இரவை சுடும் வெளிச்சம்

(0)
  • 1k
  • 0
  • 352

காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது . இந்த வெயில் காலத்தில் அது பெரும் ஆறுதலை தந்தது .ரஞ்சித் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்தான்.அவனுடைய கண்கள் தூக்கத்தை வேண்டி கெஞ்சி கொண்டிருந்தன .அவனுடைய நினைவுகள் பின்னோக்கி சுழன்றன. இதே போல வெயில் காலத்தில் தான் அவனுடைய காதல் பயணம் இனிதே துவங்கியது . என்ன ரஞ்சித் இன்னும் தூங்கலியா? என கேட்டபடி வந்தான் ஜாபர். ஜாபரும் இவனும் ஒரே ஊர் . இருவரும் வேலை தேடி வந்து 6 மாதமாகிவிட்டது . ஜாபருக்கு வேலை கிடைத்து விட்டது . அவனுடைய தயவில்தான் இவன் தினசரி வாழ்வு ஓடி கொண்டிருக்கிறது . என்றைக்கு அந்த தீப்தியை பார்த்தானோ அன்றே இவன் வாழ்வு மாறிவிட்டது . இல்லே மச்சான் தூக்கம் வரலே .. என்னவோ தெர்ல .இன்னுமாடா நீ தீப்தியை நெனைச்சிகிட்டு இருக்கே ?மறக்க முடியல மச்சான் . அப்படி தீப்தி செய்தது என்ன இவனை காதலித்ததுதான்.

1

இரவை சுடும் வெளிச்சம் - 1

காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது . இந்த வெயில் காலத்தில் அது பெரும் ஆறுதலை தந்தது .ரஞ்சித் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்தான்.அவனுடைய கண்கள் தூக்கத்தை வேண்டி கொண்டிருந்தன .அவனுடைய நினைவுகள் பின்னோக்கி சுழன்றன. இதே போல வெயில் காலத்தில் தான் அவனுடைய காதல் பயணம் இனிதே துவங்கியது . என்ன ரஞ்சித் இன்னும் தூங்கலியா? என கேட்டபடி வந்தான் ஜாபர். ஜாபரும் இவனும் ஒரே ஊர் . இருவரும் வேலை தேடி வந்து 6 மாதமாகிவிட்டது . ஜாபருக்கு வேலை கிடைத்து விட்டது . அவனுடைய தயவில்தான் இவன் தினசரி வாழ்வு ஓடி கொண்டிருக்கிறது . என்றைக்கு அந்த தீப்தியை பார்த்தானோ அன்றே இவன் வாழ்வு மாறிவிட்டது . இல்லே மச்சான் தூக்கம் வரலே .. என்னவோ தெர்ல .இன்னுமாடா நீ தீப்தியை நெனைச்சிகிட்டு இருக்கே ?மறக்க முடியல மச்சான் . அப்படி தீப்தி செய்தது என்ன இவனை காதலித்ததுதான். ...Read More

2

இரவை சுடும் வெளிச்சம் - 2

கார்த்திக்கை அவசரமாக ஆம்புலன்ஸ் இல் ஏற்றி அழைத்து கொண்டு போனார்கள் . சுட்டது யார் என்று தெரியவில்லை . தீப்திக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. சுட்டது ரஞ்சித்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவனுக்கு அவ்வளவு துணிச்சல் எல்லாம் கிடையாது .போலீஸ் வந்து விசாரித்தார்கள் . கார்த்திக் பேசும் நிலையில் இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து வெளியே கேன்டீனுக்கு வந்து ரஞ்சித்துக்கு போன் பண்ணினாள் . எங்கடா இருக்கே உன் வேலையா இது ? சே சே.. அதானே பார்த்தேன் நீயாவது எனக்காகவாவது ? என்றாள். அவசரப்படாதே தீப்தி .நான் இப்போ சென்னைல இல்லை . காஞ்சிபுரத்துல இருக்குற என் friend வீட்டுக்கு வந்திருக்கேன் . போலீஸ் என்னை தேடலை இருந்தாலும் .. கார்த்திக் எப்படி இருக்கான் ?அவன் இன்னும் ICU ல தான் இருக்கான் . பாத்து ஜாக்கிரதை தீப்தி . நீ மொதல்ல பத்திரமா இருடா . ...Read More