Nandhavanam - 12 in Tamil Love Stories by Narumugai books and stories PDF | நந்தவனம் - 12

Featured Books
  • അമീറ - 10

    ""എന്താടാ നീ എന്നെ ഇങ്ങനെ നോക്ക്ണേ..""റൂമിലേക്ക് കയറി വരുന്ന...

  • MUHABBAT..... - 11

                      MUHABBAT......ഭാഗം - 11കോളേജ് വിടുന്ന കൃത്...

  • MUHABBAT..... - 10

                 MUHABBAT......ഭാഗം - 10ഒരു മലയാളിയായ അവള് corre...

  • താലി - 8

             ഭാഗം 7വീട്ടിൽ എത്തിയപ്പോൾ അമ്മു ബ്രേക്ഫാസ്റ്റ് എല്ല...

  • അമീറ - 9

    ""  ഇത് അമീറ അല്ലേ  സംസാരിക്കുന്നത്..""?"അതെ ഞാൻ തന്നെയാണ്....

Categories
Share

நந்தவனம் - 12

விக்ரம் சொன்னதை கேட்டு அர்ஜுன் மட்டுமல்ல, சாவித்ரி, சந்தியா, கதிர் அனைவருக்குமே அதிர்ச்சி. நீங்க என்ன சொல்ரீங்க விக்ரம் என்று கேட்ட அர்ஜுனிற்கு, சதாசிவம் பதில் கூறினார். என்னோட பையன் சொல்றது சரிதான் தம்பி, உங்க அதிர்ச்சி எனக்கு புரியுது உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நந்தனா அவளோட விருப்பத்த எங்ககிட்டத்தான் சொன்னா, அவளை உங்ககிட்ட சொல்ல சொன்னதே நான்தான்.

என்னோட பொண்ண பற்றி எனக்கு நல்ல தெரியும் அவ ஒரு முடிவு எடுத்தா அதுல இருந்து அவ்வளவு ஈசிய மாறமாட்டா இது அவளோட வாழ்க்கை விஷயம், உங்கள கல்யாணம் பண்ணிக்க நாங்க சம்மதிக்கலைனா கண்டிப்பா அவ அதை மீற மாட்டா, ஆனா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒதுக்கவும் மாட்டா. எனக்கு என் பொண்ணோட விருப்பம் முக்கியம், அதேசமயம் உங்கள பத்தியும் தெரிஞ்சுக்கனும், அதுக்குத்தான் அவளை உங்ககிட்ட சொல்ல சொன்னன். நீங்க கதிர் கிட்ட அவளுக்கு எடுத்து சொல்ல சொல்லுவீங்க அதிகபட்சம் விக்ரம் கிட்ட பேசுவீங்கனு நினைச்சேன், என்கிட்ட வந்து இப்படி நேரடியா பேசுவீங்கனு நானே எதிர்பார்கல.

என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனுனு நினைக்குறீங்க, ஒரு பொண்ணோட அப்பா மனநிலை எப்படி இருக்குனு யோசிக்குறீங்க கண்டிப்பா என்னோட பொண்ண நல்ல பார்த்துப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. நிதானம யோசிச்சு உங்க முடிவ சொல்லுங்க என்று பேசி முடித்தார் சதாசிவம்.

அர்ஜுனிற்கு தன்னை சுற்றி நடக்கும் எதையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவனைப் பொறுத்தவரை நந்தனா யாழினிக்காக இந்த திருமணத்தைக் கேட்கிறாள். இவ்வளவு சொன்ன சதாசிவமும் என் பொண்ணின் விருப்பம் என்று சொன்னாரே தவிர அது என்ன விருப்பம் என்று சொல்லாமல் விட்டுவிட்டார். அர்ஜுன் அது யாழினிக்கு அம்மாவாகும் அவளது விருப்பம் என்று எண்ணிக்கொண்டான்.

அர்ஜூனால் எதையும் யோசிக்க முடியவில்லை, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான். யாரும் யாருடனும் பேசாமல் அவர்கள் அறைக்குள் சென்றுவிட்டனர். நந்தனா அறைக்குள் வந்த கதிர், அப்பா சொன்னது கேட்டுச்சா என்றான், மௌனமாக தலையசைத்தாள் நந்தனா. என்ன மச்சான் துள்ளி குதிச்சு சந்தோசப்படாம இப்படி இருக்க என்று கேட்ட கதிரை பார்த்தவள், அம்மாக்கு இதுல இஷ்டம் இல்லை. எல்லாரும் சந்தோசமா சம்மதிக்கட்டும் அப்புறம் துள்ளி குதிக்கலாம் என்றாள். நீ சொல்றதும் சரிதான் என்று சொன்னவன் அங்கிருந்து வெளியேறினான்.

நந்தனா சொன்னதுபோல தனக்கு சம்மதம் இல்லை என்று சாவித்ரி சதாசிவத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஏன் சாவித்ரி இவளோ வருஷம் என்கூட வாழ்ந்திருக்க என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா என்று சதாசிவம் கேட்க, என்னங்க பேசுறீங்க உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனா அவ ஆசைபட்டான்னு எப்படிங்க நம்ப பொண்ண ஒருத்தருக்கு இரண்டாவது மனைவியா என்று சொல்லமுடியாமல் நிறுத்தினாள்.

சாவித்ரி, நந்தனா அவளோட விருப்பத்த சொன்ன உடனே டிடெக்டிவ் ஆட்கள் வெச்சு அர்ஜுன் பத்தியும் அவரோட குடும்பத்தை பத்தியும் விசாரிச்சேன் அந்த பையன் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் சொல்றேன் அப்புறம் நீ சொல்லு, என்று அர்ஜுன் பற்றி அவனது முதல் திருமணம் பற்றி கூறினார். கேட்டுக்கொண்டிருந்த சாவித்ரி இப்படியும் மனுசங்க இருக்காங்களா? என்று எண்ணி அருவறுத்தாள்.

பாவம் சாவித்ரி அந்த பையன் எந்த தப்பும் செய்யாம வாழ்க்கையை தொலைச்சிட்டு தன்னோட பொண்ணுக்காக மட்டும் வாழ்ந்துட்டு இருக்கான். அர்ஜுன் கண்டிப்பா நந்தனாவை கையில வெச்சு தாங்குவான் என்றார் சதாசிவம். நந்தனாவின் விருப்பம், உங்க பொண்ணு வாழ்க்கை நல்லபடியா அமையனும் என்று சொன்ன அர்ஜுன், தற்போது சதாசிவம் சொன்ன விஷயங்கள் என்று அனைத்தும் சாவித்ரியை ஒரு முடிவெடுக்க வைத்தன. அவள், நந்தனா அர்ஜுன் திருமணத்திற்கு முழுமனதோடு சம்மதித்தார். காலை விடிந்ததும் மகளிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டு உறங்கி போனார் சாவித்ரி.

சந்தியாவும் விக்ரமிடம் என்னங்க நீங்களும் மாமா மாதிரியே பேசுறீங்க என்று புலம்பிக்கொண்டிருந்தாள், அர்ஜுன் விடோவர் அப்படிங்குறத தவிர எனக்கு அவரை வேண்டானு சொல்ல பெருச காரணம் இருக்க மாதிரி தெரியலை. விடோவர் அப்படிங்குற காரணம் போதாதா? என்று கேட்ட சந்தியாவை பார்த்தவன் அன்னைக்கு அப்பா கேட்டது மறந்திடுச்சா சந்தியா? நம்ப சேர முடியாம போயிருந்தா நீ என்ன செஞ்சிருப்ப, நந்தனாவுக்கு அந்த வலிய கொடுக்க நான் தயார இல்லை என்ற விக்ரம் சந்தியாவை யோசிக்கவிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டான்.

விக்ரம் சொன்னதை யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்த சந்தியாவிற்கு, தீடீரென இடுப்பை வலிப்பது போல இருந்தது, ரொம்போ நேரம் உக்காந்திருந்ததால் வலிக்கிறது போல என்று நினைத்து எழுந்து படுக்கச் சென்றாள், ஆனால் வலி விட்டு விட்டு வரத் தொடங்கியது, ஒரு கட்டத்தில் அவளால் வலியைத் தாங்க முடியாமல் விக்ரமை எழுப்பினாள். அடுத்த அரைமணிநேரத்தில் சந்தியாவை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மொத்த குடும்பமும் வெளியில் காத்துக்கொண்டிருந்தது.

அனைவரையும் இரவு முழுவதும் விழித்திருக்க வைத்துவிட்டு விடியும் வேளையில் இந்த உலகிற்கு வந்தான் விக்ரமின் மகன்.  பயத்துடன் காத்திருந்தவர்கள் டாக்டர் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர். நந்தனா தன் அண்ணனுக்கு வாழ்த்துகள் சொல்ல அவளை அன்போடு அணைத்துக்கொண்டான் விக்ரம்.

நர்ஸ் குழந்தையைக் கொண்டுவர சாவித்ரி வாங்கிக் கொண்டார். நந்தனாவும், கதிரும் சிறு ரோஜா மொட்டுப்போல இருந்த குழந்தையைப் பார்த்து ஆர்ப்பரித்தனர். விக்ரமிற்கு உலகையே வென்றதுபோலத் தோன்றியது, சதாசிவம் தன் பேரனின் கண்முன் சொடுக்கிட கண்களை மலர்த்தி பார்த்த குழந்தையைக் கண்டு அனைவரும் சிரித்தனர். வெகு நாளைக்கு பிறகு அந்த குடும்பம் மகிழ்ச்சியோடு இருந்தது.

அறைக்கு மாற்றப்பட்ட சந்தியாவைக் காணச் சென்றான் விக்ரம், கண்மூடி சோர்ந்து போய் படுத்திருந்த மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான், அந்த முத்தத்தில் கண் முழித்தவள் கணவனை பார்த்து புன்னகைத்தாள். அவள் குழந்தையைப் பற்றிக் கேட்க, நம்ப வீட்டுல திரும்ப சந்தோசத்தைக் கொண்டுவந்திருக்கிறான் நம் மகன், என்று சொன்னவன் குழந்தையைக் கொண்டு வந்து அவளிடம் காட்டினான்.

உள்ளே வந்த சாவித்ரியும், சதாசிவமும் சந்தியாவின் உடல் நலத்தை விசாரிக்க, நந்தனாவும், கதிரும் ஆளுகொருபுரம் சந்தியாவை அணைத்துக்கொண்டனர். அதைப் பார்த்த விக்ரம் டேய் நீங்க ஆளுகொருபுரம் உக்காந்துகிட்டா நான் எங்கட போகட்டும் என்றவனிடம், அதுதான் பையன் வந்தாச்சுல அவனை கொஞ்சுங்க, எங்களோட டார்லிங்கை நாங்க பார்த்துகிறோம் என்றான் கதிர்.

அவனை முறைத்த விக்ரம் வீட்டுலயே ரெண்டு வில்லங்கம் வெச்சிருக்கேன் முதல்ல உங்க ரெண்டு பேருக்குக் கல்யாணம் செஞ்சுவெக்கணும் அப்பதான் நான் நிம்மதியா இருக்க முடியும் என்றவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

சாவித்ரி மகளிடம் திரும்பி நந்து நீ வீட்டுக்குப் போய் நான் சொல்ற மாதிரி சமைச்சு எடுத்துட்டு சந்தியாக்கு டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடு என்றார். பல நாட்களுக்குப் பிறகு தாய் தன்னுடன் பேசிய சந்தோஷத்தில் அவரை அணைத்துக்கொண்டு அழ தொடங்கினாள் நந்தனா.

சாவித்ரிக்குமே கண்கலங்கியது இருந்தாலும் மகளை சமாதானம் படுத்தும் பொருட்டு அச்சோ இப்படி அழுதா என் அத்தை ஒரு அழு மூஞ்சுனு உன்னோட மருமகன் நினைக்கப்போறன் என்று சொன்னவரைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். நந்தனாவும் கண்களை துடைத்துக் கொண்டு நான் ஒன்னு அழு மூஞ்சு இல்லை என்றாள்.

அந்த சிறு மழலையின் வரவு அந்தக் குடும்பத்திற்கு இழந்த மகிழ்ச்சியை மீட்டுக்கொடுத்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு சந்தியாவையும் குழந்தையையும் வீட்டுக்குக் கூட்டி வந்தனர். அன்று மாலை ரேவதியிடம் இருந்து நந்தனாவிற்கு அழைப்பு வந்தது. ஒரு நிமிட யோசனைக்கு பிறகு போனை அட்டென்ட் செய்தவள் ஸ்பீக்கரில் போட்டாள், ரேவதி பேசியது ஹாலில் இருந்த அனைவருக்கும் கேட்டது.

ஹலோ..நந்தனா, நான் ரேவதி பேசுறமா, யாழினியோட பாட்டி

சொல்லுங்க ஆன்ட்டி எப்படி இருக்கீங்க, யாழினி எப்படி இருக்க

நாங்க நல்ல இருக்கோம், யாழினிதான் உன்ன பார்க்கனுன்னு தினம் கேட்குறா, உனக்கு உடம்பு சரி இல்லை ஆபீஸ் வந்தே ரெண்டு வாரம் ஆச்சு, உன்ன தொந்தரவு செய்யவேண்டான்னு அர்ஜுன் சொல்லிட்டான், அதுதான் இப்ப எப்படி இருக்கனு கேட்கலானு கூப்பிட்டேன்.

நல்லா  இருக்கேன் ஆன்ட்டி இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை.

உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லைனா கொஞ்ச நேரம் வந்து யாழினியப் பார்த்துட்டு போகமுடியுமா, இல்ல நான் வேணுனா அவளை அங்க கூட்டிட்டு வரட்டுமா என்றார்.

அதுவந்து ஆன்ட்டி, என்று நந்தனா என்ன சொல்வது என்று தெரியாமல் இழுக்க, அவளிடம் இருந்து போனை வாங்கிய சாவித்ரி, நான் நந்தனா அம்மா பேசுறங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?  என்று விசாரித்துவிட்டு. நந்தனாவே சிறிது நேரத்தில்  யாழினியைப் பார்க்க அங்கு வருவாள் என்று கூறி போனை வைத்தார்.

நந்தனா தாயை நம்பமுடியாமல் பார்த்தாள், அவளைப் பார்த்த சாவித்ரி சொன்னது காதுல விழுகலையா கிளம்பி  போய் பார்த்துட்டு வா, போகும்போது அவளுக்கு சாப்பிட எதாவது வாங்கிட்டு போ, என்று சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் சென்றுவிட்டார். விக்ரம் கதிரிடம் நீயும் அவகூட போய்ட்டுவாடா என்று சொல்லிச் சென்றான். சந்தியாவோ, நந்து யாழினிய ஒருவாரம் கழிச்சு இங்க கூட்டிட்டு வர சொல்லு குட்டியப் பார்த்தா அவ செம ஹாப்பி ஆயிடுவா என்றாள். இங்க என்னடா நடக்குது என்று கதிரிடம் கேட்டவளைப் பார்த்து சிரித்தவன், எல்லாருக்கும் சம்மதமுன்னு அவங்க அவங்க ஸ்டைலில் சொல்லிட்டுப் போறாங்க என்றான்.

அவனுடன் கிளம்பி சென்றாள் நந்தனா, என்ன மச்சான் எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க இன்னும் ஏன் கவலையா  இருக்க என்று கேட்டான் கதிர். ஹ்ம்ம் எல்லாரும் ஓகே சொன்னது சரி, இப்ப பிரச்சனை அய்யனார் தான் அவரை யாரு மலை இறக்குறது, இன்னைக்கு நான் யாழினியைப் பார்க்கப் போறதுக்கே என்ன செய்யப்போறாரோன்னு பயமா இருக்கு என்றாள் நந்தனா.