திலக் தீப்தி கல்யாண ஏற்பாடுகளை செய்தார்கள் சுஜாவும், தீபனும். கல்யாணத்தை பிரம்மாண்டமாக ஆக நடத்த வேண்டும் என்பது தீபனின் விருப்பம் அதன்படியே நடைபெற்றது. நிறைய வி ஐ பி க்கள் கலந்து கொண்டனர். குமாரிடம் போலிஸ் விசாரணை நடைபெற்றது . ஆனால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. திலக் தீப்தி கல்யாணத்தில் தீப்திக்கு நெருக்கமானவர்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர்.அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. கோர்ட் சுஜாவுக்கு விவாகரத்து வழங்கியது. யுவன் இறந்து ஒரு வருடங்கள் ஆகி விட்டிருந்தது. கல்யாணத்துக்கு பிறகு பெங்களூர் திரும்ப போக விரும்பினாள் தீப்தி. அங்கேயே திலக்குடன் இருக்க விரும்பினாள். தீபன் அவளை எச்சரித்தான். அங்கே தனியாக போக வேண்டிய அவசியம் என்ன என்றான். அனால் அவள் கேட்கவில்லை. தீபனும், சுஜாவும், திலக்கையும், தீப்தியையும் பெங்களூர் வழி அனுப்பி வைத்தனர்.யுவனுடைய மரணம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அவனுடைய ஈமசடங்குகளை தீபன் ஐயர் ஒருவரை கொண்டு செய்வித்தான். தீபனுடைய அஸ்தியை கரைக்க அவனும் சுஜாவும் ராமேஸ்வரம் செல்ல தீர்மானித்தனர். சுரேஷ் தானும் வருகிறேன் என்றான். வேண்டாம் சுரேஷ் இப்போதுதான் உனக்கு கல்யாணமாகி இருக்கிறது நீ ஏற்கனவே எங்களுக்கு அதிகம் நேரம் செலவழிக்கிறாய் . நீ போய் உன் மனைவியுடன் இரு . அதுவே எங்களுக்கு சந்தோசம் அதோடு சதீஷையும் பார்த்துக்கொள் என்றான் தீபன்.
போலீஸ் சுரேஷ் கல்யாண வீடியோவை மறுபடி ஆராய்ந்தது. வேறு யாரவது சந்தேகப்படும்படி சுற்றுகிறார்களா என சோதனை செய்தது. ஒரு ஆள் அப்படி சுற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுடைய போட்டோவை கொண்டு அவன் மனைவியை விசாரித்ததில் அவர் அன்றிலிருந்து காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கொடுத்தாள். அவன்தான் அந்த மண்டபத்தின் ஸ்டோர் கீபர் என்ற தகவலும் கிடைத்தது. குமரேசன் போன் ரிப்பேர் செய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றாள் குமரேசன் மனைவி. செல் ரிப்பேர் கடைக்கு விரைந்தனர் போலீசார். அதில் வீணாவிடம் இருந்து குமரேசனுக்கு கால் போயிருந்தது அதில் வாய்ஸ் ரெகார்ட் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு ஒருமணி நேரத்துக்கு ஸ்டாரே ரூம் கீ வேண்டும் என்கிறாள் வீணா. உங்களுக்கு எதற்கு ஸ்டோர் ரூம் கீ என்று கேட்கிறான் குமரேசன். உனக்கு வேண்டிய பணம் தருகிறேன் என்கிறாள் வீணா. குமரேசன் பேங்க் account செக் செய்து பார்த்த போது பத்தாயிரம் பணம் கை மாறி இருப்பது தெரிய வந்தது. குமரேசன் வீட்டை போலிஸ் சோதனையிட விரும்பினார்கள். சுரேஷ் ப்ரவீனுக்கு குமரேசனை தெரியுமா என கேட்டான். எனக்கு தெரியாது என மறுத்து விட்டான் பிரவீன். மணியும் தனக்கு குமரேசனை தெரியாது என்றான்.
குமரேசன் வீட்டை போலிஸ் அதிரடியாக சோதனை செய்தார்கள். ஒவ்வொரு அங்குலமாக தேடினார்கள். பீரோவில் வீணாவின் handbag கிடைத்தது. அது வீணாவின் handbag தான் என உறுதிபடுத்தினான் சதீஷ். அதில் தெளித்திருந்த ரத்த துளிகளை சாம்பிள் டெஸ்டுக்கு அனுப்பினார்கள். குமரேசன் மனைவி அவனை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் ஏற்கனவே கொடுத்திருந்தாள். அதனுடைய விவரங்களை திரும்பவும் போலீஸ் விசாரனைக்கு எடுத்துக்கொண்டது. handbag மேல் இருந்த ரத்த மாதிரிகள் மணியுடையுதும் இல்லை, குமரேசனுடையதும் இல்லை. அது ஒரு பெண்ணின் இரத்த மாதிரி. ஒருவேளை சாரதாவுடையதாக இருக்கும் என்று சுரேஷ் சந்தேகித்தான். அவசர அவசரமாக சாரதாவின் posrmortem ரிப்போர்ட் செக் செய்தார்கள். அது மேட்ச் ஆனது. சாரதாதான் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறாள் என்பதும் தெளிவானது. சாரதாவின் வலது கையில் கத்தி பட்டு கீறல் இருந்ததும் postmoretm அறிக்கையில் தெளிவாக இருந்தது. மணியிடம் நிதானமாக பேசினான் சுரேஷ். மணி உனக்கு என்ன தெரியுமோ அதை சொல்லிவிடு வீணாக உன் மிச்ச வாழ்க்கையை ஜெயிலில் கழிக்காதே என்றான்.
மறுபடியும் கல்யாண மண்டபத்தை சோதனையிட போலீசார் முடிவு செய்தனர். ஏற்கனவே வீணா மரணத்தை அடுத்து கல்யாண மண்டபம் சீல் வைக்கப்பட்டு மூடிக்கிடந்தது. அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. சுஜாவும் தீபனும் ராமேஸ்வரம் சென்று கடமைகளை நிறைவேற்றினர். யுவன் எங்களை மன்னித்துவிடு என்று மனதார வேண்டிக்கொண்டனர். சுரேஷ் அவ்வப்போது தீபனுக்கு செய்திகளை சொல்லிவந்தான். வீணா மரணம் மர்மமாக நீண்டு கொண்டே போவதை எண்ணி தீபன் கவலை அடைந்தான். யார் யாரெல்லாம் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்பது அவனை மிகவும் கவலை அடைய செய்தது. தீபன் சுரேஷுக்கு போன் செய்தான் . நாளை நாங்கள் சென்னை திரும்புகிறோம் வந்ததும் உன்னை சந்திக்கிறேன் என்றான் . அவசரமில்லை தீபன் நாம் குற்றவாளியை நெருங்கி விட்டோம் என்றான் சுரேஷ். தீப்திக்கு போன் செய்து விசாரித்தான் தீபன் அவள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தாள். குமரேசனை தேடும் பணியை போலீஸ் முடுக்கிவிட்டது. அவனுடைய நண்பர்களை பிடித்து விசாரித்தார்கள்.அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாதென சொல்லிவிட்டார்கள். குமரேசன் மனைவியையும் விசாரித்தார்கள். எப்படி இந்த handbag உனக்கு தெரியாமல் பீரோவுக்குள் வந்தது என்று விசாரித்தார்கள். அவள் அழுதாள். சாரதாவை குமரேசனுக்கு முன்பே தெரியுமா என்ற கோணத்தில் விசாரித்தார்கள். அவள் இல்லை என்று சொன்னாள்.
கல்யாண மண்டபம் முழுக்க சல்லடை போட்டு தேடினார்கள். எதுவும் சிக்கவில்லை. தீபனும் சுஜாவும் சென்னை திரும்பினார்கள். வந்ததும் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு சுரேஷை பார்க்க கிளம்பினான் தீபன். சுஜா என்ன அவசரம் தீபன் என்றாள். அவசரம் இல்லை அங்கு சதீஷை போலீஸ் விசாரணை என்ற பெயரில் தினமும் தொல்லை பண்ணுகிறார்கள். சரி சரி பார்த்து போய்விட்டு வா தீபன் எனக்கு நீ மட்டும்தான் இருக்கிறாய் என்றாள். யுவன் கொலை பற்றி போலீசாருக்கு மறந்தே போய்விட்டது. அவனுடைய கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் இதுவும் ஒரே மாதிரியா என சுரேஷ் கேள்வி எழுப்பினான். போலீஸ் அதை செக் செய்திருக்கவில்லை. கொஞ்சம் பொறுங்கள் வீணா கேஸ் முடியட்டும் நாம் மறுபடியும் யுவன் கேஸ் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம் என்றார்கள். குமரேசன் கிடைத்தால் வீணா கேஸ் முடிந்து விடும் என்றார்கள் போலிஸ். குமரேசன் உயிரோடு இருப்பதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்றே தீபனுக்கும், சுரேஷுக்கும் பட்டது. போலிசும் அவ்வாறே கருதினார்கள். அவனை விபத்தில் இறந்தவர்கள் லிஸ்டிலும் தேடினார்கள். குமரேசன் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எல்லோரையும் துளைத்து எடுத்தது, வீணாவின் கொலையை குமரேசன் பார்த்திருக்க கூடும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
போலிஸ் குமரேசன் பற்றி கல்யாண மண்டப உரிமையாளரிடமும் விசாரித்தனர்.அவர் அவன் ரொம்ப நல்லவன் என்னவோ அன்றைய தினம் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த பெண்ணிடம் சாவியை குடுத்திருக்கிறான். பொதுவாக அவன் மேல் எந்த கம்ப்ளைன்ட்டும் வருவதில்லை. அதனால் கல்யாண மண்டபத்தின் முழு கண்ட்ரோலும் அவனிடத்தில் இருந்தது என்றார். குமரேசன் வெளிமாநிலம் போயிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவனுடைய சொந்தக்காரர்கள் யாராவது அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டது. அப்படியும் எல்லா ஸ்டேஷன்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தீபன் சுரேஷிடம் இதில் சாரதா ஏன் இதை செய்தார் என்று புரியவில்லை . மணியிடம் விசாரிக்கலாமா . அவன் வீணாவோடு இருந்ததை விட வேறேதுவும் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. ம் அந்த எம் எல் ஏ நிலைமை என்னவாக இருக்கிறது இரு தீபன் போன் பண்ணி விசாரிக்கிறேன் என்றான். போன் எடுத்து பேசியவன் அவன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான் என்று போலிஸ் சொல்கிறது.
தீபனும் , சுஜாவும் ரொம்ப நாளைக்கு பிறகு ஷாப்பிங் போயிருந்தார்கள். தீபனிடம் நமக்கு ஒரு கிச்சனுக்கு fridge வாங்க வேண்டும் என்றாள். இப்போது இருப்பது கெட்டு விட்டது என்றாள். சரி வா பார்ப்போம் என்று எல்லாவித மாடல்களையும் பார்த்தார்கள். சுஜாவும் தீபனும் ஏகமனதாக ஒன்றை செலக்ட் செய்தார்கள். அவற்றை பில் செய்து வாங்கும்போது ஒருவர் கல்யாண மண்டபத்துக்கு ப்ரீசர் வாங்கியதற்கான பில் போட்டார். தீபன் மனதில் பளீரென தோன்றியது. ஒருவேளை குமரேசன் ப்ரீசர் ரூமில் அடைக்கபட்டிருந்தால்? சரி சுஜா நீ வீட்டுக்கு போ கொஞ்சம் அர்ஜென்ட் மேட்டர் நான் இப்போதே சுரேஷை பார்த்து வருகிறேன் என்றான். சுரேஷுக்கு போன் பண்ணினான், எங்கே இருக்கிறாய் சுரேஷ் என்றான். இங்கே போலிஸ் ஸ்டேஷன் வந்திருக்கிறேன் சதீஷோடு. நல்லதாக போய்விட்டது. தன்னுடைய சந்தேகத்தை தெரிவித்தான். சரி தீபன் நீ பதட்ட்படாதே நான் போலீசிடம் கேட்டு பார்க்கிறேன். சரி நான் இப்போதே அங்கு வருகிறேன் என்றான். தீபன் மனம் படபடவென அடித்துக்கொண்டது. போலீஸ் உடனடியாக வரவில்லை . மேலதிகாரிகளிடம் permission வாங்கி கொண்டு போவதற்கு இரவு பதினொன்னு ஆகிவிட்டது. சுரேஷ், சதீஷ், தீபன் ஆகியோர் பதட்டத்துடன் காத்திருந்தனர். ப்ரீசர் இருக்கும் அறைக்கு சென்றனர். அதை திறந்து பார்த்த போது அதிர்ந்தனர். குமரேசன் கை கால்கள் கட்டப்பட்டு அதில் பிணமாக இருந்தான்.
போலிஸ் குமரேசன் பாடியை கைப்பற்றிவிட்டு அவனுடைய மனைவிக்கு தகவல் கொடுத்தனர. postmortem ரிப்போர்ட் வந்தவுடன்தான் மிச்ச விவரங்கள் தெரியவரும் என்றது போலீஸ். தீபனும். சுரேஷும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து உறையவில்லை. சதீஷ் இன்னும் எத்தனை கொலைகளை பார்க்க வேண்டுமோ என அங்கலாய்த்தான்.தீபன் அவனை அமைதிபடுத்தினான்.