Nerungi Vaa Devathaiye - 26 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 26

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 26

ரஷ்மியும் ராகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்ன மேடம் சொல்லுறீங்க என்றான் ராகவ். ஆமா நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். அவர் என்னை மரியாதையா நடத்துற விதம் எனக்கு பிடிச்சி போச்சு என்றாள். இது காலேஜ் மேனேஜ்மெண்ட்டுக்கு தெரிஞ்சா உங்க வேலைக்கே பிரச்சனை ஆயிடுமே என்றாள் ரஷ்மி. இந்த வேலை போனா வேறு வேலையா கிடைக்காது என்றாள் சௌமியா. சரி மேம் அப்ப கிளம்புறோம் . இதையாவது கொஞ்சம் ரகசியமா வைங்கப்பா ரெண்டு பேரும் என்றாள். ஓகே மேம். ரஷ்மியும் ராகவும் வீட்டுக்கு போயும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
ரஷ்மியை வீட்டில் விட்டான் ராகவ். பாவம் மேம் சின்ன பொண்ணு என்றாள் ரஷ்மி. அதைப்பத்தி உனக்கென்ன கவலை என்றான். அவருக்கு 15 வயசுல பொண்ணு இருக்கு எப்படி சரியா வரும் பிரதீபா ஒத்துப்பாளா என்றான் ராகவ். எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு என்றாள் ரஷ்மி. சரி நான் குளிக்க போறேன்.. நானும் வர வா ஆசைய பாரு உனக்கு நாளைக்கு பார்க்கலாம் என்றாள் . எதை நீ குளிக்கறதையா டேய் மணியாச்சு நீ கெளம்பு. ஒரு முத்தம் கொடுக்கலாமே என்றான். போனா போகுது என்று கிட்டே நெருங்கி வந்தாள் . அவள் இடுப்பை சேர்த்து அணைத்தான். சீக்கிரமே twins நமக்கு வேணும் என்றான் அவள் காதுகளில் . சீ என்று விலகினாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

கிருஷ்ணன் பெரிய கில்லாடியாக இருக்கிறார். தன்னை விட வயது சிறிய பெண்ணை பிடித்து விட்டார் என எண்ணிக்கொண்டான் ராகவ். அருண் கிட்ட சொல்லலாமா என யோசித்தான். பாவம் மேம் அவர்களுக்கு இப்போதுதான் ஆறுதல் கிடைத்திருக்கிறது அதை ஏன் கெடுப்பானேன் என நினைத்தான்.கிருஷ்ணன் பிரதீபாவிடம் பேசினார். உனக்கு சௌமியா ஆண்ட்டியை பிடிச்சிருக்கா என்றார். ம் அவங்க நல்லா caring ஆ இருக்காங்க என்றாள். எதுக்கு அப்பா திடீர்னு கேக்கறீங்க என்றாள் பிரதீபா. சும்மாதான் கேட்டேன் பொய் சொல்லாதீங்க உங்களுக்கு அந்த ஆண்ட்டியை பிடிச்சிருக்கா ?ம் ஆனா உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்றார் கிருஷ்ணன். நான் கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்லட்டுமா ? ஓ தாராளமா என்றார். மகளின் சம்மதமே பெரிதென நினைத்தார் கிருஷ்ணன். சௌமியா கிருஷ்ணனையும் ,பிரதீபாவையும் வீட்டுக்கு லஞ்ச் சாப்பிட அழைத்திருந்தாள். வீடு ரொம்ப நல்லா இருக்கு என்றாள் பிரதீபா. சண்டே என்பதால் சௌமியா ஃப்ரீ ஆக இருந்தாள் . எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் என்றார் கிருஷ்ணன். ராகவ் வரவில்லையா என்றார். இல்லை சரி நானே ஃபோன் பண்ணி கூப்பிடுகிறேன் என்றாள் பிரதீபா.


அண்ணா எங்கிருக்கிறீர்கள் நான் பிரதீபா பேசுகிறேன் என்றாள். நாங்கள் சௌமியா மேம் வீட்டில் இருக்கிறோம் நீங்கள் ரஷ்மி அக்காவை கூப்பிட்டு கொண்டு வாருங்கள் என்றாள். ம் கொஞ்ச நேரம் ஆகும் எனக்காக வெயிட் பண்ணாமல் சாப்பிடுங்கள் என்றான். அதெல்லாம் முடியாது நீங்கள் வாருங்கள் என்றாள். ரஷ்மிக்கு ஃபோன் செய்தான். அதுக்குள்ளே விருந்தா? சூப்பர் என்றாள். ராகவ் ரஷ்மியை வீட்டில் இருந்து பிக் அப் செய்து கொண்டான். என்ன பேசுவது கிருஷ்ணன் சாரிடம் என்றாள். வாங்க மாப்பிள்ளை என்று கூப்பிடு என்றான் சிரித்துக்கொண்டே.உனக்கு எல்லாம் விளையாட்டுத்தான் என்றாள். உள்ளே நுழையும் போதே வரவேற்றார் கிருஷ்ணன். என்னப்பா உனக்காக எல்லோரும் காத்திருக்கிறோம் என்றார். சாரி சார் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது என்றான். ரஷ்மி கிச்சன் உள்ளே போனாள் , உள்ளே பிரதீபாவை பார்த்ததும் மகிழ்ந்தாள். ஹாய் ரஷ்மி அக்கா அண்ணா எங்கே என்றாள். அவன் எங்கே என்னை தனியா விடுவான் இதோ வந்துவிட்டான் என்றாள்.சாக்லேட் ஒன்றை பிரதீபாவுக்கு கொடுத்தான் ராகவ். எல்லாம் தயாராகிவிட்டது . ராகவ் இவற்றை டைனிங் டேபிள் மேல் வைக்க உதவி செய் என்றாள் சௌமியா.

கிருஷ்ணன் மனம் விட்டு பேசினார். தனக்கு சொத்து இருக்கிறது ஆனால் என் பெண்ணை பார்த்துக்கொள்ள எனக்கு பிறகு யாருமில்லை. பிரதீபாவுக்கும் இதில் சம்மதம் தான் அதனால்தான் இந்த விருந்தே சௌமியா அரேஞ்ச் செய்திருக்கிறாள். ஆண்ட்டி சாப்பாடு சூப்பர் என்றாள் பிரதீபா. கொஞ்ச நேரம் ராகவ்,ரஷ்மி, பிரதீபா கேரம் விளையாடினார்கள். கிருஷ்ணன் சௌமியாவிடம் பேசிக்கொண்டிருந்தார். புதிய இசை அறிமுகம் செய்வதற்கான ஏற்பாட்டை தான் ஆரம்பித்து விட்டதாக சௌமியா சொன்னாள் . ராகவுடைய மியூசிக் மாஸ்டரையும் பேனல் மெம்பர் ஆக சேர்க்கும்படி சொன்னார் கிருஷ்ணன். அதன்படி கிருஷ்ணன், சௌமியா, மியூசிக் மாஸ்டர் அதோடு அருணும் பேனல் மெம்பர் ஆக இருப்பார்கள். சரி கிளம்பலாமா பிரதீபா விட்டால் நாள் பூரா விளையாடி கொண்டிருப்பாள் என்றார் கிருஷ்ணன். சரி ராகவ் அண்ணா சரி ஆண்ட்டி, ரஷ்மி அக்கா பை நான் போய் வருகிறேன் என்றாள்.

auditon வைக்கிறார்கள் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது காலேஜில் . குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் தி ஈகிள்ஸ் குழு பற்றி நல்ல ரீச் இருந்தது. நிறைய பேர் அப்ளை செய்திருந்தார்கள். பாடும் திறமை மட்டும் இல்லாமல் வாசிக்கும் திறமை கொண்டவருக்கும் வாய்ப்புகள் வழங்கபட்டது, முதல் இரண்டு இரண்டு சுற்றுகள் முடிவில் 4 பேர் தேறியிருந்தார்கள். எல்லோரும் சூப்பர் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள், அருண் டெஸ்ட் வைத்திருந்தான். அருண் வைத்த கடினமான தேர்வுகளில் பாஸ் ஆனது இரண்டு பேர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இறுதியில் பேனல் மெம்பர்ஸ் மதிப்பெண்படி ஸ்ருதி என்ற ஃபர்ஸ்ட் இயர் பெண் செலக்ட் செய்யப்பட்டாள். கரகோஷம் அதிகமாய் இருந்தது. பேனல் மெம்பர்களுடன் கை குலுக்கினாள் .கிருஷ்ணனும் மியூசிக் மாஸ்டரும் சேர்ந்து ஸ்ருதியை ஈகிள்ஸ் குழுவின் புதிய மெம்பர் ஆக அறிவித்தனர். ஸ்ருதிக்கு ஒரு ட்ராஃபி பரிசாக வழங்கப்பட்டது. எல்லோரையும் அறிமுகப் படுத்தி வைத்தாள் சௌமியா. ஜோ ,ரஷ்மி, தென்றல்,அருண் ,ராகவ் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். சுகன்யாவுக்கு நினைவு பரிசு வழங்கபட்டது.

அருண் பூஜாவுக்கு முதலில் ஸ்ருதி செலக்ட் ஆன விஷயத்தை சொன்னான். அவளுக்கும் அதில் மகிழ்ச்சிதான். ஸ்ருதியை பூஜாவுடன் வீடியோ காலில் பேசும்படி செய்தான் அருண். நான் நீங்க பாடுறத பாத்திருக்கிறேன் உங்க மியூசிக் எனக்கு ரொம்ப பிடிக்கும் பூஜா என்றாள் ஸ்ருதி.தாங்க்ஸ் ஸ்ருதி ஆல் தி பெஸ்ட் ஸ்ருதி . நல்ல தைரியமா பெர்ஃபார்மன்ஸ் பண்ணனும் என்றாள் பூஜா. ஜோ கூட சற்றே டென்ஷன் ஆக இருந்தான். ராகவ் என்னடா இப்படி டைப் அடிக்கிற என்றான். என்ன இருந்தாலும் அழகா ஒரு பெண்ணை பார்த்தா இதெல்லாம் சாதாரணம் என்றான் ஜோ. ரொம்ப வழியாதே என்றாள் சுகன்யா. ராகவ் ரஷ்மி நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் நான் எப்பவும் உங்களை மறக்க மாட்டேன் என்றாள் ஸ்ருதி. ஸ்ருதியுடன் முதலில் அருண் கோஆர்டினேட் செய்து எல்லாம் சொல்லித்தருவான் என சௌமியா சொன்னாள். மியூசிக் மாஸ்டர் உங்க பாண்ட் ரொம்ப லக்கி இல்லேன்னா இப்படி ஒரு யங் டாலெண்ட் கிடைச்சிருக்க மாட்டாங்க என்றார். தாங்க்ஸ் மாஸ்டர் என்றனர் ராகவும் ரஷ்மியும்.

இரவு ஸ்ருதி ராகவுக்கு ஃபோன் செய்தாள். தி ஈகிள்ஸ் பற்றி கேட்டாள். எந்த மாதிரி இசை ராகவுக்கு பிடிக்கும் என்று பொதுவில் பேசினாள் . ரஷ்மி ஃபோன் செய்த போது ராகவ் ஃபோன் பிஸி ஆகிய இருந்தது. 11 மணிக்குத்தான் லைன் கிடைத்தது, என்ன ராகவ் அதற்குள்ளே ஸ்ருதியுடன் டிஸ்கஷனா ? அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா ஸ்ருதி மியூசிக் பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள். அதானே பார்த்தேன் என்று பேச்சை தொடர்ந்தாள். சௌமியா தன் கனவுகளை இசை மூலமாக நிறைவேற்ற நினைத்தாள் . கிருஷ்ணன் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார் என நினைத்தாள் . ஆனால் கல்யாணம் என்று வரும்போது எல்லாமே மாறிவிடுகிறதே என்றும் யோசித்தாள்.நாளை கோவிலுக்கு போக வேண்டும் ரஷ்மியை துணைக்கு கூப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்தாள் . மறு நாள் காலையில் 8 மணி போல ஃபோன் செய்தாள் ரஷ்மிக்கு. வருகிறேன் மேம் என்று கிளம்பி 10 நிமிடத்தில் வந்துவிட்டாள் . தாங்க்ஸ் ரஷ்மி என்றாள் சௌமியா. ஸ்ருதி எப்படி பழகுகிறாள். நன்றாக பழகுகிறாள். அவளுக்கு fusion மியூசிக் என்றால் ரொம்ப பிடிக்குமாம். இருவரும் கோவிலை சுற்றி வந்தனர். உனக்கு என்ன தோன்றுகிறது ரஷ்மி நான் கிருஷ்ணன் சாரை திருமணம் செய்து கொள்ளட்டுமா என்றாள். அவசரப்பட வேண்டாம் என்றே நினைக்கிறேன் என்றாள் ரஷ்மி. ம் அதுவும் சரிதான் ஒருமுறை அவசரப்பட்டு நான் படும் அவஸ்தை போதுமே என்றாள் சௌமியா.


வா இங்கே ஏதாவது சாப்பிட்டுவிட்டு போவோம் என்றாள் சௌமியா. வேண்டாம் மேம் ஏற்கனவே லேட் ஆகிவிட்டது ராகவ் இப்போதே ஃபோன் அடிக்க ஆரம்பித்துவிட்டான் என்றாள் . இருடா கொஞ்சம் மேம் கூட பேசிக்கொண்டிருக்கிறேன் என்றாள் போனில். சரி ரஷ்மி பார்த்து போ வேகமாக போகாதே வண்டியில் என்றாள். ஓகே மேம் . ராகவ் கூட ஸ்ருதி பேசிக்கொண்டிருந்தாள். வாங்க ரஷ்மி இப்போதான் உங்களை பத்தி பேசிகிட்டு இருந்தோம். சரி டைம் ஆச்சு நான் கிளாஸ் போறேன் என்றாள் ஸ்ருதி. என்ன விஷயம் எவ்வளவு ஸ்வாரஸ்யமா பேசுறா ஸ்ருதி என்றான் ராகவ். பாத்துடா பள்ளத்துல விழுந்துட போற என்றாள் ரஷ்மி. பூஜா என்ன சொன்னாளாம். அவ என்ன சொல்லுவா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கா. நீயும் ஸ்ருதி கிட்ட இருந்து கத்துக்கோ என்றான் ராகவ். ரஷ்மி முறைத்தாள். கொஞ்சம் ஓவரா போய் விட்டோமோ என்றெண்ணினான் ராகவ். ஸ்ருதி உண்மையில் என்ன நினைக்கிறாள் என்பது பற்றி சிந்தனையில் ஆழ்ந்தாள் ரஷ்மி.