போலீஸ் ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தனர். ராம் அந்த ஏரியாவில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் அதிதியின் போட்டோவை காட்டி விசாரித்தான். அப்படி யாரையும் பார்க்கவில்லை என சொன்னார்கள். அருகிலுள்ள பார்க் உள்ளிட்ட இடங்களிலும் விசாரித்தான். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதே சமயம் பிரேமா கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வந்தது.பிரேமாவுடைய வீட்டை மறுபடி பார்வையிட்டான் ராம். சம்பவம் நடந்த அறையில் எல்லாம் சிதறி கிடந்தன. போலீஸ் அந்த அறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.அதிதியின் அப்பா திலகிற்கு போன் செய்து விசாரித்தான்.அவர்களும் எல்லா இடங்களிலும் தேடிவிட்டதாக சொன்னார்கள். ரஞ்சித்தையும் ,தீப்தியையும் திவாரி வீட்டுக்கு அனுப்பியிருந்தான் ராம். அவர்கள் திவாரியை சந்தித்தனர்.குழந்தை காணாமல் போனது பற்றி எனக்கும் தியாவுக்கும் எதுவும் தெரியாது . வீணாக எங்களை சந்தேகப்படாதீர்கள். திவாரி வீட்டையும் போலீஸ் ஏற்கனவே சோதனை செய்திருந்தது. திவாரி சிறியதொரு fancy ஸ்டோர் வைத்திருந்தான். தற்போது அந்த வீட்டில் வசிக்காமல் தனியாக வீடெடுத்து வசித்து வந்தார்கள்.
ப்ரவீனுக்கு ஜாமீன் கிடைத்ததும் நேராக ஹாஸ்பிடலுக்கு வந்து பிரேமாவை பார்த்தார். டாக்டர்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாதென தெரிவித்தனர். ஸ்வேதா, திவாரி, தியா, திலக் கால் history எடுக்கப்பட்டது. அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.பிரேமாவை கொல்ல முயன்றவர்கள் மோட்டிவ் என்னவாக இருக்கும் என ராம் யோசித்தான். பிரேமாவின் போன் முதலியவற்றை ராம் ஆராய்ந்தான். பிரேமாவுடைய போனில் மூத்த பெண்ணான ஸ்வேதாவும் அவருடைய குழந்தை அதிதியும் இருக்கும் போட்டோ இருந்தது. தியாவை ஏன் பிடிக்காமல் போனது என்று பிரவீனை கேட்டான் ராம். அவளை ரொம்ப செல்லமாக வளர்த்தாள் ஆனால் வீட்டை மீறி வேறு ஒரு பையனை காதலித்து கல்யாணம் செய்து விட்டதால் அவளிடம் பேச கூட விரும்பவில்லை. ஆனால் தியா பாசத்தோடுதான் இருந்தாள். சொத்து பிரச்னை இருந்ததா ? அதெல்லாம் இல்ல எல்லா குடும்பங்களிலும் இருப்பது போல என் மூத்த மருமகன் திலக் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.அவர் என்ன தொழில் செயகிறார். அவரும் ஒரு சிறிய லெதர் export buisness செய்கிறார் .அதிதி பற்றி ஏதாவது தெரிந்ததா ? இல்லை சார் ட்ரை பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ராம் முதலில் பிரவீன் வீட்டில் இருந்த சிசிடிவி ரிப்பேர் செய்ய வேண்டுகோள் விடுத்தான். வேற யாராவது வெளி நபர்கள் அந்த வீட்டுக்கு வந்து போவார்களா என்று விசாரித்தான். ப்ரேமாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றி ஒரு லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக விசாரித்தான். திவாரி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆள் தவறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. ராம் உடனே அங்கு சென்றான். என்ன நடந்துச்சு திவாரி சார். இவன் நேத்து நைட் என் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு என்னை கொல்ல பார்த்தான் கையிலே கத்தி வெச்சிருந்தான் அப்போ ஏற்பட்ட சண்டையில தவறி விழுந்து செத்துட்டான் . இவன் ஏன் உங்களை கொல்ல வரணும். உண்மைய சொல்லனும்னா இவன் பிரேமா மேடம் அனுப்புன ஆளு. ஏற்கனவே ஒரு தடவ என்ன கொல்ல ட்ரை பண்ணியிருக்காங்க. கீழே விழுந்த ஆளின் பெயர் ஜித்து என தெரிவித்தான். ஜித்துவுடைய செல்போனை ராம் வாங்கி வைத்துக்கொண்டான். போலீஸ் வந்து திவாரியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.ஜித்துவின் போனில் இருந்தது ஒரு புகைப்படம்தான். அது ஏதோ கடையின் முகப்பு போல தோற்றமளித்தது.
ஜித்துவை உங்களுக்கு தெரியுமா என பிரவீனிடம் கேட்டான் ராம். இல்ல சார் அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாது. சரி பிரேமா மேடம் பர்சனல் டைரி ஏதாவது இருக்கிறதா ? ஒன்னு எப்பவும் அவ கைப்பைல இருக்கும் . இருங்க பார்க்கிறேன். அவளுக்கு இது பிடிக்காது இருந்தாலும் நீங்க பாருங்க. பிரேமா பல விஷயங்களை எழுதியிருந்தாள். அதில் ஜித்துவின் நம்பரும் இருந்தது . போலீஸ் ஜித்துவின் பின்னணி குறித்து விசாரிக்க தொடங்கினர்.பிரேமா கோமா நிலையிருந்து மீள முடியாமலே மரணம் அடைந்தார். பிரேமாவை யார் சுட்டார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் போலீஸ் திணறி கொண்டிருந்தது. மறுபுறம் அதிதியை காணாமல் ஸ்வேதாவும் திலக்கும் தவித்து கொண்டிருந்தனர். ராம் அந்த shop முகப்பு போன்ற தோற்றமுள்ள போட்டோவை கவனமாக பார்த்தான். அது ஒரு மூடியிருந்த கோடௌன் போல இருந்தது.அதில் ஷட்டர் தயாரித்தவனின் பெயரும் முகவரியும் இருந்தது. அதை வைத்து அந்த கடையை நடத்தியவன் தராம்லால் என்பது தெரியவந்தது. அவனிடம் விசாரித்தபோது அந்த shop நான் வேறு ஒருவருக்கு விட்டு விட்டதாக சொன்னான். ஜித்து எதற்காக அந்த போட்டோவை வைத்திருக்க வேண்டும் ஜித்துவின் மனைவியிடம் விசாரித்தான் அவரு கொஞ்ச நாளா ரொம்ப கவலையா இருந்தாரு சார். பிரேமா மேடத்தை யாரோ சுட்டுட்டாங்க என்று சொன்னார் . இந்த கடை போட்டோவை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ? தெரியாது சார். சரிம்மா உங்களுக்கு வேற ஏதாவது தகவல் கிடைச்சா கூப்பிடுங்க என ராம் தன் காண்டாக்ட் நம்பரை குடுத்தான்.
தீபுவிடம் இந்த பிரச்னை பற்றி பேசும்போது தராம்லால் யாரிடம் விற்றார் என்று கேட்டீர்களா என்றாள். இல்லையே அதை கேட்டு என்ன ஆகப்போகுது . கேளுங்க சார் ஒருவேளை அந்த கடைக்குள்ள ஏதாவது எவிடென்ஸ் இருக்கலாம். தராம்லால் கிட்டே பேசியபோது தியா தான் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார். தியா இந்த இடம் உங்களுக்கு சொந்தமானதா ? ஆமாம் இப்போதான் recent ஆஹ் வாங்கினேன். எதுக்காக ? என்
husband திவாரி business பண்றதுக்கு . அப்புறம் ஏன் மூடி வெச்சிருக்கீங்க . அம்மா இறந்து கொஞ்ச நாள்தான் ஆகுது அதனாலதான் . நான் அந்த இடத்தை பார்க்கலாமா ? ஓ பார்க்கலாமே . அந்த இடம் சிறிய பகுதியாக இருந்தது. கடையும் ஷாப்பிங் காம்ப்ளெஸும் இணைக்கும் பகுதியில் bero ஒன்றும் இருந்தது.நீங்க என்ன தேடுறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ?உங்க கணவரை கொல்ல வந்த ஜித்து இந்த போட்டோவை வச்சிருந்தான், அதான் என்ன காரணம்னு தெரியல.சரி நான் வரேன் என கிளம்பினான். திரும்ப ஜித்து போனை ஆராய்ந்தான். ஒருவேளை இதில் இருந்த போட்டோக்களை அழித்து இருந்தால்?எதற்கும் ரெகவரி சாப்ட்வேர் போட்டு பார்ப்போமே என நினைத்தான். அவன் நினைத்தது சரியாய் இருந்தது.திவாரி அதிதியை அந்த கோடௌனுக்குள் அழைத்து செல்லும் போட்டோ இருந்தது.
அவசரபடவேண்டாம் என முடிவெடுத்தான். ஷாப்பிங் காம்ப்ளெக்சின் எதிரில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தான். எதுவும் சிக்கவில்லை. அதிதி அங்குதான் இருக்க வேண்டும். மீண்டும் அந்த கடைக்கு சென்று பார்த்து கடையின் மேப் செக் செய்த போது திவாரியின் கடைக்கு கீழே basement ஒன்று இருப்பது தெரியவந்தது . அதை மறைக்கத்தான் பீரோவை அங்கே வைத்திருக்கிறான். basement க்கு போக பின்புறம் ஒரு கதவும் உள்ளது தெரிய வந்தது. அங்கிருந்தவர்களிடம் பேசி சாவியை வாங்கினான். பின்பக்க கதவை திறந்து பார்த்ததில் அதிதி மயக்கத்தோடு படுத்திருப்பது தெரிந்தது .
அவளை உடனே மீது ஹாஸ்பிடலில் சேர்த்தான்.அதிதி மீட்கப்பட்ட செய்தி தெரிந்ததும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். திவாரி மேல் ராம் போலீசில் புகார் செய்தான். திவாரிதான் அடைத்து வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டான். அன்னைக்கு என்ன நடந்தது என்று திவாரியிடம் விசாரித்த போது யாரோ பிரேமாவை சுட்டுவிட்டார்கள் என்ற அதிர்ச்சியில் அதிதி மயக்கமாகிவிட்டாள். அப்போது அவள் அதை பார்த்திருக்க வேண்டும் இது தெரிந்தால் அவளுடைய உயிருக்கு ஆபத்து என்பதால் அவளை அடைத்து வைத்தேன் என்றான். நீங்க சொல்றது நம்புறது மாதிரி இல்லையே எனக்கு அப்போ வேற வழி தெரியல. எங்க வீட்டுலயும் வெச்சுக்க முடியல. ஸ்வேதாகிட்டயும் சொல்ல முடியல. அதிதியால அந்த அதிர்ச்சிலேயிருந்து மீள முடியல அவளால பேசவும் முடியல.போலீஸ் கிட்டயாவது சொல்லி இருக்கலாமே. அதிதி மறைவா இருக்கறதுதான் safety னு நெனச்சேன்.அதிதி ஒரு வார சிகிச்சைக்கு பிறகு பேச தொடங்கினாள். பிரேமா பாட்டி பிரேமா பாட்டி என அழத்தொடங்கினாள். ராம் அவளை ஆசுவாசப்படுத்தினான். என்னம்மா நடந்துச்சு யார் அவங்களை சுட்டாங்க ? நீ பார்த்தியா ? நான் அப்போ ஹால்ல விளையாண்டுக்கிட்டு இருந்தேன்.
என்னவோ சத்தம் கேட்டுச்சு . திரும்பி பார்த்தா குமரன் அங்கிள் பாட்டி ரூம்லேயிருந்து ஓடி வந்தார். உள்ளே போய் பார்த்ததும் மயக்கமாயிட்டேன். குமரன் அங்கிள் என்னை பாக்கலே. அப்புறம் கண் முழிச்சி பார்த்தப்போ என்னால பேச முடியல . திவாரி அங்கிள் தான் என்னை அந்த besement ல வெச்சிருந்தாரு. யாரு குமரன் அங்கிள் ?அந்த servant அங்கிள் தான் பாட்டியை சுட்டாரு.குமரனை பிடித்து விசாரித்த போது அவருடைய மகள் கர்ப்பமாய் இருந்த போது prema அவளுடைய ரெண்டாவது குழந்தையும் பெண் குழந்தை என சொல்லியதால் அவளுடைய கணவர் அவளை வீட்டை விட்டே விரட்டி விட்டதால் தூக்கு போட்டு தற்கொலை செய்கொண்டதாக சொன்னார். அது தற்போதுதான் தெரியவந்ததாகவும் அந்த நேர ஆத்திரத்தில் கொன்று விட்டதாகவும் சொன்னார்.தியாவையும், திவாரியையும் சந்தேகப்பட்டதற்க்காக ராம் வருத்தம் தெரிவித்தான்.