போனை பதட்டத்துடன் அட்டென்ட் செய்தான் சிவா . என்ன சிவா ஸ்வேதாவை காணுமா அவள் இப்போது என் பிடியில் தான் இருக்கிறாள். நாங்க கொஞ்ச நாளிலே வெளிநாடு போகப்போகிறோம் அதனால நீ என்ன பண்ணுற இந்த விஷயத்தை ஷிவானி கிட்ட சொல்லி ஏதாவது தடுக்க முடிஞ்சா தடுத்து பாரு என்றான் ஆனந்த் . இதற்கிடையில் ஸ்வேதாவை ஆபீசில் இருந்து அழைத்துகொண்டு வந்த வண்டி தாம்பரம் பக்கத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது. அதன் டிரைவர் அருகிலேயே மயங்கி கிடந்தான். அவனை விசாரித்த போது யாரோ இரண்டு பேர் காரிலே வந்ததாகவும் அட்ரஸ் கேட்பது போல நடித்து இவனை தாக்கிவிட்டு ஸ்வேதாவை கூட்டி சென்று விட்டதாகவும் தெரிவித்தான். ஷிவானி அவனை ஹாஸ்பிடல் செல்லுமாறு கூறினாள் . சிவா சொல்லியதை கேட்ட ஷிவானி நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க சிவா அவன் சும்மா பூச்சாண்டி காட்டுறான் என்றாள். விஷயத்தை கேள்விப்பட்ட எழில் கிரணுக்கு ஃபோன் செய்தான். கிரண் உன் ஹெல்ப் இல்லாம அவன் ஸ்வேதாவை கடத்தி இருக்க முடியாது.ஸ்வேதாவை விட சொல்லு . இல்லைனா உன் மேல ஆக்ஷன் எடுக்க வேண்டியிருக்கும் என்றான். நீயே சஸ்பெண்ட் ஆகி வீட்டிலே உக்காந்து இருக்குற என்னை வார்ன் பண்ணுறியா என்று இணைப்பை துண்டித்து விட்டான். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தான் எழில். அதில் இருந்த இருவருடைய போட்டோக்களையும் எடுத்துக்கொண்டு பழைய குற்றவாளிகள் லிஸ்டில் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பார்த்தான். அதில் ஒருவனுடைய போட்டோ ஒத்து போனது.
ஸ்வேதாவை கடத்தியவனின் பெயரும் முகவரியும் தெரிய வர ஷிவானிக்கு தெரிவித்தான் எழில். போலீஸ் அவனை தேட தொடங்கினர். வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர் .குமாரையும், ரவியையும் ஸ்வேதா கடத்தல் பற்றி விசாரித்தனர். ரவி தனக்கு ஸ்வேதாவை தெரியாது என சொன்னான். குமார் ஆனந்த் ஏதோ கேரவன் மூலமாக தான் சுற்றிகொண்டிருக்கிறான். ஆனால் ஸ்வேதாவை கடத்துவது பற்றி தனக்கு தெரியாது என்று சொன்னான். அப்புறம் ஏதோ யோசனை வந்தவனாக அவன் ஏதோ ஒரு உணவு வழங்கும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தான் உணவை பெறுவதாகவும் சொன்னான். அதன் டெலிவரி பாய் நம்பர் தன்னுடைய போனில் இருப்பதாகவும் தெரிவித்தான். அதன்படி டெலிவெரி பாய் ஃபோன் நம்பர் கண்டுபிடித்தாள் ஷிவானி. அவனை பிடித்து விசாரித்த போது காலையில் ஸ்வேதாவுக்கு உணவு வழங்கியதாகவும் ஆனால் அது ஒரு வேன் மாதிரி இருந்ததாகவும்,ஒவ்வொருமுறை வெவ்வேறு இடத்தில் நிற்பதாகவும் சொன்னான். அடுத்த கால் வரும்போது அவனை பின்தொடர்ந்து போலீஸ் வருவார்கள் என்று ஷிவானி சொன்னாள்.
அதே மாதிரி மதியம் உணவு ஆர்டர் செய்திருந்தான் ஆனந்த். டெலிவரி பாய் உடன் எழில் போனான். சற்று முன்னதாகவே இறங்கி கொண்டான். அந்த கேரவேனை போலீஸ் சுற்றி வளைத்தது .அதில் கிரண் உறங்கி கொண்டிருந்தான். என்னப்பா ஆட்டை கடித்து , மாட்டை கடித்து என்னையே பின்தொடர்ந்து வருகிறீர்கள் என்றான் கிரண். எழில் ஒன்றும் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர்ந்தான். ஷிவானி எழிலுக்கு ஃபோன் செய்தாள் என்னாச்சு எழில் நாம லேட் பண்ண பண்ண ஸ்வேதாவுக்குத்தான் ஆபத்து என்றாள். எனக்கு புரியுது ஷிவானி ஆனா இந்த கிரண் போலீஸ்ல இருந்துகிட்டு இல்லாத வேலையெல்லாம் பண்ணுகிறான் அவனை பிடிக்க நம்மால முடியலையே என்றான். கிரண் பேக்ரவுண்ட் செக் பண்ண சொன்னேனே அவனுக்கு ஒரு சின்ன செட் அப் இருக்குது. அந்த பொண்ணு வீட்டுக்கு சண்டே சண்டே போவானாம் என்றாள் ஷிவானி. அங்க போய் விசாரிச்சேன் அந்த பொண்ணு ஊருக்கு போயிருக்கறதா சொல்லுறாங்க. பேசாம கிரண் ஃபோன் hack பண்ணுணா என்ன? நிச்சயம் பண்ணலாம். எப்போ அந்த பொண்ணு ஊரில் இருந்து வருது ? நாளைக்கு ஈவினிங். நாம கிரணுக்கு முன்னாடி அந்த பெண்ணை பிக்அப் பண்ணனும். ஓகே எழில்,
எழில் நினைத்த மாதிரி அது அவ்வளவு சுலபமாய் இல்லை. அந்த பெண் ஓயாமல் கேள்விகள் கேட்டாள் . போலீஸ் என்றவுடன் தான் சற்று அமைதியானாள் . எதுவா இருந்தாலும் கிரண் சொன்னாதான் செய்வேன் என்றாள். ஒரு பொண்ணோட உயிர் ஆபத்திலே இருக்கு என்ற பிறகு கிரண் போனை hack செய்ய மெசேஜ் அனுப்ப ஒத்துக்கொண்டாள் . எல்லாம் ரெடி ஆன பிறகு மெசேஜ் அனுப்பினாள். கிரண் போனை hack செய்து பார்த்ததில் ஆனந்த் எண் கிடைத்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்வேதா இருக்குமிடம் கண்டறியப்பட்டது . ஸ்வேதா மீட்கப்பட்டாள். ஆனந்த் பற்றிய கேள்விகளுக்கு அவளிடத்தில் பதிலில்லை.அவள் பயந்து போயிருந்தாள் . அவளுடைய கண்களை எப்போதும் கட்டி வைத்திருந்தான் ஆனந்த். அவள் வேறு இடத்திலும், அவன் வேறு இடத்திலும் இருந்ததாக சொன்னாள் ஸ்வேதா.அவன் அவ்வப்போது போனில் பேசி வந்ததாக சொன்னாள். சிவா ஸ்வேதாவை கண்டு பிடித்ததற்கு ஷிவானிக்கும், எழிலுக்கும் நன்றி தெரிவித்தான். சிவாவிடம் ஆனந்தை இன்னும் கைது செய்ய முடியாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்தான் எழில். ஒரு வழியாக எழிலின் சஸ்பென்ஷன் இரண்டு மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது. ஷிவானி மகிழ்ந்து போனாள் .
ஆனந்த் பற்றி எந்த தகவலும் அடுத்து கிடைக்கவில்லை. கிரண் போனில் இருந்து ஆனந்தை கூப்பிடவும் இல்லை, கிரண் உஷாராகிவிட்டான்.விவரங்களை சொல்லி கிரணை அரெஸ்ட் செய்ய முடிவெடுத்தான் எழில் . கிரண் போனில் ஆனந்த் உடனான பேச்சுக்களை கொண்டு கிரணை அரெஸ்ட் செய்ய பர்மிஷன் வாங்க அலைந்து கொண்டிருந்தான் எழில். கிரணுடன் இருந்த பெண்ணை அதன் பின் காணவில்லை. மேலும் அவள் குறித்து விசாரித்து வந்தபோது அவள் சொந்த ஊருக்கே கிரண் அனுப்பி வைத்து விட்டதாக தகவல் வந்தது. அந்த பெண்ணை தேடி அவளுடைய சொந்த ஊருக்கே போனாள் ஷிவானி. ஒருவேளை அங்கு ஆனந்த் இருக்கலாம் என ஒரு ஊகம் இருந்தது. ஷிவானி சந்தேகப்பட்டது சரியாக இருந்தது. அவனை பிடிப்பதற்கு முன் கிரணை அரெஸ்ட் செய்ய வேண்டும் அப்போதுதான் போலீஸ் துறை தகவல்கள் கசியாமல் இருக்கும என நினைத்தாள் ஷிவானி. ஆனந்த் அந்த ஊரில் பார்த்ததாக சிலர் அவனுடைய புகைப்படத்தை பார்த்ததும் சொன்னார்கள். அந்த பெண் வீட்டை கண்டுபிடித்து விட்டாள் ஷிவானி. எழில் அன்று இரவு அந்த ஊருக்கு வருவதாக சொல்லி இருந்தான் .
இருவரும் ஒரு சிறியதொரு லாட்ஜ் ஒன்றில் ஆனந்தை அட்டாக் செய்வதற்காக காத்திருந்தனர். ஷிவானி இது சரியா வருமா எழில். போலீஸ் ஃபோர்ஸ் இல்லாமல் வந்திருக்கிறோம் என்றாள். போலீஸ் ஃபோர்ஸ் வந்தால் அவன் உஷார் ஆகிவிடுவான். நீ அந்த பெண் வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் இருந்து சிசிடிவி ஃபுடேஜ் வாங்க சொன்னேனே வாங்கினாயா? வாங்கி விட்டேன் அதில் இருப்பது ஆனந்த்தான். சரி அப்புறம் விடிகாலை 3 மணிக்கு நான் அந்த வீட்டிற்கு போகிறேன் என்றான். நீ தனியாய் போக வேண்டாம் எழில் நானும் வருகிறேன் என்றாள். வேண்டாம் ஷிவானி அங்கு எந்த மாதிரி சூழ்நிலை வேணுமாலும் வரலாம். நீ தைரியமாய் இரு . அதே மாதிரி அந்த பெண் உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது. சரி எழில். நான் இந்த வாய்ஸ் ரிக்கார்டர் உன் போனோடு இணைத்திருக்கிறேன். ஏதாவது எமர்ஜென்ஸி என்றால் உடனே உன்னை தொடர்பு கொள்கிறேன் என்றான். விடிகாலை 2 மணிக்கு அவனை எழுப்பினாள் ஷிவானி. மணி ஆகிவிட்டது என்றாள். சரி நான் வரும் வரை ஜாக்கிரதையாக இரு என்றான்.
மணி 3 அடித்து விட்டது. எப்படி அணுகுவது என்று தோன்றவில்லை. அந்த கேரவேன் வெளியே நின்று கொண்டிருந்தது. அவன் வண்டிக்குள்
இருக்கிறானோ அல்லது வீட்டுக்குள் இருக்கிறானா என தெரியவில்லை. அப்போது திடீரென புழுதியை கிளப்பியபடி வண்டி கிளம்பியது. இவன் தன்னுடைய டூ வீலர் கொண்டு வண்டியை ஃபாலோ செய்தான். ஷிவானிக்கு ஃபோன் செய்து அவளை அந்த வீட்டுக்கு உள்ளே சென்று பார்க்கும் படி சொன்னான். ஷிவானி விரைந்து ஜீப்பில் வந்தாள். உள்ளே சென்று பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தாள். ஷிவானி உடனே அந்த தகவலை எழிலுக்கு சொன்னாள். முன்னால் சென்ற வேனின் டையர் நோக்கி சுட்டான். வண்டி திடீர் பிரேக் அடித்து விட்டு வேகம் எடுத்தது. மற்றொரு டையரையும் நோக்கி சுட்டான். இம்முறை வண்டி நிலை தடுமாறி கீழே சாய்ந்தது, அதை ஓட்டியவன் அதில் இருந்து அருகில் இருந்த வயல் வெளிக்குள் ஓடினான். அவனை எழில் தூரத்திக்கொண்டு ஓடினான். ஷிவானி அதற்குள் வந்துவிட்டாள் . அவள் கேரவேனை பார்த்த போது அதில் யாருமில்லை. ஷிவானியும் சத்தம் கேட்டு வயல் வெளிக்குள் ஓடினாள். எழில் அவனை மடக்கிப்பிடித்தான். ஆனந்த் எங்கே என்றான் அவன் நேற்றே வேறு இடத்துக்கு போய்விட்டதாகவும் தான் அந்த பெண்ணை கட்டாயப்படுத்த முயன்ற போது இறந்து விட்டதாக தெரிவித்தான்.
அந்தப் பெண் இறந்த விஷயத்தை கேள்விப்பட்ட கிரண் ஆத்திரம் அடைந்தான். அந்த வேன் டிரைவர் இப்படி செய்வான் என அவன் எதிரபார்த்திருக்கவில்லை. கிரண் மிகுந்த அப்செட் ஆகிய இருந்தான். அப்போதுதான் அவனுடைய அரெஸ்ட் வாரண்ட் உத்தரவு எழிலுக்கு வந்து சேர்ந்தது. எழில் கிரணை கைது செய்தான். கிரண் இப்போது எதுவும் பேசவில்லை. அந்தப் பெண்ணை இழந்த துக்கத்தில் இருந்தான். எழில் இப்போதாவது நீ திருந்து உன்னால் அநியாயமாய் ஒரு பெண்ணின் உயிர் போய்விட்டது என்றான். எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்றான் கிரண். அவன் உடனடியாய் பதில் சொல்லவில்லை எனினும் நிச்சயம் திருந்துவான் என எதிர்பார்த்தான் எழில். ஸ்வேதா,சிவா, உதித் மூவரும் ஷெரினை பார்க்க போயிருந்தார்கள் . உன்னுடைய விடுதலை சீக்கிரமே நடக்கும் என்றான் சிவா.அதற்காக எழில் அப்பீல் செய்து இருக்கிறார் என்றான் சிவா.