Iravai Sudum Velicham - 29 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 29

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 29

போலீஸ் ஆபீஸர் ராகவன் மர்ம நபர்களால் வெட்டி கொலை என்ற செய்தியை ராம் படித்துக்கொண்டிருந்தான். இவர் தீப்தியுடைய நெருங்கிய உறவினர் ஆச்சே என்று யோசிக்கும் போதே தீப்தியிடம் இருந்து போன் வந்தது. நாங்க 10 மணிக்கு வந்துடுவோம் . வந்து நேர்ல பேசுறோம் என கூறினாள். ராம் மேலும் படித்த பொது retired போலீஸ் ஆபீஸர் ஆன ராகவன் அடுத்த வாரம் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிடுவதாக இருந்த நிலையில் கொலை .தீப்தி சொன்ன மாதிரி வந்துவிட்டாள் கூடவே ரஞ்சித்தும் ஒரு பையனும் வந்திருந்தான். அவனுக்கு ஒரு 20 வயதிருக்கும். அவன் மிகுந்த துக்கத்தில் இருப்பதாக ராமுக்கு தோன்றியது.

என்னாச்சு தீப்தி எப்படி இப்படி திடீர்னு ? அதான் எங்களுக்கும் ஒன்னும் புரியல. இவன் அவர் பையன்தான் பேரு ரேவந்த்.என்ன காரணம்னு தெரியல. போலீஸ் விசாரிச்சப்ப ஆள் மாறி மணிமாறன் என்பவரை வெட்டுவதற்கு பதிலாக இவரை வெட்டிட்டோம்னு சொல்றாங்களாம். சரி தீப்தி எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நான் என்ன எதுன்னு பாக்குறேன்.இவனும் அவரை மாதிரியே ஒரு போலீஸ் ஆபீஸரா வரணும்னு நினைச்சான். ஆனா இப்போ நடந்ததை பார்த்த எங்களுக்கு பயமாயிருக்கு . அங்கிள் எங்க அப்பா சாவுக்கு காரணமானவர்களை சீக்கிரம் கண்டுபிடியுங்க என்றான். நிச்சயமா செய்யுறேன்பா . ராகவன் பற்றிய டீடெயில்ஸ் அடங்கிய பைலை ராமிடம் குடுத்தான். ரஞ்சித் நீங்க இந்த பையனை கவனமா பார்த்துக்குங்க என்றான். நிச்சயமா சார். நீங்க அவருக்கு ஒரே பையனா? ஆமாம் சார்.

இந்த சின்ன வயதில் தந்தையை இழப்பது எவ்வளவோ பாதிப்புகளை ஏற்படுத்தும். ராம் ராகவனின் ப்ரோபைலை வாசிக்க தொடங்கினான். ராம் இந்த கேஸ் முதலில் போலீஸ் டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட கேஸ் என்று நினைத்தான்.அவர் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று தீப்தியிடம் விசாரித்த போது ராகவனுடைய மனைவி பார்வதி அவருடைய சகோதரன் பவனும் இருப்பதாக சொன்னாள். மேலும் கிரண் என்பவர் பவனுடைய friend அதே வீட்டில் மாடியில் வசித்து வருகிறார் என தெரிந்தது.மணிமாறனும் போலீஸ் துறையை சேர்ந்தவர்தான்.அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தான். அவர் உடனடியாக appointment கொடுக்கவில்லை.

ராம் ரேவந்திடம் அவருடைய சுயசரிதையின் copy கிடைக்குமா என்று கேட்டான். அதை அப்பா ரொம்ப ரகசியமா வெச்சிருந்தார். ஆனந்த்ங்கிற அசிஸ்டன்ட் வெச்சுதான் அதை எழுதி முடிச்சாரு. அந்த ஆனந்த் என்பவரை மீட் பண்ண முடியுமா. நான் அவர் நம்பர் மெசேஜ் பன்றன் பேசி பாருங்க. ஆனந்த் ஹலோ சார் நானே உங்க ஆபிசுக்கு வரணும்னு நெனச்சேன் . நாளைக்கி வரேன் என்றான். மறுநாள் ஆனந்த் ரேவந்த்தை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தான். அப்படி ஒன்னும் பெரிய ரகசியம் அந்த புத்தகத்துல இல்லை சார்.. அவங்க போலீஸ் துறைல நடக்குற சில ஊழல் பத்தி மட்டும்தான் எழுதி இருந்தாரு. மத்தபடி அவர் யார் பேரையும் குறிப்பிட்டு சொல்லல. அதோட கையெழுத்து பிரதி வேணும் ஏற்பாடு பண்ணுங்க.கொஞ்சம் டைம் குடுங்க குடுத்துடறேன் என்றான்.சில பகுதியை நான் அவர்கிட்ட குடுத்தேன் அவர் எங்கே வெச்சார்னு தெரியலியே. ரேவந்த் எனக்கு தெரியும் நீலாங்கரைல உள்ள வீட்டுல தான் வச்சிருப்பாரு அப்பா அடிக்கடி அங்கேதான் போவாரு. பையன் சொல்றது உண்மைதான். சில பகுதியை மட்டும்தான் எனக்கு dictate பண்ணாரு . மத்த பகுதியை அவரே தன் கைப்பட எழுதினார். சரி ஆனந்த் நீங்க இந்த விஷயத்துல முழு ஒத்துழைப்பும் குடுப்பீங்கனு நம்புறேன் . கண்டிப்பா சார்.

மணிமாறனிடம் ஒரு வழியாக appointment கிடைத்துவிட்டது. போலீஸ் துறைல என்னை பிடிக்காதவங்கதான் இந்த மாதிரி வதந்தியை கிளப்பி விடுறாங்க என்றார். எனக்கும் அந்த கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராகவன் நல்ல போலீஸ் ஆபீசர்.அவர் கொலைக்கு வேற காரணங்கள் இருக்கலாம். அந்த gang தலைவன் காசி ரொம்ப மோசமானவன். எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க என்றார். எனக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து இருக்காங்க அதுக்காக எப்பவுமே அவங்க என் கூடவே இருக்க முடியுமா ?அப்போ அந்த சுயசரிதைல ஒன்னும் இல்லைனு சொல்லறீங்களா ? அப்படி எதுவும் இருக்காது சார். நீங்க சிம்பிளா analyze பண்ணுங்க ரொம்ப ஆழமா போக வேண்டாம். கொலையாளிங்க அவரை திட்டம் போட்டு கொன்னிருக்காங்க . ஒன்னும் அவசரப்பட்டு பண்ணிடலை . நானும் என்னோட source மூலமா இந்த கேஸ் follow பண்ணிட்டுதான் இருக்கேன் என்றார் மணிமாறன்.

ராம் ரேவந்த்துக்கு போன் செய்தான். நாளைக்கு அவர்கள் வீட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்தான். வாங்க சார் நான் அம்மாகிட்ட சொல்லிக்கிறேன். எதுக்கும் உங்க அம்மா கிட்ட கேட்டு எனக்கு கால் பன்றியா என்றான். சரி அங்கிள் . ஈவினிங் கால் பண்ணி confirm பண்ணினான்.மறுநாள் ராம் போகும் போது எல்லோரும் இருந்தார்கள். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தான். பவனும், கிரணும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள் என்றான் கிரண்.நடந்த சம்பவம் எங்களுக்கு இன்னும் ஷாக்கிங் ஆஹ் இருக்கு . அவர் அப்போதான் இவனுக்காக ஏதோ surprise gift வாங்கிட்டு வரேன்னு போனாரு.தெரு முனையிலே நின்னுகிட்டு இருந்திருக்காங்க.விஷயத்தை கேள்வி பட்டதும் அலறி அடிச்சிக்கிட்டு ஓடி போய் பார்த்தோம் ஆனா சம்பவ இடத்துலே உயிர் போயிடுச்சு.ரேவந்த் நான் சாரோட ரூமை பார்க்கலாமா? வாங்க என்று அழைத்துக்கொண்டு போனான். அவர் மொபைல்? அது போலீஸ் விசாரணைக்காக எடுத்து போயிருக்காங்க. நாம நாளைக்கு அந்த நீலாங்கரை வீட்டுக்கு போகலாமா ? அதோட சாவி அம்மாகிட்டதான் இருக்கு நான் வாங்கிட்டு வரேன். பார்வதி,கிரண்,பவன் மூவருடைய மொபைல் எங்களையும் ராம் வாங்கி கொண்டான்.

ராம் ஆனந்துக்கு போன் செய்தான் . என்னப்பா ஆச்சு அந்த சுயசரிதை. இன்னும் ரெண்டு நாளிலே முடிஞ்சுடும் சார் . நானே கொண்டுவந்து கொடுக்கிறேன் . நீலாங்கரையில் பெரிய பங்களாவெல்லாம் இல்லை. தோட்டம் பெரிதாகவும் , வீடு சிறிதாகவும் உள்ள இடம். நீ இந்த இடத்துக்கு அடிக்கடி வருவியா ? எப்போவாவது வருவேன். அப்பா mood out ஆனாலும் வருவார் . நல்ல மூட்ல இருந்தாலும் வருவார்.அவர்கள் வெகு நேரம் தேடியும் எந்த குறிப்பும் கிடைக்கவில்லை. ரேவந்த் நாம இப்போ போகலாம் ரொம்ப நேரமாயிடுச்சு.சரி சார். ரேவந்த்தை அவனுடைய வீட்டில் விட்டான்.பார்வதியிடம் பேச வேண்டுமென நினைத்தான். கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பேசலாம் என தனக்கு தானே சொல்லி கொண்டான். ராம் ராகவனுடைய டைரியை ரேவந்த்துக்கு தெரியாமல் எடுத்திருந்தான். அதில் ஒரே கிறுக்கலான கையெழுத்தாக இருந்தது. அதை decode செய்வது அத்தனை சுலபமில்லை என தெரிந்தது.

அதை decode செய்யும் பொறுப்பை தீபுவிடம் கொடுத்தான். இது ராகவனோட ரகசிய டைரி. அதை என்னால படிக்க முடியல, நீதான் அதை கரெக்ட்டா தெளிவா என்ன இருக்குனு சொல்லணும். ஒரு வாரமாவது ஆகும் சார்.பரவாயில்ல இந்த விஷயம் தீப்திக்கும், ரஞ்சித்திற்கும் கூட தெரிய வேண்டாம். சரி பாஸ் . ராம் ஆனந்த் கையிலிருப்பதும் கிடைத்துவிட்டால் ஏதாவது clue கிடைக்கும் என நினைத்தான்.ஆனந்த் சொன்னபடி அவனிடத்தில் இருந்த டாக்குமெண்ட்ஸ் தெளிவாக பிரிண்ட் செய்து கொண்டு வந்து கொடுத்து விட்டான். அதை பார்த்தபோது நடந்த கொலைக்கு சம்பந்தமான எதுவும் கிடைக்கவில்லை. ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த்.நீங்க தேடுன அந்த பார்ட் கிடைச்சுதா சார். இல்லை சார் மறுபடி நீலாங்கரைக்கு போகணும். ஓகே சார் நான் வரேன். அப்புறம் இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும் என்றான் ராம்.
இது நடந்து இரண்டாவது நாள் ஆனந்த் நீலாங்கரை வீட்டில் சுட்டு கொல்லப்பட்டு கிடப்பதாக செய்தி கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று பார்த்தான் ராம். சுவர் ஏறி குதித்துதான் உள்ளே போயிருக்கணும். அவரை காணோம்னு அவர் wife புகார் குடுத்து இருந்தாங்க அவங்ககிட்ட இந்த வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்திருக்காரு . வந்து பார்த்தா இங்க இறந்து கெடக்குறாரு. உடலை போலீசார் போஸ்டமோர்டெம் செய்ய அனுப்பினர்.ரேவந்த் அங்கே இருந்தான்.என்னாச்சு ரேவந்த் என்கிட்டே சாவி வாங்கித்தான் வீட்டை திறந்தாங்க என்றான். வீடு போலீஸ் கண்ட்ரோலுக்கு போனது, ராம் இன்ஸ்பெக்டரிடம் பேசினான் யாரோ அவன் கூட வந்தவங்கதான் அவனை சுட்டிருக்கணும். வேற எந்த எவிடென்சும் கிடைக்கலை . ஆனந்த் மரணம் அவன் குடும்பத்துக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

போலீஸ் முடுக்கி விடப்பட்டது . இதற்கிடையில் காசிக்கு ராகவனை கொல்ல பணம் கொடுத்தது யார் என்ற கோணத்தில் போலீஸ் அவனுடைய வீடுகளில் சோதனை நடத்தியது. எதுவும் சிக்கவில்லை. அவனுடைய பேங்க் அக்கௌன்ட்களையும் போலீசார் சோதித்தார். பணம் எப்படி கை மாறி இருக்கும் என்பது தெரியாமலே இருந்தது. காசிக்கு இதனாலே ஜாமீன் கிடைத்து வெளியேயும் வந்துவிட்டான்.