Nerungi Vaa Devathaiye - 20 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 20

Featured Books
  • આઈ કેન સી યુ!! - 3

    અવધિ ને તે પ્રેત હમણાં એ સત્ય સારંગ ના સામે કહેવા માટે કહી ર...

  • મમ્મી એટલે?

    હેપ્પી મધર્સ ડે... પર(સ્કૂલ માં વકૃત સ્પર્ધા હતી)મમ્મી નું મ...

  • ભાગવત રહસ્ય - 278

    ભાગવત રહસ્ય -૨૭૮   પરીક્ષિત કહે છે કે-આ કૃષ્ણકથા સાંભળવાથી ત...

  • તલાશ 3 - ભાગ 40

    ડિસ્ક્લેમર: આ એક કાલ્પનિક વાર્તા છે. તથા તમામ પાત્રો અને તેમ...

  • એક જીગોલો કથા

    જીગોલા તરીકેનો અનુભવમારા વોટ્સએપ માં મેસેજ આવ્યો. મેસેજ માં...

Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 20

பூஜாவின் வருகைக்காக எல்லோருமே காத்திருந்தனர். அருண் சற்றே நெர்வஸ் ஆக இருந்தான். எல்லோருக்கும் தங்குவதற்கு அறை ஒதுக்கீடு செய்து கொடுத்தாள் சௌமியா. ஊட்டி குளிர் மிதமாக இருந்தது. எப்படியோ வெந்நீரில் குளித்துவிட்டு ரெடி ஆகி அருணுக்கு ஃபோன் செய்தாள் ரஷ்மி. என்ன அருண் ஏற்கனவே டிரைன் லேட் நாம் சீக்கிரமாக பிராக்டிஸ் துவங்க வேண்டும் என்றாள். நிச்சயமாக என்றான். ராகவ் தயாராகி வெளியே வந்து ரிசப்ஷன் அருகே நின்று கொண்டிருந்தான். ரஷ்மி வரும் முன் அவளுக்கு ஏதாவது போக்கே வாங்க வேண்டுமென்று நினைத்தான். ரிசப்ஷன் பெண்ணிடம் விசாரித்து அருகில் இருந்த கடையில் போய் போக்கே வாங்கி வந்தான். எங்கே போய் தொலைந்தாய் என ரஷ்மி போனில் திட்டிய போது இதோ வந்து விட்டேன் என்றான். போக்கேவை நீட்டியபோது ரஷ்மி ரொம்பவும் மகிழ்ந்து போனாள். சரி வா பயிற்சிக்கு நேரமாகிவிட்டது அதோடு அருண் நமக்காக காத்திருப்பான் என்றாள். ரஷ்மி, ராகவ், அருண், ஜோ மற்றும் சுகன்யாவும், தென்றலும் கூட ஆஜர் ஆகியிருந்தார்கள். மதியம் போல பூஜா வந்து விடுவாள் என்று சௌமியா சொன்னாள். அருண் நான் போய் பூஜாவை பிக்அப் செய்து கொள்கிறேன் என்றான். எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

மதியம் லஞ்ச் டைமின் போது பூஜாவிடம் இருந்து சௌமியாவுக்கு ஃபோன் வந்தது. மேடம் நான் வந்துவிட்டேன் . நான் அருணை அனுப்பி இருக்கிறேன் உன்னை அழைத்து வர என்றாள் சௌமியா . அருணா ?என்பதற்குள் பூஜா என்று எதிரில் நின்றான் அருண். சரி மேம் நான் அருணை பார்த்துவிட்டேன் வந்து விடுகிறேன் என்றாள். எப்படி இருக்கிறாய் பூஜா வெல்கம் to ஊட்டி என்றான். ம் நான் நன்றாய் இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய் என்றாள். பிராக்டிஸ் எல்லாம் எப்படி போகிறது. நன்றாகத்தான் போகிறது. நீ ஏதாவது சாப்பிடுகிறாயா ? சரி வா ஏதாவது சூடாக சாப்பிடுவோம் என்றான். ம் ஒன்றும் வேண்டாம் முதலில் மேம் பார்க்க வேண்டும் வா போவோம் என்றாள். சரி. அருண் அவளை ஹோட்டலுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தான். எல்லோரும் அவளை உற்சாகமாக வரவேற்றார்கள். சாரி கொஞ்சம் லேட் ஆகிவிட்டது என்றாள். பரவாயில்லை நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு 2 மணிக்கு வந்து விடு என்றாள் சௌமியா. சரி மேம். மேம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றாள் பூஜா. எனக்கென்ன நான் நன்றாய் இருக்கிறேன் என்றாள் சௌமியா.

ரஷ்மியும், ராகவும் அங்கே அருகில் இருந்த பார்க்கில் இருந்த ஊஞ்சலில் உட்காரந்திருந்தார்கள். பூஜா வந்து விட்டாள். இனி கவலையில்லை என்றான் ராகவ். நாம் ஒரேயடியாக அவளை புகழ வேண்டியதில்லை என்றாள் ரஷ்மி. ஓ ஏன் அப்படி சொல்லிவிட்டாய். சுகன்யா ஏற்கனவே தாழ்வுமனப்பான்மையில் சிக்கி தவிக்கிறாள். அதே சமயம் அருண் பூஜாவிடம் ரொம்பவும் வழிகிறான். ராகவ் சிரித்தான். இந்த பெண்களை புரிந்து கொள்ளவே முடியாதென்பது எவ்வளவு உண்மை என்றான். சரி வா இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இருக்கும அறைக்கு போவோம் என்றான். சரி அங்கே தென்றலும் சுகன்யாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். வாங்க வாங்க உங்களை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். ஏதாவது புதிதாக சேர்த்து இருக்கிறீர்களா என்றாள் தென்றல். ஆமாம் ராகவ் எழுதிய சோக பாட்டு ஒன்றை சுகன்யா பாட இருக்கிறாள் என்றாள் ரஷ்மி. என்ன சுகன்யா ஓகே தானே என்றான் ராகவ். நான் சோக பாடல் பாடாமல் இருந்தால்தான் அது புதுமை என்றாள். அதற்குள் பூஜாவும் அருணும் வந்து விட்டார்கள். எல்லாவற்றையும் செக் செய்தாள் பூஜா. சிலவற்றில் கரெக்ஷன்களும் சொன்னாள். எல்லோரும் பயிற்சியை துவங்கினார்கள். வழக்கம் போலவே அருண், பூஜா இணை குரல் அருமையாக இருந்தது.

4 மணி போல டீ இடை வேளையில் பூஜா ரஷ்மி கூட ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாள். என்ன ரஷ்மி அருண் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறான் என்றாள். இவள் மையமாக சிரித்தாள். எனக்கு ஒன்றும் நீங்கள் ஒன்று சேர்வதில் தடையில்லை என்றாள். ம் அதுதான் எனக்கு வேண்டும் நீ எனக்கு சப்போர்ட் பண்ணு கொஞ்சம் என்றாள் பூஜா. நிச்சயமாக. எல்லா இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்ம் சேஃப் ஆக வந்து சேர்ந்ததற்கு அருணுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்றான் ராகவ். அது சரி அருண் தான் அந்த underrated ஹீரோ வா . எல்லா வேலையும் அருண் செய்கிறான் கிரெடிட் எல்லாம் நீ எடுத்து கொள்கிறாய் ராகவ் என்று சிரித்தாள் பூஜா. ரஷ்மி சிறிதே டென்ஷன் ஆனாள் . ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அது என்னவோ உண்மைதான் என்றாள். ராகவ் நான் கொஞ்சம் வெளியே போய் விட்டு வருகிறேன் என்றான். சரி ராகவ் சீக்கிரமாய் வந்து விடு மேம் வந்தால் சத்தம் போடுவார்கள் என்றாள் ரஷ்மி. மறுபடி பயிற்சி துவங்கியது. ரஷ்மிக்கு ராகவ் இல்லாமல் இருப்பு கொள்ளவில்லை. இதை எல்லோரும் கவனித்தவாறே இருந்தனர். ரஷ்மிக்கு ஸ்வெட்டர் மாதிரி ஒன்றை வாங்குவதற்கு தான் போயிருந்தான் ராகவ்.

மாலை வேளையில் எல்லோரும் ரிலாக்ஸ் ஆக அமர்ந்து பாடல்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ராகவ் வாங்கி வந்த ஸ்வெட்டர் பற்றியும் பேச்சு அடிபட்டது. அழகாக இருக்கிறது ஸ்வெட்டர் என்றான் ஜோ. தாங்க்ஸ் என்றாள் ரஷ்மி. அது ஸ்வெட்டர் வாங்கி கொடுத்தவருக்குத்தான் சொல்ல வேண்டும் என்றான் ஜோ. எல்லோருக்கும் வாங்கி கொடுத்திருக்கலாம் நாம் 7 மணி போல ஷாப்பிங் போகலாம் என்றாள் சௌமியா. தாங்க்ஸ் மேம் என்றாள் பூஜா. அருண் அமைதியாய் இருந்தான். பூஜா அவனையே பார்த்தபடி இருந்தாள். பூஜா உங்கள் காலேஜ் டீம் மெம்பர் பற்றி சொல்லுங்களேன் என்றாள். பூஜா அது ஒரு ஜாலியான gang எனவும் அவர்களை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகவும் சொன்னாள். மணி 7 ஆனதும் எல்லோரும் கிளம்பினார். ராகவ், ரஷ்மி , தென்றல், சுகன்யா ஒரு டீம் ஆகிய இருந்தனர். பூஜாவுடன், அருணும் ஜோவும் சேர்ந்து கொண்டனர். சில பேருக்கு கண்ணே தெரிய மாட்டேன் என்கிறது என்றாள் பூஜா. ஆமாம் ஆமாம் ஒரே திசையில் பார்க்கிறார்கள் என்றான் ஜோ. போதும் என்னை கிண்டல் பண்ணியது என்றான் அருண். ஓ சாரி சாரி என்றாள் பூஜா. பூஜா சில திண்பண்டங்களை வாங்கி அருணுக்கு கொடுத்தாள். அருண் ஏதும் வேண்டாம் என்று சொல்லவில்லை.ஜோ அருண் நீதான் உன்னுடைய ஈகோ வை கொஞ்ச நாளுக்கு விட்டு விடேன் என்றான். ம் நானும் அதற்குத்தான் முயற்சி செய்கிறேன் என்றான்.

தென்றல் ராகவுக்கு ஒரு மங்கி cap வாங்கி கொடுத்தாள். எதுக்கு இந்த மங்கி cap என்றான் ராகவ். எல்லாம் பார்க்க அழகாய் இருக்கும் போது அதை விட்டு விட யாருக்குத்தான் மனசு வரும் என்றாள். புரிகிறது நான் இதை போட்டுக் கொள்கிறேன் என்றான். சுகன்யா ஒரு ஜெர்கின் வாங்கினாள். ரஷ்மி வாருங்கள் காப்பி சாப்பிடுவோம் என்றாள். அங்கே அருண் gang இருப்பதை பார்த்ததும் ரஷ்மி லேசாக திகைப்படைந்தாள் . பயப்படாதே ரஷ்மி சும்மா வா என்றான் ஜோ. என்ன பூஜா எல்லா இடங்களிலும் நீயாக இருக்கிறாய் என்றான் ராகவ். நான் நானாக இருக்கிறேன். ஆனால் சிலரை போல அல்லவே என்று ரஷ்மியை பார்த்தாள் . ரஷ்மி எல்லோருக்கும் சேர்த்து காப்பி ஆர்டர் செய்தாள்.இங்கே ரொம்பவும் காப்பி அருமையாக இருக்கிறது என்றாள் பூஜா.இரவு டின்னர் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். சௌமியாவுக்கு ஏதும் வாங்கி வரவில்லையே என்று ரஷ்மி யிடம் சொன்னான் ராகவ். நாளைக்கு ஃபங்சன் முடிந்தவுடன் அவர்களை அழைத்துப்போய் வாங்கி கொடுக்கலாம் என்றான். இரவு 11 மணி வரை பயிற்சி செய்தார்கள். சௌமியா தனிமையில் வாடுவதை எல்லோருமே உணர்ந்திருந்தார்கள். ராகவ் சௌமியாவுக்கு ஃபோன் செய்தான். என்ன ஆச்சு மேம் ஏன் எதையோ இழந்தது போல இருக்கிறீர்கள் என்றான். ஒன்றுமில்லை ராகவ் இங்கு இருக்கிற குழந்தைகளை நினைத்து பார்த்தேன் என்றாள். நாங்கள் இருக்கும்போது நீங்கள் எதற்கும் கவலைப்படக்கூடாது என்றான்.

மறுநாள் சாயங்காலம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எல்லா ஏற்பாடுகளையும் மேற்பார்வை பார்த்தாள் சௌமியா. அவளுக்கு திருப்தியாக இருந்தது. இதில் பெரிய வருமானமோ இல்லை நிதியோ கிடைக்க போவதில்லை எனினும் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும் என சௌமியா சொன்னாள். பூஜா குழந்தைகள் எல்லோருக்கும் சாக்லேட் வழங்க ஏற்பாடு செய்திருந்தாள். அதை அவளே எல்லோருக்கும் கொடுத்தாள். சிலர் பேசிய பிறகு நிகழ்ச்சி துவங்கியது. சௌமியா அதை ரசித்து கேட்டாள். குழந்தைகள் விரும்பிய பாடலை திரும்ப பாடவும் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டனர். பிறகு மீண்டும் தொடர்ந்தது. இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. எல்லோரும் பூஜாவையும் அருணையும் பாராட்டினார்கள். அவர்கள் இந்த குழந்தைகளுக்காக செய்த நிகழ்ச்சி நன்றாக இருந்ததாக சொன்னார்கள் விழா குழுவினர். மிகுந்த நன்றி தெரிவித்தனர். குழந்தைகளும் சுகன்யா பாடிய பாடலை என்ஜாய் செய்தனர். ராகவும், ரஷ்மியும் நிகழ்ச்சி வெற்றிபெற்றதை கொண்டாடினார்கள். பெரிய கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. சௌமியாதான் அதையும் ஏற்பாடு செய்திருந்தாள் . இரவு எல்லோரும் அவரவர் அறைக்கு திரும்பினர். தென்றலும் நல்ல உற்சாகத்துடன் இருந்தாள். அவள் ராகவுக்கு ஃபோன் செய்தாள். உன் பாட்டு நன்றாக இருந்தது என்றாள். தாங்க்ஸ் தென்றல் என்றான் . ஜோ டான்ஸ் பிரமாதமாக இருந்தது என்றாள்.என்னவோ எல்லாம் நல்லபடியாக நடந்ததாக கூறினான் ராகவ். பூஜா ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தாள். எல்லோருமே பூஜா விஷயத்தில் சற்று எமோஷனல் ஆக இருந்தனர்.