Nerungi Vaa Devathaiye - 12 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 12

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 12

ரஷ்மி பர்த்டேவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ராகவ் நினைத்தான். எல்லோரையும் தனித்தனியே பார்த்து பேசினான். அவள் மறக்க முடியாத பர்த்டேவாக இது இருக்க வேண்டும் எனவும் நினைத்தான். அருணோ அவளிடம் எப்படி காதலை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் இருந்தான். ஜோ அவளுக்கென பிரத்யேகமாக ஒரு வாழ்த்து பாடலை பாடுவது என முடிவெடுத்தான். தென்றலும், ராகவும் ரஷ்மிக்கு ஒரு பட்டு சாரி வாங்கி வைத்திருந்தனர். குமாரும், சௌமியாவும் சேர்ந்து ஒரு மோதிரம் வாங்கினர். சுகன்யாவும் ஒரு கிப்ட் வாங்கி வைத்திருந்தாள். ஜோ எப்படியோ ராகவிடம் அருண் ரஷ்மிக்கு ப்ரபோஸ் செய்ய போவதை சொல்லிவிட்டான். நீ அதை தடுக்க கூடாது எனவும் சொல்லிவிட்டான். தேவையில்லாமல் அவர்கள் விஷயத்தில் தலையிட கூடாது என்றான். இதை கேட்ட ராகவ் திகைத்து போனான். தன்னால் ரஷ்மி இன்றி இருக்க முடியுமா என்றெல்லாம் யோசித்தான். சரி ஜோ ரஷ்மி விருப்பமே என் விருப்பம். அவள் விருப்பத்துக்கு எதிராக நான் எதையும் செய்ய மாட்டேன் என்றான் ராகவ். ரொம்ப தாங்க்ஸ் ராகவ்.அருண் ரொம்ப நாட்களாக ரஷ்மிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். நீ இடையில் புகுந்து கெடுத்து விடாதே என்றான். ம் எனக்கு புரிகிறது என்றான் ராகவ்.

சௌமியாவை பார்த்து பேச முடிவெடுத்தான் ராகவ். சௌமியாவுக்கு ஃபோன் செய்தான். சௌமியா வீட்டில் தான் இருக்கிறேன் வா என்றாள். என்ன ரஷ்மி பர்த்டே வேலையெல்லாம் எப்படி போகிறது என்றாள். அது வந்து நான் அதில் கலந்து கொள்ள போவதில்லை என்றான் . என்னாச்சு அருண் ஏதாவது சொன்னானா என்றாள். அதெல்லாம் இல்லை ஜோ தான் சொன்னான். அருண் ரஷ்மியை ப்ரபோஸ் பண்ண போகிறானாம். ம் அதுக்குத்தான் நீ மூஞ்சியை தூக்கி வைத்திருக்கிறாயா? அதெல்லாம் இந்த காலத்தில் சகஜம். அது ரஷ்மியின் விருப்பம். அவன் காதலை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் ரஷ்மியின் விருப்பம். நீ அதற்காக ஒதுங்கி போகாதே என்றாள். எனக்கு தயக்கமாய் இருக்கிறது. ஒருபுறம் தென்றல் வேறு இருக்கிறாள் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீ ஒதுங்கி போனால் தான் தவறு . ரஷ்மி உன்னை தவறாக நினைப்பாள். சரி இது எப்படி இருக்கிறது என்று மோதிரத்தை காட்டினாள். சூப்பர் மேடம். நானும் குமாரும் சேர்ந்து போய் ரஷ்மிக்காக வாங்கினோம். நீ ஒன்றும் கவலைப்படாதே அவள் மனதில் நீதான் இருக்கிறாய். யாராலும் அதை மறைக்க முடியாது . ரொம்ப தாங்க்ஸ் மேடம். இரு சாப்பிட ஏதாவது எடுத்து வருகிறேன் என்றாள். கேக் ஆர்டர் பண்ணிவிட்டாயா என்றாள் . ஓ பண்ணிவிட்டேனே என்றான்.

ரஷ்மி இரவு ஃபோன் பண்ணியிருந்தாள். எனக்காக என பர்த்டேக்காக ரொம்ப மெனக்கெடுகிறாய் உனக்கு என்ன வேண்டும் ராகவ் என்றாள். நீ எப்போதும் போல சந்தோஷமாய் இருந்தால் போதும் என்றான். சும்மா வசனம் எல்லாம் பேசாதே. நீ எப்போது உன் மனதை திறந்து சொல்கிறாயோ அப்போதுதான் நானும் சொல்வேன் என்றாள். ம் வேறு என்ன விசேஷம் என்றான். நானும் உனக்காக கிப்ட் வாங்கி வைத்திருக்கிறேன் என்றாள். ஏன் ரஷ்மி எனக்கு மட்டும் கிப்ட் அதெல்லாம் அப்படித்தான். சரி நாளைக்கு பார்க்கலாம் என்றாள். அருண் ரஷ்மியை விரும்புவதை ரஷ்மி தவிர எல்லோரிடமும் சொல்லிவிட்டான். இனி ரஷ்மி யிடம் சொல்ல வேண்டியதுதான் பாக்கி. அருண் வீட்டு மாடியில் பர்த்டே பார்ட்டி வைத்துக்கொள்ளலாம் என ஜோ சொன்னான். ராகவ் ஒன்றும் சொல்லவில்லை. தென்றல் காலையிலேயே தயார் ஆகிவிட்டாள் .
ரஷ்மியுடன் கோவிலுக்கு செல்ல. ராகவ் வரவில்லை. சுகன்யாவும் வந்திருந்தாள் .ராகவ் வரலையா என்றாள் ரஷ்மி. அவன் ஏதோ உன் பர்த்டே பார்ட்டி டெகரேஷன் பண்ண போயிருக்கிறான் என்றாள் சுகன்யா.

மூவரும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள். தென்றல் எப்படியாவது அருண் விருப்பத்தை ரஷ்மி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் . சுகன்யா அமைதியாய் இருந்தாள். கோவில் பிரகாரத்தை மூவரும் சுற்றி வந்தனர். ரஷ்மி சிவப்பு வண்ண சேலையில் அழகாய் இருந்தாள். தென்றல் இன்றைக்கு ஒரு முடிவு தெரிந்து விடும் என்று நம்பிக்கையோடு இருந்தாள். ரஷ்மிக்கு ஏதோ தன்னுடைய பர்த்டே பார்ட்டியில் நடக்க போகிறது என்பது மட்டும் தெரியும். அது என்னவென்று தெரியாது. ராகவை காலையில் இருந்து பார்க்கவில்லை. மதியம் லஞ்ச் பிரேக்கில் தான் பார்த்தாள். எங்கே ஓடிக்கொண்டே இருக்கிறாய் என்றாள். கொஞ்சம் வேலை அதுதான் என்றான். எப்படி இருக்கிறது பர்த்டே டிரஸ் என்றாள். நான் சொல்லித்தான் தீர வேண்டுமா ஆமா சொல்லிட்டு போ என்றாள். அப்போது அருண் வந்தான். என்ன ரஷ்மி பர்த்டே பார்ட்டிக்கு ரெடியா என்றான். நான் எப்பவுமே ரெடி என்றாள்.
பர்த்டே பார்ட்டிக்கு குமார் வரவில்லை என்று சொல்லிவிட்டார். சௌமியா மட்டும் வந்திருந்தாள் . sponser கிருஷ்ணன் வந்திருந்தார். அருண் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

எல்லோரையும் வரவேற்றான் ராகவ். ரஷ்மியை பேசுமாறு சொன்னான். ரஷ்மி தன்னுடைய இசைப்பயணம் பற்றியும் அதில் நண்பர்கள் துணை பற்றியும் பேசினாள். இந்த இசைபயணம் சிறக்க உதவிய எல்லோருக்கும் நன்றி என்று சொன்னாள். எல்லோரும் ஒருத்தர் ஒருத்தராக வாழ்த்து சொன்னார்கள். கேக் வெட்டிட்டு பேசலாமே என்று ஜோ சொன்னான். எல்லோரும் சிரித்தார்கள். அருண் பேசும்போது என்னுடைய மனதில் தோன்றிய காதல் தீ என்று ரஷ்மியை பற்றி சொன்னவுடன் எல்லோரும் சைலன்ட் ஆக இருந்தார்கள். ரஷ்மி நிமிர்ந்து அருணை பார்த்தாள் . அருண் ரஷ்மி நான் உன்னை விரும்புகிறேன் என்றான். மோதிரத்தை நீட்டினான். அவள் அதை வாங்கி கொள்ளவில்லை. தென்றல் மனது நூறு மடங்கு வேகமாக துடித்தது. அருண் எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்றாள். ராகவ் தன் பார்வையை திருப்பிக்கொண்டான். நீ நல்ல முடிவாக சொல்ல வேண்டும் என்றான் அருண். கேக் வெட்டி எல்லோருக்கும் குடுத்தாள் ரஷ்மி. தென்றல் ராகவின் கையை இருக்க பற்றி இருந்தாள். தென்றலும் ராகவும் எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் கொடுத்தார்கள். ரஷ்மி அதிகம் பேசவில்லை. சௌமியா அருண் இதை செய்வான் என எதிர்பார்த்திருந்தாள்.

ஜோ சிறப்பாக பாடினான். எல்லோருடைய வாழ்த்துகளுக்கு நன்றி சொன்னாள் ரஷ்மி. ஃபங்சன் சிறப்பாக முடிந்தது. தென்றல் நீ போ நான் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு வருகிறேன் என்றான் ராகவ். கிருஷ்ணன் விடை பெற்றுக்கொண்டார். இவனும் ரஷ்மியும் மட்டுமே இருந்தார்கள் அவள் போய் புடவையை மாற்றிக்கொண்டு வந்தாள். இப்போதும் அவள் அழகாய்த்தான் இருந்தாள். என்ன ராகவ் பிஸியாக இருப்பது போல நடிக்கிறாயா என்றாள். அப்படி எல்லாம் இல்லை. அப்படி என்றால் ஏன் காலை கோவிலுக்கு வரவில்லை என்றாள். அதெல்லாம் ஒரு காரணமும் இல்லை. தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதே . இன்று உன் பர்த்டே என்றான். நீ என்ன நினைக்கிறாய் அருணுக்கு சம்மதம் சொல்லட்டுமா என்றாள். உன் மனது கண்ணாடி இல்லையே எனக்கு தெரிய. நீயே யோசித்து சொல் என்றான் ராகவ். ம் நன்றாக சமாளிக்கிறாய். இரு நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுகிறேன் என்றாள். மறந்தே போய்விட்டேன் பிரதீபா நமக்காக காத்திருப்பாள். வா போவோம் என்றான். சரி இரு வீட்டுக்கு ஃபோன் பண்ணி சொல்லிவிட்டு வருகிறேன் என்றாள்.

பிரதீபாவுக்கென ஒரு கரடி பொம்மையை வாங்கி கொண்டாள் ரஷ்மி. அதை அவளிடம் கொடுத்தபோது பிரதீபா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். இந்த அக்காவை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள் பிரதீபா. கிருஷ்ணன் வீட்டில் இல்லை . பிரதீபா நீ மட்டும் எப்படி தனியாக இருக்கிறாய் போர் அடிக்காதா என்றாள் ரஷ்மி. அதெல்லாம் அடிக்காது மியூசிக் துணை இருக்கிறது என்றாள். ரஷ்மி அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். உள்ளே போய் காப்பி போட்டு எடுத்து வந்தான் ராகவ். காப்பி குடித்தவள் நன்றாக இருக்கிறது. நீங்க ரொம்ப லக்கி ரஷ்மி அக்கா என்றாள். அவளுக்காக இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பாடினர் . சூப்பர் அக்கா அண்ணா உங்களுக்காக ஒரு கிப்ட் வாங்கி வைத்திருந்தேன் என்றாள். அதை குடுத்தாள் பிரதீபா. அது ஒரு சிறிய தேவதை பொம்மை. இதய வடிவில் இருந்தது. சூப்பர் ஆ இருக்கு என்றாள் ரஷ்மி. சரி நாங்கள் வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது கிளம்பட்டுமா என்றாள் ரஷ்மி. அடுத்த முறை என்னையும் வெளியே அழைத்து போவீர்களா இப்படியே உட்கார்ந்து உட்கார்ந்து போரடிக்குது என்றாள். நிச்சயமாக என்றான் ராகவ். அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் ரஷ்மி. விடை பெற்றுக்கொண்டான் ராகவ். ரஷ்மி யை வீட்டில் விட்டான். உள்ளே வா ராகவ். மணி 9 ஆகி விட்டிருந்தது. தென்றல் ஃபோன் பண்ணியிருந்தாள். அவளிடம் பேசி கொண்டிருந்தான். இன்னுமா நீ வீட்டுக்கு போகவில்லை என சொல்லிக்கொண்டிருந்தாள். இதோ கிளம்பி விட்டேன் என்றான்.

ரஷ்மி வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டதாக ரஷ்மி சொன்னாள் . நீ மேலே வா உன்னிடம் பேச வேண்டும் என்றாள். இன்றைக்கு ஒரு வழி ஆக போகிறேன் என்று நினைத்தான். அவளுக்கு வந்த கிப்ட்களை பிரித்து பார்த்து கொண்டிருந்தாள். இவனும் அவற்றை பிரிப்பதற்கு உதவி செய்தான். ரஷ்மி ஏதோ சொல்லவேண்டும் என்று சொன்னாயே ஆமாம் ஆமாம் என்ன அவசரம் தென்றலை போய் பார்க்க வேண்டுமா இன்றைக்கு ஒரு நாள் கூட என் கூட ஸ்பெண்ட் செய்யக்கூடாதா என்றாள். அப்படி இல்லை. நீ என்ன நினைக்கிறாய் யாராவது ப்ரபோஸ் பண்ணினால் உடனே பல்லிளித்துக்கொண்டு போய்விடுவேன் என்றா? என்றாள். அப்படி நான் எப்போது சொன்னேன் என்றான். ம் சொல்லித்தான் பாரேன் . உனக்கு கிப்ட் வாங்கி வைத்ததிருக்கிறேன் என்று சொன்னேனே என்னவென்று கேட்டாயா என்றாள்.இங்கே வா என்றாள். கிட்டே போனதும் ஐ லவ் யு டா பூல் என்று இறுக்கி அணைத்து உதட்டில் முத்தமிட்டாள்.