Nerungi Vaa Devathaiye - 18 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 18

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 18

என்ன விஷயம் மேம் சந்தோஷமா இருக்கீங்க என்றான் ராகவ். நாம எல்லோரும் ஊட்டி ட்ரிப் போறோம் . அருண் இப்போதான் சொன்னான் என்றாள் ரஷ்மி. சொல்லிவிட்டானா நானே உங்களிடம் முதலில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன் என்றாள் சௌமியா. மேலும் சில விஷயங்களை சொல்லிவிட்டு கிளாஸ் இருக்கு என்று கிளம்பிவிட்டாள். ரஷ்மியும் ராகவும் வகுப்புக்கு போன போது வகுப்பு தொடங்கி 10 நிமிடம் ஆகியிருந்தது. ஜோ சாயங்காலம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என தென்றலையும், ராகவையும் அழைத்திருந்தான். அருண் ஏற்பாடு தான் அது. மறுபடி ஒருமுறை நீங்கள் இருவரும் சேர்ந்தால் என்ன என்று கேட்டான். தென்றல் எதுவும் சொல்லவில்லை. ராகவ் அதெல்லாம் சரியா வராது அவளுடைய விருப்பங்கள் வேறு என்னுடைய விருப்பங்கள் வேறு இப்போது எதற்கு முடிந்து போன விஷயத்தை கிளறுகிறாய் ஜோ என்றான். என்ன ராகவ் அப்படி சொல்லிவிட்டாய் தென்றல் உன்னை பிரிந்து எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பது உனக்கு தெரியவில்லையா ? ம் அவனுக்கு எதற்கு என்னை பற்றி கவலை . விடு ஜோ நான் மாறிவிட்டேன். இப்போது என் மனதில் ராகவும் இல்லை காதலும் இல்லை என்றாள். அருண் அப்போது வந்தான், ராகவ் ஒரு முறை எனக்காக யோசித்து பாரேன் என்றான். என்னால் முடியாதென்றான் ராகவ். சரி அப்போது அனாவசியமாக இந்த மீட்டிங் தொடர வேண்டாம் என்றான் அருண். சரி என்றான் ஜோ. தென்றல் சொல்லிக்கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

இரவு ரஷ்மி ஃபோன் செய்திருந்தாள் சாயங்காலம் என்ன நடந்தது என்றாள். எல்லாம் அருண் செய்த வேலை தான் சும்மா இருந்த தென்றலை என்னை லவ் பண்ண தூண்டிவிட்டு பிரிந்த பிறகு இப்போது மறுபடி சேர்க்க முயற்சி செய்கிறான் என்றான். ம் நீ என்ன சொன்னாய். நான் முடியாதென்று சொல்லிவிட்டேன் . ஓ அதுதான் அருண் கோவமாய் இருக்கிறானா என்றாள் ரஷ்மி. நீ என்ன நினைக்கிறாய் ? நான் என்ன சொல்வது உன் மனசில் நான்தான் இருக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லாமல் இருப்பது உன் தவறு என்றாள். அதுவும் சரிதான் . நான் தென்றல் உடன் இப்போதுதான் breakup செய்திருக்கிறேன் அதனால் தான் என்னால் உன்னை உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை நானும் ஒரு சாதாரண ஆள்தானே என்றான். புரிகிறது ஆனால் இனியும் தாமதம் செய்யாதே அது நம் காதலுக்கு உலை வைத்து விடும் என்றாள். சரி ரஷ்மி ரொம்ப நேரமாக பேசுகிறாய் ஏதாவது கொடுக்கலாமே என்றான். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்றாள். எனக்கு நாம் லவ் பண்ணுறமா அப்படின்னே சந்தேகமா இருக்கு. நாளைக்கு மீட் பண்ணும் போது சொல்லுறேன் என்றாள் ரஷ்மி.

ரஷ்மி மனதிலும் ஆசைகள் இல்லாமல் இல்லை. அவசரப்படமுடியாது. நீண்ட கால காதல் என்பது ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதை எல்லாம் சமாளிக்க வேண்டும். வெறுமே டைம் பாஸ் மாதிரி இருந்தால் வேண்டும் என்றால் வைத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று யோசித்தாள். ஊரில் இருந்து பூஜா வந்திருந்தாள். ஒரு வேலையாக வந்திருந்தாள். எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் குறிப்பாக அருணுக்கு. எப்படி இருக்கிறாய் பூஜா என்று உரிமையாக விசாரித்தான். சௌமியா ,தென்றல், ஜோ, அருண், ராகவ் சுகன்யா எல்லோருடனும் லஞ்ச் சாப்பிட்டாள். அவளுக்கு இரண்டு நாட்கள் வேலை இருக்கிறது என்று சொன்னாள் . ரஷ்மி வீட்டில் தங்கி கொள்ளட்டும் என்று சௌமியா சொன்னாள். ரஷ்மியும் அதை வரவேற்றாள். ரஷ்மி பூஜாவோடு தங்குவது அருணுக்கு மகிழ்ச்சி. பூஜா அருண் பற்றி பேசுவாள் என எதிர்பார்த்தான். பூஜா ஊட்டி ட்ரிப் வர முடியுமா என கேட்க சொல்லி சௌமியாவிடம் சொல்லி இருந்தான் அருண். இப்போதுதான் வந்திருக்கிறாள் அதுக்குள்ள எதுக்கு என்றாள் சௌமியா. சும்மா கேளுங்க மேம் என்றான் அருண்.
பூஜா நீ வந்ததிலே அருண் ரொம்ப ஹாப்பி என்றாள் ரஷ்மி. ம் நானும் கவனிச்சேன் அவனுக்கு என் மேல ஒரு crush இருக்கத்தான் செய்யுது என்றாள்.

ராகவ் மாலை 7 மணி போல ரஷ்மி வீட்டுக்கு வந்தான். எவ்வளவு நேரம்தான் வீட்டுலேயே இருப்பாங்க பூஜா, நாம் எங்காவது போகலாம் என்றான். அருணையும் கூப்பிடலாமே என்றாள் ரஷ்மி. அருண் வருகிறாயா என்ற உடன் தயார் ஆகி வந்து விட்டான். அவன் பூஜாவை அவனுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டான். ரஷ்மி ராகவ் வண்டியில் எறிக்கொண்டாள். இங்கே நல்ல கிளைமேட் நாம் பீச் போவோமா என்றாள் பூஜா. திருச்சி வெயில் தாங்க முடியாது என்றும் சொன்னாள் . சௌமியா அவளை ஊட்டி ட்ரிப்புக்கு அழைத்திருப்பதாக பூஜா சொன்னாள். எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் அதோடு காலேஜ் பர்மிஷன் வேண்டுமே என்றாள். அதுவும் சரிதான் என்றான் அருண். பீச் மணலில் சிறிது தூரம் நடந்தார்கள். உனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறார்களா என்றான் ராகவ். அவனை அருண் முறைத்தான். இவ்ளோ அழகாக இருக்கிறார்களே என்று கேட்டேன் அருண் என்றான். பூஜா எதுவும் சொல்லாமல் சிரித்தாள். இந்த சிரிப்பு கூட அழகாகத்தான் இருக்கிறது என்றான் அருண். அருண் தன்னுடைய இமேஜ் பூஜா முன்னால் டேமேஜ் ஆகிவிட கூடாதென்பதில் கவனமாக இருந்தான். ரஷ்மி ,பூஜா, ராகவ், அருண் செல்பி எடுத்துக்கொண்டார்கள். நாளைக்கு சௌமியா மேம் அவர்களுடைய வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறார்கள். நான் வந்து அழைத்து போகிறேன் என்றான் அருண். சோ ஸ்வீட் ஆஃப் யு என்றாள் பூஜா.

இரவு டின்னர் முடிந்ததும் பூஜா சிறிது நேரம் ரஷ்மி கூட பேசிக்கொண்டிருந்தாள். நீயும் ராகவும் நல்ல பொருத்தம் என்றாள். தாங்க்ஸ் பூஜா என்றாள். எப்படி கமிட் ஆகாமலே லவ் பண்ணுகிறாய் என்றாள் பூஜா. ரஷ்மி விவரமாய் சொன்னாள் . ஓ அதுதான் டிஸ்டன்ஸ் மெயின்டய்ன் பண்ணுகிறீர்களா என்றாள். நாளை நீயும் வாயேன் என் கூட சௌமியா மேடம் பார்க்க. இல்லை அருண் அதை விரும்ப மாட்டான். நீ மட்டும் போய் வா என்றாள். ம் அது என்ன கணக்கு என்பது எனக்கு புரியவில்லை என்றாள் பூஜா. சுகன்யா மனதில் என்ன இருக்கிறது என்பது பற்றி அருணுக்கு கவலையில்லை. அவனுக்கு ரஷ்மி மனதில் இடம் பிடிக்க வேண்டும் அதுதான் குறி . மறுநாள் மாலை பூஜாவை பிக்அப் செய்தான். சௌமியா மேம் வீட்டுக்கு போவதற்கு முன்னால் இங்கே ஒரு சக்தி வாய்ந்த கோவில் இருக்கிறது அங்கு போய்விட்டு போவோம் என்றான். சரி என்றாள். கோவிலில் எப்படியாவது ரஷ்மி மனதில் இடம் பெற வேண்டும் என வேண்டிக்கொண்டான். சௌமியா ஏன் லேட் என்று கேட்டாள் . வருகிற வழியில் கோவிலுக்கு போய் வந்ததாக சொன்னான் அருண். சௌமியாவும் பூஜாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன பூஜா இந்த ஊர் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள். எல்லாம் லவ்லீ என்று சொன்னாள் . அருண் உன்னை ஊட்டிக்கு அழைத்து போக துடிக்கிறான் உன் விருப்பம் என்ன என்றாள் சௌமியா. எனக்கும் ஆசை தான் என்றாள். உங்கள் இசைக்குழுவில் ஒரு மியூசிக் passion ஃபயர் இருக்கிறது அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள்.

சௌமியா அவளுக்கு ஏதோ ஒரு ஸ்வீட் செய்து கொடுத்தாள். அதை பிரியமாக சாப்பிட்டாள் பூஜா.இன்னைக்கு நைட் போகனுமா ஊருக்கு ஆமா மேம் என்றாள். எத்தனை மணிக்கு 11 ஓ கிளாக் என்றாள். பார்த்து ஜாக்கிரதையாக போய்விட்டு வா பூஜா. அடிக்கடி வா என்றாள் சௌமியா. ரஷ்மி வீட்டுக்கு போகும் போதே மணி 10 ஆகிவிட்டது. வா பூஜா நானே உன்னை ஸ்டேஷனில் டிராப் செய்கிறேன் என்றான். கொஞ்சம் பொறு ரஷ்மியிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்றாள். ஓகே ஓகே என்றான். ரஷ்மி நான் கிளம்புகிறேன் சீக்கிரமே உன்னையும் ராகவையும் சேர்த்து பார்ப்பேன் என நினைக்கிறேன் என்றாள். தாங்க்ஸ் பூஜா என்றாள் ரஷ்மி.
அருண் அவளை ஸ்டேஷனில் விட்டான். அவளுடைய சீட் பார்த்து உட்கார வைத்தான். அவளது டிக்கெட் ஏ சி கம்பார்ட்மெண்ட் ஆக upgrade ஆகி இருந்தது. சரி கிளம்பட்டுமா என்று கேட்டான் அருண் என்ன அவசரம் உனக்கு என்றாள். அவளுடைய உடைகளை சரி செய்தவள் என்னை விட உனக்கு ரஷ்மியைத்தான் பிடித்திருக்கிறதா என்றாள். அவன் மௌனமாக நின்றான். அவள் அவனை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தமிட்டாள். ஐ லவ் யு அருண் என்றாள். உன்னை பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேன் என்றாள். டிரைன் கிளம்பி விட்டது. அருணுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு பிரியாவிடை கொடுத்தான்.

ரஷ்மி இருக்கும் மனதில் இன்னொரு பெண்ணா என குழம்பினான் அருண். ஜோவிடம் நடந்ததை சொன்னான். இது வேறயா என்ஜாய் பண்ணு மச்சி அருமையான பொண்ணு பூஜா. எனக்கு இப்படி ஒண்ணு வாய்க்க மாட்டேன் என்கிறதே என்றான். பூஜா எப்போது அருணை விரும்ப ஆரம்பித்தாள் என்பதே தெரியவில்லை.ரஷ்மிக்கு இது தெரிய கூடாது என நினைத்தான். பூஜா கொடுத்த முத்தம் இன்னும் அவனிடம் மணந்து கொண்டிருந்தது. ரஷ்மியை பார்க்கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது. என்ன ஒரு தைரியம் பூஜாவுக்கு . எப்படியும் ஊட்டி வருவாள் அப்போது கொஞ்சம் தெளிவுள்ளவளாக வருவாள். இப்போது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தான். பூஜா ஃபோன் பண்ணுவாள் என
எதிர்பார்த்திருந்த அருணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் சௌமியாவிடம்தான் பேசினாள். அவளுடைய கல்லூரியில் ஊட்டி ட்ரிப் பற்றி பேசுமாறு கேட்டதாக சொன்னாள் சௌமியா. என்ன அருண் ரெண்டு நாளாக என்னை பார்த்ததும் ஒளிகிறாயே என்ன விஷயம் என்று கேட்டாள் ரஷ்மி. பூஜா வேறு உன்னை பற்றியே பேசுகிறாள் என்ன விஷயம் என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவள் உன்னிடம் பேசினாளா என்னிடம் பேச மாட்டேன் என்கிறாள் என்றான். என்னவோ உங்களுக்கிடையில் நடந்திருக்கிறது என்றாள் ரஷ்மி. ம் நடந்துதான் இருக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான் அருண்.