Aethion’s Mission in the Outerverse Void
இது ஒருகாலத்தில் Varkur’Thal-ன் டொமேன்.
ஆனா இப்போது அது Aethion-க்கு சொந்தமாகிவிட்டது.
அவன் கையை உயர்த்தி, விண்வெளியில் மிதக்கும் எண்ணற்ற சர்வலோகங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்படியே ஒரு இடத்தில் அவன் கண் நின்று போனது—
அது Elariah-வின் சர்வலோகம்.
அவன் சிரித்துக்கொண்டான்.
> “இது… ஒரு தற்செயலான சந்திப்ப நம் இருவருக்கும்?”
---
Meanwhile, in Elariah’s Omniverse
Aethion எல்லாவற்றையும் விளக்கி முடித்துவிட்டார்.
> “இப்ப புரிஞ்சுதா நான் எப்படி இங்கு வந்தேனு!
Elariah:
> “நீ உன்னையே ஆபத்துக்குள்ள தள்ளிட்டு இருக்க, Aethion…”
Aethion:
> “தெரியுது… ஆனா பல சர்வலோகங்கள் அந்த தீய ஆட்சியாளர்களால அழிவத பார்த்துட்டு நான் சும்மா இருக்க முடியாது.”
Elariah:
> “அப்படியென்றால்… நான் உன்னுடன் வரட்டுமா? உனக்கு துணையா நிற்கட்டுமா?”
Aethion மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.
Aethion:
> “இல்ல. நீ உன் சர்வலோகத்த பாத்துக்கணும். நான் போகுற பாதை ரொம்ப ஆபத்தானது… உன்னை அந்த ஆபத்துக்குள்ள கூட்டிட்டு போக முடியாது.”
அவன் பின்னால் திடீரென ஒரு வாயில் திறந்தது.
Elariah:
> “கொஞ்ச நேரம் நீ எனக்காக இங்க தங்கி இருக்க முடியாதா…?”
Aethion:
> “நேரம் இருந்திருந்தா கண்டிப்பா இங்க இருந்திருப்பேன்… ஆனா அதுக்கு வாய்ப்பு இல்லை. நீ புரிஞ்சுப்பேனு நான் நம்புறேன்?”
அவன் வாயிலுக்குள் நடந்து போனான்.
எலரயா தனியா நின்று அந்த வெளிப்புற வெற்றிட சாவியை கையில் தூக்கிப் பார்த்தாள்.
அவள் ஒரு தெய்வீக காவலரை அழைத்தாள்.
Elariah:
> “நான் திரும்பி வரவரைக்கும் இந்த சர்வலோகத்தை நீ தான் பாத்துக்கணும்”
The God:
> “உத்தரவுப்படியே, இளவரசியே.”
அதைத்தொடர்ந்து, அவளும் சாவியை பயன்படுத்தி அறியாத வெற்றிட டோமினுக்குள் நுழைந்தாள்.
இந்தப்புறம் வெளிப்புற வெற்றிட ஒன்றில் இருக்கின்ற Velthurion மற்றும் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அவனால் உண்மையிலேயே எல்லா தீய ஆட்சியாளர்களை அழிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா
Velthurion கூறினான்:
> “அவன் Varkur’Thal-ஐ ஏற்கனவே அழித்திருக்கிறான் .
அவன் எல்லா டொமேன் திறக்கும் சாவிகளையும் பெற்றுட்டான்னா…
அப்போ நம்ம திட்டத்தை ஆரம்பிக்கலாம்.”
இந்தப் புரம் Aethion அந்த முடிவில்லா வெளிப்புற வெற்றிட இரண்டுக்குள் அலைந்தான்.
அவன் யோசித்தான்:
> “என்னோட கணிப்பு சரினா இந்த பக்கம் இன்னொரு டொமின் இருக்கணும்?”
அவன் கண்களை மூடி சுற்றுப்புறத்தை உணர்ந்தான்.
சில வினாடிகளில்—அவனால் ஓரு டொமேன் கண்டுபிடிக்கப்பட்டது.
அவன் அந்த டொமேன் பக்கத்தில் ஒரு வாயிலை திறக்க முயன்றான்.
ஆனால் அதை ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு மந்திரம் மூடிப் பாதுகாத்திருந்தது.
Aethion கை உயர்த்தி—ஒரே அடியில் அந்த தடையை அகற்றினான்.
பிறகு அவன் வாயிலைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
உள்ளிருந்த தீய உயிர் உடனே அவனின் வருகையை உணர்ந்தான்.
Evil Being:
> “நீ யாரு?! என் அனுமதி இல்லாம என் டொமேனுக்குள்ள எப்படி வந்தாய்?!”
அவன் மனதில்:
> “இந்த மாதிரி யாருமே அனுமதி இல்லாம நுழைய முடியாது… ஆனா இவன் எப்படி வந்தான்?
Aethion அமைதியாய்:
> “சரி சரி… எனக்கு ஒரு கேள்வி மட்டும் இருக்கு. அதுக்குப் பதில் சொன்னா நான் உடனே போயிடுறேன்.
பிறகு Aethion கேட்டான்.
அந்த கிரிஸ்டல்ல என்ன இருக்கு?”
Evil Being கோபத்துடன்:
> “நான் சொல்லலைன்னா என்னடா பண்ணுவ?”
அவன் உடனே ஒரு சக்தி கதிரை Aethion மீது வீசினான்.
அது Aethion-னை தாக்கியது:
Evil Being (கிண்டலுடன்):
> “அதைக் கூட உன்னால் தடுக்க முடியல அவ்வளவு பலவீனமான ஆளாடா நீ?—”
ஆனா Aethion அசையாம நின்றிருந்தான் ஒரு கீறல் கூட இல்லாமல்!
Evil Being அதிர்ச்சியில் உறைந்து போனான்
> “என்ன இது எப்படி…?!”
Aethion:
> “உனக்கு பின்னாடி இருக்கிறதை பாருடா!
அவன் திரும்பி பார்த்தான்—
கிரிஸ்டல்-ball உடைந்து கொண்டிருந்தது.
அதுக்குள்ள இருந்த ஆட்சியாளர்கள் விடுதலை ஆகிக் கொண்டிருந்தார்கள்.
Evil Being இதை பார்த்து பயத்தில் நடுங்கி கொண்டிருந்தான்!
> “அவன்… என் தாக்குதலை கிரிஸ்டல்-ball மீது திசை திருப்பி விட்டானா?!
இவன்… என்ன மாதிரியான ஒருவன்?!”
விடுதலை பெற்ற சர்வலோக ஆட்சியாளர்கள் Aethion-ன் பின்னால் நின்றார்கள்.
Aethion ஆயுதத்தை எடுத்தான்—அது வெளிச்சம் பாய்ந்தது.
Aethion:
>“இப்போது இது என் முறை ஆனா அதுக்கு முன்னாடி இவங்கள சமாளிச்சுட்டு வா
ஒரே கணத்தில் அவர்கள் கோபத்துடன் தாக்கினர்.
அந்த தீய உயிர் எதிர்க்க முடியாம சிதறிப் போய் Aethion காலடியில் விழுந்தான்.
அந்த Evil Being Aethion முன்னே விழுந்தபடி பேசினான்.
> “நீ எங்களை எதிர்த்து தப்பு பண்ணிட்டிருக்க கூடிய சீக்கிரம் நீ இங்குள்ள ஏதோ ஒரு டொமினுக்குள்ள சாகத்தான் போற.
Aethion எந்த உணர்ச்சியுமில்லாமல் ஆயுதத்தை உயர்த்தி—
ஒரே அடியில். அவனைக் கொன்றான்.
---
இந்தப்புரம்
Aethion கொடுத்த braceletடை வைத்து Elariah இதோ எழுதிக் கொண்டிருக்கும் போது திடீரென்று பின்னால் யாரோ கருப்பூர்வமாக வருவதை உணர்ந்து பின்னாடி திரும்பி பார்க்கும்போது திடீரென்று பயந்து விடுவாள் அப்புறம்தான் தெரிய வருகிறது அது Aethion
Elariah பயத்தில் பேசினால்.
> “ நீ என்ன பயப்படுத்திட்டே Aethion
Aethion சிரிப்புடன் பேசினான்.
> “உன்ன பார்க்கணும்னு தோணுச்சு அதனாலதா திரும்ப வந்தேன். ம்ம் நான் வரதுக்கு முன்னாடி நா கொடுத்த braceletடா வெச்சு நீ என்ன பண்ணிட்டு இருந்தா?
Elariah:
> “அது ஒன்னும் இல்லையே சரி சரி… எத்தனை சர்வ லோகங்களை காப்பாத்தினை எனது வீரனே
Aethion:
> “பலவற்றைக் காப்பாற்றினேன் இளவரசியே ”
அவர்கள் கொஞ்சநேரம் இப்படி பேசிக்கொண்டு இருந்தார்கள்.
பிறகு Elariah சோகத்துடன் ஒரு நேரடியான கேள்வியை கேட்டாள்:
Elariah:
> “சரி இந்த கேள்வி நான் கேட்க கூடாது என்று இருந்தேன் நீ இதுவரைக்கும் காப்பாத்துனது உனக்கு போதாதா. நீ ஏதோ ஒரு டொமேனுக்குள்ள சிக்கிட்டா? அப்போ உன்னை யார் காப்பாத்துவாங்க, Aethion?”
Aethion கூறினான்:
> “இந்த கேள்வி திடீர்னு ஏன் கேக்குறேன்னு தெரியல. ஒரு நாள் நான் இல்லாட்டியும் என்னோட சர்வலோகத்தை பார்த்துக்கொள் நீ இருக்கில அப்புறம் நான் எதுக்கு பயப்படணும் , Elariah?”
Elariah வருத்தத்துடன் பேசினால்;
> “அப்படி பேசாதே! உன் சர்வலோகத்துக்கும் சரி உனக்கும் சரி ஒன்றும் ஆகாது.
அதுமட்டுமில்லாமல் நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் நீ என்னை விரும்புகிறாயா என்ன? அந்த மாதிரி ஏதோ இருந்தாலும் சொல்லு நானும் உன்னை…
Aethion திடீரென்று தடுமாறி பேசினான்:
> “என்ன? இல்லை… நான் உன்னை என்னோட தோழியாதான் பார்த்தேன் —”
Elariah இதைக் கேட்டவுடன் உடைந்து போனால்.
> “என்ன ஒரு தோழியா தான் பார்த்தியா? அதுக்கு மேல எதுவும் இல்லையா?
பிறகு அவள் கூறினாள்:
சரி
Aethion நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் நாம பிறகு சந்திக்கலாம்!
Elariah அவளின் சர்வ லோகத்திற்கு திரும்பிப் போனாள்.
Aethion அமைதியாக நின்று நினைத்தான்:
> “நான் ஏதோ தப்பு பண்ணிட்டே”
Aethion நான் இப்படி சொல்லிஇருக்க கூடாது ஒருவேளை நான் தவறாக சொல்லி அவளை காயப்படுத்திடேனா? என்று மனதில் நினைத்து வருந்தினான்.
Aethion மீண்டும் தனது பணியை தொடர்ந்தான்.
ஒரு டொமேன் பின் ஒன்றாக தீய உயிர்களை அழித்து, சர்வ லோக ஆட்சியாளர்களையும் பல உலகங்களையும் காப்பாற்றிக் கொண்டே இருந்தான்.
இறுதியில்—ஒரே ஒரு டொமேன் மட்டும் இருந்தது.
அவன் கண்களை மூடி உணர்ந்தான்.
அவன் அதைப் பார்த்து வியந்தான்.
> “இது… சாதாரண டொமேன் இல்லை.
இது மிகப்பெரியது… அதுமட்டுமில்லாம
அதுக்குள்ள… ஒருத்தன் இல்ல.
ஏகப்பட்ட பேர் இருக்காங்க”