட்டு எதுக்கு முடியாதுனு சொல்லனுனு சரினு சொன்னேன். நான் சொன்ன ஒரே கண்டிஷன் என்னோட ஒர்க் நேச்சர புரிஞ்சுக்குற பொண்ண இருக்கணுங்குறது மட்டுந்தான். நிறைய இடத்துல பார்த்து பல காரணங்களுக்காக தட்டி போய்டுச்சு அந்த டைம்ல தான் ஸ்வாதியோட ஜாதகம் எங்களுக்கு வந்துச்சு பெருசா வசதி இல்லைனாலும் பொண்ணு படிச்சிருக்கு, அமைதியான டைப்பா தெரியறானு அம்மா சொன்னாங்க, போட்டோ பார்த்த எனக்கு வேண்டான்னு சொல்ல பெருசா காரணம் இல்லை. நான் சரினு சொன்னதும் மின்னல் வேகத்துல எல்லாம் நடந்து மூனே மாசத்துல கல்யாணம் முடிஞ்சுது.

கல்யாணத்துக்கு முன்னாடி பேசனுனு நினைச்சேன், அம்மா ரொம்போ பேசிக்காத தம்பின்னு சொன்னாங்க, ஸ்வாதியும் பெருசா பேசுறதுக்கு இண்ட்ரஸ்ட் காட்டுல. நானு மேரேஜூக்கு முன்னாடி முடிச்சு குடுக்க வேண்டிய ப்ரொஜெக்ட்ல பிஸி ஆகிட்டேன். இப்படி புரிஞ்சுக்காமயே மேரேஜ் முடிஞ்சுது. புரிதல் இல்லாத வாழ்க்கை அஸ்திவாரம் இல்லாத கட்டிடத்தை போன்றதுனு அப்ப எனக்கு புரியல. மேரேஜூக்கு அப்புறமும் அடிப்படை புரிதலே இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கிட்டோம்.

ஸ்வாதி எப்பவும் அதிகமா பேச மாட்டா, என்னோட எல்லா வேலையும் அவதான் செய்வா ரொம்போ நல்ல சமைப்பா, அப்பா, அம்மா கிட்ட எப்பவும் மரியாதையா இருப்பா. அப்ப அரவிந்த் காலேஜ் பைனல் இயர் படிச்சிட்டு இருந்தான் அதுனால அவன் வீட்டுல இருக்க நேரம் ரொம்போ குறைவு, அதைவிட அவன் ஸ்வாதிகிட்ட பேசுறது ரொம்போ குறைவு. நான் எவ்வளோ லேட்டா வந்தாலும் கோவிச்சுக்கிட்டதே கிடையாது. எனக்கு அது வசதியா இருந்தது, கேரியர்ல அடுத்த லெவெலுக்கு போக நிறைய ஒர்க் பண்ண வேண்டியிருந்தது.

இப்படி இருந்த எங்க லைப்ல, 5 மாசம் கழிச்சு ஸ்வாதி கர்ப்பமா இருக்குறதா சொன்னாள். வீட்டுல எல்லாரும் ரொம்போ சந்தோசமா இருந்தோம். அந்த டைம்ல எனக்கு ஒரு 15 நாள் வெளியூர் போக வேண்டிய வேலை வந்துச்சு, அப்ப ஸ்வாதி நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமானு கேட்டா, எப்பவும் அவங்க அம்மா இல்லைனா ஸ்வாதியோட தங்கச்சிதான் அவளை வந்து பார்த்துட்டு போவாங்க. ஸ்வாதி தங்கச்சி வீட்டுக்கு வந்த ஸ்வாதிகிட்ட பேசுறத விட அதிக நேரம் என்கிட்டதான் பேசுவா, அவளுக்கு அட்வெர்டைசிங் பீல்ட்ல இண்ட்ரஸ்ட் இருந்துச்சு அதுனால அவ என்கிட்ட அதை பத்தியெல்லாம் பேசிட்டு இருப்பா. இதுதான் முதல் முறை ஸ்வாதி அங்க போறேன்னு கேட்டது. நானும் 15 நாள் இருக்க மாட்டேன் அவ அங்க இருக்கட்டுன்னு நினைச்சு அனுப்பிவெச்ச எனக்கு நானே வெச்சுகிட்ட சூனியம் அது.