Nerungi Vaa Devathaiye - 10 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நெருங்கி வா தேவதையே - Part 10

Featured Books
Categories
Share

நெருங்கி வா தேவதையே - Part 10

சௌமியாவை தற்காலிகமாக சமாதானம் செய்தாள் ரஷ்மி. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ராகவ் கேட்டுக்கொண்டான். தினமும் இசை வகுப்புகளுக்கு போய் வந்தான் ராகவ். அவன் முன்பை விட இப்போது இசை கற்றுக்கொள்வதில் தீவிரமாய் இருந்தான். ரஷ்மி மனதிலும் ஆசைகள் இருந்தன ஆனால் அது ராகவோடு பின்னிப் பிணைந்து இருந்தது.ரஷ்மி மனதில் கவலை எதுவும் இல்லை ஆனால் ராகவை பற்றி சதா சிந்தனைகள் இருந்தது அவன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மியூசிக் பேண்டில் மீண்டும் சேர வேண்டும் என்பதே அவளுடைய ஆசையாக இருந்தது.ராகவ் தன்னுடைய மனதில் எப்போதும் ரஷ்மியை நினைத்துக் கொண்டிருந்தான் அருண் அவனும் அப்படியே நினைத்துக் கொண்டிருந்தான் இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது காலத்துக்கு தான் வெளிச்சம்.ஒரு சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சம் போல ரஷ்மியின் வருகை ராகவின் வாழ்வில் நிகழ்ந்தது அது அவன் வாழ்வில் நிரந்தர வெளிச்சமாக மலருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தென்றலுக்கு இப்போதைக்கு ராகவுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை.அந்த ஆண்டு கல்லூரி ஆண்டு விழா இவர்களுடைய இசை நிகழ்ச்சி பிரதானமாக சேர்க்கப்பட்டிருந்தது அதற்காக இரவும் பகலும் தி ஈகிள்ஸ் குழு பயிற்சி செய்து வந்தது.

ரஷ்மி ராகவுக்கு போன் செய்தாள் ராகவ் எப்படி இருக்கிறாய் நான் கொஞ்சம் பிராக்டிசில் பிஸி அதனால உன்னை சந்திக்க முடியவில்லை கோபித்துக் கொள்ளாதே என்றாள்.அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ நம்முடைய இசைக்குழுவுக்காக தான் பிஸியாக இருக்கிறாய் அது நல்லது தான். அருண் எப்படி இருக்கிறான்? அவன் மிகப் பிரமாதமாக மியூசிக் செய்கிறான் .அருணுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறு அவன் இன்னும் பெரிய உயரங்களை அடைவான் என்றான் ராகவ் .உனக்கு அவன் மேல் கோபமே இல்லையா ராகவ்? அதெல்லாம் இல்லை அவன் இசையின் மேல் எனக்கு நிறைய மதிப்பு இருக்கிறது அவன் உன் கூட பழகும் விதத்திலும் ஒரு மரியாதையோடு பழகுகிறான் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை அதனால் அவன் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.சரி ராகவ் நாம் பிறகு பார்க்கலாம். அடுத்த முறை சந்திக்கும் போது நாம் நிறைய பேசலாம் என்றாள் ரஷ்மி. சரி ரஷ்மி.தென்றல் போன் செய்திருந்தாள் என்ன ராகவ் என்ன பண்ற ஃப்ரீயா இருந்தா பாக்கலாமா என்றாள் நாளைக்கு பார்க்கலாம் ஆறு மணிக்கு என்றான் நிச்சயமா ?நிச்சயமா பார்க்கலாம் என்றான்.தென்றலுடன் பழகியதில் அவளும் நல்லவள் தான் அவள் மனதில் இவன்தான் ஆசையை விதைத்து விட்டான் அவளை சொல்லி குற்றமில்லை தென்றல் இப்போதும் ராகவை நம்புகிறாள். அவன் ரஷ்மியை விரும்புகிறான் என்று தெரிந்தும் ராகவை விரும்புகிறாள்.ராகவை கண்மூடித்தனமாக காதலிப்பதை தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியவில்லை

ஆண்டு விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. சௌமியாவை நினைத்து ராகவுக்கும் ரஷ்மிக்கும் கவலையாய் இருந்தது. ஆனால் நிகழ்ச்சி நடக்க எல்லா ஏற்பாடும் சிறப்பாக செய்திருந்தாள் சௌமியா.சௌமியா வாழ்வில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருந்தது .அவள் மனதில் ஓயாத போராட்டம் இருந்தது. அவளுக்கு இப்போது இந்த இசை நிகழ்ச்சி தான் ஒரே ஆறுதலாக இருந்தது. அவளும் இசைக் குழுவும் அருமையாக பொருந்தி போனார்கள்.தென்றலை சந்தித்தான் ராகவ். மியூசிக் கிளாஸ் எப்படி போகுது என விசாரித்தாள். அதுக்கென்ன மாஸ்டர் நல்லாவே சொல்லித்தரார். கொஞ்சம் ஷாப்பிங் போகணும் நீயும் வரியா என்றாள். சரி வரேன். அவள் ஒரு துணிக்கடையில் நுழைந்தாள். எனக்கும் உனக்கும் ஒரே மாதிரி டிரஸ் எடுக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஆண்டு விழாவுக்கு நீ இந்த டிரஸ் தான் போட்டுட்டு வர வேண்டும் என்றாள். சரி தென்றல் எல்லோரும் கிண்டல் பண்ண போறாங்க அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை. நாம ஒத்துமையா இருக்கோம் அப்படின்னு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவும் என்னுடைய சின்ன ஆசை. சரி தென்றல் உன் ஆசைக்காக எதையும் செய்வேன் என்றான். தாங்க்ஸ் லவ் யு சோ மச் என்றாள்.

ரஷ்மிக்கு அந்த டிரஸ் போட்டோ எடுத்து தென்றல் அனுப்பி இருந்தாள். ரஷ்மி மனதிலும் சலனங்கள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் சூப்பர் டிரஸ் பெர்பெக்ட் match என்று ரிப்ளை மெசேஜ் அனுப்பி இருந்தாள். தென்றலுக்கு இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ராகவ் தனக்குத்தான் அதை தடுக்க யாராலும் முடியாது என்று அவள் மனம் சொல்லியது. sponser அவ்வப்போது விசாரித்து வந்தார். சௌமியாவும் டீடெயில்ஸ் அனுப்பி வந்தாள். காலேஜ் ஃபங்சன் காண அவரையும் அழைத்திருந்தாள். ராகவ் மியூசிக் பாண்டில் இல்லாததுதான் குறை மத்தபடி எல்லாம் ஓகே தான் என்றார். ஆண்டு விழா இனிதே துவங்கியது. கடைசி நிகழ்ச்சியாக இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரே கொண்டாட்டம் தான். தென்றல் இவனுடைய கையை கோர்த்துக்கொண்டாள். தி ஈகிள்ஸ் குழுவின் அறிமுகம் நடந்தது. எல்லோரும் பேசி முடித்தார்கள். அப்போது சௌமியாவிடம் இருந்து ஃபோன் வந்தது. என்னாச்சு மேடம் ஒண்ணுமில்லை ஒரு சின்ன பிரச்சனை சுகன்யாவுக்கு திடீரென உடம்பு சரியில்லை. நீ மேடையேறி சமாளிக்க முடியுமா என்றாள். நானா ? அருண் அதை விரும்புவானா?எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீதான் சமாளிக்க வேண்டும் sponser அதற்கு சம்மதித்து விட்டார், இனி நீதான் முடிவெடுக்க வேண்டும். சரி மேம் நான் என்னுடைய பெஸ்ட் குடுக்க ட்ரை பண்ணுகிறேன் என்றான்.

ராகவ் திடீரென மேடை ஏறியதும் சலசலப்பு ஏற்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் ராகவ் பாட பாட கரகோஷம் விண்ணை பிளந்தது. ரஷ்மி உற்சாகமானாள் . அருணும் மகிழ்ச்சி அடைந்தான். ஜோவும் உற்சாகமாக டான்ஸ் ஆடினான். தென்றல் முகத்தில் பெருமிதம் வழிந்தோடியாது. எப்படியோ ராகவ் மியூசிக் பாண்டில் சேர்ந்து ஒரு பெர்ஃபார்மன்ஸ் செய்துவிட்டான் என்பது ரஷ்மிக்கும் ,தென்றலுக்கும் திருப்தியாய் இருந்தது. சௌமியாவும் sponser செய்தவரும் ரொம்பவும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சி நல்லபடியாக நிறைவு பெற்றது. பரிசுகள் வழங்கப்பட்டது. ராகவை ரஷ்மி கட்டிக்கொண்டு பாராட்டு தெரிவித்தாள். அவள் உணர்ச்சிவசப்பட்டவளாக இருந்தாள். ஜோ கலக்கிட்ட மச்சான் என்றான். மியூசிக் மாஸ்டரிடம் பேசினான். வெரி குட் ராகவ் என்றார். அருண் வெல்கம் டூ தி ஈகிள்ஸ் பாண்ட் என்றான். சௌமியா நீ இப்படி பெர்ஃபார்மன்ஸ் பண்ணுவாய் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மியூசிக் வீடியோ வைரல் ஆனது, நாளைக்கு என் வீட்டில் லஞ்ச் என்று சௌமியா சொல்லிவிட்டாள் . எல்லோரும் வர வேண்டும் என்றாள். அருண் மனதில் நிம்மதியும் அழைக்கழிப்பும் சேர்ந்தே உண்டாயிற்று. அன்று இரவு ரஷ்மி ராகவிடம் பேசினாள். எப்படிடா திடீர் என அந்த தைரியம் வந்தது என்றாள். எனக்கு உங்கள் எல்லோருடைய நம்பிக்கை பிடித்திருந்தது. இதை விட்டால் வேறு சான்ஸ் உன்னுடன் பாட கிடைக்காதே என்றான். சீ போடா என்றாள். அவள் மனம் காதல் எனும் இசையில் மிதந்து
கொண்டிருந்தது.

தென்றல், ஜோ, அருண், ரஷ்மி அதோடு ராகவும் சௌமியா வீட்டுக்கு வந்திருந்தார்கள். சுகன்யாவுக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லை.தென்றல் மனதில் அமைதி தழுவி கிடந்தது. கிச்சன் உள்ளே போய் சௌமியாவுக்கு ஹெல்ப் பண்ணினார்கள் ரஷ்மியும், தென்றலும். அடுத்து என்ன plan என்றான் அருண். நீதான் என்னை வழிநடத்த வேண்டும் என்றான் ராகவ். அதற்குத்தான் ரஷ்மி இருக்கிறாளே என்றான் அருண் சிரிப்போடு. நான் சும்மா சொன்னேன் நமக்கு நிறைய இடங்களில் இருந்து இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்திருக்கிறது. அது பற்றி சௌமியா மேம் தான் முடிவு எடுக்க வேண்டும் . சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே பாடினாய். நான் அதை எதிர்பார்க்கவில்லை என்றான் அருண்.குமார் அப்போது வந்தார். வாங்க என்று சொல்லிவிட்டு மியூசிக் வீடியோ பார்த்தேன் நன்றாக இருந்தது ராகவ். அருண் சிறப்பாக கோஆர்டினேட் செய்திருந்தாய் என்றார். குறைகளே தெரியவில்லை என்றும் சொன்னார். நீங்களும் எங்களோடு சாப்பிடுங்கள் என்றான் ராகவ். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. பிறகு பார்க்கிறேன் என்று கிளம்பியும் விட்டார். சௌமியா அவர் அப்படித்தான் நீங்கள் சாப்பிடுங்கள் எல்லாம் ரெடி ஆகிவிட்டது. சுகன்யா ரொம்ப வருத்தப்பட்டாள் என்று சௌமியா கூறினாள் .

சாப்பாடு அருமையாக இருந்தது என்றான் ராகவ். எனக்காக அந்த பாட்டை திரும்ப பாடு ராகவ் என்றாள் ரஷ்மி. அங்கிருந்த சூழ்நிலையில் அவளுடைய கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை. தென்றலும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தயங்கியவாறே பாட ஆரம்பித்தான். தென்றல் அதை வீடியோ எடுத்தாள். அவளுக்குத்தான் இதில் அதிக பெருமை. நான் வீட்டில் போய் எல்லாரிடமும் காட்டுவேன் என்றாள். அவன் பாடி முடித்ததும் ரஷ்மி அவனுக்கு ஒரு கிப்ட் ஒன்றை கொடுத்தாள். இப்போதே பிரி பிரி என்று எல்லோரும் சொன்னார்கள் . ஒரு அழகிய கிருஷ்ணன் பொம்மை இருந்தது. எனக்கு பிடிச்சிருக்கு என்றான் ராகவ். தென்றல் அதை வாங்கி பார்த்தாள். நானும் உனக்கு நிறைய வைத்திருக்கிறேன் அது சர்ப்ரைஸ் என்றாள். தாங்க்ஸ் ரஷ்மி என்றான் ராகவ். தி ஈகிள்ஸ் குழு நன்றாக ஷைன் செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்றாள் சௌமியா. எல்லோரும் கிளம்பி விட்ட பிறகு ரஷ்மி மட்டும் சௌமியாவோடு இருந்தாள். அவள் பாத்திரங்களை கிளீன் செய்ய சௌமியாவுக்கு உதவினாள் . தென்றல் மனதில் மாற்றம் வருமா என்றாள் சௌமியா . எனக்கு அதை பற்றி இப்போது கவலையில்லை என்றாள் ரஷ்மி. நீ சொன்னபடிதான் சுகன்யா நடந்துகொண்டாள் அப்படித்தானே? அதெல்லாம் இல்லை என்றாள் ரஷ்மி. எனக்கு தெரியும் ராகவுக்காக நீ தான் இதை செய்தாய் என்றாள் சௌமியா.