Iravai Sudum Velicham - 17 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 17

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 17

எல்லோரையும் நாற்காலியில் அமர செய்தான்.ஒவ்வொருவருடைய கைகளை தொட்டு பார்த்து அவர் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும் . இதுதான் கேம்.மீனாவின் கண்ணை கட்டினாள் ரம்யா. திடீரென என்னவோ தோன ஒவ்வொருவராக கையை பிடித்து யாரென்று சொல்லிக்கொண்டே வந்தாள்.தீப்தியை சரியாக கண்டுபிடித்தாள்.திடீரென ரம்யா இருந்த திசை நோக்கி சென்றவுடன் ரம்யா விலகி சென்றாள். சும்மா கை குடுங்க மேடம் என்றான் ராம் .வேண்டாம் சார் என்றாள். கை கொடுத்த அடுத்த வினாடி இதே கைதான் என் கண்ணை கட்டியது. எனக்கு மயக்க மருந்து spray அடித்ததும் இதே கைதான் என்றாள். மீனா அந்த தழும்புள்ள கையை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தாள். ரம்யா தான் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு kidnap செய்ததாக சொன்னாள். நானும் ரமேஷும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம் , ஆனா அவங்க அம்மா அதுக்கு சம்மதிக்கலே.தங்கச்சி கல்யாணம் முடியட்டும்னு சொன்னதால நானும் ரமேஷும் சேர்ந்துதான் மீனாவை கடத்த திட்டம் போட்டோம். பணத்தை ரமேஷ் என்கிட்டே குடுத்து வெச்சிருந்தான். குமாரை தூண்டிவிட்டு நான் தான் ரமேஷை கொன்னேன். குமாரும் எங்க கடத்தலுக்கு உதவியா இருந்தான் என்றாள். அன்னிக்கி கடைக்கு வந்தப்போ என் கையில இருந்த தழும்பை ராம் சார் பார்த்துட்டாரு. தீப்தியும் , திவ்யாவும் அதிர்ச்சி விலகாத கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தனர். மீனா ராமுக்கு நன்றி தெரிவித்தாள்.

தீப்திக்கு மூன்று நாட்களாய் ஜுரம் . பிரேமா டாக்டரை பார்த்து விட்டு வருமோமென்று சென்றார்கள். பிரேமா டாக்டர் தீப்தியுடைய பேமிலி டாக்டர். என்ன விஷேஷம் எதுவும் இல்லையா என கேட்டு சிரித்தாள். இப்போ வேணாம்னு தள்ளி போட்ருக்கோம் . ம்ம் ரொம்ப தள்ளி போடாதீங்க . சரி டாக்டர் வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா .. ஓ அதுக்கென்னம்மா சின்னவதான் அவ விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டா.
பெரிய மாப்பிள்ளை சொத்தை இப்பவே பிரின்னு சொல்றாரு .. என்ன செய்யுறது ? சாரி டாக்டர் நான் எதார்த்தமா தான் கேட்டேன். இட்ஸ் ஓகே என்றால் பிரேமா.

பிரேமாவுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் ஸ்வேதா இளையவள் தியா . ஸ்வேதாவின் கணவன் திலக் . தியாவின் கணவன் திவாரி. தியாதான் லவ் marriage பண்ணியவள். திலக் தன் மாமனாரிடம் சொத்தை பிரித்து தரும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தான்.ஸ்வேதாவுக்கு ஒரு பெண் குழந்தை அதிதி. எல்லோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். பிரேமாவின் கணவர் பிரவீன்.

தீப்திக்கும் ரஞ்சித்துக்கும் அன்றைய பொழுது கெட்ட செய்தியோடுதான் விடிந்தது . டாக்டர் பிரேமாவை போலீஸ் அர்ரெஸ்ட் செய்து விட்டார்கள். கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என சோதித்து சொல்லியதாக பிரேமாவின் மேல் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. தீப்தி ரஞ்சித்தை அழைத்து கொண்டு பிரேமா வீட்டுக்கு விரைந்தாள்.

பிரவீன் இடிந்து போய் உட்கார்ந்திருந்தார்.என்ன நடந்துச்சு அங்கிள் ? யாரோ complaint பண்ணி இருகாங்க அதை கேட்டு போலீசும் சரியாய் விசாரிக்கம அவசரப்பட்டு கைது பண்ணிட்டாங்க. வக்கீலை பார்த்தீங்களா. இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்னு சொல்லி இருக்காரு . என் ரெண்டு பொண்ணுங்க கூட என்ன ஏதுன்னு கேக்கலை நீ வந்து கேக்குறது ஆறுதலா இருக்கும்மா என்றார். சிறிது நேரத்தில் வக்கீலுடன் பிரவீன் புறப்பட்டு சென்றார்.
தியா ,ஸ்வேதா இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் பிரேமாவை பார்த்தனர்.ரெண்டு நாட்களில் ஜாமீன் கிடைத்து விடும் என்றார் வக்கீல். பிரேமா மீது தவறு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக இன்ஸ்பெக்டர் சொன்னார். ரெண்டு நாட்களில் வீட்டுக்கு வந்து விட்டாலும் பிரேமா அறையை விட்டு வெளியே வரவில்லை. பிரவீன் பிரேமாவை சமாதானப்படுத்த முயன்றார். அதுவும் நடக்கவில்லை.

பிரேமா வீட்டிலேயே துப்பாக்கியால் சுடப்பட்ட செய்தி தீப்திக்கு மறுநாள் ஈவினிங் தான் தெரிய வந்தது. எதேச்சையாய் பிரேமாவுக்கு போன் பண்ணும்போது வீட்டு வேலைக்காரர்தான் போனை எடுத்தார். அவர்தான் பிரேமா அம்மாவை யாரோ துப்பாக்கியால் சுட்டுட்டாங்க வீடே ரெண்டா கிடக்கு என்றார்.பிரவீன் சார் எங்கே என்ற கேள்விக்கு அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து போயிருப்பதாக சொன்னார். இப்போ பிரேமா ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் சொன்னார். ரஞ்சித்தை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள் தீப்தி. ஹாஸ்பிடலில் தியாவும், திவாரியும் சோகமே உருவாய் அமர்ந்திருந்தனர். என்ன நடந்தது ? என தியாவிடம் விசாரித்தாள் அம்மாவுக்கு வேண்டாதவங்க யாரோ இதை பண்ணியிருக்கணும் இப்போ அதிதியையும் காணோம்.. என்ன சொல்லறீங்க தியா அந்த நேரத்தில் அவ எங்கிருந்தானு தெரியல அதிதியும் காணாமப்போயிருக்கா. போலீஸ் அவளை தேடிட்டு இருக்காங்க. நாங்க எல்ல இடத்துலயும் தேடுனோம் அப்படியும் கிடைக்கல. பிரவீன் சார்? அவரை போலீஸ் custody லதான் வெச்சிருக்காங்க. நாங்க எவ்வளோவோ request பண்ணியும் அம்மாவை பார்க்க அவங்கள விடல. அப்பாவோட துப்பாக்கி use பண்ணிதான் அம்மாவை சுட்டிருக்காங்க. அப்பா அந்த நேரத்துல பாத்ரூம்ல இருந்தேன்னு சொல்றார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை தீப்தி. சரி உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா டிடெக்ட்டிவ் ராம் சார் கிட்டே பேசுறேன் . அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்றான் திவாரி. எப்படியும் அதிதி ரெண்டு நாள்ல கெடைச்சுடுவா அதுக்கப்புறம் தானே சிக்கிடுவான் என்றான் திவாரி. சரி அப்போ ஏதாவது உதவி தேவைப்பட்டா கூப்பிடுங்க. கண்டிப்பாக என்றாள் தியா .
ரொம்ப நல்லா மனுஷன் பிரவீன் சார் அவருக்காகவாவது நாம ஏதாவது செய்யணும். பேசாம ராம் சாரை கூட்டிட்டு போய் அவரை பார்த்தா என்ன. இதுவும் நல்ல ஐடியா தான் ஆணா அவர் தன குடும்ப விசயத்துல மூணாவது மனுஷன் தலையிடுவதை விரும்புவாரா ? சரி கேட்டுத்தான் பார்ப்போம் என்றான் ரஞ்சித், ராமிடம் விஷயத்தை சொன்னார்கள். மூவருமாக பிரவீனை வக்கீலின் துணையுடன் சந்தித்தினர். அவர் என்னால எதையும் நம்ப முடியலை .அப்போ காலைல 8 மணி இருக்கும் நான் பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்தேன். ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து பாக்கலாம்னா யாரோ என் பாத்ரூம் கதவை வெளியே லாக் பண்ணி இருந்தாங்க.அப்புறம் திவாரிதான் வந்து திறந்து விட்டார். பிரேமாவை யாரோ என் துப்பாக்கியால் சுட்டிருக்காங்க. குழந்தை அந்த சமயத்துல அங்க இருந்ததா இல்ல சார். வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க. எல்லோரும் இருந்தாங்க. சரி நான் மொதல்ல குழந்தையை கண்டுபிடிக்க முயற்சி பண்றேன். meantime உங்களுக்கு ஜாமீன் கிடைச்சதும் மறுபடி மீட் பண்றேன் என்றான் ராம்.

ஸ்வேதா மிகவும் கலங்கி போயிருந்தாள். திலக் குழந்தையை தேட போயிருப்பதாகவும் சொன்னாள். எப்படியாவது என் குழந்தையை கண்டுபிடிச்சு குடுங்க ராம் சார் என கேட்டுக்கொண்டாள். ஸ்வேதா நீங்க எங்கே இருந்தீங்க அப்போ நாங்க எங்க ரூம்லதான் இருந்தோம் . எப்போ உங்களுக்கு குழந்தை காணாமப்போச்சுனு தெரிஞ்சுது . அம்மாவை சுட்ட அதிர்ச்சியில் எல்லோரும் இருந்தோம் அதனால உடனடியா அதிதியை தேடலை, ஆனா அடுத்த ஒரு மணி நேரத்துல எங்களுக்கு தெரிஞ்சது அதிதியை யாரோ kidnap பண்ணிட்டாங்கன்னு.உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ?எனக்கு தெரிஞ்சவரை அம்மாவை பழிவாங்குனவங்க அதிதியை எதுக்கு கடத்தணும் ? அவங்ககிட்டேயிருந்து எந்த தகவலும் இல்லை . அதிதி அந்த சம்பவத்தை பார்த்திருக்கணும். அதனாலதான் அவளை kidnap பண்ணிட்டாங்க என்றாள் ஸ்வேதா. ராம் எங்கிருந்து தொடங்குவது என்று யோசித்தான். வீட்டில் சிசிடிவி இருந்த போதும் அது வேலை செய்யவில்லை
வேலைக்காரருடன் பேசிய போது இது யாரோ வெளியாளுங்க வேலை தம்பி என்றார். அம்மா ஆஸ்பத்திரியில் நடந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவங்க யாரோ சுட்டிருக்காங்க . அவங்க எப்படி bedroom வரை போனாங்க அதான் தம்பி எனக்கும் புரியல என்றார்.