வண்ணச் சிட்டு — Red Fody.
வர்ணம் தீட்டிய கலைஞன்.
சின்னக் குருவியே…
செல்லக் குருவியே…
சிங்காரச் சிட்டுக்குருவியே!
உன் உடலிலே
ஆரஞ்சு வண்ணம் தீட்டி,
உன் சிறகுகளிலே
மரூன் நிறத் தோகை விரித்து,
உன்னை இப்படியொரு
வண்ண ஓவியமாக்கிய
அந்தக் கலைஞன் யார்?
உன் செம்மை உடலுக்கு
மரூன் நிறச் சிறகுகளைச் சேர்த்து,
வானத்தின் வண்ணங்களையே
உன்னிடம் கடன் வாங்கி
ஓவியம் தீட்டினானோ?
உன் கருமை நிறக் கண்களில்
கருமணியைப் பதித்து,
அதன் நடுவே
ஒரு துளி ஒளியை வைத்தவன் யார்?
உன் சாம்பல் நிறச் சிறிய அலகும்,
அதன் ஓரங்களில் தெரியும்
அந்தக் கம்பீரமும் கூட
அவனுடைய தூரிகைத் தீட்டல்தானோ?
உன்னைப் பார்க்கப் பார்க்க
எனக்கே கொஞ்சம் பொறாமைதான்…
மேக்கப் என்று மனிதர்கள் சொல்லும்
அழகுக் கலையைவிட,
இயற்கையின் அழகுக் கலஞ்சியத்தில்
உனக்குக் கிடைத்திருப்பது
எவ்வளவு பெரிது!
என்னிடமும் கொஞ்சம்
அந்த வண்ணங்களைத் தந்து விடு செல்லமே…
உன்னைப் போலப் பறக்க முடியாவிட்டாலும்,
உன்னைப் போல
வண்ணமாய் வாழவாவது
நானும் ஆசைப்படுகிறேன்!