Yadhumatra Peruveli - 21 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | யாதுமற்ற பெருவெளி - 21

Featured Books
Categories
Share

யாதுமற்ற பெருவெளி - 21

போலீஸ் கல்யாணமண்டபம் வாசலில் இருந்த சிசிடிவி footage மறுபடியும் செக் செய்த போது வீணா இறந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆள் காரில் இருந்து இறங்கி குமரேசனை தூக்கி வருவது தெரிந்தது. அவன் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அவனுடைய முகம் தெளிவாக தெரியவில்லை. அந்த காரின் நம்பர் plate தெளிவாக தெரிந்தது. குமரேசனின் postmortem ரிப்போர்ட்டில் அவனுக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. குமரேசனை ஏற்றி வந்த கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார். அவர் பெயர் மலர்விழி என்றும் கிரிமினல் வக்கீலாக பணிபுரிபவர் என்று தெரிந்தது. அவருடைய கார் ஏற்கனவே காணவில்லை என போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திருந்தார்.போலீஸ் அந்த காரை காணவில்லை என எல்லா ஸ்டேஷனுக்கும் இன்போர்ம் செய்து தேடத் தொடங்கியது .மலர்விழியை விசாரித்தபோது தனக்கு குமரேசனையோ அந்த கார் கடத்தியவனையோ தெரியாது என்றார். இதற்கிடையில் குமரேசன் போனில் வீணாவுடன் மணி நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் இருந்தன. அவனுடைய போன் கால் ஹிஸ்டரி செக் செய்த பொது அவன் பிரதாப் என்பவனுக்கு போன் செய்திருப்பது தெரிந்தது.பிரதாப்பை போலீஸ் விசாரித்தபோது குமரேசன் தனக்கு போன் செய்து தான் ஆபத்தில் இருப்பதாகவும், தன்னுடைய போன் சரியாய் வேலை செய்யவில்லை எனவும் சொன்னான் என்றான். பிரதாப் போனை வாங்கி போலீஸ் செக் சய்தனர். அதில் குமரேசன் போனில் இருந்த அதே வீணா மணி வீடியோ இருந்தது. பிரதாப்பை போலிஸ் ஸ்டேஷன் கொண்டு போய் விசாரித்த தானும் குமரேசனும் வீணாவை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தான். மலர்விழியை தனக்கு தெரியாது என்றும் கூறினான்.

தீபன், சுரேஷ் ,சதீஷ் மூவரும் போலீசில் கிடைத்த விவரங்களை வைத்துகொண்டு மலர்விழியை சந்தித்தனர். எனக்கு புரியுது உங்க ஆதங்கம் அன்னிக்கி ஷாப்பிங் போயிட்டு திரும்பி வந்து பார்க்கிறப்போ என்னோட கார் திடீர்னு காணாம போயிடுச்சு. போலிஸ் கிட்ட நான் உடனே கம்ப்ளைன்ட் குடுடுத்தேன் அந்த காரை அப்பவே கண்டுபிடிசிருந்தா குமரேசனை காப்பாத்தியிருக்கலாம் என்றார். இப்படி நடந்திருக்கும்னு நான் நினைக்கலை என்றார். சரிங்க மேடம் வேற எதாவது தகவல் தெரிஞ்சா உடனே சொல்லுங்க என்றான் சதீஷ். நிச்சயமா ஹெல்ப் பண்ணுறேன் என்றார். போலீஸ் அந்த காரை கண்டுபிடிக்க இரண்டு வார அவகாசம் எடுத்துகொண்டது, பிரதாப்பை போலிசே ஏற்கனவே அர்ரெஸ்ட் செய்து கஸ்டடியில் வைத்திருந்தார்கள். போலீஸ் அந்த காரை கண்டு பிடித்தவுடன் காரை சோதனை இட்டார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த கார் பற்றி மலர்விழிக்கு தகவல் குடுத்து எடுத்து போக சொன்னார்கள். மலர்விழி தீபனுக்கு தகவல் சொன்னாள். காரை உடனே எடுத்து போக சொன்னார்களா அவர்கள் சரியாக சோதனை செய்யவில்லை என்றே நினைக்கிறேன். கார் இப்போது எங்கு இருக்கிறது . ஆந்திரா பார்டரில் சுங்கசாவடி அருகில்,உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நாங்கள் போய் எடுத்து வரட்டுமா காரை என்றான் தீபன். சரி நான் போலீசிடம் சொல்லி விடுகிறேன் என்றாள்.


தீபன், சுரேஷ் இருவர் மட்டும் அந்த கார் இருக்கும் இடத்துக்கு சென்றார்கள். சதீஷ் வரவில்லை என்று சொல்லிவிட்டான். தீபன் காரை செக் செய்தான். சுரேஷ் காரின் டிக்கியை திறந்து பார்த்தான். சுரேஷ் மேலும் சீட்டை நகர்த்திவிட்டு எதையோ தேடினான். அது கிடைத்தது. பிறகு டேஷ்போர்ட்டிலும் தேடினான், வண்டி சம்பந்தமான காகிதங்களுடன் அந்த பில்லும் கிடைத்தது. அது மயக்க மருந்து ஸ்ப்ரே வாங்கிய பில் ஆக இருந்தது. காலி மயக்க மருந்து பாட்டில் கிடைத்தது. அதில் போன் நோ இருந்தது. குமரேசன் postmortem ரிப்போர்ட் copy ஒன்று சுரேஷிடம் இருந்தது, அதையும் இந்த மயக்க மருந்து ஸ்ப்ரே பெயரையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி படுத்திகொண்டான். அதில் இருந்த போன் நம்பர் யாருடையதென்பதை தெரிந்து கொள்ள போலிசுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான். காரை மலர்விழி வீட்டில் விட்டுவிட்டு நேராக ஸ்டேஷன் சென்றார்கள். அந்த போன் no பிரதாப்புடையதாக இருந்தது. அவன் தனக்கு எதுவும் தெரியாது என்றான். அவனை இழுத்துக்கொண்டு அந்த மயக்க மருந்து ஸ்ப்ரே வாங்கிய கடைக்கு போலீஸ் சென்றது, விசாரணையில் அங்கு வந்தது அவனில்லை வேறொரு ஆள் என்று தெரிய வந்ததது.பிரதாப் எதையோ மறைப்பதாக தோன்றியது தீபனுக்கும், சுரேஷுக்கும்.

சுஜாவிடம் விவரங்களை சொன்னான் தீபன். சுஜா இன்னும் என்னென்ன மர்மம் இருக்கிறதோ வீணா மரணத்தில் என ஆச்சர்யப்பட்டாள். போலீஸ் விசாரிக்கிறார்கள் ஆனால் ஏதோ ஒன்றை கோட்டை விட்டுவிடுகிறார்கள் என்றான் சுரேஷ். அப்படித்தான் சுரேஷ் பார்க்கவில்லையெனில் அந்த பில்லும் மயக்க மருந்து ஸ்ப்ரேவும் கிடைத்திருக்காது என்றான் தீபன். அடுத்து என்ன நடக்கும் என சுஜா தீபனிடம் கேட்டாள். இந்த வக்கீல் மலர்விழி காரை ஏன் எடுத்து சென்றார்கள் என்பது புதிராக உள்ளது. சதீஷ் போன் செய்தேன் சுவிட்ச் ஆப் என்று வந்தது என்றாள் சுஜா. சதீஷ் எங்கு போனான் என்று தெரியவில்லை. அவர் உங்களுடன் வரவில்லையா என்றாள் சுஜா. இல்லை. பிரதாப் வாயை திறந்து உண்மை சொன்னால்தான் உண்டு என்றான் தீபன். மேற்கொண்டு போலிஸ் யுவன் கொல்லப்பட்ட கத்தியையும், வீணாவை கொல்ல பயன்படுத்திய கத்தியையும் ஒப்பீடு செய்து ரிப்போர்ட் கேட்டிருந்தது. இரண்டுமே ஸ்பெஷல் ஆக ஆர்டர் செய்யப்பட்ட ஒரே மாதிரி கத்தி என தெரிய வந்தது. அதை தயாரித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது அதை ஆர்டர் செய்தது வக்கீல் மலர்விழி என தெரிந்தது . இதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மலர்விழியை தொடர்பு கொண்டு விசாரித்தனர். தனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என் தெரிவித்தார். போலிஸ் அவரை அர்ரெஸ்ட் பண்ணியது.

போலிஸ் மலர்விழியை அரெஸ்ட் செய்ததற்கு வக்கீல்களிடம் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தமே இல்லாமல் கைது செய்ததற்கு கண்டனம் என வக்கீல்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. வேறு வழி இல்லாமல் மலர்விழியை போலீஸ் ஜாமீனில் வெளியே விட்டது. தீபனும், சுரேஷும் மலர்விழியை அவருடைய ஆபீசில் சந்தித்தனர். என்ன விஷயம் எனக்கும் யுவனுக்கும் என்ன சம்பந்தம் இதுதானே உங்க கேள்வி என்றார். அதில்லே மேடம் எப்படி உங்க பேருல ரெண்டு கத்தி ஒரே மாதிரி யாரு ஆர்டர் பண்ணியிருப்பாங்க என்றான் சுரேஷ், அதுதான் எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு என்றார். உங்க ஐடென்டியை யாரோ misuse பண்ணியிருக்காங்க என்றான் தீபன். ம் நீங்க நடந்தது என்னென்னனு சொன்னீங்கன்னா யுவன் கேஸ்ல என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்ணுறேன் என்றார். தீபன் நடந்ததை விளக்கமாக சொன்னான். ம் இவ்வளவு நடந்திருக்கா சரி எதாவது க்ளு கிடைச்ச உங்களோட ஷேர் பண்ணிக்கிறேன் என்றாள். சரி மேடம் அப்போ நாங்க கிளம்பறோம் என்றார்கள். சாரதா பத்தி இன்னும் தகவல் தேவைப்படுது தீபன் என்றான் சுரேஷ்.

மணியிடம் சாரதா பற்றி பேசிய போது சாரதாவுக்கு மணி மேல் அளவுகடந்த பிரியம் என்று சொன்னான். அது ஒரு வேலை வீணா மேல் பொறாமையாக மாறி இருக்கலாம் என்றும் சொன்னான். வீணா மேல் ஆத்திரம் கொள்ளும் அளவுக்கு சாரதா என்ன பகை என்று மணியிடம் கேட்டான். அதுதான் எனக்கும் புரியவில்லை என்றான். பிரதாப்பை நன்கு போலீசார் உதைத்தனர். அப்போதும் அவன் வாயில் இருந்து எதுவும் வரவில்லை. அவனுடைய பேங்க் அக்கௌன்ட் சோதித்த போது 5 லட்ச ரூபாய் இருந்தது.ஏது இவ்வளவு பணம் என்று தொடர்ந்து விசாரித்தனர் . சதீஷ் வீட்டுக்கும் வரவில்லை. ஆபீஸ் போகவுமில்லை. எங்கு போனான் என்பதே தெரியாமல் இருந்தது. தீபன் பேசாமல் போலீசில் கம்ப்ளைன்ட் குடுக்கலாமா என்று கேட்டான். ஏற்கனவே போலிஸ் குழம்பி போயிருக்கிறது இதில் இது வேறா என்றான் சுரேஷ். அந்த காரில் ஒரு கேமரா இருந்தது என்று மலர்விழி போன் பண்ணி சொன்னார். அது ஒரு ஹிட்டன் கேமரா எனக்கு சில கேஸ் களில் கொலை மிரட்டல் வந்த நான் பிக்ஸ் செய்து வைத்தேன் என்றார்.

சரி மேடம் நாங்கள் உடனே அங்கு வருகிரோம் என்றார்கள் தீபனும் , சுரேஷும். அந்த காரில் இருந்த காமெராவை எடுத்து வந்து கொடுத்தார் மலர்விழி. காரில் இருந்த கேமரா வில் பதிவான வீடியோ பார்த்து அதிர்ந்தனர் தீபனும், சுரேஷும். அதில் குமரேசனுக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிப்பது சதீஷ் . அவனை இருக்க பிடித்து கொண்டிருந்தது பிரதாப். இதை பார்த்த மலர்விழியிடம் விளக்கத்தை சொல்லிவிட்டு கேமராவில் இருந்த மெமரி கார்டு எடுத்துகொண்டு போலிஸ் ஸ்டேஷன் விரைந்தனர். இப்போது நாம் சதீஷை காட்டிகொடுக்கத்தான் வேண்டுமா என்றான் தீபன். ஒருவேளை சதீஷ் குமரேசனை கொல்லாமல் வேறு யாராவது சதீஷை கடத்தியிருந்தால் ? நாம் போலிஸ் ஸ்டேஷன் போவதுதான் சரி என்றான். போலிஸ் இந்த வீடியோ வை பார்த்து பிரதாப்பை கேள்விகள் கேட்டது. சதீஷ்தான் எனக்கு 5 லட்சம் குடுத்தார். குமரேசனை ஒப்படைத்து அந்த மருந்து கடையில் ஸ்ப்ரே வாங்கியதும் அவர்தான் என்றான். காசுக்கு ஆசைப்பட்டு குமரேசனை கொன்று விட்டேன் என்றான். வீணா மணி நெருக்கமாக இருக்கும் வீடியோ வை இன்டர்நெட்டில் போட்டுவிடுவதாக நானும் குமரேசனும் சதீஷை மிரட்டினோம்,முதலில் எதிர்த்து பேசியவர் பிறகு என்னை மட்டும் தனியே அழைத்து பேசினார். 5 லட்சம் முதலில் ஆளை கொன்ற பிறகு பாக்கி 5 லட்சம் என்றார். சொன்னபடி அவர் 5 லட்சம் தந்தார். மீதி பணம் வாங்குவதற்குள் போலீஸ் என்னை பிடித்துவிட்டது என்றான். சதீஷை பிடிக்க போலிஸ் தனிப்படை அமைத்தது. சுஜா சதீஷ்தான் கொலை செய்தான் என்பதை நம்பமுடியவில்லை என்றாள்.