(The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க)
Part 1 – Aethion & Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகை
Elariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்:
> “அவனுக்கு வேண்டியது கொடுத்தாயா?”
Elariah பதில் சொன்னாள்:
> “ஆம்.”
ஆனா அது பொய். உண்மையில் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியும். சில கடவுள்கள் நமது சர்வலோகத்தை காப்பாற்ற Elariah வேறொரு சர்வலோகத்தை தியாகம் செய்திருக்கிறாளா என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனா ஒரு இலட்சம் ஆண்டுகள் கழிந்தும்… Elariah-வோட மனம் சோகத்திலே இருந்தது. அவளோட நினைவு முழுக்கவும் Aethion தான் இருந்தான்.
சில கடவுள்கள் ஆறுதல் சொல்லினார்கள்:
> “நம்ம வாழ்க்கையில் சில நேரங்களில் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரும். அப்போ வேற வழி இருக்காது. நம்ம எல்லோரும் அதை கடந்து தான் செல்லனும்.”
Elariah தலைஅசைத்தாள். அடுத்த சில வாரம் அவள் சந்தோஷமாய் நடித்து கொண்டாள்.
சில வாரங்களுக்கு பிறகு —
அவள் சர்வலோகத்திற்குள் யாரோ ஒருவர் நுழைந்தார். இங்கே இருந்த அனைவரும் அவரைத் தாக்கத் தயாராக இருந்தனர்.
ஆனா Elariah பார்த்ததும் அவளது கண்கள் விரிந்தன — அது Aethion.
Aethion சிரித்துக்கொண்டே சொன்னான்:
> , பாத்து ரொம்ப நாளாச்சுல?
Elariah கண்ணீரோடு அவனை கட்டிப்பிடித்து கூறினாள்:
> “நாம மீண்டும் சந்திக்க மாட்டோம்னு நினைத்தேன்.”
Aethion மெதுவாக சிரித்து சொன்னான்:
> “நீ தான் சொன்னியா ‘மீண்டும் சந்திப்போம்னு’?
நானும் ‘ஆம்’ன்னு சொன்னே. இப்ப இதோ… நாம சந்திச்சிட்டோம்.”
Elariah கேட்டாள்:
> “நீ இங்க எப்படி வந்த? யாராவது உதவினார்களா? இல்ல நீயே என்னோட சர்வலோகத்திற்கு வர வழி கண்டுபிடிச்சியா?”
Aethion சொன்னான்:
> “அது ஒரு பெரிய கதை. ஆனா நான் இங்க வந்த காரணம்… எனக்கு உன்னோட உதவி வேணும்.”
Elariah உடனே உற்சாகமாக:
> “சொல்லு. என்னால் முடிந்தால் அனைத்தும் உனக்கு செய்வேன். சொல்லு என்ன உதவி?”
Aethion ஒரு ஒளிவீசும் சாவியையும், ஒரு வகையான bracelet-ஐ எடுத்தான்.
> “இது என் அப்பாவின் வெளிப்புற வெற்றிடத்த அணுகுற சாவி
இதை பயன்படுத்தினா, என் சர்வ லோகத்தை உன்னால பார்க்க முடியும்.
யாராவது அதுல நுழைந்தா உடனே எனக்கு சொல்லணும்
Elariah கேட்டாள்:
> “சரி ஆனா அந்த நேரத்துல நான் எப்படி உன்னை அணுகுவது”
Aethion அந்த bracelet-ஐ அவள்கிட்ட கொடுத்தான்.
> “அதுக்குத்தான் இந்த bracelet இருக்கு இத நீ அப்போ ஐந்து தடவை தட்டினா அது என்னுடன் நேரடியா இணைக்கும் அதுக்கப்புறம் மிச்சதெல்லாம் நான் பாத்துக்குறேன்
இந்த உதவியை எனக்காக செய்ய முடியுமா?”
Aethion-ன் குரல் உணர்ச்சியானது. Elariah தலையசைத்து:
> “சரி. ஆனா நீ எங்கே போகிறாய்? சொல்லு Aethion. உன்னை பார்த்தா ஏதோ பிரச்சனையில இருக்கிற மாதிரி தெரியுது. நீ என்னை காப்பாத்தின… என் சர்வலோகத்தையும் காப்பாத்தின. ஆனா இப்போது நீ பிரச்சனையில் இருக்கும்போது அதா பார்த்துட்டு நா சும்மா இருக்க முடியாது. சொல்லு என்ன நடந்தது?”
Aethion எதுவும் பேசாமல் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு பிறகு சொன்னான்:
> “உண்மையில என்ன நடந்துச்சுன்னு சொல்லுறேன்…
நான் உன்னோட சர்வ லோகத்துக்கு வரத்துக்கு முன்னாடி
Aethion சொல்ல ஆரம்பித்தான்.
சில வாரங்கள் கழித்து…
Aethion சர்வலோகத்தை நன்றாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். ஆனா அவனது உள்ளுக்குள் ஏதோ ஒன்று அவனை தொந்தரவு செய்தது — ‘ஏதோ சரியில்லை’ என்று அவன் இன்னும் உணர்ந்தான்.
ஒரு நாள் — வெளிப்புற வெற்றிடத்திலிருந்து ஒரு வாயில்மூலமாக ஒருவன் வந்தான்.
அவன் சொன்னான்:
> “Aethion. நாம பேசணும்.”
Aethion யோசித்தான்: என் கணிப்பு சரி என்றால் இவன் அச்சுறுத்தலுக்காக இங்க வரவில்லை. எல்லா கடவுள்களும் தாக்கத் தயாராக இருந்தனர். ஆனா Aethion கையை தூக்கி:
> “அவனை பேச விடுங்க.”
அப்புறம் எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
அவன் சொன்னான்:
> “என் பெயர் Velthurion.
நான் உன்னோட சர்வலோகத்தை சேதப்படுத்தவோ, ஆக்கிரமித்து ஆட்சி செய்யவோ இங்க வரவில்லை. நான் உன்னுடன் தனியாக பேச இங்க வந்திருக்கிறேன்.”
Aethion-க்கு அவன் எதிரி அல்ல என்று தெரிந்தது. இருவரும் உட்கார்ந்தனர்.
Velthurion ஆரம்பித்தார்:
> “எனக்கு தெரியும் நான் இங்க வரதுக்கு முன்னாடி
நீ உன் அப்பாவை இழந்துட்டை
நீ நிறைய துன்பங்களைக் கடந்து வந்திருக்கேனு.
ஆனா Aethion… எங்களுக்குத் உன்னோட உதவி தேவை.”
Aethion:
> “என்ன உதவி?”
Velthurion:
> “இந்த எண்ணற்ற சர்வலோகங்களையும், உலகங்களையும் காப்பாற்றும் ஒரே சக்தி உன்னிடம் தான் இருக்கிறது. அதனால்தான் உன்னுடைய உதவி எங்களுக்கு வேண்டும்.”
ஆனால் Aethion பேசினான்:
>"நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது ஆனா நான் எங்க அப்பாக்கு ஒரு சத்தியம் பண்ணி இருக்கேன் நான் இந்த சர்வ லோகத்துல இருக்கிற வரைக்கும் யாருமே இதை தொட முடியாது அப்படின்னு அதனால அந்த வாக்குறுதி மீறி என்னால உனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது என்ன மன்னிச்சிடு என்று
சொன்னான்”
Velthurion சோகத்துடன் பேசினான்.
> “உன் அப்பாவும் இதே மாதிரி இருந்தார்.
அவர் நினைச்சிருந்தா பல சர்வ லோகங்கள காப்பாத்தி இருக்கலாம் ஆனால் அவர் செய்யல.
இருந்தாலும் அவரோட சர்வ லோகத்த காப்பாற்ற எல்லாத்தையும் செஞ்சாரு
எனக்கு புரியுது எந்த ஒரு சர்வ லோக ஆட்சியாளரும் இந்தப் பாதையில போய்
எனது சர்வலோகம் இழந்துட்டால் நான் என்ன செய்வது என்று பயப்படுவது இயல்புதான்.
Velthurion கீழே பார்த்து மெதுவா சொன்னான்:
> “பரவாயில்லை Aethion.
நான் உன் முடிவை மதிக்கிறேன்
ஆனா ஒருநாள்… நீ மனசை மாற்றினா…”
அவன் ஒரு ஒளிவீசும் கல்லை மேசைள் மேல் வைத்தான்.
> “இந்த கல்லை எடுத்துக்கிட்டு .
உன்னோட வெளிப்புற வெற்றிடத்திற்த் டொமேனுக்குள் போய் என் பெயரை மட்டும் உச்சரித்தால்
அடுத்த நிமிஷமே நான் உன் முன்னாடி நிற்பேன்.”
பிறகு அவன் ஒரு வாயிலை உருவாக்கி அதற்குள் சென்று மறைந்து விட்டான்.
Aethion அமைதியா பார்த்துகிட்டிருந்தான். அப்போது
சில கடவுள்கள் வந்து கேட்டாங்க:
> “எதாவது பிரச்சினையா, என் ஆண்டவரே?”
Aethion:
> “இல்ல… எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்
பிறகு அவர்கள் வெளியேறினார்கள்
சில மாதங்களுக்கு பிறகு
Aethion-க்கு நிறைய கெட்ட கனவுகள், வந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள், அவன் ஒளிவீசும் கல்லை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது சில கடவுள்கள் வரிசையில் வந்து:
>“எல்லாம் சரியா இருக்கிறதா, என் ஆண்டவரே? நீங்க இப்ப கடந்த சில வாரமா நீங்க சரியா தூங்காதாத நாங்க கவனிச்சோம்
Aethion பதில் சொன்னான்:
>“இல்ல .நான் நல்லாதான் இருக்கேன்
அவன் எழுந்து நின்றான்.
அவன் ஆடைக்குள்ள அந்த ஒளிரும் கல்லை அமைதியா மறைச்சுவிட்டு சொன்னான்:
>“எனக்கு வெளிப்புற வெற்றிடத்தில கொஞ்சம் வேலை இருக்கு அதனால விஷாலியா-ஐ காக்கும் கடவுளை அழைத்தான்.
>“நான் திரும்பி வரவரைக்கும் நீ தான் இந்த சர்வ லோகத்த பாத்துக்கணும்
விஷாலியா தலைவணங்கி:
>“நிச்சயமாக என் ஆண்டவரே. நீங்கள் திரும்பி வரும் வரை நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.
பிறகு Aethion வெளிப்புற வெற்றிட டோமெனுக்குள் நுழைந்தான்.
அவன் அந்த ஒளிரும் கல்லை வெளியே எடுத்து, அவன் பெயரை மெதுவாக சொன்னான்:
“Velthurion.”
அந்த கல் காற்றில் மிதந்தது.
அதிலிருந்து Velthurion மீண்டும் தோன்றினார்—இந்த தடவை ஒரு hologram ஆக!
Velthurion:
>“நீ இவ்ளோ சீக்கிரம் உன் மனசு மாத்திக்குவேனு நான் எதிர்பார்க்கல. ம்ம் நாம நிறைய விஷயம் பேசணும்… ஆனா அதுக்கு முதல்ல, நீ எங்க இடத்துக்கு வரணும்.”
Aethion:
“சரி என்று சொன்னான்.
அப்போது அந்த hologram ஒரு வாயுளாக மாறியது.
Velthurion:
>“இதுக்குள்ள தான் வா”
Aethion இந்த வாயுளுக்குள் நுழைந்தான்.
அந்த பகுதிக்குள்—அவன் மிக வலிமையான பல உயிர்கள் இருப்பதை உணர்ந்தான்.
அவர்களது சக்தி அசாதாரமானது!
Velthurion அவனிடம் வந்து சொன்னார்:
>“உன்னை இங்க வரவேற்கிறோம் , Aethion. எனக்கு தெரிஞ்சு உன் மனசுல நிறைய கேள்விகள் இருக்குனு நினைக்கிறேன்?”
Aethion உடனே கேட்டான்:
>“முதல்ல மாற்ற சர்வ லோகங்களை எப்படி காப்பாற்றுவது என்று சொல்லுங்கள்?”
Velthurion:
>“இவ்வளவு அவசரம் வேண்டாம். முதல்ல வெளிப்புற வெற்றிடம் நா என்னன்னு உனக்கு தெரியணும்!
Aethion:
>“அது எனக்குத் தெரியும்!”
Velthurion அமைதியா சொன்னார்:
>“உனக்கு தெரிஞ்சது எல்லாம் வெளிப்புற வெற்றிட டோமின்குள்ள இருக்கிற அந்த தீய சக்திகள் மட்டும் தான்
Aethion சற்று குழப்பத்துடன் கேட்டான்:
>“டொமினுக்குள்ள இருக்கிற தீய சக்திகள?
---
Velthurion அப்போதுதான் aethionக்கு விளக்க ஆரம்பித்தார்:
>“நான் தெளிவா சொல்றேன்.
ஆனா அதுக்கு முதல்ல நாங்க எப்படி உன்னை கண்டுபிடிச்சோம் அப்படிங்கறதா நாங்க தெளிவா விளக்கிறோம்.
>"உன்னோட பிறப்புக்கு முன்னாடி, உன்னோட சர்வ லோகத்தை பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியாது.
அதுக்கப்புறம்தான் நீ வெளிப்புற வெற்றிட டொமின்குள்ள பிறந்த, அப்போ உன்னுடைய ஈர்ப்பு அந்த டோமினியை சிதறஅடிச்சிருக்கும் ஆனா
உன்னோட அப்பா Adonaiதான் அத தடுத்தாரு.
“அதுக்கப்புறம் தான் நாங்க அந்த டோமின்குல்ல என்ன நடக்குது அப்படிங்கிறத கண்காணித்து கொண்டிருந்தோம் . அப்போதான் உன் அப்பா உன்னை மோத முதல்ல அவரோட சர்வ லோகத்துக்கு உன்ன கைக்குழந்தையா எடுத்துட்டு போயிருந்திருக்காரு
ஆனா அங்கே உன்னோட ஈர்ப்பத் தாங்க முடியாம அந்த சர்வலோகமே சமநிலையே இழக்க ஆரம்பிச்சிருச்சு.
அப்போதான் நாங்க உங்க அப்பாவோட
சர்வ லோகத்தை எளிதா கண்டுபிடிச்சோம்.
Velthurion தொடர்ந்து சொன்னார்:
>"சரி இப்ப நம்ம முக்கியமான விஷயத்துக்கு வருவோம் .
எல்லையற்ற லோகம் அங்கிருந்துதான் எல்லாமே ஆரம்பித்தது அந்த
எல்லையற்ற லோகத்திலிருந்து ஒரு மிக பெரிய தெய்வீக கல் வெளிப்புற காலியான வெற்றிடம் இன்று அழைக்கப்படும் வெற்றிட மூன்றுக்கு செல்லும் பின்னர் அது ஆற்றல் மூலமாக தானாகவே வெடிக்கும் அந்த வெடுப்புக்குப் பிறகு ஒரு கடவுள் பிறப்பார்
பிறகு அந்த கடவுள் எல்லா உலகங்களையும் அண்ட விதிகளையும் பரிமாணங்களையும் கடைசியில் சர்வ லோகத்தை உருவாக்கி முடித்த பிறகுதான் அவன் அந்த சர்வ லோகத்தை ஆளும் ஆட்சியாளர்"
>"அது முடிந்தவுடன் அவனுடைய சர்வலோகம் Separateverse எனப்படும் அதன் வாயில் திறந்து அதுக்குள் சென்று அங்கு அவனும் அவனுடைய சர்வலோகம் பாதுகாப்பாக இருக்கும்"
>"ஆனால் அந்த ஆட்சியாளருக்கு தனது சர்வ லோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது .
உதாரணமாக
எல்லையற்ற லோகத்தையோ வெளிப்புற வெற்றிடத்தையோ இல்லை வேறு எந்த சர்வ லோகத்தைப் பற்றியோ எதுவும் அவருக்கு நினைவிலும் இருக்காது தெரியவும் வராது"
Velthurion தொடர்ந்தான்:
>"ஆனால் அந்தக் கடவுள் சர்வ லோகத்தை உருவாக்க முடியாமல் தோல்வி அடைந்து விட்டால் அவன் தானாகவே வெளிப்புற வெற்றிட
ஒன்றுக்கு அனுப்பப்படுவான்"
அங்கு அவனுக்கு ரெண்டு வாய்ப்பு கிடைக்கும்
1. வேற ஒருவரால் உருவாக்கப்பட்ட சர்வ லோகத்தில் அவன் கடந்த கால நினைவுகள் இல்லாமல் மறுபிறவி எடுக்க வேண்டும்
இல்லை
2. வெளிப்புற வெற்றிட ஒன்றில் இங்கேயே இருந்து எல்லா உலகங்களையும் சர்வ லோகங்களையும் காப்பாற்ற வேண்டும்
இப்ப உனக்கு புரியுதா Aethion நாங்கள் யார் என்று
Aethion சிறிது நேரம் யோசிச்சு விட்டு ஒரு கேள்வி கேட்டான்.
>"அப்போ வெளிப்புற வெற்றிட மூன்று வரிக்கி இருக்கு அப்படினா அந்த இரண்டாவது வெற்றிடம் என்ன?"
Velthurion கூறினான்.
>"நல்ல கேள்வி வெற்றிட இரண்டுக்குள் இருக்கிறவர்கள் எங்கள் போல் அல்ல . அவர்கள் சர்வ லோகத்தை உருவாக்கினார்கள் ஆனால் நரகம் மாதிரி அவர்கள் தங்கள் சுயநலத்துக்கு வேண்டி சர்வ லோகத்தில் உள்ள கடவுள்களையும் கட்டுப்படுத்தி எனக்கு கீழ தான் எல்லாமே அப்படிங்குற ஒரு திமிரில் அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள் மற்ற
கடவுள்கள் சந்தோசமாக இருந்தால் இந்த ஆட்சியாளர்கள் அவங்களுக்குள் சண்டை மூட்டி விட்டு அதைப் பார்த்து இவர்கள் ரசிப்பார்கள்"
>"சில நேரத்தில் உங்க அப்பா போல் பதிவியே சர்வ லோகத்தையும் குடுத்துவிட்டு சென்ற பிறகு வரும் புது ஆட்சியாளரும் நான் ஆட்சியாளர் ஆகிவிட்டேன் என்ற திமிரில் அவர்களும் இதே போல் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்
இவர்கள் இப்படி தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் பிறகுதான் வெளிப்புற வெற்றிட ஒன்றிலிருந்து நாங்கள் வருவோம்
வந்து இந்த தீய ஆட்சியாளர்களை சிறைப்பிடித்தோ இல்லையெனில் வெளிப்புற வெற்றிட இரண்டுக்கோ இவர்களை தள்ளிவிடுவோம்"
>"இதனால்தான் வெளிப்புற வெற்றிட இரண்டில் முழுவதும் தீய சக்திகளாக சூழ்ந்து இருக்கிறது
ஆனால் காலப்போக்கில் இவர்கள் எல்லாரும் இவர்களுக்குன்னு கழகத்தை அதாவது டொமேன்களை உருவாக்க தொடங்கினர்"
அந்த நேரத்தில் Velthurion சற்று தடு மாறினான் எதையோ மறைப்பது போல.
அதுக்குப் பிறகு பேசினான்:
>"அவர்கள் உருவாக்கும் அந்த டொமேனுக்கு சக்தி வாய்ந்த பாதுகாப்பு மந்திரத்தை போட்டு விட்டனர் . அதனால எங்களால் அந்த மந்தரத்தையும் உடைக்க முடியவில்லை அதுக்குள்ளேயும் போக முடியவில்லை
எங்களால் முடிந்ததுஎல்லாம் அவர்கள் அந்த டொமேனுக்குள் என்ன செய்கிறீர்கள் என்பதை சிறிது நேரத்துக்கு பார்ப்பதுதான். எங்களுக்கு தெரிந்த படி அதுக்குள் இருப்பவர்கள் சில பேர் என்ன செய்கிறார்கள் என்றால் சர்வலோக ஆட்சியாளர்களை சிறைப்பிடித்து அவர்களின் சர்வ லோகத்தையும் கைப்பற்றுகிறார்கள் இன்னும் சில பேர் சர்வ லோகங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்"
ஆனால் அவர்களிடம் சர்வ வெல்லமை இல்லை அதனால் அவர்களை கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிதாக்குகிறது .
Velthurion எதோ ஒன்றையும் மறைப்பதை Aethion உணர்ந்தும். அவன் அதை கேட்காமல் வேறொன்று கேள்வியை கேட்டான் .
>"சரி ஆனால் அந்த சர்வ வெல்லமை என்றால் என்ன?"
Velthurion இப்போது சர்வ வெல்லமை சக்தியை பற்றி விளக்குகிறான்.
>"சர்வ வெல்லமை வந்து சர்வ வல்லமை விட பெரியது அதைவிட ரொம்ப சக்தி வாய்ந்தது. இது யார் சர்வ லோகத்தை சரியாக உருவாக்காமல் தோல்வி அடைந்து அவர்கள் வெளிப்புற வெற்றிட ஒன்றில் தங்கினால் அவர்களுக்கு வழங்கப்படும் சக்திதான் இது ஆனால் வெளிப்புற வெற்றிட இரண்டில் அவர்களுக்கு இந்த சக்திகள் இல்லை.
உனக்கு இன்னும் புரியும்படி விளக்கிறேன்"
>வெளிப்புற வெற்றிடத்தை பொறுத்தவரை சட்டம் தர்க்கம் இல்லாத இடம்தான் இந்த வெளிப்புற வெற்றிடம் இங்கு இருப்பவர்கள் அபரிவிதமான சக்தி வாய்ந்தவர்கள். ஆனால் வெளிப்புற வெற்றிட இரண்டில் இருப்பவர்கள் அவர்கள் ஒரு சர்வ லோகத்துக்கு செல்லனும் என்றால் அவர்களோட சக்தியை குறைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். அப்படி அவர்கள் குறைக்காமல் சென்றாள் அந்த சர்வ லோகமே சமநிலையை இழந்து விடும்
இது எங்களை சுலபமாக அவர்களை கண்டுபிடிக்க உதவும். ஆனால் அவர்கள் சக்தியை குறைத்துக் கொண்டு அந்த சர்வ லோகத்திற்குள் போகும்போது எங்களால் அவர்களை அவ்வளவு எளிதில் கண்டுபிடிப்பது கடினம்.
ஆனால் வெற்றிட ஒன்றில் இருக்கும் நாங்கள் எந்த உலகங்களுக்கோ இல்லை சர்வ லோகத்துக்குள்ளும் எளிதாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் போக முடியும் அதுவும் எந்த சக்தியையும் குறைக்காமல்.
அதுமட்டுமில்லாமல் எங்கள் சக்தியை அங்கே முழுமையாக பயன்படுத்தவும் முடியும்"
>"இப்ப புரியுதா நீ ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்தவனா இருக்கன்னு
நீ ஒன்னும் சர்வ லோகத்துல பிறக்கல நீ பிறந்தது வெளிப்புற வெற்றிட டோமினுக்குள்ள தான் .
அதுமட்டுமில்லாம உன்னால மட்டும்தான் வெற்றிட இரண்டுக்குள் இருக்கிற அந்த தீய ஆட்சியாளர்களை அவங்க டொமின்குள்ளே போய் அழிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் நீ சமீபத்தில் Varkur’Thalலை கொன்று இருக்கிறாய் அதுவும் அவனோட டொமின் உள்ளியே வைத்து. இது யாராலும் செய்ய முடியாது உன்கிட்ட மட்டும்தான் இந்த எல்லையற்ற உலகங்களையும் சர்வ லோகங்களையும் காப்பாத்துற திறனும் சக்தியம் இருக்கு"
பிறகு Aethion கேட்டான்:
>"நான் அவன கொன்னுட்டு என்னோட சர்வ லோகத்துக்கு போனதுக்கப்புறம் எங்க கடவுள்கள் இழந்த சக்திகள் மீண்டும் அவங்களுக்கே கிடைச்சிருச்சு. அது எப்படி?"
Velthurion சொல்றாரு:
>"அது ஏன் அப்படின்னா அந்த நேரத்தில் உன்னோட ஈர்ப்பிலேயே அந்த சர்வ லோகம் சமநிலையை இழந்து சீர்குலஞ்சிருச்சு அது உன்னோட தப்பு இல்ல
ஏன்னா நீ ஒன்னும் சர்வ லோகத்துல பிறக்கல
நீ வந்து வெளிப்புற வெற்றிட இரண்டுக்குள் இருக்கிற டொமின் குள்ள தான் பிறந்திருந்த ஒருவேளை அதா கூட காரணமா இருக்கலாம்
அதுமட்டுமில்லாமல் நீ பிறக்கும்போதே உனக்கு சர்வ வெல்லமை இருந்திருக்கு ஆனா அந்த சக்தி முழுமையா வேலை செய்யாம இருந்திருக்கு நீ எப்போ Varkur’Thal கிட்ட போறிட்டியோ அப்போ உனக்கு அந்த சர்வ வெல்லமை வேலை செய்ய
ஆரம்பிச்சிருக்கு."
>"இந்த சர்வ வெல்லமை ரொம்ப தனித்துவமானது இது உன்னோட ஆற்றல் சக்திய சமநிலையாவும் வெச்சிருக்கும் அதே சமயம் சமநிலை இல்லாமலும் வெச்சிருக்கும். உனக்கு புரியிற மாதிரி சொல்றேன் உன்னோட முழு சக்தியை வெளிப்புற வெற்றிடத்தில பயன்படுத்தினா அப்போ உன்னோட சக்தி சமநிலை இழந்திரும் அப்போ அதை கட்டுப்படுத்துவது கஷ்டம்.
ஆனா அதே நீ உன்னோட சர்வ லோகத்துல முழு சக்தி பயன்படுத்தினால் அப்போ இது உன்ன சமநிலைப்படுத்திடும் இப்ப புரியுதா சர்வ வெல்லமை இருக்குறவங்க ஏன் சர்வ லோகத்துல நுழையும் போதோ இல்ல இருக்கும்போது எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருக்காங்க அப்படின்னு!"
இதையெல்லாம் கேட்டுவிட்டு பிறகு Aethion ஒரு கேள்வி கேட்கிறான்:
>"இந்த அளவுக்கு உங்களுக்கு சக்தி இருக்கும்போது அப்புறம் ஏன் அந்த தீய ஆட்சியாளர்கள அழிக்காம வெளிப்புற வெற்றிட இரண்டுக்கு எதுக்கு தள்ளிறிங்க"
Velthurion அதுக்கு பதில் சொன்னான்:
>"நாங்க அப்படி அவனோட சர்வ லோகத்திலேயே வச்சு அவனை அழிச்சோம்னா .
அவன்னோட சர்வ லோகமே
சீர்குலஞ்சு கொஞ்சம் கொஞ்சமா அழிய ஆரம்பிச்சுடும் அதனாலதான் நாங்க அந்த ஆட்சியாளரை சிறை பிடிக்கும் பெட்டியில் அவனை பிடித்து . அவனுக்கு பதிலா வேற ஒரு ஆட்சியாளரை பொறுப்புஏற்றிய பிறகு தான் நாங்க அவன வெளிப்புற வெற்றிட ஒன்றுக்கு எடுத்து சென்று அப்போதுதான்
அவனை அழிக்க முடியும்
இவ்வளவு கஷ்டமா இருந்த நாளத்தான் நாங்கள் தீய ஆட்சியாளர்களை வெளிப்புற வெற்றிட இரண்டுக்குள் விரட்டினோம்"
Aethion சொன்னான்:
>"இது உங்க வேலையெ இன்னும் கஷ்டமாக்குறதுனால தான் அவங்கள எல்லாத்தையும் வெளிப்புற வெற்றிட இரண்டுக்கு துரத்தி இருக்கீங்க. ம்ம் அப்போ அந்த எல்லையற்ற லோகத்தைப் பற்றி என்ன?"
Velthurion சொல்கிறார்:
>"ஆ அது கொஞ்சம் சிக்கலானது. எல்லார்த்தாலையும் அந்த எல்லையற்ற லோக வாயில மட்டும்தான் பார்க்க முடியும் ம்ம் யாருமே அதுக்குள்ள போனதில்ல ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை நாம எல்லாரும் அங்கிருந்துதான் வந்தோம் .
ஒருவேளை நம்ம படிப்பாளி அதுக்குள்ள இருக்கலாம் இல்லையா!"
Aethion சந்தேகத்தோடு கேட்டான்:
>"ஏன் யாருமே இது வரைக்கும் ஒருத்தர் கூட அதுக்குள்ள போய் யார் தான் அங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டதில்லையா!
Velthurion சொன்னான்: >"இல்ல . அதுக்குள்ள என்னதான் இருக்குன்னு இது நாள் வரைக்கும் யாருக்குமே தெரியாது"
Aethion சரி அப்போ .
>"நானு என்னோட பணியை முடிக்க போறே"
Velthurion கேட்கிறான்:
>"அப்போ நீ போய் வெளிப்புற வெற்றிட இரண்டுக்குள் இருக்கிற தீய ஆட்சியாளர்கள அழிக்க கிளம்புறியா"
A
ethion அதுக்குதான் இப்ப கிளம்புறேன் அப்படி என்று கூறுகிறான்.
ஆனால் Velthurion சோகத்துடன் கூறுகிறான்:
>"ஆனா Aethion நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன் எங்களால உன் கூட வர முடியாது"
>"Aethion பரவால்ல இது நான் தனியா பாத்துக்குறேன் சொல்லிவிட்டு
பிறகு Aethion வாயிலை திறந்து அதுக்குள்ளே தனியாக செல்கிறான்'